சனி, 4 ஏப்ரல், 2009

ஜனநாயகம், மதச்சார்பின்மை இவ்விரண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரு பெரும் தூண்களாகும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அனைவருக்கும் அவரவர்களின் மத நம்பிக்கைகளின்படி செயல்பட்டுக் கொள்வது நமது ஜனநாயகம் வழங்கும் அடிப்படை உரிமையாகும்" - உலக அளவில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்புடன் வைக்கும் சட்டத்தின் மிக முக்கிய நிபந்தனைகளான இவை இரண்டும் துரதிஷ்டவசத்தால் பெரும்பாலான சமயங்களில் வெறும் ஏட்டில் மட்டும் வைத்து அழகு பார்க்கும் வரிகளாக மாறிப்போகின்றன.

அனைவருக்கும் சமமான நீதி நடைமுறை உறுதிப் படுத்தப்படுவதே ஜனநாயகம் தழைப்பதற்கும் மக்கள் அமைதியாக வாழ்வதற்குமான அடிப்படை காரணிகளாகும். ஆனால், நம் நாட்டைப் பொருத்தவரை நீதி என்பது பணம், பதவியுடையவர்களுக்கு ஒரு விதமாகவும் ஏழைகளுக்கு வேறு விதமாகவுமே உள்ளது. அதனாலேயே காஞ்சி காம கோடி, அத்வானி, மோடி, ஜெயலலிதா, ஹர்ஷத் மேத்தா போன்ற இன்னபிற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அராஜகம், மோசடி போன்றவற்றில் ஊறிப்போனவர்கள் உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமாக எவ்வித பயமும் இன்றி வலம்வருகின்றனர். அதேவேளை, சின்னஞ்சிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சாதாரணமானவர்கள் மீது மட்டும் சட்டம் தனது முழுவலிமையைப் பிரயோகிக்கின்றது.

சமநீதி விஷயத்தில் வலியவன், எளியவன் என்ற பாரபட்சம் பார்க்கும் நீதி, முஸ்லிம்கள் என்று வரும் பொழுது அத்தகைய கருணை வாசலையும்கூட அடைத்து விடுகின்றது.

அநியாயம் செய்திருந்தாலும் வலியவனுக்குச் சாதகமாகவும் அநீதி இழைக்கப் பட்டிருந்தாலும் எளியவனுக்குப் பாதகமாகவும் வளைந்து கொடுக்கும் இத்தகையச் செயலைளை "நீதி தேவன் மயக்கம்" என்ற பெயரில் அறிஞர் அண்ணா ஒரு நாடகம் எழுதினார். 1954ஆம் ஆண்டு மேடையில் அரங்கேறிய அவரது நாடகம் இப்போது(ம்) அரங்கேறிக் கொண்டிருப்பது நமது நீதிமன்றங்களில்!

இந்திய விமானப்படை ஊழியர் அன்ஸாரீ அஃப்தாப் அஹ்மது என்பவர் சீக்கிய ஊழியர்களுக்கு வழங்கப் பட்டு நடைமுறையிலிருக்கும் தாடி வளர்த்துக் கொள்ளும் மத உரிமையைத் தனக்கும் அளிக்க வேண்டும் எனக் கேட்டுத் தொடர்ந்த வழக்கில், இந்திய விமானப்படை வழிகாட்டு நெறிமுறைகள் 2003இன்படி "சீக்கியர்களுக்கு வழங்கும் உரிமையை 2002ஆம் ஆண்டுக்குப்பிறகு விமானப்படைக்குத் தேர்வு செய்யப் பட்ட முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது" என்று கடந்த ஆண்டு பஞ்சாப்/ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்றவர்க்கு வளைந்தும் முஸ்லிம் என்றால் நிமிர்ந்தும் நிற்கும் சட்டம் இந்திய விமானப்படைக்கு மட்டும் சொந்தமானதன்று.

மத்தியப்பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்திலுள்ள சிரஞ்ச் நகரில் இயங்கி வரும் 'நிர்மலா கான்வெண்ட்' என்ற பள்ளியில் தொடக்கம் முதல் பத்தாம் வகுப்புவரை முஹம்மது ஸலீம் என்ற முஸ்லிம் மாணவர் கல்வி பயின்று வந்தார். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது அவருக்குத் தாடி வளர்ந்து விட்டது. "தாடியை மழிக்காமல் பள்ளிக்கு வருவதாக"க் கூறிப் பள்ளியின் நிர்வாகி ப்ரின்ஸிபால் தெரஸா மார்ட்டின், மாணவர் ஸாலிமைப் பள்ளியிலிருந்து நீக்கினார். அதை எதிர்த்து, தன்னைத் "தாடி வளர்த்துக் கொள்ளப் பள்ளி அனுமதிக்க வேண்டும்" எனக் கோரி முதலில் பள்ளிக்கு முறைப்படி விண்ணப்பித்தார். பள்ளி நிர்வாகம் மறுதலித்துவிடவே, உயர்நீதி மன்றத்தில் மாணவர் ஸலீம் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

"முழுமையாக மழித்துக் கொண்டு வரவேண்டும்" என்ற பள்ளிச் சட்ட-திட்டத்தினைத் தளர்த்தக் கோரி ஸலீம் சமர்ப்பித்த மனு உயர்நீதி மன்றத்தில் கடந்த 30.12.2008இல் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடாப் பிடியாக, "தாடி வளர்ப்பது என்னுடைய மத உரிமை. மதசார்பற்ற இந்தியாவில் வாழும் குடிமகனுக்கு (சட்டப் பிரிவு 25இன்படி) தன் மத நம்பிக்கைப்படி வாழ்வதற்கான உரிமையை மறுக்கக் கூடாது. எனவே தாடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும்" எனக் கோரி, உச்சநீதி மன்றத்துக்கு வழக்கைக் கொண்டு சென்றார்.

ஸலீம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி இரவீந்திரன் தலைமையிலான அமர்வு நீதிமன்றம் விசாரித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாணவர் ஸாலிமுடைய கோரிக்கையை, அவர் பயிலும் பள்ளியின் சட்ட-திட்டங்களை மட்டும் காரணம் காட்டி மறுதலித்திருந்தால் பிரச்சினை பெரிதாகி இருக்காது.

ஆனால், சட்டம் கற்றுத் தேர்ந்ததாகச் சொல்லப் படும் ஒரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு என்பவர், "தாடி வைப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்" என்ற காரணம் கூறி கடந்த திங்கட்கிழமை (30.3.2009) வழக்கைத் தள்ளுபடி செய்து, தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் வெறும் 30 ஆண்டுகால வரலாறுடைய தாலிபானுக்கும் என்ன சம்பந்தம்? நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கே வெளிச்சம்!

தாலிபான் என்ற பெயரே அறியப் படாத ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் முஸ்லிம் ஆண்கள் தாடி வளர்த்தும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தும் வருகின்றனர். தாடி இல்லாத ஆண் சீக்கியர் இல்லை என்னும் அளவுக்கு சீக்கிய ஆண்கள் தாடியோடுதான் இருப்பர். தாடி வளர்த்திருப்பவரெல்லாம் தாலிபான் அமைப்பின் உறுப்பினரா? நம் பிரதமரை நீதிபதி கட்ஜு ரொம்பத்தான் தாக்குகிறார்!

"தாலிபான்களை நம் நாட்டில் அனுமதிக்க முடியாது" என்று கூறியதோடு, "நாளைக்கு ஒரு (முஸ்லிம்) மாணவி, பர்தா அணிந்து கொண்டு பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கலாம். நாம் அதை அனுமதிக்க முடியுமா?" என்று நீதிபதி கட்ஜு அறிவு(?)ப்பூர்வமான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

"நாட்டின் மதசார்பற்ற நிலைபாட்டைப் பயன் படுத்திக் கொண்டு இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது" எனவும் நீதிமன்றத்துக்குள்ளேயே நீதிபதி ஜோக்கடித்திருக்கிறார்.

"சீக்கியர்களுக்குத் தாடி வளர்த்துக் கொள்ளவும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும்போது, என்னை மட்டும் தாடியை மழிக்க நிர்பந்திப்பது பள்ளி நிர்வாகத்தின் தெளிவான இரட்டை நிலைபாடு" என ஸலீம் வாதித்தார்.

ஆனால் பயனில்லை. "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30ஆம் பிரிவின்படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், தனியாக சட்டம் உருவாக்கிக் கொள்வதற்கு அனுமதியுள்ளது. அவற்றைப் பின்பற்றுவதற்கு இயலாது எனில், ஸலீம் வேறு ஒரு பள்ளியைத் தேர்வு செய்து கொள்ளட்டும்" எனவும் நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.

இந்நாட்டில் ஒரு சமுதாயத்திற்கு அனுமதிக்கப்படும் நீதி, அதே வடிவில் பின்பற்றுவதற்கு முஸ்லிம்கள் எனில் மறுக்கப்படுகிறது. இது "இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் மத அடிப்படைகளைப் பின்பற்றுவதற்கான உரிமைகளுக்கு" முரணான நிலைபாடு எனில், வழக்கிற்குத் தொடர்பில்லாத வகையில் இஸ்லாமிய அடிப்படைகளைச் சம்பந்தமில்லாத தனிப்பட்ட குழுக்களோடு தொடர்பு படுத்தி இழிவுபடுத்துவது இந்திய நீதித்துறைக்கு அவமானத்தைப் பெற்றுத்தரும் செயலாகும். அனைவரையும் சமமான கண்ணோட்டத்தோடு அணுகவேண்டிய, நாட்டின் உன்னத பீடத்தில் அமர்ந்திருக்கும் பொறுப்பான அதிகாரியின் சட்டமீறலுமாகும்.

"தாடி வளர்ப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்; இந்தியாவில் தாலிபானிஸம் வளர்வதை அனுமதிக்கமுடியாது" என்று உண்மையைப் பொய்களுடன் கலந்து உண்மையைப் பொய்யாக்குவதையும் பொய்யை உண்மையாக்குவதையும் அதனை வைத்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதையும் தங்களது பாணியாகக் கொண்டுள்ள ஹிந்துத்துவத்தின் ஒரு மோடி, அத்வானி வகையறாக்களின் வாயிலிருந்து இத்தகைய சொற்கள் உதிர்ந்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், அதுவே நாட்டின் உன்னத பீடத்தை அலங்கரிக்கும் ஒரு நீதிபதியின் வாயிலிருந்து வருவதென்றால்.....?

நீதிபதி கட்ஜுவின் அறியாமைக் கருத்துகளுக்கு எதிராகவும் நீதியின் இரட்டைமுக நிலைபாட்டிற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்திய நீதித்துறையின் மீது இப்பொழுதும் நம்பிக்கை இழக்காத முஸ்லிம்கள் என்ன செய்யலாம்? என்று சிந்தித்தோமெனில், நமக்குக் கிடைக்கும் விடை, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் 'தாலிபான்' பேச்சை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பதே.

"நான் ஒரு மதசார்பற்றவன்" என்று நீதிபதி கட்ஜு கூறிய தன்னிலை விளக்கத்தில் ஓர் உண்மை பொதிந்திருக்கிறது.

தலைப்பை இன்னொரு முறை படித்துக் கொள்ளவும்!

ஒற்றைக்காலில் மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தென்காசி 9 வது வார்டில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாது இருப்பதால் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனித நேய மக்கள் கட்சியினர் தென்காசி முனிசிபாலிட்டி முன்னால் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்திகள் : நெல்லை உஸ்மான்

கேரளாவை உலுக்கியெடுக்கும் மதானி ஜுரம்


கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி மீண்டும் பரபரப்பாக செய்திகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறார்.


கேரள காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் லீக்கை மலைபோல் நம்பிக் கொண்டிருக் கிறது. ஆனால் முஸ்லிம் லீக் முன்பைப் போல் செல்வாக்குடன் இல்லை. பனாத் வாலா போன்ற பாரம்பரியம் மிக்க தேசியத் தலைவர் இல்லாததால் கிட்டத் தட்ட காலி பெருங்காய டப்பா என்று சொல்லும் நிலையிலேயே முஸ்லிம் லீக்கின் நிலை இருக்கிறது.


காங்கிரஸின் நிலை இவ்வாறிருக்க, முஸ்லிம் லீக்கின் முக்கியக் கோட்டையான பொன்னானியைக் கைப்பற்ற இடதுசாரிகள் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக மார்க்சிஸ்டுகளின் ஆர்வம் காங்கிரஸ்லிமுஸ்லிம் லீக் கூட்டணியினரை ஏகக் கடுப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பொன்னானி தொகுதியில் முன்னாள் கல்லூரி முதல்வரான ஹுசைன் ரண்டதானி என்னும் சுயேச்சை வேட்பாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மவ்லவி அப்துல் நாசர் மதானியும் ஆதரிக்கிறார்கள். நிலைமை தலைகீழ் ஆகும் போல் தெரிந்தது.


பொன்னானி தொகுதியில் முஸ்லிம் லீக் தோற்கும். காங்கிரஸ் கூட்டணி பலவீனம் அடையும். இவை அனைத்தை யும் விட மதானி அரசியல் சக்தி மிகுந்தவராக மாறிவிடுவார் என அஞ்சிய சங்பரிவார் கூடாரமும் தங்கள் பங்குக்கு மதானி மீது அவதூறுக் கணைகளையும் அள்ளி வீசின.


பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு மதானிக்கு தீவிரவாத தொடர்பு இருப்பதாகக் கூறினார்.


முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது அவதூறு சுமத்துவது பாஜகவின் சித்தாந்த முடிவாக இருக்கிறது. அதனால் பாஜக குறித்து யாரும் வியப்படைய மாட்டார்கள்.


ஆனால் காங்கிரசும் அவ்வாறே மதானி மீது அவதூறு சேற்றை அள்ளி வீசியது. இதைவிட வேதனையான விஷயம் என்னவெனில், முஸ்லிம் லீக்கும் கூட மதானி மீது தீவிரவாத அவதூற்றுச் சேற்றை அள்ளி வீசியது. இது கேரள மக்கள் மனதில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


இதனிடையே தன் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு மதானி சுடச்சுட பதில் அளித்துள்ளார்.


பொன்னானி தொகுதியில் மட்டுமல்ல, இடதுசாரிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கும் மதானி தனது மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவை தெரிவித் திருக்கிறார். வடகரா தொகுதியில் போட்டி யிடும் இடதுசாரி கூட்டணி கூட்டணி வேட்பாளர் சதி தேவியின் வேட்பு மனு தாக்கலின் போது மதானி செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார்.


நவ்ஷாத் என்பவரையும், மணி என்ற யூசுப் என்பவரையும் மதானியோடு தொடர்புபடுத்தி பேசப்பட்ட அவதூறுக்கு மதானி பதில் அளித்தபோது, நவ்ஷாத் என்பவரை தீவிரவாதி போல் சித்தரித்தனர்.


இதே நவ்ஷாத் மத்திய அமைச்சர் வயலார் ரவியுடனும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் குஞ்சாலிக் குட்டியுடனும் சேர்ந்து இருப் பதைப் போன்று புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டார்.


இவர்களோடு இருக்கும் போது ஒன்றும் சொல்லாதவர்கள் தன்னுடனும் இடதுசாரிகளுடனும் சேர்ந்தாற் போன்ற ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு எங்களை மட்டும் தீவிரவாத முத்திரைக் குத்துவதா? என ஆவேமாக பதிலடி கொடுத்தார்.


மணி என்ற யூசுப் என்பவரையும் தன்னோடு தொடர்புபடுத்தி அவதூறு சுமத்தப்பட்டது. மணி என்ற யூசுப் கோவை சிறையில் மதானி இருந்தபோது அவரோடு கோவை சிறையில் இருந் தவர். தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகனான மணி, இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக சிறைவாசக் காலத்தில் ஏற்றுக் கொண்டவர். இவர் மிகவும் ஏழையாக இருந்ததாலும், கொச்சியில் உள்ள தனது வீட்டில் தங்கிக் கொள்ளுமாறு மதானி கூறியிருக்கிறார். அங்கு தங்கிய மணி என்ற யூசுப் சிறிது காலத்தில் வெளியேறினார் என்றும் கூறிய மதானி தன் மனைவி மீது கூறப்படும் குற்றச்சாட்டையும் மறுத்தார். தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை மதானி ஆதரவாளர்கள் தீ வைத்ததாகவும், அது மதானியின் மனைவி சூஃபியாவின் கட்டளைப் படியே நடந்ததாகவும் குற்றம்சாட்டி அவதூறு சுமத்தப்பட்டது. ஆனால் பேருந்து எரிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மஜீத் என்பவரும் அவரது சகோதரரும் செய்தியாளர்கள் கூட்டத் தைக் கூட்டி உண்மையை உடைத் துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் தங்க ளைக் கடுமையாகத் தாக்கியதால் மதானி மனைவியை பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டியதாக அவர்கள் தெரிவித் துள்ளனர்.


இவை எல்லாவற்றையும் வைத்து விளாசிய மதானி, உள்துறை அமைச் சரிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார். ''இறைவனின் மீது ஆணையாக... தனக்கு எந்தவித தீவிரவாதத் தொடர்பும் கிடை யாது. தன்னை சிறையில் வைத்தால்தான் நாட்டில் அமைதியான தேர்தல் நடத்த வேண்டுமெனில், தான் சிறை செல்லத் தயார்'' என்றும் மதானி கூறினார்.

வியாழன், 2 ஏப்ரல், 2009

மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி, ஏப். 1: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் மனித நேய மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஒற்றைக் காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட 9-வது வார்டு பகுதியில் மவுண்ட்ரோடு சாலையை புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக தொடங்கக் கோரியும், இப் பகுதியில் தெருவிளக்குகள் நீண்ட நாள்களாக எரியாததைக் கண்டித்தும், புதுப்பிக்கப்பட்ட, சுகாதார வளாகத்தைத் திறக்க வலியுறுத்திம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர்மன்ற உறுப்பினரும் கட்சியின் ஒன்றியச் செயலருமான முகம்மது மைதீன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட துணைத் தலைவர் தங்கப்பா, கட்சியின் மாவட்ட துணைச் செயலர் சலீம், நகரச் செயலர் சலீம், பொருளாளர் சுலைமான் சேட், துணைச் செயலர்கள் சாகுல், திவான்ஒலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முடிவில் நகராட்சி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

நன்றி: தினமணி

செயற்குழுவில் முடிவுகள் அறிவிக்கிறது மனிதநேய மக்கள் கட்சி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இஸ்மாயில் அவர்கள் வெளியிடும் அறிக்கை:


மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் உயர்நிலை குழு, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைபாடு குறித்து இறுதி முடிவெடுத்திருக்கிறது.


எடுக்கப்பட்ட முடிவு குறித்து எதிர்வரும் 04.04.2009 அன்று சென்னையில் கூடும் மனிதநேய மக்கள் கட்சியின் முதல் செயற்குழுவில் அறிவிக்கப்பட இருக்கிறது.


இம்முடிவு தமிழக அரசியலின் போக்கை மாற்றியமைக்கும் என ம.ம.க.வின் உயர்நிலை குழு அறிவித்திருக்கிறது.

புதன், 1 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சி அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்

தமிழக அரசியலில் அதிர்வு களை ஏற்படுத்தியிருக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் முன்பு பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் மற்றும் கே. அப்துல் சலாம் (தென் சென்னை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர்) ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் நேர்காணலில் கலந்து கொண்டனர். அதன்பிறகு கடந்த 27.03.09 அன்று மனிதநேய மக்கள் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்து அறிவித்திருக்கிறது.

21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் ஒரு கண்ணோட்டம்

டாக்டர் A.P. முஹம்மது அலீ Ph.D. IPS(Retd)

வானத்தையும் பூமியையும் கடலையும் படைத்தது அதன் அதிசயங்களை நமக்கு குர் ஆனில் அல்லாஹ் காட்டியுள்ளான்.வானத்தின் கோளங்கள், அதன் செயல்பாடுகள், கடலுக்குள் புதைந்து கிடக்கும் அற்புதங்கள் பிரம்மிக்கவைப்பவையாகும். பூமி உருண்டை என்று உலக மக்களுக்கு எடுத்து இயம்பி,மனிதன்,மிருகம்,பறவை, பூச்சி போன்றவைகளுக்கு உணவினைக் கொடுத்து, மனிதனின் செயல்கள் அத்துமீறினால் அந்த பூமியினை பூகம்பத்தால் புரட்டிப்போடும் செயல்கள், சூறாவளியால்,கடல் சீற்றத்தால் அழிக்கும் பாடம்

குர் ஆன் கற்பிக்கிறது. மனித உடல் செயல்பாடுகள், மனதின் மாற்றங்கள், மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் போன்ற தகவலும் குர் ஆனில் இல்லாமலில்லை. அவை உண்மை இல்லை எனில் எப்படி சந்திரனில் முதல் காலடி வைத்த நீள் ஆம்ஸ்ட்ராங்கும், உலக குத்துச் சண்டை கொடிகட்டிப் பறந்த கிளேசியஸ் கிளே என்ற முஹம்மது அலியும் மற்றும் பல அறிஞர் இஸ்லாத்தை தழுவ முடியும். ஆகவே உலக மக்கள் இஸ்லாத்தை அனைத்துக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றால் மிகையாகாது.

இஸ்லாமிய சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் பல நடவடிக்கைகளை கையாள வேண்டும்

1) கல்வி

உம்மி நபியாக இருந்த பெருமானார் அவர்களுக்கு ஓதுக என்ற தாரக மந்திர பெட்டகமான குர் ஆணை இறக்கி அல்லாஹு அக்பர் என்ற அதிகாலை பாங்கை கீழை நாட்டில் ஆரம்பித்து மறுநாள் காலை பாங்கு மேலை நாட்டில் முடிய செய்துள்ளான் என்றால் ஏக இறை தத்துவ கல்வியினையின் மகிமையே என்றால் சாலபொருந்தும் சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை என்றது இஸ்லாம், வெளிநாடுகளுக்கு சென்று தான் பொருளீட்ட வேண்டும் என்பதில்லை, இருந்த இடத்திலிருந்தே பொருள் சேர்க்கும் E-பிசினஸ் என்ற வியாபார உக்தி உள்ளது, கம்ப்யூட்டர் இஸ்லாமியருக்கு புதிது அல்ல.

விப்ரோ சேர்மன் அசிம் பிரேம்ஜி தன் தந்தை கவனித்து வந்த எண்ணை தொழிலை விட்டு அமெரிக்கா நிறுவனமான IBM இந்தியாவை விட்டு வெளியேறிய போது அதன் இடத்தை நிறைவு செய்து பெருமை சேர்த்துள்ளார் என்றால் ஏன் நம்மால் முடியாது. ஒவ்வொரு குடும்பமும் ஒரு நல்ல பல்கலை கழகமனால் நிச்சயம் முடியும், முதலில் பெண் கல்விக்கு வித்திட வேண்டும்.

ஒரு பிராமின் குடும்பத்தில் தன் மகன் IIT யிலோ IIA மிலோ சேருவதர்கோ பயிற்சியினை எட்டாவது அல்லது ஒன்பதாவதிலோ ஆரம்பித்து விடுகின்றனர். ஏன் நாமும் நம் பிள்ளைகளுக்கு TOFEL, GRE, IELTS, CAT , போன்ற பயிற்சிகளை கொடுக்க கூடாது?

பெண் கல்விக்கு நாம் எப்போது முக்கியத்துவம் கொடுகிறோமோ அப்போது தான் நம் சமுதாயம் முன்னேற முடியும், கொஞ்சம் படித்தால் போதும் வளைகுடா நாடுகளில் சென்று தன் பிள்ளை நாலு காசு சம்பாதித்தால் போதும் என்று இருக்கக்கூடாது, அங்கு நம்மவர் படும் துன்பங்களை பெற்றோர் சென்று பார்த்தால் நிச்சயமாக தம் பிள்ளைகளை அனுப்ப மாட்டார்கள். இந்தியாவிலே ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் வருடத்திற்கு ஒரு கோடியே 18 லட்சம் என்பது எத்தனை முஸ்லிம்களுக்கு தெரியும்.

2) பள்ளி வாசல் ஒரு நூலகமாக வேண்டும்

ஒவ்வொரு பள்ளி வாசலிலும் மார்க்க சம்பந்தமான நூல்கள் இருப்பதினை காணலாம் ஆனால் அதனை படிப்பவர்கள் குறைவு தான். பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வீட்டுக்கு அல்லது வியாபாரஸ்தாபனங்களுக்கு செல்லாது பள்ளிவாசல் தின்னயே கத்தி என்றும் வெட்டி பேச்சில் ஆர்வமும் காட்டுவதை நிறுத்த வேண்டும், இமாம்கள் வருங்கால இளைஞர் மனதில் எழும் சந்தேகங்களை நீக்கும் ஆசானாக வேண்டும், அதற்கு இமாம்கள் நிறைய பொது அறிவு சம்பந்தமான விசயங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இளைஞர்கள் நஜ்ஜாஜ் கூட்டத்திற்கு பலியாவதை தடுக்க முடியாமல் போய் விடும். என்னுடைய கல்லூரி தோழன் அப்துர் ரஹ்மான் ஹாபிஸ் பட்டம் பெற்று, இமாமாக இருந்து கொண்டு பின்பு புது கல்லூரி உதவி முதல்வராகவும் பணிபுரிந்தார். எல்லா இம்மாம்களும் பள்ளி இறுதி ஆண்டு வரையிலாவது பொது அறிவு பெற்றிருக்க வேண்டும்.

3) அரசு வேலைகளில் ஆர்வம் காட்ட வேண்டும்

பெரும்பாலான முஸ்லீம் இளைஞர்கள் அரசு வேலைகளில் ஆர்வம் காட்டுவதில்லை, அரசு வேலைகளில் நமக்கு இட ஒதுக்கிடு கட்டாயம் என்ற நிலை வரும் போது அந்த சந்தர்பத்தை நழுவ விட கூடாது, ஏனென்றால் அரசு வேலைகளில் கீழ்க்கண்ட பலன்கள் பெறலாம்.

1 வேலை உத்திரவாதம்

2 பல்வேறு சலுகைகள், நிலம், வீடு, வாகன லோன்கள், பெற்று அதன் சொந்தகாரர் ஆகலாம்.

3 மருத்துவ சலுகைகள், குடும்ப பென்சன், வாரிசுக்கு வேலை, போன்றவைகள் பெறலாம்.

4 அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளான முதியோர் பென்சன், வேலை இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை, ஏழை பெண்களுக்கு திருமண உதவி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டா கிடைக்க செய்தல் போன்ற உதவிகளை செய்யலாம்.

5 இராணுவம், காவல் துறையினில் பணியாற்றினால் அப்பாவி முஸ்லீம் மக்கள் கொல்ல படுவதை, கோவையில் வீடுகள், வியாபார ஸ்தலங்கள் தீக்கிரையாகபடுவதை தவிர்கலாம்.

4) தற்காப்பு கலைகளை தெரிந்து வைத்தால்

ஜாதி வெறி நிறைந்த இந்நாளில், ஒவ்வொரு இஸ்லாமிய ஆண், பெண் என்ற வித்தியாசம் பாராது, சிலம்பம் , மல்யுத்தம், குத்துசண்டை, கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி எடுத்தால் தான் குஜராத் போன்ற கொலை வெறியர்களிடமிருந்து நம்மை காக்க முடியும். முன்னாள் மலேசியா பிரதமர் மஹாதிர் முஹம்மத் இஸ்லாமிய நாடுகள் வல்லரசாக அணு ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றது இக்காலத்தில் எவ்வளவு பொருத்தமானது.

5) அரசியலில் பங்கு

ஒவ்வொரு தேர்தலிலும் பல அரசியல் கட்சிகளுக்கு முதுகை கொடுக்கும் ஏணியாக இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறோம். நம்மவர் வழிய சென்று ஆதரவு கொடுக்கும் நிலை மாற வேண்டும். பா.ம.க கட்சி நிறுவனர் போராட்டம் நடத்தி 20 சதவிகித ஒதுக்கீடு பெற முடிகிறது. ஏன் நம்மால் முடியவில்லை. ஏன்என்றால் கேரளா போன்ற ஒற்றுமையான சமுதாயத்தினை நாம் தமிழகத்தில் உருவாக்கவில்லை. வருங்கால இளைஞர்கள்கள் அவ்வாறான சூழ்நிலையினை உருவாக வேண்டும். அப்போது தான் இஸ்லாமியர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.