மோடி மவுன சாமியாராகி விட்டார்!
மோடி பதவியேற்று 60 நாட்கள் ஆகிவிட்டதாம். சரி இந்த 60 நாட்களில் அவர் என்னதான் செய்து விட்டார்? முக்கியமாக இந்த 60 நாட்களில் மோடி அரசியலில் ஊடகத்தின் பங்கை கட்டாயம் எழுத வேண்டும். காரணம் மோடி அரசின் குறைகளை ஒரு விழுக்காடு கூட மக்களுக்குக் கூறவில்லை. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று எனப்படும் ஊடகம் அரசின் தவறான கொள்கைமுடிவை எதிர்க்காமல் நாட்டில் ஒன்றுமே இல்லை என்பதுபோல கண்மூடி இருக்கிறது. தமிழகத்தில் இருந்தே பார்க்கலாம், தேர்தலுக்கு முன்பு மீனவர், ஈழத்தமிழர் போன்ற சிக்கல்களை மோடியின் கூட் டணிக் கட்சிகள் தான் அதிகம் பேசினர். மோடியின் எந்த பேச்சிலும் இலங்கை அல்லது மீனவர் பிரச்சனைகளை ஆழமாக பேசவில்லை; அப்போதே தெரிந்துவிட்டது மோடி மனதில் இலங்கை பற்றிய பார்வை என்ன என்பது. ஆனால் பாமக, மதிமுக, தேமுதிக இதர கூட்டணிக் கட்சிகளும் தமிழக பாஜகவும் மேடைக்கு மேடை முழங்கின.
ஈழம்
1. மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வது தொடர்கிறது.
2. இலங்கை அரசுடன் உள்ளார்ந்த நட்புறவை மேற்கொள்வது.
3. ஈழத்தில் உள்ள மக்கள் தற்போது அமைதியாக வாழ்கிறார்கள் என்றெல்லாம் பேசுவது.
4. இலங்கையில் உள்ள ஆன்மீக மற்றும் புராதன சின்னங்களைப் பாதுகாக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
5. ஆந்திராவில் இலங்கை அரசுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஒதுக்கீடு, தொழில் தொடங்கவாம்!
6. மூன்று முறை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் இந்தியா வந்துள்ளார். ஈழத்தமிழர்கள் பற்றி எந்த ஒரு பேச்சும் பேசவில்லை.
7. அகதிகளை திருப்ப அனுப்பும் திட்டத்திற்கு ஆதரவு.
8. அய்நாவின் அகதிகள் மறுவாழ்வு திட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை.
9. ராஜபக்சேவிற்கு ஆதரவாக அய்நா குழுவிற்கு விசாவழங்க மறுப்பு
10. இலங்கையில் நடக்கவிருக்கும் இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்க விருப்பது.
தமிழகம்
11. ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு
12. பொது பட்ஜெட்டில் தமிழகம் புறக் கணிப்பு.
13. இந்தித் திணிப்பு
14. சமஸ்கிருத வாரம் கட்டாயம் என்று கொண்டு வந்தது
15. நாடாளுமன்றத்தில் தமிழக உறுப் பினர்கள் கோரிக்கை புறக்கணிக்கப்படுவது
16. நதிநீர் தொடர்பான சிக்கல்களில் அமைதிகாண்பது
16. தமிழக அணைகளையும் நதிகளை யும் கேரளாவிற்கு சொந்தமானது என அறிக்கையில் குறிப்பிடுவது.
17. தமிழக மீனவர் பிரச்சினைகள் குறித்த தொடர் கடிதங்களுக்கு இதுவரை தீர்விற்கான பதில் அளிக்காதது.
18. முக்கிய வளர்ச்சிப்பணிகளுக்கான குழுவில் தமிழ் நாட்டிற்கான பிரதிநிதித் துவம் கொடுக்காதது.
19. முக்கிய தொழில் வளர்ச்சித் திட் டத்தில் தமிழகத்திற்கு பங்கு அளிக்காதது,
20. எழுவர் விடுதலை (ராஜீவ் கொலை வழக்கு) தொடர்பான வழக்கில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்தது.
விலைவாசி
21. பணவீக்கம் தொடர்ந்து வீழ்ச்சியில் உள்ளது. 22. டாலர் 50-லிருந்து 60 ரூபாயைக் கடந்துவிட்டது.
23. ஏற்றுமதிக்கான எந்த ஒரு ஆக்க பூர்வமான செயல்திட்டமும் இல்லாமல் தேர்தல் பிரச்சார மேடைப் பேச்சு போன்றே அறிக்கை விடுவது.
24. இறக்குமதியைத் தாராளமாக்கி உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு போட்டியை ஏற்படுத்துவது.
25. பதுக்கல்காரர்கள் தங்களின் நட வடிக்கையை மிகத்தீவிரமாக்கிவிட்டார்கள், இதுபற்றி வெறும் அறிக்கையோடு நின்று விட்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது.
25. தக்காளி விலை மும்பை ரூ85 சென்னை ரூ60, டில்லி ரூ90 கொல்கத்தா ரூ85 குஜராத்தைச் சேர்ந்த சூரத் நகரில் ரூ.100 இனி தொடர்ந்து திருவிழாக்காலம் வருவதால் விலைவாசி குறைவிற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.
26. முக்கிய உணவுப்பொருள் விநியோகம் தனியார் வசம் ஒப்படைப்பு,
27. உணவுத் தானியங்களின் விலை தொடர்ந்து 17 விழுக்காடு உயர்ந்து வரு கிறது.
28. மருந்துப் பொருள்கள் தயாரிப்பு தனியார் வசம் ஒப்படைப்பு; விளைவு அத்தியாவசிய மருந்துகள் எழைகளுக்குக் கிடைக்காதது.
29. 88 விழுக்காடு மக்கள் பயன்படுத்தும் எரிவாயு உருளையின்விலை தொடர்ந்து மாதத்திற்கொருமுறை ஏற்றப்படும் என்று அறிவித்தது.
30. பெட்ரோல் டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை ஏற்றம்
வளர்ச்சிப் பாதை
31. போன ஆட்சியில் இருந்த திட்டங் கள் இன்றும் அப்படியே இயக்கப்படாமல் இருப்பது,
32. கட்டுமானப்பணிக்கான அனைத்து உபயோகப் பொருள்களும் விலை உயர்ந்து விட்டதால் முக்கிய நகரங்களில் விரிவாக்கப்பணி செயலிழந்துவிட்டது.
33. பல்வேறு திட்டப்பணிகளுக்கான நிர்வாகிகளை நியமிக்காதது.
34. மாநிலங்களின் வளர்ச்சிக்கான நிதிஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது.
35. வளர்ச்சிப் பணிக்கான திட்டத்திற் கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டில் காண் பிக்கப்பட்ட தொகைக்கும் தொடர்பின்மை.
36. கங்கை சுத்திகரிப்பிற்கு பல ஆயிரம் கோடி ஆனால் நாட்டின் மற்ற அனைத்து நதிகளின் பராமரிப்பிற்கு சில நூறுகோடிக்கு ஒதுக்கீடு செய்தது. ஆனால் விவசாயத் திற்கு குறைந்த நிதி ஒதுக்கீடு.
37. நலிந்துவரும் தொழில்களுக்கு (கைத்தறி, குடிசைத்தொழில்) மானியம் மற்றும் பயிற்சிக்கான எந்த ஒரு திட்டமும் முன்வைக்காமை
38. முக்கியத்துறைகளில் தனியார் முழுமையாக உட்புக ஒப்புதல்.
39. அரசு கனரக தொழிற்சாலைகளின் பெரும்பான்மையான பங்குகள் தனியார் வசம்
40. அந்நிய நேரடிமுதலீடு முழுமையாக் கப்பட்டது.
பாதுகாப்புத் துறை
41. பாகிஸ்தான் 4 முறை போர்நிறுத்ததை மீறியதாக கூறப்படுவதற்கு இதுவரை அரசுத்தரப்பில் பதிலில்லை.
42. பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 11 இராணுவவீரர்கள் மற்றும் 5 பொது மக்கள் உயிரிழப்பு.
43. சீனா தனது புதிய வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்த்தது.
44. இலங்கையில் சீனாவின் விமான பழுதுபார்க்கும் தளம் அமைப்பதைக் கண்டு கொள்ளாமை.
45 கச்சத்தீவு இலங்கையின் சொத்து என நீதிமன்றத்தில் கூறியது.
46. ராணுவத்திலும் தனியார் முதலீடு,
47. கப்பற்படையில் தொடந்து நடக்கும் விபத்துகள் குறித்து இதுவரை எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்காதது,
48. சீனா அத்துமீறி இந்தியப்பகுதிகளில் தனது நிலைகளை அமைத்தது குறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமை,
49. எல்லையில் கண்காணிப்பை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு முக்கியத் துவம் கொடுக்காதது,
50. அதி முக்கியத்துறையான பாதுகாப்பு போன்ற முக்கிய அமைச்சகத்திற்கு தனி அமைச்சர் நியமிக்காமை.
தடுமாற்றம்
51. இந்திய காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதிகொடுத்தது,
52. ரெயில்வே பட்ஜெட்டில் பயண சீட் டின் விலை ஏற்றிவிட்டு, கிலோமீட்டருக்கு இவ்வளவு என்று நிர்ணயம் செய்து மக்களைக் குழப்பியது,
53. தங்க நாற்கர சாலைப் பணிகள் வடமாநிலங்களில் இன்றும் பாதியிலேயே இருக்கும் போது வைரநாற்கரச்சாலை என அவசரகதியில் அறிவித்தது. 54. விலையேற்றம் மற்றும் மக்கள் விரோத கொள்கைத் திட்டங்களை அறி வித்துவிட்டு, முந்தைய அரசின் மீது பழி போடுவது,
55. மதரீதியாக மொழிச்சிக்கலை உருவாக்கி கல்வித்திட்டத்தில் குழப்பத்தை விளைவிப்பது.
56, இந்தித் திணிப்பிற்கு முதல் முறை யாக நாடு முழுவதிலும் முக்கியத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது; உப்பு சப்பில்லாத காரணத்தை சொல்லி விளக்குவது,
57. வர்த்தகம் தொடர்பான எந்த ஒரு முன்னேற்பாடான ஆக்கபூர்வ நடவடிக் கைகளை இதுவரை மேற்கொள்ளாதது, 58. மத ரீதியாக ஒருபக்க சார்பு நிலையை மேற்கொண்டு வருவது
59. விளையாட்டுத்துறை முற்றிலும் புறக்கணிப்பு
60. மரபணுமாற்றம் குறித்த விவகாரத்தில் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் நட வடிக்கை எடுத்தது. மோடி அரசு கடந்த 60 நாட்களாக எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்த வில்லை. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்போனால் பத்திரிகை யாளர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் அளிக்க மோடியும் அவரது அமைச்சரவை சகாக் களும் பதில் கூறும் நிலையில் இல்லை. குஜராத் மாடல் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். குஜராத் மாடல் என்பது இதுதான் போலும்! தேர்தலுக்கு முன் மோடிக்காக முழக்கம் போட்டவர்கள், மோடிக்காக நன்னடத்தை சான்று பத்திரங்களை அடித்துக் கொடுத்த வர்கள் எங்கே? எங்கே? மக்கள் முகத்தில் விழிக்க முடியாமல் பதுங்கியுள்ளவர் களைத் தேடிக் கண்டுபிடியுங்கள்! கண்டு பிடியுங்கள்! கண்டுபிடியுங்கள்!!
நன்றி: கலி. பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக