இதன் மூலம் வரும் பின்விளைவுகள் தெரிந்தே சில பேர்..! தெரியாமலே சில பேர்..! எல்லாஇடங்களிலும் ஆட்டு முகம் பொருத்திய ஓநாய் மனிதர்கள் இருக்கிறார்கள், என தெரியாமல் போலித்தனமான,கேவலமான மனதுடைய மனிதர்களை நம்பி தன் புகைப்படம் முதற்கொண்டு தன் வீட்டு விவரங்கள் யாவற்றையும் பொதுவில் பந்தி வைக்கும் இவர்களை என்ன செய்வது..? இதில் யார் நல்லவர் யார் கெட்டவர் என எப்படி அறிவது..?
அப்படி தனக்கு வேண்டியவர்களுக்கு தெரிவிப்பதற்கு தான் நிறைய தனிப்பட்ட வழிமுறைகள் இருக்கிறதே பின் என்ன வந்தது இவர்களுக்கு..? அந்த காலத்தில் படிக்காதவர்களான நம் பாட்டிகளிடம் இருந்த ,எதை வெளியில் சொல்ல வேண்டும்,எதை வெளியில் சொல்ல கூடாது என்ற தெளிவும்,அறிவும்,அதிகம் படித்த இந்த மாதிரி பெண்களிடம் இல்லை என்பதே உண்மை .இவர்கள் நிஜத்துக்கும் ,நிழலுக்கும் வித்தியாசம் தெரியாத படித்த மேதைகள்..!
இன்னும் வேறு வகை பெண்கள் சிலர் இங்கு உண்டு ..காதல் மொழி பேசி வரும் நபரிடம் தன்னை பற்றி அனைத்தையும் சொல்லி உருகி உருகி காதலித்து பின் வெளி இடங்களில் இருவரும் பல முறை சந்தித்து,தன் கற்பை இழந்த பின் அவனுக்கு இவள் அலுத்து அவன் தன் சுயரூபத்தை
காட்டியதும் கண்ணீர் விட்டு அழுது மனம் நொந்தபடி கிடப்பது என்று...! இதில்
சில தைரியமான பெண்கள் தன் முகத்தை மூடி கொண்டு போலீசில் புகார் கொடுக்க வரும் போது உங்கள் சிந்திக்கும் திறனை எங்கு அடகு வைத்தீர்கள் என கேட்க தோன்றுகிறது...!
இரைக்காக காத்து இருக்கும் வேடன் போல, பெண் மூலம் தேவையை விரும்புபவன், தேன் சொட்டும்,ஆசை
வார்த்தைகளையும்,அதிக படியான வீண் புகழ்ச்சியையும்,பசப்பலான நடிப்பையும்
வெளிப்படுத்த தான் செய்வான்..அவனுக்கு தேவை இரை ..அதற்காக என்ன
வேண்டுமாலும் செய்வதற்கு தயாராக தான் இருப்பான்..நோக்கம் நிறைவேறியதும்
வேறு ஒரு புதிய இரையை தேட போய் விடுவான்..இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்க படுவதென்னமோ பெண் தான்..வாழ்வில் சில விஷயங்களை நாம் இழந்தால் இழந்தது தான்..! அதை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது..!
தவறு செய்யும் சில ஆண்களை குற்றம்
சொல்லும் இந்த இடத்தில் இதே போல குற்றம் செய்யும் பெண்களையும் குறிப்பிட
வேண்டும்.. தன் அழகால் வசீகர பேச்சால் ஆண்களை தன் வலையில் விழ வைத்து
அவர்களின் பணத்தை சூறையாடும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள்...! தன் குடும்பத்தை
விட்டு தன்னந்தனியாக,தனக்கு என்று பெரிதாக ஆசை படாமல் தன் குடும்ப
கஸ்டத்தை மட்டுமே மனதில் இருத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரர்கள் பலர் இங்கு உண்டு..
வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சில ஆண்கள்
கூட,பெண்களின் மோக வலையில் சிக்குவது என்பது நாம் அனைவரும் நடைமுறையில்
அறிந்த ஒன்று..இந்த பலகீனம் உள்ளவர்கள் தான் இந்த மாதிரி பெண்களின் இலக்கு
..அவர்கள் தன் உதிரத்தை வியர்வையாக்கி சம்பாதிக்கும் பணத்தை இந்த பெண்கள்
தன் பேச்சு திறமையாலும்,தன் கவர்ச்சிகரமான தோற்றத்தாலும் எளிதில் கவர்ந்து விடுகின்றனர்..இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருக்கும் அப்பாவிகள் பலர்..! சில பெண்கள் சமத்துவத்தை இந்த விஷயத்திலும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்..ஆண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம் இது..!
இந்த ஃ பேஸ்புக்கால் நன்மை எதுவும் இல்லையா..? என்றால்
கட்டாயம் இருக்கிறது..! இங்கு எத்தனையோ சகோதர சகோதரிகள்,தங்களுடைய பல வேலை
பளுக்களுக்கு இடையில் நல்லதை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு
செயலாற்றி கொண்டு இருக்கிறார்கள்..! மேலும் இதன் மூலம் பல நல்ல சமுதாய
மாற்றங்களும்,, கல்வி உதவிகளும்,உயிர் காக்கும் பல மருத்துவ
தேவைகளும்,பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது ..எந்த ஒன்றும் நாம்
பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது என்பது போல இந்த ஃபேஸ்புக்கையும் நாம்
பல நல்ல ஆக்கபுர்வமான விசயங்களை தெரிந்து கொள்வதற்கும்,பகிர்ந்து
கொள்வதற்கும் பயன் படுத்தலாம்..
மேலும் இங்கு பல நல்ல நட்புகள் உள்ளன.. நல்லதை எடுத்து சொல்லி அடுத்தவர்
தவறு செய்யும் போது தனி பட்ட விதத்தில் திருத்தும் அருமையான நட்புகள்
உண்டு..என்னை போல நல்ல நட்பின் மூலம் பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட பலர்
இங்கு உண்டு ..வரம்பு மீறாத தன்மையோடும் சரியான புரிதலோடும்,எந்த
எதிர்பார்ப்பும் இல்லாத இறைவனுக்கு மட்டுமே பயந்து நட்பு கொண்ட பலர் இங்கு
உண்டு ..
ஆனால் சமீப காலங்களாக கேள்வி படும் விசயங்கள் நன்மையை விட இந்த இடம் பல தப்பான செயல்களுக்கு தான் அதிகம் துணை போவதாக தெரிகிறது..எல்லா இடத்திலும் எந்த
வழியை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பது நம் கையில் இருக்கிறது..முக்கியமாக
பெற்றோர்கள் தன் பிள்ளைகள் எந்த வழியில் இருக்கிறார்கள் என்பதை கண்டிப்பாக
பார்க்க வேண்டும்..எந்த வழி சரியான வழி என்பதை சுட்டி காட்ட வேண்டிய பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது..
அனைவருக்கும் தெரிந்த உவமை தான் ஆனால் நல்ல உவமை :-
சேலை முள்ளில் மீது பட்டாலும் இல்லை,முள் சேலை மீது பட்டாலும் பாதிப்பு என்னவோ சேலைக்கு தான்..!
டிஸ்கி:-தன் பொறுப்புகளையும்,தன் கடமைகளையும்,புறக்கணித்து, நாளை
இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமே என்ற நிலை மறந்து,இந்த மாய உலகத்தில்
தன்னை முழுவதுமாக மூழ்கடித்து தன் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் யாராவது
ஒரு சகோதரி இந்த பதிவை படித்து விட்டு தன்னை மீட்டெடுத்து கொண்டார் எனில்
அது தான் இந்த பதிவின் நோக்கமும் வெற்றியும்..!
நன்றி---சிநேகிதி பத்திரிகை..
உங்கள் சகோதரி..
ஆயிஷா பேகம்..
நன்றி http://kaiyalavuulagam.blogspot.com/2012/06/blog-post.html