சனி, 3 ஜூலை, 2010

சவுதி அல்ஹஸா மாநகர தமுமுக பொதுக்குழு



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சவுதி அரேபியா அல்ஹஸா மாநகர பொதுக்குழு கூட்டம் மாநகர தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை மார்க்க அரங்கம், சமுதாய அரங்கம் - அரசியல் அரங்கம் என பிரிவுகளாக நடைப்பெற்றது தலைமையுரையாற்றி பேசிய தமுமுக மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக விளங்கும் தமுமுக பணிகள் இன்னும் சிறப்பாக நடைப்பெற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து வரவேற்புரையாற்றிய சகோ. லால்பேட்டை அமானுல்லாஹ் தனது உரையில், வெளிநாட்டு வாழ்க்கையில் பொருள் ஈட்டுவது மட்டுமே ஒரே குறிக்கோள் என்றில்லாமல், சமுதாயத்திற்கான தேவைகளில் ஒவ்வொருவர்களின் பங்களிப்பினையும் தனது உதவும் கரங்களை கொண்டு அழுத்தமாக நல்கி வரும் இயக்கம் தமுமுக தான் என்று குறிப்பிட்டார்.

மார்க்க அரங்கத்தில் முதல் நிகழ்ச்சியாக, “தியாகம் – ஓர் இஸ்லாமிய பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றிய மவ்லவி. அப்துல் ஹக் ஜமாலி, மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான், தியாகம் என்பதே இங்கே சுயநலன் சார்ந்து தான் இருக்கிறது, இந்த உலகில் செய்யப்படும் தியாகங்கள் என்ற பெயரில் செய்யப்படும் தியாகங்கள் எல்லாமே தியாகம் அல்ல. தியாகம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகவே வாழ்ந்தவர்கள் ஸஹாபாக்கள் தான் என்றார்.

தொடர்ந்து, இஸ்லாம் வலியுறுத்தும் சமத்துவம் – சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றிய தமுமுக அப்கேக் நகர பொருளாளர் சகோ. அப்கேக் அப்துல் மூமின், “இஸ்லாமியர்களிடையே தொழுகையில் இருக்கும் சமத்துவம், மற்ற விஷயங்களில் இல்லாமல் போனது ஏன்?” என்று வினா எழுப்பி அனைவர்களின் சிந்தனையும் தூண்டினார். மேலும் இஸ்லாம் வலியுறுத்தும் கொள்கைகள் எல்லாம் பின்பற்றுவதற்காக தான், புறக்கணிப்பதற்காக அல்ல என்றும் வலியுறுத்தினார்.

மார்க்க அரங்கின் நிறைவுப் பகுதியாக ஒளுச் செய்வது எப்படி என்று செயல் விளக்கப் பயிற்சியினை தமுமுக அல்ஹஸா மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ செய்து காட்டினார். தொடர்ந்து உறுப்பினர்களும் ஒளுச் செய்வது குறித்து சிறப்பாக செய்து காட்டினர்.

ஜும்ஆ பேருரை நிகழ்த்திய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி, மறுமையில் சுவனத்தில் நுழைவது மட்டுமே வெற்றி, சுவனத்தில் நுழைபவர்களே வெற்றியாளர்கள் என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவுச் செய்தார்.

உணவு இடைவேளைக்கு பிறகு கூடிய இரண்டாம் அமர்வில் சிறப்புரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் சகோ.அப்கேக் அப்துல் அலீம், தனது உரையில், “ இந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு அடிப்படையே குர்ஆன் – ஹதீஸ் தான். இன்று தமிழகத்தில் சமுதாய மக்களிடையே இருக்கும், பாதுகாப்பு உணர்வு, தமுமுக துவங்கப்படுவதற்கு முன் இல்லை என்றார்.

நமக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக ஆட்சியாளர்களின் கவனத்தினை ஈர்ப்பதற்காக போராட்டம், மறியல், தர்ணா போன்ற அறவழி போராட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை, ஒருவர் தவறாக கைது செய்யப்பட்டால் நீதிமன்றங்களை அணுகுவது எப்படி, காவல்துறை - அரசு அதிகாரிகளை அணுகுவது எப்படி போன்ற அடிப்படை விஷயங்களை கூட மக்கள் தெரிந்திராமல் இருந்தனர். அல்ஹம்துலில்லாஹ், தமுமுக-வின் வருகைக்கு பிறகே மக்கள் இதுப்போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டனர்.

வாழ்வில் தன்னுடைய வறுமையை எதிர்த்து போராடும் அதேவேளையில் சமுதாயத்திற்காக தமிழ்நாட்டில் களத்தில் நின்று போராடி இரத்தம் சிந்தவும் தயாராக இருக்கும் போராளிகளின் உழைப்பினை வெளிநாடு வாழ் தமிழர்களாகிய நாம் பெரிதும் மதித்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

நம் சமுதாய அக்கறை இல்லாமல் சுயநலவாதிகளால் கொல்லப்பட்டு உயிரிழந்தவர்கள் எல்லாம் நம் சொந்தம் தான். அவர்களுக்கு உதவுவது நமது கடமை என்றார். வருங்கால தலைமுறை நிம்மதியாக இருக்க தமுமுக-வின் செயல்பாடுகளே காரணம் என்று குறிப்பிட்டு , அனைவர்களின் சிந்தனையையும் தூண்டி உரையினை நிறைவுச் செய்தார்.

“அரசியல் அரங்கில் நிறைவுரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி,. ம.ம.க-வின் ஒவ்வொரு அசைவும் மற்ற கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

கல்வி கற்பதற்கு இஸ்லாமியர்கள் லாயக்கு இல்லை என்று ஆதிக்க சக்திகளால் செய்யப்பட்டிருந்த தப்பான கற்பிதம் நெல்லை மாணவியின் ஜாஸ்மின் செய்த சாதனை மூலம் நொறுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி, அதிகாரம் எல்லாம் நம்மிடையே வருவதற்கு நிறைய ஆட்சிப் பணி அதிகாரிகள் உருவாக வேண்டும், அதற்காக தமுமுக கடுமையாக உழைக்கிறது.

தமுமுக-வின் செய்தித்தாளான மக்கள் உரிமை விற்பனையில் தொய்வு ஏற்பட அனுமதிக்க கூடாது, விற்பனையை அதிகரிக்கும் பொறுப்பு ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் உண்டு.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான இயக்கம் என்று இல்லாமல் சமூகம் தாண்டிய சேவைகளை புரிவதில் ம.ம.க. முன்ணணியில் இருக்கிறது என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவு செய்தார்.

இறுதியாக சுபஹான் நன்றியுரையாற்றினார். பொதுக்குழு கூட்ட அரங்க ஏற்பாடுகளை குன்னம் ராஜ் முஹம்மது, ஆயங்குடி அப்துஸ் ஸலாம் ஆகியோரும், உணவு ஏற்பாடுகளை கொள்ளிடம் அப்துல் ரஹ்மான், கந்தகுமாரன் அமானுல்லாஹ், இராஜகெம்பீரம் சிக்கந்தர், பாட்சா பின்னத்துர் முஹம்மது ரஃபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

லண்டன் உள்ளிட்ட விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கேனர்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

லண்டன்:விமான நிலையங்களில் முழு உடல் பரிசோதனை ஸ்கேனர்களை பயன்படுத்தினால் பயணிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.இது குறித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கதிரியக்கவியல் ஆராய்ச்சி மையத் தலைவர் டேவிட் பிரென்னர் கூறியிருப்பதாவது: 'விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட உள்ள முழு உடல் ஸ்கேனிங் கருவிகளிலிருந்து வெளியேறும் எக்ஸ்-ரே கதிர்கள் உடலுக்கு தீமை விளைவிக்கக் கூடியது. சாதாரணக் கருவிகளை விட இந்த வகை ஸ்கேனர்கள் 20 மடங்கு கதிரியக்கத்தை வெளிப்படுத்தக் கூடியன.

குறிப்பாக குழந்தைகள் இந்த கதிரியக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவர். ஸ்கேனர்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம் காரணமாக தோல் புற்றுநோய் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற முழு உடல் பரிசோதனை ஸ்கேனர்களை பயன்படுத்துவதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்து, அதற்கேற்ப கருவியை வடிவமைப்பது நல்லது என்று டெய்லி மெயிலில் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த, உலக நாடுகள் முயற்சி செய்து வரும் வேளையில் பிரென்னரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ததாக அமைந்துள்ளது.

ஹிந்து தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்திய அரசு: இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக தெரிகிறது.

பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றமும், மாநில அரசும் போட்டி போட்டிக் கொண்டு பாதுகாப்பு அளிப்பதை கண்டுள்ளீர்களா? ஆம்! ஆர்.எஸ்.எஸ்ஸை தலைமையாக கொண்டு பல ஹிந்துத்துவ தீவிரவாதிகள் இந்தியாவில் செயல்பட்டுவருகின்றதை நாம் அறிவோம். மலேகோன், அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், மார்கோவா, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் என பல குண்டுவெடிப்புகள் இவ்வமைப்புகளால் நிகழ்த்தப்பட்டு,நீதிவிசாரனைகளில் இவ்வமைப்புகளின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

தொண்டர்கள் கைது செய்யப்பட்டதும், எங்கு நம் வேடம் அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தில், கைது செய்யப்பட்ட அத்தொண்டர்களை கழட்டிவிடும் முயற்சியில் அவ்வமைப்புகள் களமிறங்கின. அதன்படி, இக்குண்டுவெடிப்பில் சிக்கியவர்களுக்கும் தங்கள் இயக்கங்களுக்கும் சம்மந்தமே கிடையாது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தனர்.

இன்னும் ஒரு படி மேலே சென்று, இது அவர்களின் தனிப்பட்ட கொள்கை என்றும் அவ்வமைப்புகள் கைகழுவின. நம் தீவிரவாத இயக்கங்களை தடைசெய்துவிடுவார்கள் என்று பயந்து, அத்தொண்டர்களுக்கு எந்த விதமான ஆதரவோ அல்லது உதவியோ நாங்கள் அளிக்கமாட்டோம் என்றும் இவ்வமைப்புகள் சூளுரைத்தனர்.

இச்செய்தியை அறிந்த தொண்டர் பயங்கரவாதிகள் கொதிப்படைந்தனர். தங்கள் வாழ்கையை சீரழித்த தலைவர்களை கொலைச் செய்யப்போவதாகவும் தொண்டர் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகின.தம் சக பயங்கரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருவதைக் கண்டு பயந்து போன பயங்கரவாத தலைவன், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றத்தை அணுகினான்.

மனுவை விசாரித்த நீதிமன்றமோ, மாநில அரசை இது தொடர்பாக கேள்வி கேட்க, நீதிமன்றமும், மும்பை மாநில அரசும் அப்பயங்கரவாதத் தலைவனுக்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர். சிறையில் இருக்கும் தன் சக பயங்கரவாதிகளினால் பயங்கரவாத தலைவனுக்கே இந்த நிலைமை என்றால், இந்த ஒட்டுமொத்த பயங்கரவாத கும்பல்களின் மூலம் நம் சமுதாயத்திற்கு ஏற்படும் நிலை?

பயங்கரவாதிகள் மனுதாக்கல் செய்தால் ஓரிரு நாட்களில் விசாரித்து தீர்வுகாணும் நீதிமன்றமும், மாநில மத்திய அரசுகளும், சாதாரண மக்களின் குறைகளைத் தீர்க்க காலம் தாழ்த்துவது ஏனோ? ஊழல் கறை படிந்த அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு அழிக்கும் வழக்கம் மாறி, இன்று பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருவது! நம் இந்தியா ஒளிர்கிறது என்பதற்கு இது தான் காரணமோ என்னவோ? கடைசி வரை அந்த தீவிரவாதியின் பெயரையே சொல்லவே இல்லையே என்ற வாசகர்களின் எதிர்பார்ப்பு புரிகிறது. ஆம்! தனக்கு தன் தொண்டர் சகாக்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டது ஆர்.எஸ்.எஸ் தலைவர் 'மோகன் பகவத்' தான்.

வியாழன், 1 ஜூலை, 2010

இதுதான் மேலை நாட்டு கலாச்சாரம்:தோழியை மணந்த ஐஸ்லாந்து பெண் பிரதமர்!

ரெய்க்ஜாவிக்: ஓரினச் சேர்க்கையாளரான ஐஸ்லாந்து பெண் பிரதமர் தன் நீண்ட கால பார்ட்னரை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.கடந்த 2009ம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டின் பெண் பிரதமரானவர் ஜோகன்னா சிகுர்டார்டோடிர் (68). இவரது பெண் நண்பர் ஜோனினா லியோஸ்டோடிர். இருவரும் தொடக்கத்தில் நண்பர்களாக இருந்து பின்னர் ஓரின சேர்க்கையாளராக மாறினர்.

இவர்கள் திருமணம் செய்து கொள்ள அந்நாட்டு அரசியல் சட்டம் இடம் தராத நிலையில் இருவரும் அதிகாரபூர்வமின்றி ஒன்றாக வாழ்ந்தனர்.இந் நிலையில், கடந்த 12ம் தேதி ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஐஸ்லாந்து நாடாளுமன்றம் அனுமதி தந்து சட்டம் இயற்றியது.இதையடுத்து நேற்று பிரதமரும் அந்தப் பெண்ணும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர்.தனது 50வது வயதில் கணவரைப் பிரிந்த ஜோகன்னா அதன் பின்னர் தோழி ஜோனினாவுடன் வாழ ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போதைய திருமணம் மூலம் உலகிலேயே முதல் ஓரின சேர்க்கை பிரதமர் என்ற பெயரை ஜோகன்னா பெற்றுள்ளார்.

கொல்கத்தாவில் 5 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்: 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கைது

கொல்கத்தாவில் 5000 துப்பாக்கித் தோட்டக்களை வைத்திருந்தது தொடர்பாக 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த தோட்டாக்கள் அனைத்தும் இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை ஷோபா பஜார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வேகமாக வந்த காரை போலீஸ்காரர் ஒருவர் மடக்கி பிடித்தார். இருப்பினும், அந்த காரில் பயணம் செய்த திலிப் மிஷ்ரா, ராஜேஷ் குமார் சர்மா மற்றும் ராம் பர்வேஷ் பிரசாத் ஆகியோர் தப்பியோடி விட்டனர்.

இந்நிலையில், காரை பரிசோதித்ததில் அதில் 5000 துப்பாக்கித் தோட்டக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் மிஷ்ரா உள்ளிட்ட மூவரும் மத்திய கொல்கத்தா பகுதியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மகேஷ் குமார் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு துப்பாக்கி விற்பனையாளர். இந்த தோட்டாக்கள் அனைத்தும், பூனாவின் ஹிர்கா பகுதியில் உள்ள இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் கடந்த மார்ச் மாதத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.இது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்திற்காக இந்திய ஆயூத தொழிற்சாலையில் தாயரிக்கபட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2013 க்குள் நிலவில் முஸ்லிம்கள் நிறுவும் அறிவியல் ஆய்வுக்கூடம்

மனாமா:நிலவில் அறிவியல் ஆய்வுக்கூடம் ஒன்றை முஹம்மத் 1 என்ற பெயரில் முஸ்லிம்கள் 2013க்குள் நிருவ திட்டமிட்டிருப்பதாக, விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய எதிர்மறையான கருத்துகளுக்கு அறிவியல் பூர்வமாக பதில்கொடுக்கும் விதமாக ஆய்வுக்கூடத்திற்கு முஹம்மத் என்று பெயரிடப்பட்டுள்ளது" என்று ராதோஅன் ஃபகிர் என்ற,மொரோக்கோ வம்சாவழியான, கனடா விஞ்ஞானி கூறினார்.

"முஹம்மத் 1ன் திறனை ஊக்கப்படுத்தும் விதமாக 2015ல் முஹம்மத் 2ஐ ஏவுவோம். இறைத்தூதர் (ஸல்) அவர்களை நிந்தித்து மனவேதனை தந்தவர்களின் விளைவு என்னவென்று அறிய விரும்புகிறோம், இதன்மூலம் நிந்தித்தவர்களை விட நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெறுமதியை நெருங்குவோம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முக்கியத்துவத்தை உலகுக்கு நினைவூட்டும் விதமாக இந்த ஆய்வுகூடம் செயல்படும்" என்று கத்தாரின் அல் அரபு பத்திரிக்கையில் கூறியுள்ளார்.

முதற்கூடத்திற்கு 100 மில்லியன் டாலர் செலவாகும் எனவும், இரண்டாம் கூடத்திற்கு 1 பில்லியன் டாலர் செலவாகும் எனவும், இந்த நிதியை இஸ்லாமிய உலகம் தரும் என்றும் ஃபகிர் கூறியுள்ளார்.

மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பஜார் திடலில் 27.06.2010 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு ம.ம.க மாவட்டப் பொருளாளர் ரசூல் மைதீன் தலைமை வகித்தார். பகுதிச் செயலாளர் காஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா, துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, மாநில துணைச் செயலாளர் காதர் மைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ம.ம.க மாவட்டச் செயலாளர் மைதீன் சேட்கான், தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், மாவட்டச் செயலாளர் உஸ்மான் கான், மாவட்டப் பொருளாளர் புளியங்குடி செய்யதலி, துணைத் தலைவர் சர்தார் அலிக்கான், ம.ம.க துணைச் செயலாளர் நெயினார், சுல்தான் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். பகுதி பொருளாளர் ரப்பானி நன்றியுரை கூறினார்.

நகர தமுமுக தலைவர் கே.எஸ். காசிம் பிர்தௌஸி துவக்க உரையாற்றினார். அப்பாஸ் ஹில்மி திருக்குர்ஆன் விரிவுரையாற்றினார். நகர தமுமுக செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் அப்துல் அஜிஸ், நகர துணை தலைவர் அப்துல் வாஹித், பாதுஷா, மகபூப் ஜான், ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.