செவ்வாய், 20 மே, 2014

இஸ்லாத்தை ஏற்ற இளம்பெண் 'அபரூபா' எம்.பி'யானார்!

மேற்கு வங்கத்தை சேர்ந்த 'அபரூபா பொட்டார்' என்ற 28 வயது இளம்பெண், சமீபத்தில் தனது பெயரை 'ஆப்ரீன் அலி' என மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தழுவிய நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

BSC LLB பட்டதாரிப் பெண்ணான ஆப்ரீன் அலி'யின், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் பழைய (APARUPA PODDAAR) பெயரே இருந்தபடியால், அதே பெயரில் தேர்தலை சந்தித்தார்.

திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹூக்ளி மாவட்டத்தில் அரம்பாக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆப்ரீன் அலி என்ற தனது இஸ்லாமிய பெயரை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டு தேர்தலை சந்தித்தார்.

ஆரம்பாக் தொகுதியில், 7,48,764 வாக்குகளைப் பெற்ற ஆப்ரீன் அலி, சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக வேட்பாளர்களை தோற்கடித்தார்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

https://www.facebook.com/photo.php?fbid=634442166642977&set=a.300599480027249.78504.246687175418480&type=1&relevant_count=1