



திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி மன்ற தலைவார் பதவிக்கான மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பளார் சகோதரர். இரா. பிரபுதாஸ் அவர்கள் போட்டியிடுவதை முன்னிட்டு வேட்பாளரை அறிமுகம் செய்தும், வாக்குகள் சேகரித்தும் கடந்த வெள்ளிக்கிழமை கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நுழைவாயில் அருகே மாநில துணைச்செயலாளர் சகோதரர். தமீமுன் அன்சாரி அவர்கள் நகராட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட கூத்தாநல்லூர் முக்கியஸ்தர்கள் பெற்றுக்கொன்டனர்.
“ஊழலற்ற உள்ளாட்சி அதுவே மனிதநேய மக்கள் கட்சியின் மனசாட்சி” என்றும் நகர்புறங்களில் இருந்து மதுக்கடைகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், வெற்றி பெற்ற பிறகு வேட்பாளர் தன்னுடைய சொத்து கணக்குகளை வெளியிடுவார் என்றும் வேட்பளார் மீது ஊழல் குற்றச்சாற்று நிரூபணம் செய்யப்பட்டால் வேட்பாளர் நகர்மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் முழங்கினார்.
பொதுமக்களிடையே பலத்த கரவொலி எழும்பியது.
மனிதநேய மக்கள் கட்சியின் கூத்தாநல்லூர் நகராட்சி தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்டவர்கள் விபரம் பின்வருமாறு
ஜனாப்.S.S அப்துல் ஜப்பார்
ஜனாப் S.E.A காதர் உசேன்
ஜனாப் ஹாஜி. கோட்டுரார் பரக்கத்துல்லாஹ்
ஜனாப் A.A. அஜ்மத்துல்லா
ஜனாப் S.K.ஜெஹபர் தீன்
ஜனாப் V.M.சாகுல் ஹமீது
நகராட்சி தேர்தல் அறிக்கை பொதுமக்களின் நல்ல வரவேற்பை பெற்ற மனநிறைவோடு வேட்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.
கூத்தாநல்லூரில் இருந்து .... நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக