சனி, 12 ஜூலை, 2014

இலங்கயில் ஐநா விசாரணை நடத்துவதை எதிர்க்கிறோம்:மோடி அரசு

வன்னிப் இனவழிப்பின் போது நடைபெற்ற இரு தரப்புப் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு செயற்படுவதாகக் கூறிவருவது தெரிந்ததே. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன், இலங்கை உள்விவகாரங்களில் மனித உரிமைக்குழுக்கள் தலையிடக் கூடாது என்றார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்திதது நடத்திய பேச்சுக்கள் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையிலேயே அக்பருதீன் அவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில் இரண்டு அமைச்சர்களும் இருதரப்பு முதலீடுகள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தியதாகக் குறிப்பிட்டார்.
உலக நாடுகள் முழுவதும் இலங்கையைச் சூறையாட ராஜபக்ச கிரிமினல் அரசு வழியைத் திறந்துவிட்டுள்ளது. ஐ.நா விசாரணை என்ற தலையங்கத்தில் முன்னை நாள் போராளிகளைப் போர்க்குற்றவாளிகளாக்கிவிட்டு இனக்கொலையாளிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைக்கு விசாரணை எனப் பெயரிட்டுள்ளனர். விசாரணையின் விளைவுகள், அதன் உள்ளர்த்தம், இன்றைய அரசியல் சூழல் தொடர்பான அடிப்படை அறிதலின்றி தமிழ் இனவாதக் கும்பல்கள் அமெரிக்க மற்றும் ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் முழுச்சமூகத்தையும் அமிழ்த்தியுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட இந்திய ஆளும் வர்க்கத்தை வாக்குப் பொறுக்குவதற்காகவும், தமது வியாபார நலன்களுக்காகவும் ஆதரிக்கும் தமிழ் இனவாதக் கும்பல்களின் ஒரு பகுதியினர் நரேந்திர மோடியின் வரவை ஆதரித்தனர்.
அழிவுகளுக்கு எல்லாம் பின்புலத்தில் செயற்படும் இக் கும்பல்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அனைவரையும் ஆட்சிக்குக் கொண்டுவர அரும்பாடுபட்டனர். எல்லா அழிவுகளுக்கும் பொறுப்பான இவர்கள் இன்றும் தமே தமிழ்ச் சமூகத்தின் தலைமை என்கின்றனர்.இன்று தமிழ் இனவாதிகள் ஆதரித்த பாசிஸ்ட் மோடியின் அரசு ஐ.நா விசாரணை வேண்டாம் என்கிறது.
ஐ.நா விசாரணை என்ற பூச்சாண்டியக் காட்டி மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் இலங்கை இந்திய அரசுகள் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் சூறையாடலைத் தீவிரப்படுத்தியுள்ளன.
விசாரணையை எதிர்க்கிறோம் என்றும் ஆதரிக்கிறோம் என்றும் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க சிங்கள பௌத்தமயமாக்கலும், நிலப்பறிப்பும், பல்தேசியக் கொள்ளையும் துரித கதியில் நடைபெறும்.
http://inioru.com/?p=41255

கருத்துகள் இல்லை: