புதன், 21 மே, 2014

மீத்தேன் வாயு திட்டத்தை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் ?

மீத்தேன் திட்டம் நடைமுறை படுத்த பட்டால் நம் தலைமுறை
இப்படித்தான் இருக்கும் .ONGC செயல் பாடுகள் அனைத்தும் மீதேன் எரிவாயு எடுக்க பயன் படுத்த படுகிறது அதை நாம் அனுமதிக்க கூடாது
நன்றி:G.v. Varadharajan

தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டப் பகுதிகள் கூறு கூறாக பிரிக்கப்பட்டு மீத்தேன் எடுக்கும் அனுமதி மூன்று நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பெயர்கள்
1.இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் ( Oil and Natural Gas Corporation Ltd ONGC ) ,
2.இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் ( Gas Authority of India Ltd GAIL )
3.கிழக்கத்திய எரிசக்தி நிறுவனம் ( Great Eastern Energy Corporation Ltd GEECL ).
இந்த நிறுவனங்கள் மூன்றுமே இந்தியாவில் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை. இவர்களுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது. இந்த நிலத்தில் என்ன கிடைத்தாலும் , அந்த நிலத்தில் எத்தனை மக்கள் வசித்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு அந்த நிலத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.

நன்றி :லெனின் பாபு

 

கருத்துகள் இல்லை: