வியாழன், 5 ஜனவரி, 2012

ஆர்.எஸ்.எஸ்-ன் இரட்டை முகம்



கர்நாடக மாநிலத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சி - காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டது ,

கர்நாடகத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தகி நகரத்தின் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் நாட்டினுடைய கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இதனை மர்ம நபர்கள் செய்துள்ளனர். இதனைக் கேள்விப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து பாகிஸ்தான் கொடியை கீழே இறக்கினர்.
கர்நாடகத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தகி நகரத்தின் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் நாட்டினுடைய கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இதனை மர்ம நபர்கள் செய்துள்ளனர்.

இதனைக் கேள்விப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து பாகிஸ்தான் கொடியை கீழே இறக்கினர். கொடியை பறக்க விட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இந்த சம்பவத்தை காரணமாக வைத்து வன்முறையில் ஈடுபட்ட ஹிந்துத்துவ பயங்கரவாத கும்பல் சிந்தகி நகரில் வாகனங்களைத் தாக்கினர்.
மேலும் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள முத்ஹல் என்ற இடத்திலுள்ள ஒரு பள்ளிவாசலும் தாக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கும் பதற்றம் நிலவியது. வன்முறையில் ஈடுபட்ட கும்பல் டயர்களை எரித்து சாலையில் வீசினர். இதனால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு பேருந்துகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் பாகிஸ்தான் கொடியை பறக்கவிட்ட சம்பவத்தில், ரோஹித் இஷ்வர் நவி (18), சுனில் மடிவலப்பா அகசர் (18), அருண் வக்மோரே (20), ராகேஷ் சித்தரமையாஹ் (19), மல்லன் கௌடா (19) , பரசுராம் அசோக் (20) ,ஆகிய தீவிரவாதிகளை போலிஸ் நேற்று கைது செய்தது,
கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டு மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்று கலவரத்தை உண்டாக்க முயற்சித்தது போல் மீண்டும் கலவர வெறியுடன் நாடகமாடிய இந்துத்துவ வெறியர்களின் நாடகம் அம்பலமானது ..
இவர்கள் நினைத்தது நடக்க வேண்டுமென்றால் இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்கவும் தயங்கப்போவதில்லை , மத்திய அரசு தலையிட்டு காவி தீவிரவாதத்தை இந்தியாவில் உடனடியாக தடை செய்ய வேண்டும்...

புதன், 4 ஜனவரி, 2012

இஸ்லாமிய பக்கீர்களின் இந்திய சுதந்திரப் போர்!

இன்று சுதந்திரத்தின் பொருள் திரிந்துள்ளது போல, சுதந்திரப் போராட்ட வரலாறும் திரித்து எழுதப் பட்டு வருகிறது! சுதந்திரம் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் பாடுபட்டது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப் படுகிறது! தவிர சுதந்திரம் பெறுவதற்கு போராடியவர்களும் கூட இந்துகள் என்பதுபோலவும், இந்துகளுக்கு மட்டுமே வாங்கப்பட்ட சுதந்திரம் போலவும் சித்தரிப்புகள் நடந்து வருவதை பார்க்க முடிகிறது! இன்று இவர்கள் மட்டுமே இந்திய தேச பக்தர்களாக மிகைபடுத்தப் பட்டு வருகிறார்கள்! இந்திய தேசம் இவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோலவும், இந்த நாடு இவர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப் பட்டுள்ளது போலவும் இவர்கள் பேசியும் எழுதியும்,ஊடகங்களில் விளம்பரம் செய்து வருவதையும் பார்க்கும்போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை!



இன்று சுதந்திரம் பெறுவதற்கு, "காரண கர்த்தாவாக" காட்டப்படும் எவரையும் விட, சுதந்திரத்திற்காக போராடியவர்கள் முஸ்லிம்களும், தாழ்த்தப் பட்டவர்களும் ஆவர்! இவர்களிலும் பக்கீர்கள் என்று இன்றும் அழைக்கப் படும் முஸ்லிம்களில் நாடோடியாகவும் , வறுமை நிலையிலும் வாழும் பல்லாயிரம் இந்திய முஸ்லிம்கள்,அன்று சுதந்திரத்திற்காக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி போராட்டம் நடத்தி உள்ளனர்! முஸ்லிம்களுக்கு ஆங்கிலேயர் மீது சொல்லொண்ணா கோபமும் வெறுப்பும் இருந்தது! ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட அந்நியர்களின் படையெடுப்புக்கு முன்பு, இந்தியாவை பரவலாக ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள்தான்!


டெல்லியை தலைநகரமாக கொண்டு,592 ஆண்டுகள் 46 அரசர்களும்,பாமினி ராஜ்யத்தை 170 ஆண்டுகள் ௧௭ மன்னர்களும் ,மால்வா ராஜ்யத்தை 130 ஆண்டுகள் 7 மன்னர்களும்,குஜராத்தில் 136 ஆண்டுகள் 9 மன்னர்களும்,பீஜப்பூரை 127 ஆண்டுகள் 9 மன்னர்களும்,கோல்கொண்டாவில் 196 ஆண்டுகாலம் 14 சுல்தான்களும்,பெராரில் 8 ஆண்டுகாலம் 4 மன்னர்களும் பீதரில்,135 ஆண்டுகள் 12 மன்னர்களும்,அவுரத்தை 35 ஆண்டுகள் 12 நவாபுகளும்,ஆந்திராவை,230 ஆண்டுகள் 12 நிசாம்களும் வங்காளத்தை 67 ஆண்டுகள் 10 அரசர்களும் தென்னகத்தை 22 ஆண்டுகள் 2 சுல்தான்களும்,(ஹைதர்,திப்பு) ஆற்காட்டை 135 ஆண்டுகள் 12 நவாபுகளும் ஆண்டனர்!


ஆங்கிலேயர்கள் ஆட்சியை கைப்பற்றி, நம்மை அடிமைப் படுத்தும் வரை ஆண்டுவந்த முஸ்லிம்கள், தங்களது ஆட்சியும் அதிகாரமும் பறிக்கப் பட்டதால், சுதந்திரப் போரில் ஆங்கிலேயர்களை அகற்றும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்!. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்த முஸ்லிம்கள், கிருத்துவ மதத்தைப் பின்பற்றிய ஆங்கிலேயர்களிடம் ஆட்சியை இழந்து, அடிமைப்பட்டு வாழ்வதை வெறுத்தனர். ! எனவே, ஆங்கிலேயர்களை தீரமுடன், வீரமுடன், விவேகத்துடனும் எதிர்த்தனர்,போரிட்டனர் என்பது வரலாற்றில் வெளிச்சமிடாத பக்கங்களாகும்.!

ஆங்கிலேயர்களிடம் இந்திய அடிமைப்படும் முன்பு இந்திய ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதால், முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்துவந்த முஸ்லிம் படை வீரர்களும் அவரது குடும்பத்தாரும் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப் பட்டனர், ஆங்கிலேயர்களின் படைகளில் முஸ்லிம்களைச் சேர்ப்பதை தவிர்த்து வந்தனர்! இதனாலும் வறுமையில் வாடிய முஸ்லிம் போர்வீரர்கள், நாடோடிகளாக ஆக்கப்பட்டனர்! ஆங்கிலேயருக்கு எதிராக தீவிர போராட்டத்தை மேற்கொள்ளும் நிலைக்கு ஆளாயினர்! இப்படி ஆங்கிலேயருக்கு எதிராக, நாடு முழுவதும், பக்கீர்களாக சுற்றி திரிந்த முஸ்லிம்களின் போராட்டம் பல்வேறு யுத்திகளையும் தந்திரங்களையும் கொண்டிருந்தது,!


" தப்ஸ்" என்ற "சிறிய பறை" போன்ற இசைக் கருவியை வைத்திருக்கும் பக்கீர்கள் அதனை இசைத்தும், ஒலி எழுப்பியும் பொதுமக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்துவிடும் ஆற்றல் படைத்து இருந்தனர். இரண்டு பொருள்பட பாடவும், மறைமுகமாக தாங்கள் சொல்லவந்த கருத்தை உரியவர்களுக்கு சொல்லும் திறனுடையவர்களாக இருந்தனர்!. எளிய,கவிதைகளை,பாடல்களை இயற்றும் திறமையும் அவர்களுக்கு இருந்தது! திருவிழா, சந்தை,கடைவீதி,முதலிய பொதுமக்கள் மிகுதியாக கூடும் இடங்களில் இவர்கள், ஆங்கிலேயருக்கு எதிராகவும், அவர்களது ஆட்சியை அகற்ற வேண்டிய அவசியத்தையும்,சுதந்திரம் குறித்த உணர்வையும் எளிதில் விளக்கி புரியவைத்தனர்! ஆங்கிலேயருக்கு எதிராக பொதுமக்களை ஒன்று திரட்டும் பணியை செய்தனர்! போதுபக்களின் ஒத்துழைப்பு இன்றி,சுதந்திரம் பெறுவது சாத்தியம் அற்றது இன்பது இவர்களுக்கு தெரிந்து இருந்தது.



' பொம்மலாட்டம்' என்ற பெயரில்,ஆங்கில பொம்மை ஒன்றை, பிரான்சு பொம்மை அடித்து வீழ்த்துவதுபோல காட்டுவார்கள். இதன்மூலம் பிரான்சு உதவியுடன் ஆங்கிலேயர்கள் வீழ்த்தப் படுவார்கள் என்றும்,உலகம் முழுவதும் பிரன்சினரிடம் ஆங்கிலேயர்கள் தோல்வி அடைந்து வருகின்றனர் என்று கூறி,ஆங்கிலேயர் வெல்லமுடியாதவர்கள் அல்ல என்று சொல்லி, பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினர். ஆங்கிலேய படைகள் உள்ள இடங்களுக்கு விதை காட்டுவதுபோல சென்று ஒற்றுவேலை பார்த்தார்கள்! ஆங்கில படையில் இருக்கும் இந்திய சிப்பாய்களிடம் குழப்பத்தை விளைவித்து,ஆங்கிலேய சிப்பாய்களும்,இந்திய சிப்பாய்களும் ஒன்றுபட முடியாதபடி பார்த்துக் கொண்டார்கள்! இதனால், ஆங்கிலேயர்கள் அவர்களது படையைப் பார்த்து பயப்படும் நிலையை பக்கீர்கள் ஏற்படுத்தினார்கள். ஆங்கிலேய படையில் இருந்து வெளியேற விரும்பும் இந்திய சிப்பாய்களை தங்களது தோற்றத்தில், மாறுவேடம் போட்டு வெளியேற்றியும்,இந்திய சிப்பாய்களின் குடும்பத்தை ஆங்கிலேயருக்கு தெரியாத இடங்களுக்கு முன்பே இடம்பெயரச் செய்து,மாற்றியும் உதவினர்.

தங்களது நலனை கருதாது,காடு,மேடு எல்லாம் சுற்றி வந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய இஸ்லாமிய பக்கீர்கள், இந்திய வரலாற்றில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று வேலூர் புரட்சியாகும்! இந்த புரட்சிக்கு வித்திட்டவர்களும்,நம்பிக்கை அளித்து நடத்தியவர்களும் இஸ்லாமிய பக்கீர்களே ஆகும்!

செவ்வாய், 3 ஜனவரி, 2012

இங்கிலாந்தின் இஸ்லாமோஃபோபியா..!


இங்கிலாந்து பாராளுமன்ற வெஸ்ட்மினிஸ்டர் பேலஸ் வளாகத்தினுள்ளே 23 உணவகங்கள் உள்ளன. அங்கே இஸ்லாமிய விதிமுறைப்படி அறுக்கப்பட்ட 'ஹலால்' இறைச்சிகள் உண்ணக்கிடைத்து வந்தன. இந்நிலையில், "பாராளுமன்ற வளாகத்தினுள் உணவு உண்ணும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இனி எந்த உணவு விடுதிகளிலும்... 'ஹலால்' உணவை உண்ண முடியாது என்றும், 'ஹலால்' முறையில் விலங்கு அறுக்கப்படுவது முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது" என்றும் லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் தன்னுடைய பத்திரிகையில் அரசு சார்பாக வெஸ்ட் மினிஸ்டர் அரசு மாளிகை அறிவிப்பை மேற்கோள் காட்டி இச்செய்தியை புத்தாண்டு தினத்தன்று வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கை, பிரிட்டிஷ் எம்.பிக்களுக்கு, குறிப்பாக முஸ்லீம் எம்.பிக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'இதற்கான காரணம் என்ன' என்று கேட்டறிந்த போது, "முஸ்லிம் அல்லாத மற்ற எம்.பி.க்களுக்கு 'ஹலால்' முறையில் அறுக்கப்பட்ட இறைச்சி சாப்பிட பிடிக்க வில்லை..! இதை ஓர் 'இஸ்லாமிய திணிப்பு' போல பார்க்கின்றனர்..! இதனால், 'ஹலால்' அல்லாத இறைச்சி உண்ணும் வாய்ப்பு தங்களுக்கு மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, இனி இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் 'ஹலால்' அல்லாத இறைச்சியே பரிமாறப்படும்" என்று முடிவு செய்யப்பட்டு விட்டதாம்..!

Lord Ahmad எனும் ஒரு இங்கிலாந்து முஸ்லிம் எம்.பி. இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும் போது, “ஹலால் உணவை உண்ணாதவர்களுக்கு மட்டும் அப்படி ஒரு வாய்ப்பிருப்பது போல்... ஹலால் உணவு மட்டுமே உண்ண விரும்புவோர்க்கும் ஒரு வாய்ப்பு இருக்க வேண்டாமா..?” என்றார்..! இக்கேள்விக்கு சரியான பதிலை எவரும் இறுதிவரை தரவில்லை..! இப்படி, 'ஹலால்' உணவுக்கு அனைத்து கதவுகளையும் அடைத்தது தவறு என்கிறார்..! ஆனால்.... 'இங்கிலாந்து சர்ச்'சின் உறுப்பினர் அலிசான் ரூப்போ என்ற கிருஸ்துவர், “நாட்டின் மற்ற உணவகங்களில், பள்ளியில், மருத்துவமனைகளில் எல்லாம் ஹலால் உணவை பரிமாற அனுமதிக்கும் பாராளுமன்றம், தன் வளாகத்தில் மட்டும் ஹலால் உணவை பரிமாற தடை விதிப்பது இரட்டை நிலைப்பாடாக உள்ளது” என்று கூறி, மறைமுகமாக இந்த முடிவை இங்கிலாந்து முழுக்க விரிவுபடுத்த நச்சுச்சாவி கொடுத்து விட்டார், அண்ணாச்சி..! சரியான... சுப்ரமணிய சுவாமி..!

தமக்கு எவ்வித தேவையுமின்றி எந்த ஓர் உயிரையும் கொல்ல முஸ்லீம்களை இறைவன் அனுமதிக்கவில்லை. அதேநேரம், தம் உயிரைக்காக்க கொடிய விலங்குகளை, நச்சுப்பூச்சிகளை கொல்லலாம். அல்லது... தம் உணவுத்தேவைக்காக அதற்குரிய உயிருள்ள பிராணிகளை, 'இறைவா, என்னை நீ அனுமதிதத்தன் பேரிலேயே இந்த பிராணியை என் உணவுத்தேவைக்காக அறுக்கிறேன்' என்று மனதில் நினைத்தவராக... "இறைவனின் பெயரால்" என்று கூறி, மிகக்கூர்மையான கத்தி கொண்டு கழுத்தின் இரத்த நாளத்தை மட்டும் நொடியில் அறுத்து, இரத்தைத்தை எல்லாம் ஓட்டிவிட்டு (இரத்தம் சாப்பிடக்கூடாது) இறைச்சியை சாப்பிடலாம் இதுதான் ஹலால் முறையிலான அறுப்பு..!

இதுவல்லாத முறைகளில் அறுத்து சாப்பிடுவது, அல்லது ஏதேனும் ஆயுதம் கொண்டு அடித்து கொன்று சாப்பிடுவது, அல்லது ஒரே வெட்டில் தலை-உடம்பு தனித்தனியாக போகும்படி வெட்டிக்கொன்று சாப்பிடுவது, அல்லது தலையை பிடித்து கழுத்தில் திருகி நெரித்து கொன்று சாப்பிடுவது, அல்லது ஓங்கி தரையில்/சுவரில் மோதி அடித்துக்கொன்று சாப்பிடுவது, இதெல்லாம்... முஸ்லிம்களுக்கு அனுமதி - ஹலால் இல்லை..!

மேற்படி முஸ்லிம் அல்லாத இங்கிலாந்து எம்.பி.க்களின் கோரிக்கை இங்கே என்ன சகோ..?

'உயிரினங்களை கொல்லக்கூடாது' என்பது இல்லை..!
இன்னும், 'அசைவம் சாப்பிடக்கூடாது' என்பதும் இல்லை...!

...வேறென்ன..?

"எந்த முறையில் விலங்கை கொல்வது" எனபதில்தான் அங்கே பிரச்சினை..! இஸ்லாமிய 'ஹலால்' முறைப்படி அல்லாமல் மேற்சொன்ன அல்லது வேறு ஏதோ ஒரு முறைப்படி கொன்றால்தான் சாப்பிடுவார்கள் போல..!

சரிங்கப்பா... அது உங்கள் உரிமை. ஹலால் அல்லாத இறைச்சியை சாப்பிடுவது உங்கள் உரிமைதான். அதுதான் 23 உணவகங்கள் அங்கே உள்ளனவே..? அதில் சிலவற்றில் ஹலால் பிரியர்களுக்காக ஹலால் இறைச்சி விற்றால் என்னவாகும்..? முஸ்லிம் எம்.பி.க்களும்... ஹலால் முறையை விரும்பும் மற்ற எம்பிக்களும் அங்கே மட்டும் சென்று சாப்பிட்டுக்கொள்ளட்டுமே..! மற்ற எம்பிக்களுக்கு உள்ள அதே உரிமையை உங்கள் சக குடிமகனான முஸ்லிம் எம்பிக்களுக்கும் தந்தால் என்ன..? ஏன் தரமாட்டீர்கள்..? இதைத்தானே... இந்த உரிமையைத்தானே... லார்ட் அஹமது எம்.பி.யும் கேட்கிறார்..!

புரியவில்லையா..? புரியாதுதான்..! எப்படி புரியும்..?

நிர்வாணமாக திரிவது பெண்ணுரிமை என்பீர்கள்...முழுக்க உடை அணிய வேறொரு பெண்ணுக்கு பெண்ணுரிமை மறுத்து சட்டம் இயற்றுவீர்கள்..!

மது குடிப்பது உங்கள் பிறப்புரிமை என்பீர்கள்... யாரேனும் குடிக்காமல் விலகி சென்றால்... 'பார்ட்டிக்கு அது அவமரியாதை' என்று கூறி மதுகுடிக்காத அடுத்தவர் பிறப்புரிமையை சாகடிப்பீர்கள்..!

ஆண்-ஆண், பெண்-பெண், ஆண்-பெண் என எவ்வித வரைமுறையும் திருமணபந்தமுமின்றி விபச்சாரத்தை உரிமை என்பீர்கள்... திருமண உறவுடன் கணவன் மனைவியாக அனைத்து உரிமைகளையும் தந்து ஒன்று அல்லது அதிக பட்சம் நான்கு மனைவி மட்டும் என்றால்... "ச்சீ..ச்சீ.. இதுதான் கேவலம்" என்பீர்கள்...!

கொடுத்த கடனுக்கு அநியாய வட்டி வசூலிப்பீர்கள்... வட்டி அல்லாமல், இஸ்லாமிய வங்கி கடன் கொடுக்க முன்வந்தால் எதிர்ப்பீர்கள்...!

'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவது'தான் எம் கொள்கை என்பீர்கள்... யாரோ முகம் தெரியாத ஒரு சிலர் செய்த பயங்கரவாதத்துக்காக... அவர்களை பிடித்து விசாரித்து தண்டிப்பதை விடுத்து... வேறெங்கோ சென்று... மில்லியன் கணக்கில் அப்பாவி மக்களை கொன்று ஊரையே... நாட்டையே... மொத்தமாக அழிப்பீர்கள்...!

'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' நடத்துவீர்கள்... உலகிலேயே மிக மிக அதிகமாக அதிபயங்கர ஆயுதங்கள் தயாரித்து நீங்கள்தான் 'யாராருக்கோ' விற்றுக்கொண்டே இருப்பீர்கள்..!

இப்படிப்பட்ட நீங்கள்தான்... ஹலாலான முறையில் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியை முஸ்லிம்களுக்கு மறுக்கின்றீர்கள்...! எங்களுக்கு எங்களின் முறைப்படி கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சிதான் வேண்டும் என்று ஒரு குடிமகனாக எம்.பி.யாக கேட்பது கூட தவறா..? 'ஆம்' என்றால்... இதுதானேப்பா கருத்துத்திணிப்பு..? உரிமை மறுப்பு..! மதவெறி..! இஸ்லாமோஃபோபியா..! ச்சே... இவ்வுலகில், ஒரு மனிதன்... கொலைகாரனாக, கொள்ளைக்காரனாக, விபச்சாரியாக, பாலியல் காமுகனாக, குடிகாரனாக, சூதாடியாக... இப்படி சமூகத்துக்கும் அடுத்தவருக்கும் தீங்குதரும் தொல்லையாக... எப்படி வேண்டுமானாலும் வாழலாம் போல, அரசு அனுமதியுடன்..! ஆனால், தூய இஸ்லாமை பின்பற்றி முஸ்லிமாக பிறருக்கும் சமூகத்துக்கும் தொல்லை இன்றி அமைதியாக நன்மை செய்து வாழ மட்டும் ஆயிரம் தடைகள்..! எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள் சகோ..! ஏன் இப்படி..?

முல்லை பெரியாறு அணை விவகாரம் - திருச்சியில் மமக ஆர்ப்பாட்டம்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் பாரபட்சத்தையும், கேரள அரசின் தான்தோன்றித்தனத்தையும் கண்டித்து திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 1.1.2012 அன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துணை பொதுசெயலாளர் M. தமிமுன் அன்சாரி கண்டன உரையாற்றினார். மாவட்ட தலைவர் ஹக்கீம், மமக மாவட்ட செயலாளர் பைஸ் அகமது, தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம்சா, மாவட்ட பொருளாளர் இந்தியாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் - திருச்சியில் மமக ஆர்ப்பாட்டம்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் - திருச்சியில் மமக ஆர்ப்பாட்டம்.

ஒரு நீதிபதியின் விடுதலை முழக்கம்’’ நூல் வெளியீடு – எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வெளியிட்டார்

“ஒரு நீதிபதியின் விடுதலை முழக்கம்’’ நூல் வெளியீடு – எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வெளியிட்டார்

சென்னை மண்ணடி ஆயிஷா மஹாலில் நடைபெற்ற “ஒரு நீதிபதியின் விடுதலை
முழக்கம்’’ என்ற நூலை காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர்
எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., வெளியிட ஓ.எஸ். மணிசேகரன்பெற்றுக்
கொண்டார். அருகில் மௌலவி கே.எம். இல்யாஸ் ரியாஜி, மு. குலாம் முஹம்மது,
நூலாசிரியர் நீதிபதி ப. குலாம் முஹம்மது (முன்னாள் கோபல கிருஷ்ணன்)
மற்றும் பலர்.


புதன், 28 டிசம்பர், 2011

கயவர்களுடன் கள்ள தொடர்பை வெளியிட்டது நய் துன்யா நாளிதழ்


புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா ஹஸாரே இணைந்து பணியாற்றிய செய்தி ‘நய் துன்யா’ என்ற ஹிந்தி பத்திரிகையில் வெளியானது.

இந்நிலையில் அன்னா ஹஸாரே ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்புலத்தில் செயல்படுகிறார் என தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திக்விஜய்சிங் இவ்விவகாரம் தொடர்பாக ட்விட்டர் சமூக இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் இணைந்து ஹஸாரே பணியாற்றியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில் 1983-ல் ஆர்.எஸ்.எஸ். பணிகளில் நானாஜியின் செயலராக ஹஸாரே இருந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள ‘நய் துன்யா’ பத்திரிகையின் முகப்புப் பக்கத்தைப் பாருங்கள்.

ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தொடர்பு இல்லை என ஹஸாரே மீண்டும் மீண்டும் கூறுகிறார். அவர் கூறுவதை நம்புவதா, இல்லை பத்திரிகையில் வெளியாகி உள்ள புகைப்படத்தை நம்புவதா? நான் ஏற்கெனவே கூறியது சரிதான் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

புது டெல்லியில் அதிக குளிர் என்பதால் உண்ணாவிரதம் இருக்க மும்பையை ஹஸாரே தேர்வு செய்யவில்லை. அதிக நிதி திரட்டுவதற்காகத்தான் அவர் மும்பையைத் தேர்வு செய்துள்ளார் என்றும் திக்விஜய் தெரிவித்துள்ளார்.


dinaex.blogspot.com நன்றி

திங்கள், 26 டிசம்பர், 2011

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை வஞ்சித்த காங்கிரஸ் அரசை கண்டித்தும், முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக உரிமையை நிலை நாட்டிட மறுத்து மெத்தன போக்குடன் நடக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழகம் வந்த பிரதமருக்கு தமுமுக வினர் சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஏராளமானோர் கைதாகினர்.

இதேபோல் காரைக்குடி வந்த பிரதமருக்கு தமுமுக வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஏராளமானோர் கைதாகினர்.

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் ..........


சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்