ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

மனிதவுரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக்சென் விடுதலை!!

புதுடெல்லி: பிரபல மனித உரிமை ஆர்வலரும், மருத்துவருமான பினாயக்சென்னிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

முதல் நோக்கின் அடிப்படையில்(prima facie) தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் சென்னிற்கு நிபந்தனையற்ற ஜாமீனை அனுமதித்துள்ளது.

நீதிபதிகள் ஹெச்.எஸ்.பேடி, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை பரிசீலித்தது.

மாவோயிஸ்டுகளுக்கு உதவினார் எனக் குற்றஞ்சாட்டி சட்டீஷ்கர் நீதிமன்றம் பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை விதித்திருந்தது. கடந்த சில வருடங்களாக பினாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பினாயக் சென் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சட்டீஷ்கர் மாநில விசாரணை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தள்ளுபடிச் செய்தன.

பினாயக் சென்னின் வீட்டிலிருந்து கைப்பற்றிய மாவோயிஸ்டுகளின் பிரசுரங்களின் அடிப்படையில் சட்டீஷ்கர் நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டது.

ஆனால், இத்தகைய பிரசுரங்கள் கண்டெடுத்ததால் மட்டும் ஒருவர் மீது தேசத்துரோக குற்றத்தை சுமத்தமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பினாயக் சென்னிற்கு எதிராக கூடுதல் ஆதாரங்கள் இருந்தால் அதனை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் சட்டீஷ்கர் அரசிடம் கோரியது.

அதேவேளையில் பினாயக் சென்னிற்கு ஜாமீன் வழங்கினால் சட்டீஷ்கர் மாநிலத்தில் பிரவேசிக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கவேண்டுமென கோரிய சட்டீஷ்கர் அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் இத்தகைய கோரிக்கைகளை விசாரணை நீதிமன்றத்தில் எழுப்பவேண்டும் என உத்தரவிட்டது.

பெயரை மாற்றினால் சரித்திரம் மாறிவிடுமா?

ஒரு சமூகத்தை முழுமையாக அழிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த சமூகத்தின் வரலாற்றுத் தொடர்புகளையும் பாரம்பர்ய சின்னங்களையும் அழித்துவிட்டால் அந்த சமூகம் தொடர்பு அறுந்த சமூகமாக, முகவரி இல்லாத நாடோடி சமூகமாக மாறிப்போகும். பிறகு அந்த சமூகத்தை அழிப்பது மிகவும் எளிது. இப்படி குறிவைத்து அழிக்கப்பட்ட பல சமூகங்களின் வேதனை நிறைந்த வரலாற்று சம்பவங்களை உலக வரலாற்று ஏடுகளில் காணலாம்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிட்லர் மற்றும் முஸோலினியின் பாசிச நாஜி கொலைகார கூட்டம் இப்படித்தான் உலகின் பல பாகங்களிலும் தங்களது இன வெறி கொள்கைகளை நிலைநிறுத்தியது.

அத்தகைய பாசிச வெறியர்களிடம் பாடம் பயின்ற சங்பரிவார கும்பல் இந்தியாவிலும் அதுபோன்ற இனவெறி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.

சகிப்புத் தன்மைக்கு பெயர் பெற்ற இந்து மதத்தின் பெயரால் இந்த கொடுமைகளை இவர்கள் நடத்துவது தான் மிகப்பெரிய அக்கிரமம். அதனால் தான் இந்து மதத்தில் உள்ளவர்களின் 1 சதவீத ஆதரவைக் கூட இவர்களால் பெற இயலவில்லை. இந்து மக்களாலேயே புறக்கணிக்கப்பட்ட இந்த சங்பரிவார், அந்த மதத்தின் பெயரை பயன்படுத்தி இனவெறி, மதவெறியை தூண்டுகின்றனர்.

இதுபோன்ற மனிதவிரோத வேலைகளை இவர்கள் தொடர்ந்து செய்வதற்கு ஏற்ற இடமாக மோடி ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் கிடைத்திருக்கிறது. மோடியின் அட்டூழியங்களை நாம் நினைவுபடுத்த தேவையில்லை. காரணம் அந்த கொடூர கொலைகள்

எல்லாம் நல்லோர்கள், நடுநிலையாளர்கள் நெஞ்சை விட்டு என்றைக்கும் மறையப் போவதில்லை.

இன அழிப்பு தொடர்கிறது மோடியின் காட்டுமிராண்டி ஆட்சியில்.

தற்போது குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் என்ற 600 ஆண்டு வரலாற்றுப் பெயரை ஒரே இரவில் அம்தாபாத் என்று அரசின் அத்துனை அறிவிப்பு ஏடுகள் மற்றும் பெயர் பலகைகளிலும் மாற்றி தனது நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் விரோத எண்ணத்திற்கு மேலும் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்.

கி.பி. 1411 இல் முஸ்லிம் மன்னர் அகமது ஷா அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம் தான் அகமதாபாத். இன்றைக்கு இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் ஜவுளி தயாரிப்பிற்கு உலகளவில் பெயர் பெற்ற நகரமாக விளங்குகிறது.

அகமதாபாத் மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காடு மக்கள் முஸ்லிம்கள். மேலும் தேசத் தந்தை காந்தியடிகளின் சபர்மதி ஆஸ்ரமம் அகமதாபாத்தில் தான் உள்ளது. அகமதாபாத் என்ற முஸ்லிம் பெயரை மாற்றிட வேண்டி தேசவிரோத சக்திகள் பல முறை முயன்றும் முடியவில்லை. தற்போது ஒரே இரவில் மோடியின் கைங்கர்யத்தால் மாநகராட்சியின் பதிவேடுகளும் மாற்றப்பட்டுள்ளன. இதை குஜராத்திலிருந்து வெளிவரும் எந்த பத்திரிகைகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் காவியில் கலந்து சங்கமமாகிவிட்டன.

இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி, நிர்வாகமுறை, அவர்களின் தியாகம் போன்ற வரலாற்று உண்மை நிகழ்வுகளை பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த வரலாற்று ஏடுகள் அனைத்தையும் வெள்ளையர்கள் ஆட்சியில் அடியோடு தீவைத்துக் கொளுத்தினர். உண்மைச் செய்திகள் அடுத்தடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். பிறகு வெள்ளையர்களே அன்றைய சங்பரிவார் துணை கொண்டு முஸ்லிம் மன்னர்களைப் பற்றி கட்டுக்கதைகளை வரலாறு என்ற பெயரில் எழுதி வைத்தனர். அவற்றைதான் இன்றைய வரலாற்றுப் பாடங்களில் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றனர்.

இவற்றை மாற்றி உண்மையான செய்திகளை தெரிந்து கொள்வதில், அவற்றை தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில் முஸ்லிம்கள் போன்ற இன மத ரீதியான சிறுபான்மை சமூகம் என்றைக்கு ஆர்வம் காட்டுகிறதோ, அவற்றை நிலைநிறுத்துவதற்கு என்றைக்கு போராட துணிகிறதோ அதுவரையிலும் இது போன்ற அநியாயக்காரர்களின் ஆட்டூழியங்கள் இந்நாட்டில் தொடரத் தான் செய்யும். சட்டத்தால் எல்லாம் இவர்களை ஒன்றும் செய்துவிட இயலாது.

source : http://www.samooganeethi.org/?p=910

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

ஹசாரேவுக்கு ஆதரவாக உறுதிமொழி ஏற்பு

ஊழலுக்கு எதிராக போரடி வரும் அண்ணா ஹசாரேவை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் எம்.தமிமுன் அன்சாரி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
இன்று (09.04.2011) மெரீனா கடற்கரை, ஓளவையார் சிலை அருகே காலை 8.30 மணியளவில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட பலருக்கு மத்தியில் வேட்பாளர் உறுதிமொழியை வாசிக்க மற்றவர்கள் அதை திரும்ப வாசித்தனர்.
உறுதிமொழிவாசகம் பின்வறுமாறு:

ஊழக்கு எதிராக போராடிவரும், காந்தியவாதி அண்ணா ஹசாரேயை நாட்டுப்பற்றுள்ள இந்தியர்களாகிய நாங்கள் முழு மனதோடு ஆதரிக்கிறேம்.

வாக்களர்களுக்கு பணம் கொடுக்கும் அநீதி ஒழிய; ஜனநாயகம் காக்க; ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரேயின் பின்னால் அணிவகுப்போம்.

இவ்வாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது

வியாழன், 7 ஏப்ரல், 2011

ராமேஸ்வரம் மீனவர்கள் மாயம் நடவடிக்கை கோரி பிரதமருக்கு மனிதநேய மக்கள் கட்சி அவசர தந்தி

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த விக்டர், அந்தோணி, ஜான்பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்களும் கடந்த 2ம் தேதி, மீன்பிடிப்பதற்காக ஒரு படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். ஐந்து நாட்கள் ஆகியும் அவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இதையடுத்து காணாமல் போன அவர்களை கடலோர படையினர் தேடி வருகின்றனர்.
காணாமல் போன மேற்கண்ட நான்கு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், இராமநாதபுரம் ம.ம.க. வேட்பாளருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று காலை அவசர தந்தி அனுப்பியுள்ளார். காணாமல் போயுள்ள மேற்கண்ட நான்கு மீனவர்களையும் உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் அவர் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தை மின் வெட்டு மாநிலமாக மாற்றியதே கருணாநிதியின் சாதனை: ஜெ., குற்றச்சாட்டு

கோவை: ""மின் மிகையாக இருந்த மாநிலத்தை, மின் வெட்டு மாநிலமாக மாற்றியது தான், கருணாநிதி அரசின், ஐந்தாண்டு கால சாதனை,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.


கோவை வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: நடைபெறவுள்ள தேர்தல், வெறும் ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் சாதாரண தேர்தல் இல்லை; கொடுங்கோல் குடும்ப பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல்; தமிழக மக்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுத்தரும் தேர்தல். நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கும், குடும்ப ஆட்சி நடத்துவோருக்கும் தமிழக மக்கள் என்ன தண்டனை கொடுக்கப் போகின்றனர் என்பதை, நாடே கவனித்துக் கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, சட்டம் ஒழுங்கும், மின்சார உற்பத்தியும் தான் முக்கியத் தேவை; இவை எப்படி உள்ளது என்பது உங்களுக்கே தெரியும். இவை இரண்டையும் சீர்குலைத்தவர் கருணாநிதி; இதனால் தான் தொழில்கள் தொய்வுற்று, விவசாயம் வீழ்ச்சி அடைந்து, விலைவாசி விஷம் போல் ஏறி விட்டது.சட்டம் ஒழுங்கை சீர் குலைத்தது கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும், அமைச்சர்களும் தான். கிருஷ்ணன் கொலை வழக்கு, பத்திரிகை அலுவலகம் எரிப்பு, துணை வேந்தர் தாக்குதல், நில மோசடி, ஆள்கடத்தலில் ஈடுபட்ட என்.கே.கே.பி.ராஜா, சென்னை இரட்டை கொலையில், மர்மமான முறையில் குற்றவாளி இறந்தது, தேசியக்கட்சி அலுவலகத்தை அமைச்சர் பரிதி தாக்கியது, கொலைக்குற்றவாளியை, வீரபாண்டி ஆறுமுகம், சிறையில் சந்தித்தது, ஹார்லிக்ஸ் திருட்டு என, எதிலுமே நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


எதையுமே தடுக்கத் திராணியற்ற கருணாநிதிக்கு, சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச தகுதியில்லை. மின் தேவைக்கும், மின் உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்து, மின் வெட்டு அதிகமாகிக் கொண்டேயுள்ளது. மின் மிகையாக இருந்த மாநிலத்தை, மின் வெட்டு மாநிலமாக மாற்றியதுதான், கருணாநிதி அரசின் சாதனை. மின் வெட்டு அதிகரிப்பதாலும், சட்டம் ஒழுங்கு சீர் குலைவதாலும் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர், புதுத்தொழில் துவங்க ஆர்வம் காட்டுவதில்லை; வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டது; எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. இந்த ஆட்சி எப்போதுபோகும் என, எல்லாரும் ஏங்கும் அளவுக்கு கருணாநிதி ஆட்சி நடத்தியுள்ளார். திரைப்படத்தொழில், பத்திரிகை, கிரானைட், ரியல் எஸ்டேட், கேபிள் என, எல்லாத் தொழிலுமே அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ளன. மீதியுள்ள தொழில்களையும் அபகரிக்கும் நோக்கத்தில் தான், மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென, கருணாநிதி உங்களைத்தேடி வருகிறார். ஏமாந்து விடாதீர்கள்.


"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டது. தண்டிக்க வேண்டிய மத்திய அரசு, ஆட்சிக்காக வழக்கை தாமதப்படுத்துகிறது. கருணாநிதி குடும்பத்தை தண்டிக்கும் சக்தி, உங்களிடம் தான் உள்ளது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்கு, ஊழல் சாதனை செய்த தி.மு.க.,வை, கின்னசில் இடம் பெறும் அளவுக்கு அந்தக் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டிபாசிட் போகச் செய்ய வேண்டும். தமிழகத்திலிருந்து உங்களை விரட்ட நினைக்கும் கருணாநிதியை, நீங்கள் விரட்ட ஒரே வாய்ப்பு, தேர்தல் தான். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பல நல்ல வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றும் தகுதி, அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தமிழகத்துக்கு வீழ்ச்சியே கிடையாது; வளர்ச்சிதான் என்ற உத்தரவாதத்தையும் தருகிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். இரவு 8.15க்கு பேச்சைத் துவக்கிய ஜெயலலிதா, 8.40க்கு முடித்தார்.

source : dinamalar.com

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு குடிசைவாழ் மக்கள் உற்சாக வரவேற்பு

இராமநாதபுரம் சேப்பாக்கம்-திருவேல்லிகேணி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் இரட்டை மெழுவர்த்தி சின்னத்தில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் குடிசைப்பகுதிகளில் வாக்குசேகரித்தனர். அப்போது அம்மக்கள் பேராதரவு வழங்கினர்

இராமநாதபுரம் மமக வேட்பாளர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் கிராமங்களில் வாழும் குடிசைப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார், அவருக்கு அக்கிராம மக்கள் உற்சாக வரேற்பு அளித்தனர
அதேபோல் சேப்பாக்கம்-திருவேல்லிகேணி மமக வேட்பாளர் எம்.தமீமுன் அன்சாரி சென்னை சிந்தாதிரிபேட்டை குடிசைப்பகுதிகளில் வாக்குசேரித்தார் அங்குள்ள மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து தங்களது ஓட்டுக்களை இரட்டை மெழுவர்த்தி சின்னத்திற்கு பதிவு செய்வோம் என கூறினர்.
ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மமக வேட்பாளர் ஏ.அஸ்லம் பாஷா அவர்களும் ஆம்பூர் தொகுதி உட்பட்ட கிராமஙகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் வேட்பாளர்களின் பிரச்சாரத்தின் உடன் உள்ளனர்.

முபாரக்குடன் சேர்ந்து தர்காக்களும் ஒழிகின்றன...

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

1930களில், சவூதி அரேபிய அரசாங்கம், தன் நாட்டில் இருந்த தர்காக்களை ஒழித்து கட்டியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், தர்காக்கள் என்பவை இஸ்லாத்திற்கு எதிரானவை என்பதாகும்.

தர்காக்கள் தேவையா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து முஸ்லிம்களிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில், ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

முபாரக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு, எகிப்தில், தர்காக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்ற செய்தி தான் அது.

சில தினங்களுக்கு முன்பு (April 3), கல்யுப் நகரில் உள்ள சிதி அப்துல் ரஹ்மான் சமாதியை இடிக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட முயன்றிருக்கின்றது. அவர்களது முயற்சி அந்த பகுதி மக்களால் முறியடிக்கப்படாலும், அந்த சமாதி குறிப்பிடத்தக்க சேதமடைந்திருக்கின்றது.


"தர்காக்கள் ஹராமென்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இப்படி நடந்து கொள்வது தான் ஹராம் என்று அவர்களுக்கு புரியவில்லை" என்று கல்யுப் நகரவாசியான ஹுசைன் அஹமத் கூறுகின்றார்.

முபாரக் வெளியேறியதிலிருந்து இது போன்ற செயல்களும் அதிகரித்து விட்டதாக குறிப்பிடும் சூபி அறிஞர் சைய்த் டார்விஷ் மேலும் குறிப்பிடுகையில் "முன்னரெல்லாம் இவர்களை காண முடியாது. ஆனால், இன்றோ, இவர்கள் அதிகளவில் இருக்கின்றனர்" என்கின்றார்.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இமாமான அப்துல் ஹே, இது குறித்து பேசும் போது, "(தர்காக்களை அகற்ற) அவர்கள் கையாண்ட முறைகள் தவறுதான். புத்தகங்களை தாங்களாக படித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். இது தவறான பாதைக்கு வழி வகுக்கும். அவர்கள் கூறுகின்றனர், 'போதும், இறைவனின் சட்டத்தை நாங்களே நடைமுறை படுத்துகின்றோம்' என்று"

அவர் மேலும் கூறுகையில், "நிச்சயமாக சட்டத்தை கையிலெடுப்பது தவறுதான். ஆனால் இவை மிகைப்படுத்தபடுகின்றன. கல்யுப் நகரத்தில் மட்டும் சுமார் எட்டு தர்காக்கள் கடந்த இரு ஆண்டுகளில் அரசாங்கத்தின் உதவியுடன் அகற்றப்பட்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும், இந்த நகரத்தில் மேலும் ஐந்து தர்காக்களை அமைதியான முறையில் மக்கள் அகற்றி இருக்கின்றனர். தற்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதால், மக்கள், தாங்களாக சட்டத்தை கையிலெடுத்து கொள்கின்றனர்".

பாகிஸ்தானில் நடைபெறும் தர்காக்களுக்கு எதிரான செயல்களை போலவே எகிப்திலும் நடைபெறுவதாக ராய்டர்ஸ் தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று எகிப்தின் மற்றொரு நகரமான டாலாவில் ஒரு தர்காவுக்கு தீ வைக்கப்பட்டது.

இதற்கெல்லாம் காரணம் சலபி குழுக்கள் தான் என்று எகிப்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. நிலையில்லாத அரசாங்கம் இருக்கும் நிலையில் இது போன்ற செயல்கள் அதிகரித்திருப்பது எகிப்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

என்னதான் தர்காக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவையாக இருந்தாலும் இளைஞர்கள் இப்படி சட்டத்தை தாங்களாக செயல்படுத்த நினைப்பது சரியற்ற செயலாகவே எனக்கு தோன்றுகின்றது. பொறுமையை காத்து மக்களிடையே தவ்ஹீத் (ஓரிறை கொள்கை) பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களின் துணையுடனே தர்காக்களை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக தெரிகின்றது.

தர்காக்கள் குறித்து நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது,

1. அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம்)

2. ''எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்.)

தன்னுடைய கப்ரை கூட விழா நடக்கும் இடமாக ஆக்க வேண்டாமென்று உத்தரவிட்டிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்). அப்படியிருக்க எப்படி சிலர் கந்தூரி விழா கொண்டாடுகின்றனர்?

3. கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, "அபீமிர்சத்" என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். (ஆதாரம் : முஸ்லிம் - முதல்பாகம்)

4. 'நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு சஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். "அவ்வாறு நான் செய்ய மாட்டேன்" என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத் ரளியல்லாஹு அன்ஹு, பக்கம் : 298 பாகம் 1)

5. நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி புலாலா அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,"கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்" என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், முதல் பாகம் 312)

6. "நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்" (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610)

இறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

References:
1. Islamist campaign against Egypt shrines focus fears - Reuters, dated 6th April, 2011. link
2. Shrine - Wikipedia. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

source : http://pinnoottavaathi.blogspot.com/