சனி, 5 டிசம்பர், 2009

குணங்குடி ஹனிபா ஜாமீன் வழக்கு தள்ளுபடி! தொடர்ந்து மறுக்கப்படும் நீதி!

1997 ம் வருடம் Dec-6 அன்று நடந்த இரயில் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட குணங்குடி அனீபா, அப்துல் ரஹீம், முபாரக் ஆகியோர் கடந்த மாதம் 15.10.09 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனுச் செய்திருந்தனர். கடந்த 11 வருடங்களாக இவ்வழக்கில் ஹனீபா, அப்துல் ரஹீம் ஆகிய இருவரும் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். முபாரக் அலிகான் 9 வருடங்களாக சிறையில் உள்ளார். இவர்கள் மூவரும் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் பிணை மனுப் போட்டுள்ளனர். எனினும் வழக்கு விசாரணையின் போது பிணை அளிக்க முடியாது என மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வழக்கில் மொத்தம் 151 சாட்சிகளில் குணங்குடி அனீபா மற்றும் அப்துல் ரஹீம் ஆகிய இருவருக்கு எதிரான வெறும் இரண்டு சாட்சிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இருவரும் பிறழ் சாட்சிகளாக(hostile) மாறி விட்டனர். இதனால் இருவருக்கும் எதிராக இவ்வழக்கில் சாட்சிகளே இல்லை என்ற சூழ்நிலையில் விசாரணை நீதிமன்றமே இவர்களை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அதே போல முபாரக் அலிகான் என்பவர் கனி என்பவருக்கு பதிலாக தவறுதலாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டவர். இவருக்கு எதிராக எந்த ஓரு சாட்சியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இம்மூவரும் தங்களை பிணையிலாவது விடுவிக்க வேண்டும் என்று உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, வழக்கறிஞர் புகழேந்தி, சங்கரசுப்பு, ஆகியோர் மனுதாரர்களுக்காக ஆஜராகினர். இரண்டு மாத இழுத்தடிப்புக்குப் பின்னர் இம்மனு கடைசியாக 26/11/09 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் இச்செயல் மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சிதம்பரம் வீட்டை முற்றுகையிடுவோம்

சிதம்பரம் வீட்டை முற்றுகையிடுவோம்- தவ்ஹீத் ஜமாத்

சென்னை: பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை முஸ்லீம் சமுதாயத்தினரிடம் ஒப்படைக்கக் கோரி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை டிசம்பர் 6ம் தேதி முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைவர் எஸ்.எம். பாக்​கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

450 ஆண்​டு​கால பாரம்​ப​ரிய சின்​ன​மா​க​வும்,​ முஸ்​லிம்​க​ளின் வழி​பாட்​டுத் தல​மா​க​வும் விளங்​கிய பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்​பர் 6ம் தேதி இடிக்​கப்​பட்​டது.

இது குறித்து விசா​ரிக்க அமைக்​கப்​பட்ட லிப​ரான் கமி​ஷன் 66 நபர்​களை குற்​ற​வா​ளி​கள் என்று அறி​வித்​துள்​ளது. ஆனால் அவர்​கள் மீது மத்​திய அரசு எவ்​வித நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்லை.

பாபர் மசூதி இடத்தை முஸ்​லிம்​க​ளி​டம் ஒப்​ப​டைக்​கக் கோரி​யும்,​ பாபர் மசூதி இடிப்​பில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது​ ந​ட​வடிடிக்கை எடுக்க வலி​யு​றுத்​தி​யும் டிசம்​பர் 6ம் தேதி சென்னை மற்​றும் காரைக்​கு​டி​யில் உள்ள உள்​துறை அமைச்​சர் ப. சிதம்​ப​ரத்​தின் வீட்டை முற்​று​கை​யிட்டு போராட்​டம் நடத்த முடிவு செய்​துள்​ளோம்.

இதில் ஆயி​ரக்​க​ணக்​கான முஸ்​லிம் ஆண்​க​ளும்,​ பெண்​க​ளும் குடும்​பத்​து​டன் பங்​கேற்க உள்​ள​னர். ராம​நா​த​பு​ரம்,​ திரு​நெல்​வே​லி​யில் ரயில் நிலைய முற்​றுகை போராட்​டம் நடை​பெ​றும். மற்ற மாவட்​டங்​க​ளில் கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெ​றும் என்று தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 6 பேரணி ஆர்பாட்டங்கள் நடைபெறும் இடங்கள்

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளைக் கைது செய்க!-தி.க ஆர்ப்பாட்டம்


சென்னை, டிச. 3_ பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக்-கப் படவேண்டும். காங்கிரஸ் அரசிற்கு பொறுப்பிருக்கிறது என்று சென்னை ஆர்ப்பாட்டத்-தில் வலியுறுத்தப்பட்டது.

லிபரான் ஆணையப் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளபடி மத்தியில் உள்ள காங்கிரசு அரசு பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் எழுச்சியுடன் நடந்தேறியது.

சென்னை அரசு பொதுமருத்துவமனை எதிரில் உள்ள மெமோரியல் ஹால் முன்பு இன்று [3 .12 .09 காலை 11 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம்!

நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய

குற்றவாளிகளை மத்திய அரசே கைது செய்

என்ற ஒலி முழக்கங்களை தோழர்கள் செ.ர.-பார்த்தசாரதி, கோ.வீ.-இராகவன் மற்றும் க. பார்வதி ஆகியோர் எழுச்சியுடன் முழங்கினர். தோழர்கள் அதைப் பின்பற்றி முழங்கினர்.

வீ.அன்புராஜ்

ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறியும் திராவிடர் கழகத் தோழர்கள் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்-பாட்டத்தை எழுச்சியு-டன் நடத்தி வருவதையும், பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் தண்டிக்-கப்பட வேண்டும் என்-பதை வலியுறுத்தியும் திரா-விடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் உரை-யாற்றினார்.

கலி.பூங்குன்றன்

அடுத்து கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரையாற்றி-னார். அவர் தனது உரையில் கூறியதாவது:

நரசிம்மராவ் பிரதம-ராக இருக்கும் பொழுது, காங்கிரஸ் அரசு மத்தி-யில் ஆட்சியில் இருக்கும் பொழுது, உத்தரப் பிர-தேசத்தில் அயோத்தியில் உள்ள 450 ஆண்டு கால பழமை கொண்ட பாபர் மசூதியை பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத், சங்பரிவார் கும்பல்கள் இடித்துத் தள்ளினர்.

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் என்று வாஜ்பேயி, அத்-வானி, முரளி மனோகர்ஜோஷி, உமா பாரதி போன்றவர்கள் மீது லிபரான் கமிசன் அறிக்-கையில் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவிற்கே மாபெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டனர்.

லிபரான் ஆணையத்-தால் குற்றம் சாற்றப்பட்ட-வர்கள் எல்லாம் பொறுப்-பான பதவி வகித்தவர்-களாக இருந்தவர்கள். பிரதமர், துணைப் பிரத-மர், மத்திய அமைச்சர், முதலமைச்சர் போன்ற பொறுப்பான பதவியை வகித்தவர்கள்தான் முன்-னின்று பாபர் மசூதியை இடித்துள்ளனர். இது வெட்கக்கேடான செய்தி-யாகும்.

இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் பாது காக்கப்படவேண்டும், மதச்சார்பற்ற தன்மை நிலை நாட்டப்பட-வேண்-டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முமுவதும் இன்று திராவிடர் கழகத்-தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

லிபரான் அறிக்கை எப்படி வெளியானது என்று நாடாளுமன்-றத்தில் பா.ஜ.க. ரகளை-யில் ஈடுபட்டு திசை திருப்புகின்றனர்.அதேபோல முன்னாள் முதல்வர் ஜெய-லலிதா பாபர் மசூதி இடிப்-புக்கு அதிமுக ஆட்களை அனுப்பிய இந்த அம்-மையார். பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்து-வதற்கு பதிலாக லிபரான் கமிசன் அறிக்கை எப்படி வெளியானது என்று கேள்வி கேட்டு இவர் ஒரு பக்கம் மதவெறி கும்பலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து திசை திருப்புகின்றார். வாஜ்-பேயி பாபர் மசூதி இடிப்-புக்கு முதல் நாள் மத-வெறியைத் தூண்டி இடிப்-புக்கு ஆதர-வாகப் பேசி-யுள்ளார்.

இனிப்பு வழங்கியவர்

பாபர் மசூதி இடிப்-பின்-போது அத்வானி-யிடம் சென்று பத்திரி-கையாளர்கள் பாதுகாப்பு கேட்டனர். அவரோ அவர்களுக்கே இனிப்பு வழங்கினார். இவைகள் எல்லாம் லிபரான் கமிச-னில் பதிவு செய்யப்-பட்டு இருக்கிறது.

பாபர் மசூதியை இடித்-த--வர்கள் யார் யார்? அந்த சம்பவம் எப்படி நடை-பெற்றது? என்று லிபரான் ஆணையத்திடம் வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்-பட்டுள்ளன.

காங்கிரஸ் அரசுக்கு பொறுப்பு

பாபர் மசூதி இடிக்கப்-பட்ட இடத்தில் புதிய மசூதி கட்டித்தரப்படும் என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் சொன்னார். இது வரை பாபர் மசூதி கட்டித் தரப்படவில்லை.

எனவே காங்கிரஸ் அரசுக்கு எல்லா வகை-யிலும் பொறுப்பு இருக்-கிறது. பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் அனை-வரும் தண்டிக்கப்-பட வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் நோக்கமாகும். இவ்வாறு பேசினார்.

கோ.சாமிதுரை

இறுதியில் ஆர்ப்பாட்-டத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழகப் பொரு-ளாளர் வழக்கறிஞர் கோ.-சாமிதுரை கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று திராவிடர் கழகம் வலியுறுத்தி ஆர்ப்-பாட்-டம் நடத்துகிறது. லிப-ரான் ஆணைய அறிக்கை-யில் யார் யார் குற்றவா-ளிகள் என்ற பட்டியலும் வெளியிடப்-பட்டு உள்ளது. எனவே எங்களது போராட்-டம் இதோடு நின்று-விடாது. குற்றவாளிகள் தண்டிக்கப்-படும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

ஒலி முழக்கம்

பின்னர் தோழர்கள் அரை மணி நேரம் ஆர்ப்-பாட்டத்தை விளக்கி ஒலி முழக்கம் எழுப்பினர்.இரா. வில்வநாதன்,-செ.வை.ர. சிகாமணி, தி.வே.சு. திருருவள்ளுவர், தி.இரா. இரத்தினசாமி, கோ. அரங்கநாதன், டி.கே.நட-ராஜன், க. பார்வதி, சி. வெற்றிச்செல்வி பெங்க-ளூரூ சொர்ணா ரெங்க-நாதன், ஏ.பி.ஜே.மனோ-ரஞ்சிதம், திருமகள், மீனாட்சி,செல்வி இசை-இன்பன், பெரியார் மாணாக்கன், மு.நீ.சிவரா-சன், மு.ந. மதியழகன், நெய்வேலி இரா. கனகச-பாபதி, ஆவடி மா.ஆ.-கந்தசாமி, பா.தட்சிணா-மூர்த்தி, வழக்கறிஞர் கெ, கணேசன், கி. இராம-லிங்கம், மு.சென்னியப்பன், செங்கை பூபதி, ப.குமரன், தமிழ் சாக்ரடீஸ், செல்-வராஜ், பிரின்ஸ், உடுமலை வடிவேலு சி. செங்குட்-டுவன் ,பழனிச்செல்வம், ஆ.விசயரத்தினம், ப.க. குமரன், வ. இரவி, உதய-குமார், பெரியாரடியான், வினோத்குமார், காரைக்-குடி பிராட்லா கலைய-ரசன் உள்-ளிட்ட நூற்றுக்-கணக்கான தோழர்கள் இந்த ஆர்ப்-பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நன்றி; விடுதலை

வியாழன், 3 டிசம்பர், 2009

ஈரானை தனிமைப்படுத்த முடியாது:அஹ்மத் நிஜாத்


தெஹ்ரான்:ஈரானை தனிமைப்படுத்த எந்த சக்தியாலும் முடியாது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் கூறியுள்ளார்.
சுய கெளரவமும் சர்வதேச உறவுகளை பேண விரும்பும் தேசம் என்ற நிலையில் ஈரானை புறக்கணிக்கவோ தனிமைப்படுத்தவோ எவராலும் முடியாது.

அணு ஆயுத தடுப்பு சட்டம் தொடர்பாக ஈரானுக்கெதிராக அணு ஆயுத கட்டுப்பாட்டுகழகம் வாக்களித்ததைத்தொடர்ந்து பொருளாதார தடை விதிக்கப்படக்கூடிய சூழலில்தான் ஈரான் அதிபர் சானல் ஒன் என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
உலகமயாமாக்கல் காலக்கட்டத்தில் தனிமைப்படுத்தல் என்ற வார்த்தைக்கு மதிப்பில்லை. அவ்வாறு தனிமைப்படுத்தினால் அதன் பின்னணியிலிருப்பது திமிரும் அறியாமையுமாகும். மத்திய ஆசியா இல்லாத உலக கூட்டமைப்பு என்பது பூர்த்தியாகாத ஒன்று. பொருளாதார தடைகளை தாண்டிய பாரம்பரியம்தான் எங்களுடையது. இவ்வாறு நிஜாத் கூறினார்.

இதற்கிடையே ஈரானுக்கு பொருளாதார தடை

ஹிந்து பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது- ப.சிதம்பரம்


புதுடெல்லி:ஜிஹாது தீவிரவாதிகளை(?)ப்போல் ஹிந்து தீவிரவாதிகளும் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜ்யசபையில் தெரிவித்தார்.
கடந்த ஒருவருடத்தில் இத்தகைய 12 தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளிக்கையில்தான் உள்துறை அமைச்சர் இதனை தெரிவித்தார். முஸ்லிம்-ஹிந்து பயங்கரவாதம் ஒரேபோன்று தவறானது இரண்டையும் இந்த தேசம் சகித்துக்கொள்ளாது. என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

"ஜிஹாது தீவிரவாதமாக" இருந்தாலும் "இந்து தீவிரவாதமாக" இருந்தாலும் அரசு அவற்றை ஒரு போதும் அனுமதிக்காது என்று சிதம்பரம் கூறியதை அடுத்து பிரச்சனை தொடங்கியது.
இந்து தீவிரவாதம் என்று கூறிய சிதம்பரம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறவில்லை. இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையை சிதம்பரம் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார் என்று பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த விவாதத்தில் பதில் அளித்துப் பேசிக் கொண்டிருந்த சிதம்பரம், பாஜகவின் குறுக்கீட்டால் கோபமடைந்தார். பாரதீய ஜனதா கட்சியை சமாதானப்படுத்துவதற்காக நான் என்னுடைய வாதத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். என்னுடைய வாதமெல்லாம், மத அமைப்புகள் - இந்து மத அமைப்பாக இருந்தாலும் அல்லது இஸ்லாமிய மத அமைப்பாக இருந்தாலும் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகின்றன என்பதுதான் என்று சிதம்பரம் கூறினார்.

நான் ஒட்டுமொத்த முஸ்லிம்களையோ, இந்துக்களையோ அல்லது மற்ற மதத்தினரையோ குற்றம் சாட்டவில்லை. ஆனால் மதப் பழமைவாதிகள் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகின்றனர் என்று சிதம்பரம் கூறினார்.
பின்னர் கோபத்திலிருந்து மீண்ட சிதம்பரம், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான விசயம் என்றும் சிதம்பரம் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

போலி என்கவுண்டர்: நீதிபதி தாமங்கின் அறிக்கையை நிறுத்தி வைத்த குஜராத் உயர் நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை!


குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினரால் போலியாக என்கவுண்டர் செய்யப்பட்ட இஸ்ரத் ஜஹானின் கொலை வழக்கு குறித்து குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

போலி என்கவுண்டர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இஸ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதித்தனர். மேலும் இதுதொடர்பாக டிசம்பர் 7ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த போலி என்கவுண்டர் குறித்து விசாரணை செய்த அகமதாபாத் மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.தாமங், 19 வயதான இஸ்ரத் நரேந்திர மோடியைக் கொலை செய்ய முயன்றதால் அவரை என்கவுண்டர் செய்தோம் என்று காவல்துறையினர் கூறியதை ஏற்க மறுத்து, இஸ்ரத் சொந்தக் காரணங்களுக்காக காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறினார்.

மாஜிஸ்ட்ரேட் விசாரணையை எதிர்த்து குஜராத் மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தாமங்கின் அறிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்தே இஸ்ரத்தின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

source:inneram