இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
செவ்வாய், 9 நவம்பர், 2010
அமைதிப் பேரணியினர்மீது இஸ்ரேலின் அடாவடித் தாக்குதல்
வீதிக்கு வருகிறார்களாம்!
ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறைப் பிரிவினர் தீவிரமாகச் செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான விசாரணை யில் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் அந்த அமைப்பைத் தடை செய்வதற்குப் போதுமானவை என்றும், ஆர்.எஸ்.எஸின் வன்முறை நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதுதான் தாமதம் - தாங்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகிவிட்டோம் என்பதைத் துல்லிய மாக உணர்ந்து கொண்ட ஆர்..எஸ்.எஸ். கும்பல் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது.
ஆர்.எஸ்.எஸின் நாக்பூர் தலைவர் ரவி ஜோஷியும், இணைச் செயலாளர் ஒருவரும் இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர்.
கடந்த 80 ஆண்டுகாலமாக கட்டுப்பாடான வாழக்கை வாழ்வது எப்படி என மக்களிடம் எடுத்துரைத்து வருகிறோம். தன்னலமற்ற இந்தச் சேவையை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது. தேசிய பேரிடர் வரும்போதெல்லாம், உடனடியாகக் களமிறங்கி, பாதிக்கப்பட்டோருக்குச் சேவை செய்கிறோம். வன்முறைக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், காங்கிரஸ் சகட்டு மேனிக்கு எங்களை விமர்சிக்கிறது என்று கூறியுள்ளனர்.
வரும் 10 ஆம் தேதி புதுடில்லியில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டமும் நடத்தப் போகிறார்களாம்.
நெருப்பு சுடாது, பனிக்கட்டி குளிராக இருக்காது என்று சொன்னால், எப்படி நம்பமாட்டார்களோ அதைப் போன்றதுதான் ஆர்.எஸ்.எசுக்கும், வன்முறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதாகும்.
மூன்று முறை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டுள்ளதே - அது எந்த அடிப்படையில் என்பதை விளக்குவார்களா?
ஆண்களுக்கும், பெண்களுக்கும் துப்பாக்கிப் பயிற்சிகளையும், வன்முறைப் பயிற்சிகளையும் ஆர்.எஸ்.எஸ். கொடுத்து வருகிறதே - இதன் தன்மை என்னவாம்?
காந்தியாரைச் சுட்டுக் கொன்றவர்கள் யார்? கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று தங்கள் மீது விழுந்த கறையைக் கழுவிக் கொள்வதற்காக இவர்கள் மறுக்கலாம்.
நாதுராம் கோட்சேயின் உடன்பிறப்பான கோபால் கோட்சேயும், அவரது மனைவியும் நாதுராம் கோட்சே கடைசிவரை ஆர்.எஸ்.எஸ்.தான் என்று பேட்டி கொடுத்துள்ளனரே - மறுக்க முடியுமா?
நெல்லை மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் அவர்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர்கள் மீது பழியைச் சுமத்தி மதக் கலவரத்தைத் தூண்ட சதித் திட்டம் போட்டார்களே - அது அம்பலம் ஆகவில்லையா?
கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்தது என்ன? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு, வெடிகுண்டு வெடித்து பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பலியானார்களே - அதற்குப் பெயர் என்னவாம்?
2006 ஜூலையில் மும்பை ரயில், 2007 பிப்ரவரியில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், அதே ஆண்டு மே திங்களில் அய்தராபாத் மெக்கா மஸ்ஜித், அக்டோபரில் அஜ்மீர் தர்கா ஷெரீஃப், 2008 ஜூலையில் அகமதாபாத், அதே ஆண்டு செப்டம்பரில் மாலேகான் குண்டுவெடிப்பு களில் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் சம்பந்தப்பட்டனர் என்ற புரளியைக் கிளப்பி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டனரே!
அவையெல்லாம் முழுப் பொய் - இந்த வன் முறைகளின் பின்னணியில் இந்த சங் பரிவார்க் கும்பல்தான் இருந்துள்ளது என்று தக்க ஆதாரத் துடன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பேராபத்துத் தலைக்குமேல் வந்தேவிட்டது என்ற அச்சத்தில் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளனர். இந்த அச் சுறுத்தல்களைக் கண்டு மிரண்டு போகாமல் இந்தக் குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத்தர மத்திய அரசு மேலும் காலம் தாமதம் செய்யாமல் செயல்படவேண்டும். அதன்மூலமே வன்முறை சக்திகளின் ஆணிவேரை வீழ்த்த முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://www.viduthalai.periyar.org.in/20101108/news06.html
சனி, 6 நவம்பர், 2010
ஈரான்:அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய நினைவுதினம் கொண்டாடப்பட்டது
இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தெஹ்ரானில் முன்பு அமெரிக்க தூதரகம் அமைந்திருந்த கட்டிடத்தின் முன்னால் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் ஒன்று கூடினர். பேனர்கள் மற்றும் கொடிகளுடன் வந்த மக்கள் திரள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கெதிராக கோஷங்களை எழுப்பினர்.

அமெரிக்க கைப்பாவையான ஷாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து இஸ்லாமிய புரட்சி வெற்றிப்பெற்று ஒருவருடம் முடிவடையும் முன்பு 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈரான் பல்கலைக்கழக மாணவர்கள் தெஹ்ரானில் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றினர்.
தேசத்துரோகிகள் சதித்திட்டம் தீட்டுவதற்காக பயன்படுத்தும் மையமாக அமெரிக்க தூதரகம் மாறிவிட்டது எனக் குற்றஞ்சாட்டித்தான் அதனை ஈரான் மாணவர்கள் கைப்பற்றினர்.
இஸ்லாமிய அரசை கவிழ்ப்பதற்கு அமெரிக்க தூதரகம் முயற்சி மேற்கொண்டதற்கான ஆதாரங்களை பின்னர் மாணவர்கள் வெளியிட்டனர். சர்வதேச சர்வாதிகாரத்திற்கெதிரான போராட்டத்தின் தினமாகத்தான் ஈரான் நவம்பர் 4 ஆம் தேதியை அனுஷ்டிக்கிறது.
ஈரான் இளைய தலைமுறையின் வீரத்தின் அடையாளம்தான் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய நிகழ்வு என ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,பாலைவனத் தூது
செவ்வாய், 2 நவம்பர், 2010
அடுத்த பா.ஜ.க. தலைவர் நரேந்திர மோடியாம்!
ஏதோ கட்சியின் தலைவர் சரியில்லை என்பதுபோல கற்பித்துக் கொண்டு தலைவர்களை மாற்றும் வேலையில் ஈடுபட்டு பா.ஜ.க. தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு திரிகிறது.
அத்வானியை பிரதமர் என்று தூக்கி நிறுத்திப் பார்த்தனர்.
பிள்ளை பிழைத்தபாடில்லை. பாகிஸ்தான் சென்றபோது ஜின்னாவை அரசியலைத் தாண்டி நான்கு வார்த்தை புகழ்ந்து சொன்னார் என்பதற்காக, அத்வானியை சங் பரிவார்க் கூட்டம் மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்து எறிந்துவிட்டது.
இன்னொரு தலைவர் ஜஸ்வந்த் சிங், அவரும் ஜின்னாவைப் புகழ்ந்தார். அத்வானியை உண்டு இல்லை என்று பிளந்து கட்டினார் - கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இப் பொழுது அவருக்கு மீண்டும் கட்சியில் ஞானஸ்நானம் கொடுத்துவிட்டனர் - ஏன் விலக்கினார்கள்? ஏன் மீண்டும் சேர்த்தார்கள்? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இவ்வளவுக்கும் மிகவும் கட்டுப்பாடான கட்சி என்று தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்பவர்கள் அவர்கள்.
கட்சிக்குப் புதிய தலைமை தேவை - அதுவும் இளைய தலைமுறையை சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று தேடி அலைந்து, சலித்து எடுத்து மும்பையில் இருந்து ஒரு தொழி லதிபரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். நிதின் கட்காரியான அவர் கடந்த ஓர் ஆண்டில் கட்சியைத் தூக்கி நிமிர்த்தவில்லை யாம். அடுத்து சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், கட்காரியை வைத்துக்கொண்டு காயை நகர்த்த முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறதாம்.
ஆர்.எஸ்.எஸ். வேறு - பா.ஜ.க. வேறு என்று சில சூழ்நிலை களில் அவர்கள் சொல்லுவதுண்டு. உண்மை வேறுவிதமானது தான் - பா.ஜ.க.வின் மூக்கணாங்கயிறு எப்பொழுதுமே ஆர்.எஸ்.எஸிடம்தான்.
ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்தான் பா.ஜ.க.வின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று கட்சியின் விதியையே திருத்திக் கொண்டுவிட்டார்கள். நாடாளுமன்ற வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆர்.எஸ்.எஸின் பிரதிநிதி ஒருவர் கட்டாயம் இருக்கவேண்டும் என்பதும் நடைமுறையாகிவிட்டது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். வேறு, பா.ஜ.க. வேறு என்பது சட்ட ரீதியாகத் தப்பித்துக் கொள்ளச் சொல்லும் தந்திரம் ஆகும்.
ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனதாவில் கரைந்த நிலையில்கூட, ஆர்.எஸ்.எஸில் அவர்கள் உறுப்பினராகத் தொடரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டபோது - இரட்டை உறுப்பினர் முறையிலிருந்து விடுபட முடியாது என்று கூறி, ஜனதாவிலிருந்து விலகி, மறுபடியும் ஜனசங்கத்துக்குப் பதில் பாரதீய ஜனதாவைத் தொடங்கினார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
பல்வேறு மாநிலங்கள், பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் மாநிலங்களே கூடாது என்றும், மதச்சார்பற்ற தன்மையைத் தூக்கி எறிந்து ஓர் இந்துத்துவா ஆட்சியை நிறுவவேண்டும் என்றும் கருதுகிற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இதன் பொருள் மீண்டும் மனுதர்மம் கோலோச்சவேண்டும் என்பதுதான்.
அதற்காகச் சிறுபான்மை மக்களை எதிரியாக முன் னிறுத்தி வருபவர்கள்; 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை ஒரு பட்டப்பகலில் முக்கிய தலைவர்கள் முன்னிலையிலேயே இடித்துத் தரைமட்டமாக்கிய கூட்டம், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தண்டனையிலி ருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் தண்டனை அளிக்கத் தவறியிருந்தாலும் மக்கள் மன்றம் இவர்களை வாக்குச் சீட்டுகள் மூலம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டது.
இந்த நிலையில், நரவேட்டை நரேந்திர மோடியை கட்சியின் தலைவராக்கி, குஜராத் மாடலில் இந்தியாவை பா.ஜ.க.வின் பிடியில் கொண்டுவந்துவிடலாமா என்ற நப்பாசையில் இருப்பதாகத் தெரிகிறது.
கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் அம்மையாரே வெளிப்படையாகக் கூறி விட்டார். நரேந்திர மோடியின் ஜம்பம் குஜராத்தில் மட்டும்தான் - வெளியில் செல்லுபடியாகாது என்று கூறிவிட்டார்.
கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அய்க்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி பிகார் பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது என்று தடை விதித்துவிட்டார்.
கோத்ராவை வைத்து சிறுபான்மை மக்களை ஆயிரக் கணக்கில் வேட்டையாடியது மூலம் இந்தியாவில் மட்டுமல்ல - உலகின் பலநாடுகளிலும் மோடியைப்பற்றித் துல்லியமாகத் தெரிந்து வைத்துள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டன. இதைவிட மானக்கேடு ஒன்றும் தேவையா?
இந்த நிலையில், எந்தத் தைரியத்தில் பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் நரேந்திர மோடி என்று நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மோடியின் வீர பிரதாபத்துக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.
2007 அக்டோபர் 19 ஆம் தேதி அன்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, சி.என்.என்., அய்.பி.என். (CNN -IBN) தொலைக்காட்சி நடத்துகிற சாத்தானின் வக்கீல் (Devil’s Advocate) நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மோடியைப் பேட்டி கண்டவர் புகழ் பெற்ற ஊடகவியலாளர் கரண்தப்பார் ஆவார். பேட்டியாளர் நினைக்கிற மாதிரி தன்னால் தற்போது பேச முடியாது என சொல்லி, நேர்காணல் நிகழ்ச்சியின் இடையிலேயே வெளியேறிவிட்டார். நான்கரை நிமிடமே அவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது; மிணாறு விழுங்கினார். இவர்தான் அடுத்த பிரதமராம் - பா.ஜ.க.வின் தலைவராம்.
நல்ல தமாஷ்! -------- விடுதலை தலையங்கம் (01.11.2010)
திருச்சி: தீண்டாமைச் சுவர் என்ற பெயரில் அரசியல்...
திருச்சி மாநகராட்சி 40வது வார்டு எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள பழைய சக்திவேல் காலனியில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுவர் என்று கூறப்படும் வீட்டிற்கு உரிமையாளரான நல்லமுஹம்மதுவின் தந்தை 1964ம் ஆண்டு இந்த காலனியைச் சுற்றி பாதுகாப்பு கருதி சுமார் 10 அடி உயர சுவர் எழுப்பி இருக்கிறார். அந்த காலனியில் அங்கு வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே சாலையும் அமைத்துள்ளார்கள். சாலை முடியும் இடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் சுமார் 20 அடி நீளத்தில் ஆஸ்பெடாஸ் வீட்டைக் கட்டி தனது தங்கைக்கு வழங்கி உள்ளார்.
தற்பொழுது இந்த காலனிக்குப் பின்புறம் முத்து மாரியம்மன் கோவில் தெரு என்ற பெயரில் வீடுகள் உருவாகி அங்கு அனைத்து சமூக மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகள், முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தலித் மக்கள் பழைய சக்திவேல் காலனியில் வரக்கூடாது என வேண்டுமென்றே தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது என பொய்க் கதை புனைந்து 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் நவம்பர் 9ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகம் சுவரை இடிக்காவிட்டால் நாங்களே இடிப்போம் என கூறியுள்ளனர் வலது கம்யூனிஸ்ட்கள்.
இந்நிலையில் 28ம் தேதி சர்ச்சைக்குள்ளான பகுதியைப் பார்வையிட வந்த இடது கம்யூனிஸ்ட் எம்.பி திரு.லிங்கம் அவர்கள், இந்த சுவர் தீண்டாமை சுவர் அல்ல எனவும், மனிதாபிமானத்துடன் பேசி இப்பிரச்சனையை இருவரும் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 29ம் தேதி சர்ச்சைக்குள்ளான பகுதியை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் எஸ். முஹம்மது ஜெய்னுலாபுதீன் பார்வையிட்டு அப்பகுதி மக்களை சந்தித்தார். அவருடன் தமுமுக, மமக மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தார்கள். அங்கு வந்த பத்திரிக்கை நிருபர்களிடம் மாநில அமைப்பு செயலாளர், ‘‘இது ஒருபோதும் தீண்டாமைச் சுவர் ஆகாது. எனவே அரசியல் ஆதாயத்துக்காக விளம்பரம் தேட முயற்சிக்கும் கட்சிகள் மீது அரசும் காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
‘‘மெயின் ரோட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள பழைய சக்திவேல் காலனியில் உள்ள ஆஸ்பெடாஸ் வீட்டையும் இடித்து விட்டால் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டு மனைகளுக்கு விலை உயரும் அதனால் தாங்கள் அதிகம் பயன் அடையலாம் என நினைக்கும் சில நபர்களுக்காக ஒரு தூய்மையான நேர்மையான அரசியல் கட்சி வாதாடுவது உகந்தது அல்ல என்பதை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சொல்லிக் கொள்கிறோம்’’ என்றும் அவர் மேலும் கூறினார்.
பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு
பெங்களூரில் கடந்த அக்டோபர் 30,31 தேதிகளில் கூடிய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் லீகல் மானிட்டரிங் செல் (சட்டநடவடிக்கை கண்காணிப்பு பிரிவு) ஒன்றை உருவாக்கியுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பு அநீதியும், முன்னரே திட்டமிட்டதும், சட்டத்திற்கு புறம்பானதுமாகும் என பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழுக் கூட்டம் கருத்து தெரிவித்துள்ளது.
ஹிந்தத்துவா அமைப்புகளின் வகுப்புவாதவெறி பிரச்சாரங்களை ஒப்புக்கொள்கிறது இத்தீர்ப்பு. இந்தியாவின் மதசார்பற்றக் கொள்கையின் மீதான மிகவும் அநீதியான தாக்குதல்தான் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நிகழ்வு.
தேசம் முழுவதும் இதற்கு நீதியை எதிர்பார்த்திருந்த பொழுதிலும் நீதி என்பது தற்பொழுதும் எட்டாக்கனியாகவே உள்ளது. பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதிக்கான போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் எப்பொழுதுமே முன்னணியில் இருந்துள்ளது.
புதிய சூழலில் வருகிற டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதங்களில் பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையைக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக தேசிய அளவில் பிரச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடுச்செய்ய பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக-பொருளாதார சக்திப்படுத்துதலை செறிவூட்டுவதன் ஒரு பகுதியாக சமுதாய முன்னேற்றத்திற்கான பரிபூரணமான திட்டத்திற்கு இக்கூட்டத்தில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளில் இதன் ஒரு பகுதியாக சிறப்புத் திட்டங்களும், நிகழ்ச்சிகளும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் விரிவான ஆய்வு நடத்திய பிறகு சிறப்பு ப்ராஜக்டுகள் (வேலைத் திட்டம்) உருவாக்கப்படும்.
இம்மாதம் 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தேசிய பொதுமக்கள் ஆரோக்கிய வாரம் கடைப்பிடிக்கப்படும் எனவும் பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஆரோக்கியம், சுத்தம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகள், யோகா வகுப்புகள், ஃபிட்னஸ் முகாம்கள், சுத்தம் தொடர்பான நிகழ்ச்சிகள், ஆரோக்கிய விழிப்புணர்வு மடக்கோலைகள் விநியோகித்தல் ஆகியன உட்படுத்தியதுதான் இந்த பிரச்சாரம்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுக் கூட்டத்திற்கு அவ்வமைப்பின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தேசியப் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், டாக்டர் மஹ்பூப் ஷெரீஃப், முஹம்மது இல்லியாஸ், வி.பி.நஸ்ருத்தீன், முஹம்மது அலி ஜின்னா, அஃப்ஸல் பாஷா, உஸ்மான் பேக், ரியாஸ் பாஷா உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்