இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

இந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன?



தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமன் கடந்த 30-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அதே தினத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் நல்லடக்கம் நடைபெற்றது.
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் கலாமின் நல்லடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதைக் காண ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் யாகூப் மேமன் உடல் நல்லடக்கத்தின்போது ஊடகங் களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதற்கு ஊடகங்களும் கட்டுப் பட்டு செயல்பட்டன. இரு காரணங் களுக்காக ஊடகங்களும் யாகூப் மேமன் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டன.
முக்கியமாக அந்த இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொள்ளாமல் கட்டுப்படுத்தி வன்முறை ஏற்படாமல் தடுப்பதும் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டவரின் மீது தேவையற்ற அனுதாபம் ஏற்படுவதை தடுப்பதுமே ஆகும். மும்பையில் உள்ள சில டி.வி. சேனல்கள் இதுபோன்ற மனதுக்கு பிடிக்காத நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவது இல்லை என்றும் தெரிவித்துவிட்டன. எனினும் அடுத்த நாளில் நாளிதழ்களில் வந்த புகைப்படங்கள், செய்திகள் மூலம் யாகூப் மேமன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் தெரியவந்தது. யாகூப் மேமன் நமாஸில் 8 ஆயிரம் முஸ்லிம்கள் பங்கேற்றதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இவ்வளவு பேர் ஏன் வந்தார்கள் என்ற கேள்வி இப்போது முக்கியமாக எழுகிறது.
இதுபற்றி பாஜக மூத்த தலைவரும் திரிபுரா ஆளுநருமான தத்தகதா ராய் ட்விட்டரில் ஒரு கருத்து தெரித்தார். அதில் யாகூப் மேமனின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை தவிர மற்றவர்களில் பெரும்பாலானோர் தீவிரவாதிகளாக இருப்பார்கள். எனவே இதில் உளவுத் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இவ்வளவு பேர் யாகூப் இறுதிச் சடங்கில் குவிந்ததற்கு வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் பரவிய தகவலும் முக்கிய காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இவை தவிர யாகூப் தூக்கி லிடப்பட்டதை தொடர்புபடுத்தி வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய தகவல்கள் பரவியதாகவும், அது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. யாகூப் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் எவ்வித கோஷங்களும் எழுப்பக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்தனர். அதனால் பிரச்சினை ஏதும் இன்றி இறுதிச் சடங்கு முடிந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அப்படி இருக்கும்போது ஏன் இவ்வளவு போலீஸ் கெடுபிடி என்பது அடுத்து எழும் கேள்வி.
1993-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவ குற்றவாளியான யாகூப் இப்போது தூக்கிலிடப்பட்டுள்ளார். அதே ஆண்டு ஜனவரியில் மும்பையில் நடைபெற்ற கலவரத்தில் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும், 200-க் கும் மேற்பட்ட இந்துக்களும் உயிரிழந்துள்ளனர். அதற்கு ஒரு மாதம் முன்புதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
எனவே மும்பை தொடர் குண்டு வெடிப்பு என்பது வேறு பல்வேறு தொடர் சம்பவங்களுடன் தொடர்புள்ளது. இந்த சம்பவங் களில் இறந்தவர்கள் ஒருபுறம் என்றால் தொழிலை இழந்தவர்கள், காயமடைந்தவர்கள், பலாத் காரத்துக்கு உள்ளான பெண்கள், வாழ்ந்து வந்த இடத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள், வாழ் வாதாரத்தை இழந்தவர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இது தான் குண்டுவெடிப்புகளுக்கு பின்னணி.
யாகூப் தூக்குக்கு முன்பாகவும் பல சர்ச்சைகள் எழுந்தன. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவரை கண்டிப்பாக தூக்கிலிட வேண்டுமென்று டி.வி. சேனல்களில் பல விவாத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனிடையே, இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவர்களில் 94 சதவீதம் பேர் முஸ்லிம் மற்றும் தலித்துகள் என்று தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரத்தை தந்தது ஒரு பத்திரிகை. இது தாம் பின்பற்றும் மதம் காரணமாகவே தாங்கள் தண்டிக்கப்படுகிறோம் என முஸ்லிம்கள் மனதில் உள்ள கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
பாஜக சார்ந்த மாயா கோத்னானி, பாபு பஜ்ரங்கி ஆகியோர் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர் என்றும் ஒருசாரார் கேள்வி எழுப்பினர். இந்தியாவில் தீவிரவாதம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியாகும் செய்திகள், கட்டுரைகளுக்கு வாசகர்கள்தரும் விமர்சனத்தை படிக்கும்போது. பல இடங்களில் முஸ்லிம்கள் என்றால் நம்பத்தக்கவர்கள் அல்ல என்ற கருத்தே உள்ளது. இதனால் முஸ்லிம்களுக்கு வேலை தேடுவதில் இருந்து வீடு கிடைப்பது வரை பிரச்சினை ஏற்படுகிறது.இதுதான் இந்தியாவில் முஸ்லிம்களாக உள்ளவர்களின் உண்மை நிலை.
யாகூப் மேமன் இறுதிச் சடங்கில் கூடியவர்கள் அனைவரும் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்பதாலோ அல்லது, வன்முறையில் ஈடுபடவோ வரவில்லை. தாங்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அனுதாபம் தெரிவிக்க வந்தவர்கள்.

thaks : 
http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article7489835.ece?homepage=true

செவ்வாய், 20 அக்டோபர், 2009

இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை!

இந்தியாவில் முஸ்லிம்களாக வாழ்வது ..."இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை"

புதுதில்லி மாநாட்டுப் பரிந்துரைகள்!

கடந்த 3.10.2009 சனிக்கிழமை புதுடெல்லியில் சமூக நல்லிணக்க-ஜனநாயக விழிப்புணர்வு அமைப்பு (Act Now For Harmony and Democracy) நடத்திய "இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை" எனும் கருத்தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் மன வெளிப்பாடுதான் இக்கட்டுரையின் தலைப்பு.

மூன்று நாள்கள் (3-5 அக்டோபர் 2009) தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், "பல்வகைப்பட்ட அச்சங்களைச் சுமந்து கொண்டு வாழ வேண்டிய இக்கட்டான சூழலில் இந்திய முஸ்லிம் சமுதாயம் சிக்கித் தவிக்கிறது. அவற்றுள் தலையாயதும் கவலைக்கு உரியதுமான அரித்தெடுக்கும் அச்சம் யாதெனில், 'விசாரணை' என்ற பெயரில் எந்த நிமிடத்திலும் 'சட்ட நடவடிக்கை'க்காக நாங்கள் 'தூக்கி'ச் செல்லப் படலாம் என்பதே" என்று ஒரே குரலில் கூறினர்.

தீவிரவாதச் செயல்களைச் செய்ததாகவும் தீவிரவாதச் செயல்களில் தொடர்பு உடையவர்களென்றும் பொய்க் குற்றம் சாட்டப் பட்டு, அநியாயமாகச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளவர்களின் உறவினர்கள், தங்களது பாதிப்பு அனுபவங்களை இந்த நடுவுநிலை மாநாட்டுக் குழுவினர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்டனர்.

ஹர்ஷ் மந்தர் - ஜஹான் குடும்பத்தாரோடுஇந்திய முஸ்லிம்களிடம் நிலவி வரும் அச்சம்-அவநம்பிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மேற்காணும் நடுவுநிலைக் குழுவினர் 12 பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அரசின் முன்னாள் உயரதிகாரியும் குழு உறுப்பினர்களுள் ஒருவருமான திரு. ஹர்ஷ் மந்தர், "காவல் துறை, நீதித் துறைகளினால் முழுமையாகக் கைவிடப் பட்டவர்களாக முஸ்லிம்கள் ஆகிவிட்டனர். ஊடகத் துறையினரும் அரசியல்வாதிகளும் ஏறத்தாழ அதே நிலைபாட்டில்தான் உள்ளனர்" என்று கருத்துத் தெரிவித்தார்.

காவல் துறையினரின் சட்ட விரோதமான, அராஜகப் போக்கைப் பற்றிக் குறிப்பிடும்போது, "தற்போது நிகழ்த்தப்படும் 'தீவிரவாதத்திற்கு எதிரான போர்' எனும் (குஜராத்பாணி) நடவடிக்கைகள், குஜராத்தில் மட்டுமின்றி இதர பல மாநிலங்களிலும் பரவலாக நடைபெறுவதைக் காணமுடிகிறது. எவ்விதக் குற்றப் பதிவோ தொடர்போ குற்றச் செயல்களுக்கான ஆதாரமோ இல்லாத முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமான முறையில் சீருடையற்ற போலீசார் மூலம் விசாரணை என்ற பெயரில் கடத்திச் செல்லப் பட்டு, காவல் நிலையமல்லாத ஒதுக்குப் புறமான மர்ம இடங்களில் வைத்துக் கொடூரமான முறையில் பல நாள்கள் சித்தரவதை செய்யப் படுகின்றனர்" என்று திரு மந்தர் தம் வேதனையை வெளிப் படுத்தினார்.

இது போன்ற ஒருதலைப் பட்சமான அணுகுமுறைகளினால் முஸ்லிம்களின் உள்ளத்தில் பல்வேறு பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள வேற்றுமையுணர்வின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு, இம் மாநாட்டுக் குழு ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளது: "நாடு தழுவிய வகையில் தீவிரவாத வழக்குகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் தலைமையில் ஒரு மேல்மட்ட நீதிமன்ற ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும். மேலும், சந்தேகத்திற்கிடமான அல்லது புனையப்பட்டதாகக் கருதப் படும் நிகழ்வுகள், விசேஷ விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு அவ்விசாரணை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும். இவ்வாறான ரீதியில் விசாரணை நடைபெற்றால் எவ்வித ஆதாரமும் இல்லாமல் நீண்ட காலமாக விசாரணைக் கைதிகளாகப் பலர் அவதிப்படும் நிலையை தவிர்க்கலாம்" என்று பரிந்துரைத்துள்ளது.

மேலும், "மரண தண்டனை வழங்கப்படத் தக்கக் குற்றங்களின் ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அழித்த காவல் துறையினர் மீது விசாரணையும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும், 'விசாரணைக் கைது' எனும் பெயரால் பாதிக்கப்பட்டு, நிரபராதிகளாகத் தீர்ப்பளிக்கப் பட்டவர்களுக்கு முறையான நஷ்டஈடு வழங்க வேண்டும். காவல்துறை, அரசாங்க சிவில் நிர்வாகத் துறை, நீதித்துறை போன்றவற்றின் எல்லா நிலைகளிலும் அதிகமான எண்ணிக்கையில் முஸ்லிம்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கிடும் முறையான செயல் திட்டம் அமுலுக்கு வர வேண்டும்" என்றும் மாநாட்டுக் குழுவினரால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

"இக்குழு நடுவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட புகார்களில், முஸ்லிமல்லாதோர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் வீடு வாடகைக்கு எடுக்கும் விஷயத்தில் காட்டப்படும் வேற்றுமையுணர்வு, காழ்ப்புணர்ச்சி, மேலும் பொதுநல அமைப்புகள் முஸ்லிம்களுக்கெதிராகப் பலவிதத்திலும் காட்டும் பாரபட்சம், அதே அடிப்படையில் பத்திரிகைத் துறையினரின் தவறான-திரிக்கப்பட்ட கருத்துகளை பிரதிபலிக்கும் அணுகுமுறைகள் குறிப்பிடத் தக்கவையாகும்.

பாதுகாப்பு, மேலாண்மை, மற்றும் பாதிக்கப்பட்டோர் புனரமைப்பு அறிக்கை (Prevention, Control and Rehabilitation of Victims Bill) போன்ற சமூக நல அமைப்புகளின் சீர்திருத்தக் கருத்துகளுக்கேற்ப இந்தியக் குற்றவியல் சாசனப் பிரிவு 153Aயின் அடிப்படையில், வெறுப்புணர்வையும் வேற்றுமையயும் சமூகத்தில் பரப்பிடும் அமைப்புகளுக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்காக மாநில அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும்" என்றும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இக்குழுவின் தமது கோரிக்கையில், தற்போதுள்ள SC/ST Act எனும் தாழ்த்தப்பட்ட இனத்தோர்/ தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்களுக்கு எதிரான சமூக ஏற்றத் தாழ்வுக் குற்றங்களுக்கான சட்டத்தைப் போல், சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இது போன்ற குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டித்திட சட்டம் வேண்டும் என்றும் மாநாட்டுக் குழு கோரியுள்ளது.

"பத்து உறுப்பினர் கொண்ட ஒரு செயற்குழுவைப் பிரதமர் நியமித்து தேசிய அளவில் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ள இந்த மதவாதத்திற் கெதிரான தீவிரப் பிரச்சாரச் செயல் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பழைய காலத்தில் நடந்த கல்வியறிவுப் பிரச்சாரம், கோயில்கள் நுழைவுப் புரட்சிப் பிரச்சாரத்தினைப் போல் இதுவும் பரவலாக்கப்பட வேண்டும். மேலும் இம்மாநாட்டுக் குழுவின் மூலம் இந்த தேசிய மாநாட்டில் வெளிச்சத்திற்கு வந்த, சமர்ப்பிக்கப் பட்ட, தற்போது சமூகத்தில் தொடர்ந்து நிலவிவரும் இது போன்ற சமூக அவலங்களினையும் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டி ஆவணப்படுத்த வேண்டும்" என்றும் பரிந்துரையில் கூறப்பட்டது.

அச்சம்-அவநம்பிக்கைஇக்குழு மேலும் தனது பரிந்துரையின் மூலம், "இது போன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட, அநீதியிழைக்கப்பட்ட கணிசமான மக்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்க சிறுபான்மை நலத்திட்டம், பழங்குடியினர் நலத் திட்டம் போன்ற அந்தந்தச் சமுதாய எண்ணிக்கை விகிதாச்சாரப்படியான விசேஷ திட்டங்களின் அடிப்படையில் திட்டம் அமைக்கக் கோரியுள்ளது. மேலும் பத்துப்பேர் அடங்கும் செயற்குழுவுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் மூலம், வஃக்பு வாரியச் சொத்துக்களின் பராமாரிப்பு மூலம் வரும் வருமானங்கள் சீராகவும் முறையாகவும் ஒருமுகப்படுத்திடும் முதலீடுகள் மூலம் அதிகமான வளங்களுக்கு வழி வகுக்க, உறுதி கொடுக்கப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டது.

"இந்தியச் சமூகம் தற்போது உண்மையில் மதசார்பற்றதாக இல்லை" என்பதைச் சுட்டிக்காட்டிய, இக்குழு உறுப்பினர்களில் ஒருவரான மஹேஷ் பட் எனும் சினிமா தயாரிப்பாளர், "இது போன்ற பாரபட்சமான மனப்பான்மைக் கெதிரான ( anti-discrimination law ) சட்டம் இயற்றப்பட வேண்டியது உடனடியான தேவையாகும்" என்று கூறினார்.

மூலம் : தி ஹிண்டு

தமிழாக்கம் : இபுனு ஹனீஃப்