புதன், 6 ஆகஸ்ட், 2014

மோடி ஒப்படைத்த நேபாள வாலிபர் ஏற்கனவே குடும்பத்தோடு இணைந்தவர் பேஸ்புக் பட ஆதாரம்

புதுடெல்லி, ஆக. 6–
நரேந்திரமோடி கடந்த ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் நேபாளம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்த பயணத்தின் போது நரேந்திரமோடி தன்னுடன் 26 வயது ஜித்பகதூர் என்ற இளைஞரையும் அழைத்து சென்றார்.
ஜித்பக்தூரின் சொந்தநாடு நேபாளம் ஆகும். 1998–ல் வேலை தேடி ராஜஸ்தான் வந்த அவர் வழிதவறி குஜராத் சென்று விட்டார். திக்கு தெரியாமல் தவித்த அவருக்கு அப்போது 10 வயது.
அவர் ஏதேட்சையாக நரேந்திரமோடியை சந்திக்க நேர்ந்தது. பகதூர் மீது இரக்கப்பட்ட மோடி அவரை தன் கண்காணிப்பில் வளர்த்து வந்தார். மோடி பிரதமரான நிலையில் பகதூரின் பெற்றோர் நேபாளத்தில் எங்கு வசிக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜித்பகதூரை பிரதமர் மோடி தன்னுடன் நேபாளத்துக்கு அழைத்து சென்று அவர் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
நரேந்திரமோடியின் . இந்த நிலையில் மோடியால் ஒப்படைக்கப்பட்ட ஜித்பகதூர், ஏற்கனவே கடந்த 2012–ம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் இணைந்து விட்டவர் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
2012–ம் ஆண்டு தன் குடும்பத்தினரை சந்தித்ததை ஜித்பகதூர் தன் ‘‘பேஸ்புக்’’ இணைய தள புத்தகத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதில் அவர் ‘‘ஹாய் பிரண்ட்ஸ், இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். ஏனெனில் நான் இன்று என் வீட்டில் இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள ஜித்பகதூர், 2012 ஆண்டு தன் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட படத்தையும் அதில் இணைத்துள்ளார். இதன் முலம் ஜித்பகதூர் ஏற்கனவே நேபாளத்தில் உள்ள தன் குடும்பத்தினருடன் இணைந்து விட்டவர் என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் 10 வயதில் ஆமதாபாத் வந்த ஜித்பகதூர் 16 வருடங்கள் கழித்து அவரது 26–வது வயதில்தான் நேபாளம் திரும்பி இருப்பதாக கூறப்பட்டது. மோடியும் தன் டூவிட்டர் பக்கத்தில் இது பற்றி பெருமையாக கூறி இருந்தார்.
இந்த தகவல் பொய் என்று பேஸ்புக் பக்கம் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
http://www.maalaimalar.com/2014/08/06104606/Modi-handed-over-the-family-of.html

கருத்துகள் இல்லை: