புதன், 21 மே, 2014

"ஆர்.எஸ்.எஸ்=பாரதிய ஜனதா =காங்கிரஸ்"

பாரதிய ஜனதாவின் கொள்கைகளான அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டம், பொதுசிவில் சட்டம், மாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கு தடை போன்றவற்றை அரசியல் சாசனத்துக்குட்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா 
************************************************
சார் வேறு யாரும் இல்லை .

பல ஆண்டு காலம் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அதை தொடந்து காங்கிரஸின் முத்த தலைவர் மற்றும் குஜராத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
 
 "ஆர்.எஸ்.எஸ்=பாரதிய ஜனதா =காங்கிரஸ்"

 


மீத்தேன் வாயு திட்டத்தை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் ?

மீத்தேன் திட்டம் நடைமுறை படுத்த பட்டால் நம் தலைமுறை
இப்படித்தான் இருக்கும் .ONGC செயல் பாடுகள் அனைத்தும் மீதேன் எரிவாயு எடுக்க பயன் படுத்த படுகிறது அதை நாம் அனுமதிக்க கூடாது
நன்றி:G.v. Varadharajan

தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டப் பகுதிகள் கூறு கூறாக பிரிக்கப்பட்டு மீத்தேன் எடுக்கும் அனுமதி மூன்று நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பெயர்கள்
1.இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் ( Oil and Natural Gas Corporation Ltd ONGC ) ,
2.இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் ( Gas Authority of India Ltd GAIL )
3.கிழக்கத்திய எரிசக்தி நிறுவனம் ( Great Eastern Energy Corporation Ltd GEECL ).
இந்த நிறுவனங்கள் மூன்றுமே இந்தியாவில் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை. இவர்களுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது. இந்த நிலத்தில் என்ன கிடைத்தாலும் , அந்த நிலத்தில் எத்தனை மக்கள் வசித்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு அந்த நிலத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.

நன்றி :லெனின் பாபு

 

செவ்வாய், 20 மே, 2014

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யலாம்: மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தகவல்

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முடிவு களை மாற்றும் வகையிலான தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளதாகவும், எனவே, அந்த இயந்திரங்கள் பாதுகாப் பானவை என்று கூறுவது தவறு என்றும் அமெரிக்கப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆய்வுப் பணி களை மேற்கொண்ட பேராசிரியர் ஜே.அலெக்ஸ் ஹால்டர்மேன் தலைமை யிலான மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், முடிவுகளை மாற்ற உதவும் சிறிய கருவி ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த கருவியை, வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தி, செல் போன் மூலம் தகவல்களை அனுப்பி, ஏற்கெனவே பதிவாகியுள்ள தகவல் களில் மாற்றம் செய்ய முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
“வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளதைப் போன்ற டிஸ்ப்ளே போர்டை உருவாக்கியுள்ளதாகவும், அதன்மூலம், பதிவாகியுள்ள வாக்கு களின் விவரத்தை அறிந்து நாம் விரும்பும் மாற்றத்தைச் செய்ய முடியும். இதற்காக பிரத்யேகமாக மைக்ரோபிராசஸர்களை தயாரித்து அக்கருவியில் பொருத்தியுள்ளோம்” என்று அலெக்ஸ் ஹால்டர்மேன் கூறியுள்ளார்.
இதன்படி வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே இயந்திரத்தில் பதிவான தகவல்களில் தேவையான மாற்றங்களை செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பான செயல்விளக்கத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக ‘பிபிசி நியூஸ்’ ்கூறியுள்ளது.
இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அலோக் சுக்லா கூறுகையில், “வாக்குப்பதிவு இயந்திரத் தில் மாற்றம் எதையும் செய்ய முடியாது. அது வெறும் இயந்திரம் மாத்திரமல்ல. நிர்வாக ரீதியாகவும் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதை யாராலும் அவ்வளவு எளிதாக திறக்க முடியாது.
வாக்குப்பதிவு நடைபெற்ற பின்பு, சீலிடப்படுகிறது. இந்த சீலை சேதப்படுத்தாமல் இயந்திரத்தில் கைவைக்க முடியாது. எனவே, முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை” என்றார்

இஸ்லாத்தை ஏற்ற இளம்பெண் 'அபரூபா' எம்.பி'யானார்!

மேற்கு வங்கத்தை சேர்ந்த 'அபரூபா பொட்டார்' என்ற 28 வயது இளம்பெண், சமீபத்தில் தனது பெயரை 'ஆப்ரீன் அலி' என மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தழுவிய நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

BSC LLB பட்டதாரிப் பெண்ணான ஆப்ரீன் அலி'யின், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் பழைய (APARUPA PODDAAR) பெயரே இருந்தபடியால், அதே பெயரில் தேர்தலை சந்தித்தார்.

திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹூக்ளி மாவட்டத்தில் அரம்பாக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆப்ரீன் அலி என்ற தனது இஸ்லாமிய பெயரை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டு தேர்தலை சந்தித்தார்.

ஆரம்பாக் தொகுதியில், 7,48,764 வாக்குகளைப் பெற்ற ஆப்ரீன் அலி, சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக வேட்பாளர்களை தோற்கடித்தார்.

திங்கள், 19 மே, 2014

ஒவைஸியை கொல்ல முயற்சி : ஆர்எஸ்எஸ் தீவிரவாதி சுட்டு கொலை....!!

ஒவைஸியை கொல்ல முயற்சி : ஆர்எஸ்எஸ் தீவிரவாதி சுட்டு கொலை....!!

கர்நாடகா மாநிலம் இந்துப்பூர் அருகே  MIM கட்சியின் தலைவர்களில் ஒருவரான அக்பருதீன் ஒவைஸி அவர்களை கொலை செய்ய காவி தீவிரவாதிகள் முயற்சி செய்துள்ளனர்.

இந்துத்துவ ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகளுக்கும் காவல்துறைக்கும் நடந்த மோதலில் ஆர்எஸ்எஸ் தீவிரவாதி கோவிந்த் என்பவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.

மேலும் இரண்டு ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓவைஸியை கொலை செய்ய வந்த இந்த சம்பவத்தால் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் பரபரப்பு காணப்படுகிறது.

தற்போது இறை அருளால் ஒவைஸி நலமுடன் உள்ளார்.

பா

தென்காசி செங்கோட்டை அருகில் உள்ள வள்ளம் என்கிற ஊரில் மதரஸத்நூர் பள்ளியில் பாசிசவெறியாட்டம்


நெல்லை மாவட்டம் தென்காசி செங்கோட்டை அருகில் உள்ள வள்ளம் என்கிற ஊரில் மதரஸத்நூர் பள்ளி வாசலில் இன்று 18-05-2014 மக்ரிஃப் தொழுகையின் போது பாங்கு சொல்லி தொழுதுக்கொண்டு இருக்கும் போது சுமார் 6 பேர் கொண்ட பாசிச கும்பல் பள்ளி வாசளுக்கு அருகில் நின்றுக்கொண்டு 2 பேர் மட்டும் பள்ளிவாசல் உள்ளே வந்து மைக் உட்பட அங்கு இருந்த பள்ளிவாசல் சாதனங்களை அடித்து நொறுக்கி முஸ்லீம்களை அசிங்கமாக தகாத வார்த்தைகளில் பேசிகொண்டு இருக்கும் போதே தொழுகை முடிந்தவுடன் தொழுகையாளிகள் என்னடா என கேட்ட போது வெளியில் காத்து இருந்த 4 பேரும் வந்து இந்த இரண்டு பேரை அழைத்துக்கொண்டு ஓடி விட்டனர் .

இந்த தகவல் கிடைத்து ஊரில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் ஒன்று இணைந்து வள்ளம் காவல்துறையிடம் முறையிட்டனர் உடனே குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என சொன்னவுடன் காவல்துறை இதுவரை முதல்தகவல் அறிக்கை கூட கொடுக்கவில்லை எனவும்

சுமார் 500 பேருக்கு மேல் காவல்நிலையத்தில் இருக்கின்றனர் ஆனால் ஊடகம் (செய்தியாளர்கள்) இதுவரை அங்கு வரவில்லை என்றும் . ஊடகத்தை அழைத்தால் A.S.P.அரவிந்தன் அவர்கள் ஊடகத்திற்க்கு உத்திரவு போட்டுள்ளாராம் இந்த செய்தி சேகரிக்க
யாரும் வரகூடாது என்று .

இந்த செய்தி அறிந்து சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அதிகாரிகளிடம் கேட்ட போது உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர்

எப்படியோ மோடி ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் முதல் பாசிசவெறியாட்டம் நடத்த முன்னோட்டம் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது …

சமுதாயமே விழிப்போடு இருந்தால் இன்ஷாஅல்லாஹ் விஷமிகளின் சதியை முரியடிக்கலாம் .
ஒன்று படுவோம் ! வென்று காட்டுவோம் !!

குறிப்பு :- 2 இரண்டு பேரை கைது செய்துள்ளதாக கடைசியாக வந்த தகவல்..

ஞாயிறு, 18 மே, 2014

மங்களூர்: வெற்றி ஊர்வலத்தில் மஸ்ஜிதை தாக்கிய பாஜகவினர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நேற்றைய தினம் (மே 16, வெள்ளிக் கிழமை ) மத்தியில் பாஜகவின் வெற்றியையும் தக்ஷன கன்னட நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது தடவையாக மீண்டும் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டத்தில் பாஜகவினரால் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வெற்றி ஊர்வலங்களில் இரண்டு மஸ்ஜித்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பந்த்வல் தாலுக்காவில் இருக்கும் கம்பலப்பட்டு என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு மஸ்ஜிதுக்கு அருகில் பாஜக வினர் "ஹரஹர மோடி" என்ற வெறிக் கூச்சல்களுடன்,கற்களை மஸ்ஜிதுக்குள் வீசியும்,வெடிகளை வெடித்தும் அராஜகம் செய்திருக்கின்றனர்.
மேலும் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப் பட்டிருக்கிறது.அந்த பள்ளி வளாகத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்காக கட்டப்பட்டு வரும் மேடையும் தாக்கி சேதப்படுத்தப் பட்டிருக்கிறது.
பகல் 12:55 மணியளவில் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஒரு குழுவாக புறப்பட்டு வந்த பாஜகவினர் பள்ளிவால் வளாகத்துக்குள் தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு கற்களை வீசத் தொடங்கியதாக நேரில் கண்டவர்கள் கூறுகிறார்கள்.
இந்த கிராமத்தில் இரண்டு மஸ்ஜித்கள் இருக்கின்றன. முஹியத்தீன் ஜும்மா மஸ்ஜித் எனும் பெயர் கொண்ட இந்த பள்ளியை தான் காவிகள் தாக்கி இருக்கிறார்கள்.
இந்த வாரம் ஜும்மா தொழுகையை இங்கே இருக்கும் இப்ராஹீம் கலீல் மஸ்ஜிதில் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற அந்த கிராமத்து முஸ்லிம்கள் தீர்மானித்து அணைவரும் அந்த பள்ளியில் குழுமத் தொடங்கி இருந்த வேளையில் இந்த முஹியதீன் பள்ளி தாக்கப் பட்டிருக்கிறது.
இந்த பள்ளியின் கதீபாக இருக்கும் ஆலிம் ஜும்மா தொழுகையை நிறைவேற்ற இப்ராஹீம் கலீல் பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அவரை தாக்க பாஜகவினர் முற்பட்டிருக்கிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக அவர்களது தாக்குதலில் இருந்து அவர் தப்பித்திருக்கிறார்.
சம்பவம் நடைபெற்ற இடங்களை போலிஸ் துணை சூப்பிரண்டு நேரில் வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்.இந்த தாக்குதல் தொடர்பாக 9 பேர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.
மேலும் இதே மாவட்டத்தில் கிக்கம்பா அருகே இருக்கும்
சுரல்பாடி என்ற கிராமத்தில் இருக்கு ஒரு மஸ்ஜிதை பாஜகவினர் தாக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகிறது.
தகவல் : Zafar Rahmani


http://www.coastaldigest.com/index.php/ls-polls-2014/64664-bjp-activists-resort-to-vandalism-attack-masjids-amidst-celebrations?fb_action_ids=777811275576487&fb_action_types=og.likes