புதன், 1 ஜூலை, 2009

உமாபாரதியின் வாக்குமூலமும்-உறங்கும் சட்டமும்!



பாபர் மஸ்ஜித் பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்டபின், பல்வேறு காலகட்டங்களில் போது மேடைகளில் 'நாங்கள் தான் பாபர் மஸ்ஜிதை இடித்தோம். அதற்காக பெருமைப்படுகிறோம் என்று பயங்கரவாதிகள் முழங்கியதுண்டு. அப்போதும் சட்டம் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இப்போது பதினேழு ஆண்டு கடந்தபின் சமர்ப்பிக்கப்பட்டுள்ள லிபரான் கமிஷன் அறிக்கையை கண்டு 'கிலி' பிடித்துள்ள பாபர் மஸ்ஜித் இடிப்பாளர்கள், தங்களின் பயத்தை மறைக்க வீரவசனம் பேச புறப்பட்டுவிட்டனர்.


லிபரான் அறிக்கை தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் திருவாய்மலர்ந்துள்ள இந்துத்துவா பெண் சாமியாரிணி உமாபாரதி, "பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார். ஒரு நல்ல கமாண்டரைப் போல் இதனைக் கூறுகிறேன். இதனால் என்னைத்தூக்கிலிட்டாலும் எனக்குப் பிரச்சனை இல்லை''என்று கூறியுள்ளதோடு, கரசேவைக்காக அதிக அளவில் தொண்டர்களை அழைத்துவந்த பா.ஜ.க. தலைவர்கள் பாபர் மஸ்ஜித் இடிப்புக்காக மன்னிப்பு கோரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசலை இடித்ததோடு, அதற்காக மன்னிப்பும் கேட்கமாட்டோம் தூக்குமேடைக்கும் தயார் என்றெல்லாம் பகிரங்க வாக்குமூலத்தை உமாபாரதி அளித்துள்ளார். இதற்கு பிறக்கும் சட்டம் இவர்களை தண்டிக்க முன்வரவில்லையானால், இன்னும் எத்தனை பாபர் மஸ்ஜிதுகளை வேண்டுமானாலும் இடிக்கும் துணிவையும், சட்டத்திற்கு அஞ்சாமல் திமிராக பேசும் துணிவையும் இந்த பயங்கரவாதிகளுக்கு தந்துவிடும். எனவே, சட்டம் தன் கடமையை செய்ய முன்வரவேண்டும் என்பதே மஸ்ஜிதை மீட்க சட்டத்தை நம்பியிருக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் வேண்டுகோளாகும்.

விமான நிலையத்தில் கிடந்தது சினிமா குண்டு!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பொருள் சினிமா குண்டு என்று தெரியவந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் உருண்டை வடிவ மர்ம பொருள் மற்றும் குழாய்கள் கேட்பார் இன்றி கிடந்துள்ளது.

ரோந்து சுற்றிவந்த பாதுகாவலர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் இது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்..

அவர்கள் வெடிகுண்டை கண்டு பிடிக்கும் மோப்ப நாய்களுடன் வந்து உருண்டை வடிவ மர்ம பொருள் குறித்து சோதனை சோதனை செய்தனர்.

மேலும் விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளையும் தீவிர சோதனை செய்தனர்.

இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்கள் கூறியது. ''இந்த வகைத குண்டு சினிமா படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படுவது, இதை வெடிக்கச் செய்தால் சத்தம் மட்டுமே பெரிதாக வரும் சேதம் ஏதும் ஏற்படுத்தாது. ராணுவம் மற்றும் சினிமா படப்பிடிப்புக்கு இந்த குண்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த குண்டு எப்படி இங்கு வந்தது என்று விசாரணை செய்யப்பட வேண்டும்." என்றனர்

அமெரிக்கப் படைகள் வெளியேற ஆரம்பிக்கும் தினத்தை கோலாகலமாகக் கொண்டாட ஈராக் முடிவு

ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு இத் தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட ஈராக் அரசு முடிவு செய்துள்ளது.
ஈராக் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிக்கிறது. ஏராளமான இரசாயன ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கிறது. இதனால் அந்தப் பிராந்தியத்துக்கே ஆபத்து என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இந்த நிலையில் ஈராக்கில் உள்ள அணு உலைகளைச் சோதனையிட சர்வதேச முகவர் அமைப்புக்கு ஈராக் அரசு அனுமதி அளிக்க மறுப்பதாகக் கூறி அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படை ஈராக் மீது படையெடுத்தது.பெரும் தாக்குதலுக்குப் பின், அங்கு சதாம் ஹூசைன் தலைமையிலான ஆட்சியை அகற்றிவிட்டு தற்போது புதிய ஆட்சியை ஏற்படுத்தி உள்ளது.புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டதை அடுத்து அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று பரவலாகக் கோரப்பட்டது.
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கூட படைகள் வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.இதனையடுத்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான பாதுகாப்பு உடன்படிக்கையொன்றுக்கு அமெரிக்காவும் ஈராக்கும் இணங்கின.இந்நிலையில் அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்று அமெரிக்க அரசு அறவித்தது. ஒபாமா அதிபராகப் பதவியேற்ற பின் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறுவதற்கு முக்கியத்துவம் அளித்தார்.இவ் உடன்படிக்கையின் பிரகாரம் இந்த ஜூன் 30 முதல் படைகளைப் படிப்படியாக விலக்கிக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.அதன்படி வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் படையின் முதல் பிரிவு ஈராக்கில் இருந்து வெளியேறுகிறது.
அமெரிக்கப் படைகள் வெளியேறும் தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட ஈராக் அரசு முடிவு செய்துள்ளது.படைகள் வெளியேறுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே கொண்டாட்டங்கள் தொடங்கி விடுகின்றன. ஜூன் 30 பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப்படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறுவது பெரும் வெற்றி என்று ஈராக் பிரதமர் அல்மாலிகி தெரிவித்தார்.ஈராக்கிய நகரங்கள் மற்றும் வீதிகளில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் செவ்வாய்க்கிழமை முதல் முகாம்களுக்குள் முடக்கப்படவுள்ளனர்.அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டாலும் 2011 ஆம் ஆண்டிலேயே இங்கிருந்து முழுப்படைகளும் வெளியேறுமென்பது குறிப்பிடத்தக்கது

ஈரான் - அஹ்மதி நிஜாத் அதிபராகத் தொடருவார்!


ஈரானின் பத்தாவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் அஹ்மதி நிஜாத் முறைகேடுகள் மூலமாக வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டை எதிர் கட்சி எழுப்பியிருந்தது.


ஈரானில் அஹ்மதி நஜாதின் அமோக வெற்றியை எதிர்பாராத சில ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கூட சில அறிக்கைகள் விடுத்தது. பி. பி. சி செய்தித்தளமும் நஜாத் பங்கெடுத்த பொதுக்கூட்டத்தின் புகைப்படத்தை அவருக்கு எதிரானவர்களுடைய ஆர்ப்பாட்டம் என்று காண்பித்தது. உள்நாட்டுக் கலவரம் வெடிக்கும் அளவுக்கு நிலை மோசமான போது அங்கு தேர்தலை நடத்தும் கார்டியன் கவுன்சில் முறைகேடுகள் நடந்ததாக கருதப்பட்ட பகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தீர்மானித்தது.

முக்கிய எதிர்கட்சியின் தலைவரும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான மீர் ஹுஸைன் மூஸாவி ஆகியோரின் கோரிக்கையின் படி பத்து சதவிகித வாக்குகளை மீண்டும் மறு எண்ணிக்கை செய்த பின்னர் அஹமதி நிஜாத் வெற்றி பெற்றதை கார்டியன் கவுன்சில் அதிகார பூர்வமாக அறிவித்தது.

கார்டியன் கவுன்சில் செயலாளர் ஆயதுல்லா ஜன்னதி உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் அஹ்மதி நிஜாதின் வெற்றி செல்லும் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். மேலும் தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கையிலும் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

ஜூன் 12 நடந்த அதிபருக்கான தேர்தலில் 63 சதவிpத வாக்குகபை; பெற்று அஹ்மதி நிஜாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தோர்தலில் முறை கேடு என்ற எதிர்கட்சியினரின் கடுமையான போராட்டத்தினால் சுமார் 17 பேர் மரணமடைந்தனர். தொடர்ந்து நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் அஹ்மதி நிஜாத் வெற்றி பெற்றது மட்டுமின்றி பல இடங்களில் அவருடைய வாக்குகள் முன்பைவிட அதிகரித்திருந்தது தெரியவந்தது.

பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார் : உமாபாரதி!


பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார் என்று பாரதீய ஜனசக்தி கட்சித் தலைவி உமா பாரதி கூறியுள்ளார். இதனால் தனக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தாலும் பிரச்சனை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப் பட்ட லிபரன் விசாரணை ஆணையம் தன்னுடைய விசாரணை அறிக்கையை பிரதமரிடம் இன்று அளித்தது குறித்து, பத்திரிகையாளர்களை தன்னுடைய வீட்டில் சந்தித்த உமாபாரதி, "பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார். ஒரு நல்ல கமாண்டரைப் போல் இதனைக் கூறுகிறேன். இதனால் தன்னைத் தூக்கிலிட்டாலும் எனக்குப் பிரச்சனை இல்லை" என்று கூறினார்.

17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை அறிக்கை பிரதமரிடம் அளிக்கப் பட்டிருப்பது முஸ்லிம்களை சமாதானப் படுத்தவே என்றும் அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலையை அடுத்து 20 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப் பட்டதற்கு ஒருவரைக் கூட குற்றம் சாட்ட காங்கிரஸ் தலைமையிலான அரசால் முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் மன்னிப்புக் கோரக் கூடாது என்றும் அவர்கள்தான் அதிகமான மக்களை அயோத்திக்கு கரசேவைக்கு அழைப்பு விடுத்தனர் என்றும் அவர் கூறினார்.

குஜராத் இனப்படுகொலை - பாஜக எம்.எல்.ஏ சரண்!


குஜராத்: கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து முசுலீம்களை இனக்கருவறுப்பு செய்த வழக்கில் தலைமறைவானவராக அறிவிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலத்திலுள்ள பாஜக எம்.எல்.ஏ காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

குஜராத்திலுள்ள ராஜ்கட் தொகுதியிலிருந்து பாஜக சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர், ஃபதாசிங் சவுஹான். இவர், 2002 ஆம் ஆண்டு, முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சுமத்தப்பட்டவராவார். இவரைக் கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது. எனினும் காவல்துறை இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்நிறுத்த இயலாததால், தலைமறைவானவர் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நீரற்றுஇவர் காவல்நிலையத்தில்சரணடைந்தார். அவரைக்காவல்துறை கைது செய்துநீதிமன்றம்முன்னிலையில்நிறுத்தியது.

தேவ்கட் பாரித் என்ற தாலுகாவிலுள்ள வாவ்குண்டலி என்ற கிராமத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு இவர் தலைமை தாங்கினார் என்பதே இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணதண்டனை விதிக்கும்படியான குற்றம் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் கொள்கை என்பதே கிடையாது - கோவிந்தாச்சார்யா


பாஜகவை RSS விலக்கி வைக்க வேண்டும் என பாஜகவின் முன்னாள் மூத்த தலைவர் கோவிந்தாச்சார்யா கூறியுள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாஜகவில் கொள்கை என்பதே கிடையாது, பதவி தான் கொள்கையாகிவிட்டது, ஹிந்துத்துவா

கொள்கைகளிலும் தெளிவு கிடையாது. எனவே RSS பாஜகவை விலக்கிவைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் வருன் காந்திக்கு சீட் கொடுத்ததே தவறு. வன்முறையை தூண்டும்படி பேசுவதெல்லாம் கட்சியை வளர்க்க உதவாது என்ற அவர், இந்நிலை தொடர்ந்தால் பாஜக எந்த மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றார்.

RSS-யின் தீவிர உறுப்பினரான கோவிந்தாச்சார்யா, சில காலம் பாஜகவில் மூத்த தலைவராக இருந்த்து கட்சி பணியாற்றினார். பின்பு கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட மோதலால் கட்சியிலிருந்து விலகிவிட்டார்.