ஞாயிறு, 27 ஜூன், 2010

ஃபலஸ்தீன்:ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு, ஒருவர் படுகாயம்

மத்திய மேற்குகரையின் பில்இன் கிராமத்தில் கட்டப்பட்டிருக்கும் தடுப்புச் சுவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலிய வீரர்கள் சுட்டதில் ஒரு பாலஸ்தீனர் படுகாயமடைந்தார்.

கிழக்கு குத்ஸிலுள்ள அல் புஸ்தான் பகுதியில் தொல்பொருள் பூங்காவிற்கு வழியமைக்கும் பணியில் 22 பாலஸ்தீனர்களின் வீடுகள் இடிக்கப்படும் திட்டத்தை எதிர்த்து வெள்ளியன்று தொழுகைக்குப் பின் ஃபலஸ்தீன போராளிகளும் இஸ்ரேலிய இடது சாரி போராளிகளும் அல்குத்ஸ்(ஜெருசலம்) நகராட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

பாலஸ்தீன கிராமங்களுக்கும் அவர்களின் நிலங்களுக்கும் இடையே உள்ள பிரிவினை சுவற்றை நோக்கி அணிவகுப்பு நடத்தியும், கிழக்கு குத்ஸ் ஃபலஸ்தீனர்களை குறிவைக்கும் இஸ்ரேலிய போலீஸிற்க்கு எதிராக முழு அடைப்புக்கும் அழைப்பு விடுத்தனர்.

போராட்டக்காரர்கள் சுவற்றின் வாயிலை அடைந்ததும் இஸ்ரேலிய வீரர்கள் கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகளாலும் சுட்டனர். ஒரு குண்டு 50 வயது பல்கலைகழக ஆசிரியரின் கையில் அடித்ததால் அவர் காயமடைந்தார். நிறைய மக்கள் கண்ணீர் புகை குண்டுகளால் பாதிக்கப்பட்டனர்.
presstv

இஷ்ரத் வழக்கு:சிபிஐ மற்றும் மாநில அரசுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்இஷ்ரத் வழக்கு:சிபிஐ மற்றும் மாநில அரசுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அஹ்மதாபாத்:குஜராத் உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிமன்றம் 2004ல் நடந்த இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்கில் சிபிஐ மற்றும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இஷ்ரத்துடன் கொல்லப்பட்ட ஜாவித் குலாம் ஷேக் என்கிற ப்ரனேஷ் குமார் பிள்ளையின் தந்தை கோபிநாத் பிள்ளையின் மனுவைத் தொடர்ந்து நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

நீதிபதிகள் ஜயந்த் பட்டேல் மற்றும் Z.K.சயீத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 'தன் மகனின் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்' என்ற கோபிநாத்தின் மனுவை தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பினர்.

ஜூலை 5ம் தேதிக்குள் பதில் தருமாறு குஜராத் அரசு மற்றும் சிபிஐயை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

மும்பை வாசிகளான இஷ்ரத் (19), மற்றும் ப்ரனேஷ், அம்ஜாத் அலி என்கிற ராஜ்குமார் அக்பர் அலி ரானா, ஜிஸான் ஜொஹர் அப்துல் கனி ஆகியோர் அஹ்மதாபாத் அருகே ஜூன் 15,2004ல் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

மத்திய புலனாய்வுத்துறை தந்த விவரங்களின் அடிப்படையில், இஷ்ரத் மற்றும் மூவர் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்தவர்கள், முதலமைச்சர் நரேந்திர மோடியை கொல்வதற்காகவே வந்தனர் என்று குஜராத் போலீஸ் விளக்கமளித்தது.

நீதிபதி S.P.தமாங்க், 'இது ஒரு போலி என்கவுண்டர் என்றும் சில போலீஸ் அதிகாரிகளால் சுய இலாபத்திற்காக செய்யப்பட்டது' என்று தனது விசாரணை அறிக்கையில் கூறியிருந்தார்.

தீவிரவாத எதிர்ப்பு படையின் SP கிரிஷ் சிங்கால் மற்றும் மாநில அரசின் மனுக்களையும் நீதிமன்றம் விசாரணை செய்யும்.

நீதிபதி தமாங்கின் செப்டம்பர் 2009 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிங்கால், என்கவுண்டரை போலி என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நீதிபதிகளின் கோரிக்கையை எதிர்த்து வாதாடுகிறார். தமாங்கின் அறிக்கைக்கு மாநில அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மேலும் இது நீதிவிசாரணை அதிகாரத்தை மீறியதாகவும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
siasat

350 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் வேலூர் மாவட்டத்தில் மீட்பு


வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை தமுமுகவால் இன்று (27-06-2010) மீட்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)


பள்ளிவாசலை மீட்கப்படுவதற்கு முன்னர் இவ்விடத்தில் சமூக விரோதிகளின் புகழிடமாக இருந்துள்ளது. தற்போது 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமுமுக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்தப் பழமையானப் பள்ளிவாசலில் (27-06-2010)இன்று மாலை அஸர் தொழுகை (இன்ஸா அல்லாஹ்) நடத்தப்பட உள்ளது.


மேலும் செய்திகள் இன்ஷா அல்லாஹ்...


ஈரானை தாக்கும் அளவிற்கு இஸ்ரேலிடம் பலமில்லை – அஹ்மதி நிஜாத்.

இராணுவ விவகாரங்களை பொறுத்தவரை ஈரானை தாக்குவதற்கு இஸ்ரேலிடம் போதிய பலமில்லை என்று ஈரானிய அதிபர் அஹ்மதி நிஜாத் சவால் விடுத்துள்ளார்."இஸ்ரேலிய ஜியோனிச நாடு மிகவும் பலவீனமானது! அவர்கள் ஈரானை தாக்குவதில் பேராசை உடையவர்கள் ஆனால் அத்தாக்குதலுக்கான ஈரானின் பதிலை அவர்கள் சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

ஈரானிடம் விளையாடுவது ஒரு சிங்கத்துடன் விளையாடுவதற்கு சமம் என்று அவர்களுக்கே நன்றாக தெரியும்" என்றார் அஹ்மதி நிஜாத். துருக்கி நிவாரணக் கப்பல் தாக்குதலை மிகவும் கொடூரமான சம்பவம் என்று கூறிய நிஜாத், உலக நாடுகள் தற்போது அதை கேட்டும் கேளாமல் இருப்பதாக குறிப்பிட்டார். காஸ்ஸா முற்றுகையை உடனடியாக முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் அஹ்மதி நிஜாத் கேட்டுக்கொண்டார். ஈரானிற்குள் எதிரிகளின் ஊடுருவல், தங்களை இதுவரை இல்லாத அளவிற்கு ஒன்றிணைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிரபல இஸ்லாமிய பிரசாரகர் பிலால் பிலிப்ஸுக்கும் லண்டனில் நுழைய தடை


லண்டன் : உலக அமைதிக்காக பிரபல இந்திய இஸ்லாமிய பிராசரகர் ஜாகிர் நாயக் வருடந்தோறும் பீஸ் எனும் பெயரில் கருத்தரங்கத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறார். அப்படி ஒரு மாநாடு கடந்த வாரம் லண்டனில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஜாகிர் நாயக் மறைமுகமாக தீவிரவாதத்திற்கு துணை போவதாக கூறி இங்கிலாந்து அரசாங்கம் அவருக்கு தடை விதித்திருந்ததை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

தற்போது அக்கருத்தரங்குக்கு வருகை தரவிருந்த பல இஸ்லாமிய பிராசரகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவிலிருந்து அரீப் இஸ்லாம் எனும் பிரசாரகருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது போல் கனடாவை சேர்ந்த தற்போது கத்தாரில் வசிக்கும் பிரபல இஸ்லாமிய பிராசரகரான பிலால் பிலிப்ஸூம் லண்டன் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாகிர் நாயக்குக்காவது வருவதற்கு முன் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் தான் கடந்த சனிக்கிழமை காலை 8 மணிக்கு விமான நிலையத்தில் இறங்கியதாகவும் பின் காலை 11 மணிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறினார். மேலும் தங்களின் அமைதிக்கான மாநாட்டை தடை செய்வதன் மூலம் அவ்வெற்றிடத்தை தீவிர போக்குடையவர்கள் ஆக்கிரமிப்பதிற்கு இவர்களே காரணமாக இருக்கிறார்கள்.

தங்கள் கால்களை தாங்களே சுட்டு கொள்வதாக சொன்ன பிலால் பிலிப்ஸ் ஒரு விதத்தில் இதுவும் நன்மைக்கே என்றும் இவர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூரணமாக்கி வைப்பான் என்றும் கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்த ஒரு இணைய தள நிபுணர் கூகுள் தேடலில் ஜாகிர் நாயக் மற்றும் பீஸ் மாநாடு அதிகம் பார்க்கப்படுவதற்கும் இஸ்லாத்தை குறித்த தேடல்கள் இணையத்தில் அதிகரிப்பதற்குமே இது உதவும் என்று கூறினார்.

ராசல் கைமா : மு.மு.க நிர்வாகிகள் அலோசனைக் கூட்டம்

கடந்த 25/06/2010- வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ராசல்கைமா – அல் நக்கீல் ஹாஜா அவர்களின் இருப்பிடத்தில் ராசல் கைமா மண்டல முஸ்லிம் முன்னெற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது, அக்கூட்டத்திற்கு ராசல் கைமா கிளை பொருளாளர் கடியச்சேரி ஹாஜா அவர்கள் தலைமை தாங்கினார்அதனைத்தொடர்ந்து சார்ஜாவிலிருந்து வருகை தந்த மு.மு.க அமீரக து.தலைவர் சகோ. ஹுஸைன் பாஷா அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள் பின்னர் தீர்மானங்கள் இயற்றப் பட்டது

  • வருகின்ற ஜூலை மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராசல் கைமா மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்படுகள் செய்யவும்
  • அமீரகத்தில் நமது சகோதர்களிடத்தில் பெருகிவரும் தற்கொலைகள் குறித்தும் நடக்கவிருக்கும் கூட்டத்தில் சிறப்பு "கவுன்சிலிக்" மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
  • ரமலானில் தாயகத்திலிருந்து வருகை தரும் தாயிக்களைக் கொண்டு சிறப்பான முறையில் பயான் நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யவும்
  • கேம்ப்’கள் தோறும் சென்று சந்திப்பு நடத்துவது என்றும்
  • நமது பத்திரிக்கையான "மக்கள் உரிமை" க்கு புதிய சந்தாக்களை உருவாக்குவது
  • புதிய மர்கஸ் மற்றும் நூலகம் அமைக்கவும் தீர்மானங்கள் இயற்றப் பட்டது

பின்னர் தூஆ ஓதி கூட்டம் இனிதே நிறைவுற்றது, இக்கூட்டத்திற்கு மதுரை.பரக்கத் அவர்களும் அபு ஆதில் அவர்களும் சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தனர்.

ஈரான் மீது பொருளாதாரத் தடை: நிறைவேற்றியது அமெரிக்க செனட்!

வாஷிங்டன்: அணு ஆயுதத் திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஈரான் மீது பொருளாதாரத் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது அமெரிக்க செனட்.
உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி அணுஆயுத திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐரோப்பிய யூனியன் ஆகியவை சமீபத்தில் பொருளாதார தடை விதித்தன.
இந்நிலையில், அமெரிக்கா தன்னிச்சையாக ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கான மசோதா, அமெரிக்க செனட் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, ஈரானுக்கு கேசோலின் வினியோகிக்கும் கம்பெனிகள், ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு உதவும் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் அமெரிக்கா எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளாது என்று இந்த மசோதா கூறுகிறது.
இதனால் ஈரானுடன் தொடர்புடைய மற்ற நாடுகளும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக ஈரானின் நட்பு நாடுகளும் மறைமுக பொருளாதாரத் தடைக்குள்ளாகியுள்ளன.
source:thatstamil