பாரதிய ஜனதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதிய ஜனதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 மே, 2014

"ஆர்.எஸ்.எஸ்=பாரதிய ஜனதா =காங்கிரஸ்"

பாரதிய ஜனதாவின் கொள்கைகளான அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டம், பொதுசிவில் சட்டம், மாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கு தடை போன்றவற்றை அரசியல் சாசனத்துக்குட்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா 
************************************************
சார் வேறு யாரும் இல்லை .

பல ஆண்டு காலம் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அதை தொடந்து காங்கிரஸின் முத்த தலைவர் மற்றும் குஜராத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
 
 "ஆர்.எஸ்.எஸ்=பாரதிய ஜனதா =காங்கிரஸ்"

 


செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

கஷ்மீருக்கு சுயாட்சி வழங்கக் கூடாது: ராஜ்நாத் சிங்

ஆக,10:கஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதற்கான எந்தவொரு முயற்சியையும் பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

பாட்னாவில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்."காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பலவீனம் மற்றும் உறுதியின்மையே கஷ்மீரில் இப்போது நிலவும் குழப்பத்துக்கு காரணம்.மேலும் கஷ்மீருக்கு சுயஅதிகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதுபோல் ராணுவ பாதுகாப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதையும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்." என்றார் அவர்