ஞாயிறு, 18 மே, 2014

மங்களூர்: வெற்றி ஊர்வலத்தில் மஸ்ஜிதை தாக்கிய பாஜகவினர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நேற்றைய தினம் (மே 16, வெள்ளிக் கிழமை ) மத்தியில் பாஜகவின் வெற்றியையும் தக்ஷன கன்னட நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது தடவையாக மீண்டும் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டத்தில் பாஜகவினரால் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வெற்றி ஊர்வலங்களில் இரண்டு மஸ்ஜித்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பந்த்வல் தாலுக்காவில் இருக்கும் கம்பலப்பட்டு என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு மஸ்ஜிதுக்கு அருகில் பாஜக வினர் "ஹரஹர மோடி" என்ற வெறிக் கூச்சல்களுடன்,கற்களை மஸ்ஜிதுக்குள் வீசியும்,வெடிகளை வெடித்தும் அராஜகம் செய்திருக்கின்றனர்.
மேலும் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப் பட்டிருக்கிறது.அந்த பள்ளி வளாகத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்காக கட்டப்பட்டு வரும் மேடையும் தாக்கி சேதப்படுத்தப் பட்டிருக்கிறது.
பகல் 12:55 மணியளவில் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஒரு குழுவாக புறப்பட்டு வந்த பாஜகவினர் பள்ளிவால் வளாகத்துக்குள் தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு கற்களை வீசத் தொடங்கியதாக நேரில் கண்டவர்கள் கூறுகிறார்கள்.
இந்த கிராமத்தில் இரண்டு மஸ்ஜித்கள் இருக்கின்றன. முஹியத்தீன் ஜும்மா மஸ்ஜித் எனும் பெயர் கொண்ட இந்த பள்ளியை தான் காவிகள் தாக்கி இருக்கிறார்கள்.
இந்த வாரம் ஜும்மா தொழுகையை இங்கே இருக்கும் இப்ராஹீம் கலீல் மஸ்ஜிதில் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற அந்த கிராமத்து முஸ்லிம்கள் தீர்மானித்து அணைவரும் அந்த பள்ளியில் குழுமத் தொடங்கி இருந்த வேளையில் இந்த முஹியதீன் பள்ளி தாக்கப் பட்டிருக்கிறது.
இந்த பள்ளியின் கதீபாக இருக்கும் ஆலிம் ஜும்மா தொழுகையை நிறைவேற்ற இப்ராஹீம் கலீல் பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அவரை தாக்க பாஜகவினர் முற்பட்டிருக்கிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக அவர்களது தாக்குதலில் இருந்து அவர் தப்பித்திருக்கிறார்.
சம்பவம் நடைபெற்ற இடங்களை போலிஸ் துணை சூப்பிரண்டு நேரில் வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்.இந்த தாக்குதல் தொடர்பாக 9 பேர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.
மேலும் இதே மாவட்டத்தில் கிக்கம்பா அருகே இருக்கும்
சுரல்பாடி என்ற கிராமத்தில் இருக்கு ஒரு மஸ்ஜிதை பாஜகவினர் தாக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகிறது.
தகவல் : Zafar Rahmani


http://www.coastaldigest.com/index.php/ls-polls-2014/64664-bjp-activists-resort-to-vandalism-attack-masjids-amidst-celebrations?fb_action_ids=777811275576487&fb_action_types=og.likes
 

கருத்துகள் இல்லை: