இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
வியாழன், 2 செப்டம்பர், 2010
ஈராக்:ஏற்றுக்கொண்ட பணி முடிவடைந்துவிட்டதாக ஒபாமா
ஈராக்கினை சுதந்திரம் அடையச் செய்வதற்கான பணி முடிவடைந்துவிட்டது. ஈராக்கின் எதிர்காலத்தை அங்குள்ள மக்களின் கரங்களில் அளிக்க அமெரிக்க மிகப்பெரிய விலையை கொடுக்க நேர்ந்தது.
அமெரிக்காவின் பொருளாதார கட்டமைப்பை புனர் நிர்மாணிப்பதுதான் இனி நமது பணி என ஈராக் போர் முடிவடைந்துவிட்டதாக தேச மக்களுக்கு அளித்த செய்தியில் ஒபாமா குறிப்பிட்டார்.
பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் உள்ளதாக கூறி கடந்த 2003 ஆம் ஆண்டில் ஈராக் என்ற சுதந்திரதேசத்தின் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போரைத் துவங்கியது. ஆனால், பல மாதங்களுக்குப் பின்னால் அத்தகைய பேரழிவு ஆயுதங்கள் ஒன்றும் ஈராக்கில் இல்லை எனக்கூறி பணி முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்.w.புஷ் அறிவித்தார்.
தொடர்ந்து ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போகிறோம் எனக்கூறி அங்கு அமெரிக்க படைகள் தொடர்ந்து இருந்து வந்தன.
2004 ஆம் ஆண்டில் அமெரிக்க ராணுவம் ஃபலூஜாவில் பயன்படுத்திய ஆயுதங்கள் தலைமுறைகளை பாதிப்பிற்குள்ளாக்குவதாகும். இரண்டாம் உலகப்போரின் பொழுது ஜப்பானின் ஹிரோஷிமாவிலும், நாகஷாகியிலும் அணுத்தாக்குதல் நடந்தபொழுது ஏற்பட்ட சூழல்தான் ஃபலூஜாவிலும் என இதுத்தொடர்பான ஆய்வு ஒன்றுத் தெரிவிக்கிறது.
4500 அமெரிக்க ராணுவத்தினர் ஈராக்கில் பலியாகியுள்ளனர். ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதற்காக 50 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் ஈராக்கில் தொடர்வர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
புதன், 1 செப்டம்பர், 2010
விக்கிபிடியாவில் யூதர்கள் பொய் பிராச்சாரம்
இப்பணிக்காக இஸ்ரேலிய யூதர்கள் ஒரு சிறப்பு குழுமத்தை அமைத்து அதன் மூலம் பாலஸ்தீனம், இஸ்ரேல், மற்றும் சமய பக்கங்களில் தங்களுக்கு சாதகமான செய்திகல் மற்றும் தவறான ஆவணக்குறிப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். இதற்கான ஒரு சிறப்பு கூட்டம் ஒன்றில் தன்னார்வல யூதர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாலஸ்தீன இதழியாளர்கள் தலைவர் அப்துல் நாசர் அன்-நஜார் பெத்தலஹாமை மைய்யமாக கொண்ட மான் என்ற பத்திரிகையில் பாலஸ்தீனியர்களும் தங்கள் பங்குக்கு குழுமத்தை அமைத்து அதன் மூலம் யூதர்கள் பரப்பி வரும் தவறான செய்திகளை தாங்கள் செப்பனிட திட்டமிட்டுயிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த கட்ட இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் ஒரு "ஊடக வாயிலான போராக" இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் மரணத்தைத் தழுவும் அமெரிக்கத் துருப்புகள்
இன்று ஆப்கானில் ஐந்து அமெரிக்கத் துருப்பினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று நேட்டோ தலைமையகம் தகவல் தெரிவித்துள்ளது. தாலிபானுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களுள் 22 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமை (31.08.2010) கிழக்கு ஆப்கானில் மேற்கொள்ளப்பட்ட தாலிபான் பாணி குண்டுத் தாக்குதலில் 5 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு, ஆப்கானின் தென்பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதலில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று நேட்டோவின் சர்வதேச பாதுகாப்பு உதவிப்படை தெரிவித்துள்ளது.
ஆப்கானில் அமெரிக்கத் தலைமையிலான வெளிநாட்டுப் படையினர் தலிபான்களுக்கெதிராக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இந்த வருடம் மாத்திரம் 485 நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் முழுதும் கொல்லப்பட்ட நேட்டோ படையினரின் எண்ணிக்கையோடு (521) ஒப்பிடும்போது, தாலிபான் தாக்குதலில் மரணத்தைத் தழுவும் வெளிநாட்டுப் படையினரின் எண்ணிக்கை இவ்வருடம் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆப்கானின் தென் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு குண்டுத் தாக்குதலில் 8 நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுள் 7 பேர் அமெரிக்கர்களாவர். தாலிபான்களின் எதிர்த் தாக்குதலின்போது உயிரிழந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 50 ஆக அதிகரித்துள்ளது.
2001 ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் அமெரிக்கத் தலைமையில் நேட்டோ படையினரால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஆப்கானில், தாலிபான்களை எதிர்த்துப் போரிட்டுவரும் வெளிநாட்டுத் துருப்பினரைப் பொறுத்தவரையில் ஜூன்-ஜூலை மாதங்கள் சவால் நிறைந்தவையாகவும் மிகப் பெருமளவான உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ள காலகட்டமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இஸ்ரேலே பொறுப்பு: அப்பாஸ்
மேற்குகரை,செப்.1:வாஷிங்டனில் வருகிற வியாழக்கிழமை நடக்கவிருக்கும் ஃபலஸ்தீன்-இஸ்ரேல் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவினால் அதற்கான முழுப்பொறுப்பும் இஸ்ரேலாகும் என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறியுள்ளார்.ஃபலஸ்தீன் மக்களிடம் ஆற்றிய உரையில் அப்பாஸ் இதனை தெரிவித்தார்.
"ஃபலஸ்தீன் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை தொடர்வது நேரடியான பேச்சுவார்த்தையை பாதிக்கும். 1967 முதல் நடத்திவரும் குடியேற்ற நிர்மாணங்களை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலின் தலைமைக்கு இயலும் என எதிர்பார்க்கிறேன்.
சுதந்திர ஃபலஸ்தீனுக்கு குறைந்த ஒன்றையும் அங்கீகரிக்கமாட்டோம். இந்த நோக்கத்தில் அரபு சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.
எல்லை, குடியேற்றம், பாதுகாப்பு, இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஃபலஸ்தீனர்கள் உள்ளிட்ட விஷயங்களை பேச்சுவார்த்தையில் உட்படுத்தாமல் காலம் கடத்தும் இஸ்ரேலின் தந்திரம் பலிக்காது.
சுதந்திரத்திற்காக தாகிக்கும் உலகத்தின் மிக பழக்கமுடைய சமூகம்தான் ஃபலஸ்தீனர்கள். ஆதலால், எங்களுடைய கோரிக்கை நியாயமானது என்ற விழிப்புணர்வோடுதான் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைக்கு செல்கிறோம்." இவ்வாறு அப்பாஸ் உரை நிகழ்த்தினார்.
அமெரிக்கா மத்தியஸ்தராக பங்கெடுக்கும் இப்பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்பட இரு நாடுகளின் இதர முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பர் எனக் கருதப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
ஆக்ஸ்போர்ட் அகராதியின் அச்சு பதிப்பு நிறுத்தம்
லண்டன்,செப்.1:ஆங்கில மொழியின் அதிகாரப்பூர்வ வழிகாட்டியாக திகழும் ஆக்ஸ்போர்ட் அகராதியின் அச்சு பதிப்பு நிறுத்தப்பட்டு ஆன்லைன் வழி மட்டும் செயல்படும்.ஆன்லைன் பதிப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அச்சு பதிப்பை பயன்படுத்துவோரின் பல மடங்கு அதிகரித்துள்ளதாக வெளியீட்டாளர்களான ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரஸ் அறிவித்துள்ளது.
புதிய பதிப்பில் வார்த்தைகளை சேர்க்கும் பணி பூர்த்தியாகும் வேளையில் அச்சுபதிப்பிற்கு போதிய தேவையுடையோர் இருப்பாகளா என்பது சந்தேகமே! என வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆக்ஸ்போர்ட் அகராதியின் ஆன்லைன் பதிப்பிற்கு மாத சந்தாதாரர்களிடமிருந்து 20 லட்சம் ஹிட்டுகள் கிடைக்கின்றன. 1989-ம் ஆண்டில் வெளியிட்ட 20 வால்யூங்களைக் கொண்ட தற்போதைய அச்சு பதிப்பு 30000 பிரதிகளே விற்பனையாகியுள்ளது.
1165 டாலர் இதன் விலை. ஆக்ஸ்போர்ட் அகராதியின் முதல் பகுதி வெளியானது 1884 ஆம் ஆண்டிலாகும். தொடர்ந்து பிரபலமான அகராதியின் முழுப்பதிப்பும் வெளியானது 1928 ஆம் ஆண்டில்.
சாமுவேல் ஜான்சன் 1755 ஆம் ஆண்டில் வெளியிட்ட ’எ டிக்சனரி ஆஃப் இங்கிலீஸ் லாங்குவேஜ்’ என்ற அகராதிக்கு பிறகு முழுமையான அகராதி ஆக்ஸ்போர்ட் அகராதியாகும்.
அகராதியின் தற்போதைய பதிப்பில் (இரண்டாம் பதிப்பு) 2,91,500 வார்த்தைகள் உள்ளன. ஆக்ஸ்போர்ட் அகராதி ஆன்லைனில் செயல்படத் துவங்கியது 2000 ஆம் ஆண்டிலாகும்.
பணம் கட்டும் சந்தாதாரர்களுக்கு மிக எளிமையாகவும்,வேகமாகவும் வார்த்தைகள் கண்டறிவதற்கான வசதியை இது ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை புதிய வார்த்தைகளை இணைத்து இந்த அகராதி அப்டேட் செய்யப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
பாக்.பெருவெள்ளம்:முஸ்லிம் நாடுகள் 100 கோடி டாலர் நிதியுதவி
இஸ்லாமாபாத்,செப்.1:பாகிஸ்தானில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதியாக 100 கோடி டாலர் அளிக்க முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஆர்கனைசேசன் ஆஃப் இஸ்லாமிக் கான்ஃப்ரன்ஸ்(O.I.C) முடிவுச் செய்துள்ளது. இவ்வமைப்பின் தலைவர் இக்மாலுதீன் இஹ்ஸா நோக்லூ இதனை தெரிவித்துள்ளார்.பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காண வருகை புரிந்திருந்தார் அவர். நேற்று முன்தினம் தெற்கு சிந்துவில் சில பகுதிகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தன.இது நிலைமை மேலும் மோசமடையச் செய்தது.இந்த சூழலில்தான் முஸ்லிம் உலகின் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வமைப்பில் உறுப்பு நாடுகளான சவூதி அரேபியா, குவைத், துருக்கி, கத்தர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு உதவ நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து கிடைக்கும் பணம் நிதியுதவியாக வழங்கப்படும் என இஹ்ஸா நோக்லூ தெரிவித்தார்.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு நிவாரண உதவிகள் அரசு சாரா அமைப்புகள் மூலம் வழங்குவதை பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி விமர்சித்துள்ளார். இத்தகைய உதவிகளை அரசுசாரா அமைப்புகள் தவறாக பயன்படுத்தும் என கிலானி சுட்டிக்காட்டினார்.
இரண்டுகோடி மக்களை பாதித்த வெள்ளப்பெருக்கில் 2000 பேர் மரணித்தனர். ஏறத்தாழ ஒருமாதம் ஆகியும் கூட முகாம்களில் துயருறும் மக்களுக்கு இதுவரை நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை. முகாமில் நோய் பரவுவதாக துயர்துடைப்பு அமைப்புகள் கூறுகின்றன.
இதற்கிடையேதான் சிந்துமாகாணத்தில் சுஜவான் பிரதேசமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
முஸ்லிம்களுக்கும் மீனவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு – ஆணை வெளியிட்டது புதுவை அரசு

புதுவையில் வாழும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 2 சதவிகித தனி இடஒதுக்கீடு அளித்து புதுவை அரசு ஆணையை கடந்த ஆகஸ்ட் 28 அன்று வெளியிட்டது. புதுவையில் இதுவரை அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் 13 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்த்து, இதில் 2 சதவிகிதம் இனி பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் தனியான ஒதுக்கப்படும். இதே போல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் மீனவச் சமூகங்களுக்கு 2 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வகைச் செய்யும் ஆணையும் வெளியிடப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பட்டியலில் பின் வரும் சமூகங்கள் இடம் பெற்றுள்ளன
1.தக்னி முஸ்லிம் (பாண்டி, காரைக்கால் மற்றும் யானம் ஆகிய பகுதிகளில் வாழ்வோர் மட்டும்
2.மாப்பிளா
3.லெப்ப்பை (இதில் மரைக்காயர், ராவுத்தர், சாயிபு, சேக், சையித் ஆகியோரும் அடங்குவர்)
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தனி இடஒதுக்கீடு பெறும் மீனவர் சமூகத்தில் பின்வருவோர் அடங்குவர்
1. செட்டியார்
2. சின்ன பட்டினவர்
3. மீனவ செட்டியார்
4. நாட்டார்
5. பர்வர்தராஜகுலம்
6. பட்டினவர்
7. பட்டினவ செட்டியார்
8. பெரிய பட்டினவர்
9. செம்பதவர்