லக்னோ: பிலிபித் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிராக பேசியதாக கூறி சமர்ப்பிக்கப்பட்ட வருண் காந்தியின் பேச்சு அடங்கிய சிடியில் இருப்பது, வருண் காந்தியின் குரல்தான் என்று தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக உ.பி. போலீஸ் தெரிவித்துள்ளது. இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
ஞாயிறு, 21 ஜூன், 2009
சிடியில் உள்ளது வருண் காந்தியின் குரல்தான்- ஆய்வு முடிவு!
லக்னோ: பிலிபித் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிராக பேசியதாக கூறி சமர்ப்பிக்கப்பட்ட வருண் காந்தியின் பேச்சு அடங்கிய சிடியில் இருப்பது, வருண் காந்தியின் குரல்தான் என்று தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக உ.பி. போலீஸ் தெரிவித்துள்ளது. சனி, 20 ஜூன், 2009
இஸ்லாத்திற்கு 'கவுரவ கொலைகள்' புதிதல்ல- திலகவதியின் திமிர் பேட்டி!
சமீபத்தில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் சலீம் ஷேக் என்ற முஸ்லிம், காதல் பிரச்சினைக்காக தன் மகள் யாஸ்மின் என்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்த செய்தி பத்திரிக்கைகள் மூலமாக நாம் அறிந்த ஒன்றுதான். யாஸ்மின் காதலித்தது ஒரு முஸ்லிம் வாலிபரைத்தான். எனவே படிப்பு முடிந்த பின் நானே உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று அப்பெண்ணின் தந்தை கூறிய பிறகும், அப்பெண் தன் காதலனோடு ஓடியதாலும், தன் அறிவுரையை ஏற்க மறுத்தாலும் ஆத்திரத்தில் அறிவிழந்த ஷேக் தன் மகளை கொலை செய்துள்ளார். இந்த கொலை இந்திய சட்டப்படியும், இஸ்லாமிய சட்டப்படியும் தவறுதான் இதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. கொலையாளி தானே சரணடைந்துள்ளார். சட்டம் என்ன தண்டனையை அவருக்கு வழங்கினாலும் அது வரவேற்க தக்கதே!مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا وَلَقَدْ جَاء تْهُمْ رُسُلُنَا بِالبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُم بَعْدَ ذَلِكَ فِي الأَرْضِ لَمُسْرِفُونَ
இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" [5:32 ].
தாக்கரேவுக்கு மூச்சுத்திணறல் - ஓடி வந்து காப்பாற்றிய முஸ்லீம் டாக்டர்கள்
சிவசேனாவின் முஸ்லீம் துவேஷப் போக்கு அனைவரும் அறிந்ததே. ஆனால் சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு வியாழக்கிழமையன்று கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இரு முஸ்லீம் டாக்டர்கள் விரைந்து வந்து தாக்கரேவுக்கு சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றியுள்ளனர்.
தாக்கரேவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் லீலாவதி மருத்துவமனைக்குத் தகவல் போனது. இதையடுத்து அங்கிருந்து டாக்டர்கள் ஜலீல் பர்கர், சமத் அன்சாரி ஆகியோர் விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
இதுகுறித்து டாக்டர் பர்கர் கூறுகையில், பால் தாக்கரேவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நான் அவரது வீட்டுக்கு தினசரி சென்று பார்த்து கண்காணித்து வருகிறேன்.
வியாழக்கிழமையன்றும் நான் போயிருந்தபோது நன்றாகத்தான் இருந்தார். ஆனால் இரவு 9.30 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நானும் டாக்டர் சமத்தும் வீட்டுக்கு விரைந்தோம். அவருக்கு ரத்த அழுத்தம் ஏறியிருந்தது. இதயத் துடிப்பும் தாறுமாறாக இருந்தது. ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருந்தது.
உடனடியாக அவருக்கு சில ஊசிகளைப் போட்டோம். பின்னர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தோம் என்றார்.
தாக்கத்தை ஏற்ப்படுத்தாத நபி- உளரும் ஷாரூக்கான்!
பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் அவ்வப்போது தான் ஒரு முஸ்லிம் என்பதை அடையாளம் காட்டும் வகையில் ஏதேனும் ஒரு கருத்தை சொல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். சில மாதங்களுக்கு முன் திருக்குர்'ஆன் வசனங்களுக்கு அவர் தவறாக அர்த்தம் கொடுத்ததை நாம் 'ஷாருக்கானின் திருக்குர்'ஆன் விளக்கம்[..?] என்ற தலைப்பில் ஆக்கமாக வெளிட்டிருந்தோம் அதை படிக்க விரும்புவோர் இந்த லிங்கை கிளிக் செய்க;http://mugavai-abbas.blogspot.com/2008/12/blog-post_8687.html
இப்போது அதே திருவாளர் ஷாரூக்கான், மாநபி[ஸல்] அவர்களை பற்றி ஒரு கருத்து கூறியதாகவும், அதையொட்டி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் பத்திரிக்கை செய்தி கூறுகின்றது. சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு ஷாரூக்கான் அளித்துள்ள பேட்டியில், மனித குலத்தின் அருட்கொடை மாநபி[ஸல்] அவர்களைப்பற்றி கூறும்போது ,அவர்[நபி] வரலாற்றில் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்ப்படுத்தவில்லை என்று கூறினாராம். இதையறிந்த மும்பையில் உள்ள அமன் கமிட்டி ஷாரூக்கான் மீது பாந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன், மத ரீதியாக பேசி மக்கள் மனதை புண்படுத்தியதாக ஷாரூக்கான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
உலக அளவில் தாக்கத்தை ஏற்ப்படுத்திய நூறு பேர் என்ற நூலை எழுதிய மைக்கேல் ஹார்ட்ஸ் எனும் கிறிஸ்தவ ஆய்வாளர், அந்த நூலில் முதலிடத்தை மாநபி[ஸல்] அவர்களுக்கு தருகிறார். ஒரு கிறிஸ்தவரான இந்த ஆய்வாளர் கூட வியப்புறும் அளவுக்கு உலக வரலாற்றை புரட்டிப்போட்ட உத்தம தலைவர்[ஸல்] அவர்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று இந்த கூத்தாடி கொக்கரிக்கிறது. ஆம்! யாரோ எழுதியதை மனப்பாடமாக திரையில் ஒப்பித்து கைநிறைய சம்பாதிக்கும் இவர் போன்றவர்களுக்கு, மறையோனின் அருள்மறை மூலம் மனிதன் என்ற போர்வையில் மிருகமாக வாழ்ந்த மக்களை திருத்தி, அவர்கள் மூலம் இஸ்லாத்தை உலகெங்கிலும் பரப்பி, ஆண்டான்-அடிமை, மேலோன்-கீழோன் என்ற பேதம் நீக்கி, மண்ணையும்- மரத்தையும்- கல்லையும்-மனிதனையும்-மிருகங்களையும் இவ்வாறாக காண்பவை அனைத்தையும் கடவுளாக கற்பனை செய்து, கற்காலத்தில் வாழ்ந்த மக்களை ஒரே இறைவனை ஒப்பற்ற இறைவனை மட்டுமே வணங்ககூடியவர்களாக இன்று உலக அளவில் சுமார் நூற்றி ஐம்பது கோடி மக்களை மாற்றிய மாநபி [ஸல்] அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் பெரிதாக தெரிய வாய்ப்பில்லைதான்.
இஸ்லாம் என்ற ஜோதியை இந்த உலகில் ஏற்றிவைத்த உத்தம தலைவரின் தாக்கம் இந்த உலகம் உள்ளளவும் இருக்கும். இந்த ஜோதியை மறைக்க, முஸ்லிம் என்ற போர்வை போர்த்தி வந்தாலும் வேறு எந்த ரூபத்தில் வந்தாலும் அணைத்துவிட முடியாது என்பதை ஷாரூக் போன்றவர்கள புரிந்து கொள்ளவேண்டும்.
குஜராத் கலவரம்: மோடிக்கு வந்த, பேசிய போன் கால்கள் விவரம் ஒப்படைப்பு!

அகமதாபாத்: குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வரலாறு காணாத கலவரத்தின்போது, முதல்வர் நரேந்திர மோடிக்கு வந்த, அவர் பிறருக்கு பேசிய தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரங்கள் சிறப்பு புலனாய்வுப் படையிடம் (எஸ்.ஐ.டி.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதை ஜன் சங்கர்ஷ் மன்ச் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், எஸ்ஐடியிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் கலவரம் உச்சகட்டத்தில் இருந்தபோது நரேந்திர மோடிக்கு, முன்னாள் அமைச்சர்கள் மாயா பென் கோத்னானி, கோர்தன் ஜடாபியா, வி.எச்.பி. தலைவர் டாக்டர் ஜெய்தீப் படேல் மற்றும் பலர் போன் செய்து விரிவாக பேசியுள்ளனர் என்று அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலமுறை அவர்கள் மோடியுடன் போனில் பேசியுள்ளதாகவும் அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவர்களில் மாயா பென் கோத்னானி மற்றும் ஜெய்தீப் படேல் ஆகிய இருவரும் நரோடி படியா மற்றும் நரோடா கிராமத்தில் நடந்த ஒட்டுமொத்த படுகொலைகளைத் தூண்டி விட்டும், நேரில் சென்று கலவரக்காரர்களை ஊக்கப்படுத்தியதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்கள் ஆவர்.
பெண் அமைச்சரான மாயா பென் கோத்னானி, இந்த வழக்கில் ஜாமீனில் இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து உடனடியாக அவரை டிஸ்மிஸ் செய்ய மோடிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர் டிஸ்மிஸ் செய்யவில்லை.
பின்னர் மாயாவே தனது பதவியை ராஜினாமா செய்து சரணடைந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது அவரும் படேலும் மீண்டும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.
ஜன் சங்கர்ஷ் மன்ச் அமைப்பின் வழக்கறிஞர் முகுல் சின்ஹா கூறுகையில், எங்களது ஆய்வுப்படி 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை மோடிக்கு வந்த, அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள் குறித்த விவரத்தை கொடுபத்துள்ளோம்.
இதில் ஜெய்தீப் படேல் முதல்வர் அலுவலகத்துடன் 9 முறை பேசியுள்ளார். மாயா பென் கோத்னானி 4 முறையும், ஜடாபியா 13 முறையும், அகமதாபாத் கூடுதல் கமிஷனர் நான்கு முறையும், துணை ஆணையர் சவானி 2 முறையும் பேசியுள்ளனர்.
இந்த தொலைபேசித் தொடர்புகள் குறித்த விவரங்களை ஐபிஎஸ் அதிகாரி ராகுல் சர்மா கொடுத்த விவரங்களின் அடிப்படையில் நாங்கள் தொகுத்துள்ளோம் என்றார்.
குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடியின் தொடர்புகள் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என சமீபத்தில்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது என்பது நினைவிருக்கலாம். இந்த பின்னணியில் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரத்தை ஜன் சங்கர்ஷ் மன்ச் எஸ்ஐடியிடம் வழங்கியுள்ளது.
புதன், 17 ஜூன், 2009
இணைய வானொலி,அல்-மனார்!
மு.ப. 04.30 பஜ்ருக்கான அதான், துஆ,
திலாவதுல் குர்ஆன் (சூறதுல் பகறா)
மு.ப. 07.00 "ஸபாகுல் ஹைர்"
மு.ப. 08.00 செய்திகள்.
மு.ப. 08.30 நாளும் ஒரு தகவல்.
மு.ப. 09.00 இன்றைய நாளேடுகள்.
மு.ப 09.30 ஸவ்துன் நிஸா (மகளிர் ஓசை)
மு.ப. 10.30 இசையில்லா இனிய கீதம்
பி.ப. 11.00 சொற்பொழிவு.
பி.ப. 12.30 திலாவதுல் குர்ஆன்.
பி.ப. 01.30 செய்திகள்.
பி.ப. 02.00 தர்ஜூமதுல் குர்ஆன்.
பி.ப. 02.30 அல்-குர்ஆனும் நீங்களும் (வினா-விடை நிகழ்ச்சிகள்)
பி.ப. 04.30 பிராந்திய செய்திகள்.
பி.ப. 04.40 சொற்பொழிவு கோவை.எஸ். ஐயூப்.
பி.ப. 06.10 அல்குர்ஆன் விளக்க வகுப்பு
பி.ப. 07.30 செய்திகள்.
பி.ப. 08.00 இஸ்லாமியக் குடும்பவியல் தொடர்...
பி.ப. 09.00 நேயர் நேரம்.
பி.ப. 10.00 சொற்பொழிவு.
பி.ப. 11.00 நிகழ்ச்சி நிறைவு.
இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் இந் நிகழ்ச்சியை பீஸ் டிரைன் தளம் மூலமாக சென்று,சத்திய உறவுகள் எனும் தலைப்பின் கீழ் சென்று,தமிழ் வானொலி மேல் சொடுக்கியும் அல்லது இந்த லிங்க் மூலம் சென்றும் கேட்கலாம்.
http://www.almanarmedia.com/home.html
இணைய ரேடியோ மூலம் மார்க்கப் பணி செய்யும் இந்த சகோதர,சகோதரிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.
செவ்வாய், 16 ஜூன், 2009
எங்கே செல்கிறது என் சமுதாயம்...?

எங்கே செல்கிறது என் சமுதாயம்...?
[செய்தியின் மீது கிளிக் செய்து படிக்கவும். நன்றி மாலைமலர்]
ஒரு காலத்தில் கருணாநிதியை எதிர்த்து துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவி, பின்பு அதே கருணாநிதியிடம் ஐக்கியமாகி இப்போது அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்துவரும் துறைமுகம் காஜா என்பவர், அவர் சார்ந்த ஊரை சேர்ந்த சில தொழிலதிபர்கள் விசயத்தில் இடைஞ்சல் செய்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவ்வூரை சேர்ந்த சென்னை வாழ் ஜமாஅத் நிர்வாகம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனநாயக நாட்டில் ஒருவர் மற்றொருவருக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூட்டாது. அப்படியிருக்க தங்கள் ஜமாத்தை சேர்ந்தஒரு முஸ்லிம், அதே ஜமாத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு இடையூறு செய்தால் முதல் கட்டமாக ஜமாஅத் மூலம் அவருக்கு அறிவுரை சொல்லலாம். அறிவுரையை செவியேற்க மறுத்தால் அவர்மீது ஜமாஅத் நடவடிக்கை எடுக்கலாம். ஜமாஅத் நடவடிக்கையும் பயனளிக்கவில்லையெனில், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க முயற்ச்சி செய்யலாம். அதிலும் திருப்தியில்லை அவர் சார்ந்துள்ள கட்சிதான் அவரை அடக்கிவைக்கமுடியும் எனில், அவர் செய்த இடையூறுகளை பட்டியலிட்டு மனு ஒன்றை அவரது கட்சி தலைமையிடம் அளிக்கலாம். ஆனால் மேற்கண்ட ஜமாஅத், துறைமுகம் காஜா மீது முதல்வரும், துணை முதல்வரும் நடவடிக்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பத்திரிக்கையில் எதோ விளம்பரம் கொடுப்பதுபோல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நமது சமுதாயத்தில் நமக்குள் ஏற்படும் மோதல்களை அப்படியே உலகுக்கு படம்பிடித்து காட்டும் வகையில் அமைந்துள்ளது அந்த விளம்பரம். இதை பார்க்கும் மாற்றார்கள் நம்மை எள்ளி நகையாடமாட்டார்களா என்று சம்மந்தப்பட்ட ஜமாஅத் உணர்ந்ததாக தெரியவில்லை. மேலும் அந்த கோரிக்கையில், ஒரு வாசகம்; நமது உயிருக்கும் மேலான கழகத்தின் உயர் பதவியில் இருக்கின்றபடியால்....
ஒரு முஸ்லிமுக்கு உயிருக்கும் மேலானவைகள்; அல்லாஹ், இஸ்லாம், ரஸூல்[ஸல்] அவர்கள், அல்-குர்ஆன்-அல் ஹதீஸ் இவை மட்டுமே, இவையல்லாத எவரும், எதுவும் ஒரு முஸ்லிமுக்கு உயிருக்கு மேலானதல்ல என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
இயன்றவரை நமக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளை நமக்குள் பேசி சரி செய்ய சமுதாயம் முன்வரவேண்டும். மாறாக, ஒவ்வொருவரும் அடுத்தவர் செய்தவைகளை அம்பலப்படுத்துவதே குறியாக கொண்டால், சமுதாயத்தின் வீழ்ச்சியை எவராலும் தடுக்க இயலாது[அல்லாஹ்வை தவிர] எனபதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். செயல்படுவோம் இன்ஷா அல்லாஹ்.