புதன், 19 செப்டம்பர், 2012

எங்கு செல்கிறது மன்ப உல் உலா பள்ளி??????





அன்புடைய என் அருமை சகோதரர்களே, அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

சின்ன சிங்கப்பூர் என்று அழைக்கப்பட்ட சீரும் சிறப்பும் உடைய நமது ஊர் கூத்தாநல்லூர் பற்றி நான் உங்களிடம் கூற விரும்புகிறேன்.

எந்த ஒரு சமுகம் கல்வியினை பெற விரும்பவில்லையோ அல்லது கல்வியில் போதிய அக்கறை காட்டாமல் வாழ்ந்து வருகின்றார்களோ அந்த சமுகம் முன்னேற்ற பாதையில் சென்றதாக வரலாற்று இல்லை. இந்திய அளவில் முஸ்லிம் சமுகம் பின் தங்கிய நிலையில் இருப்பதாக "சச்சார் கமிட்டியின்" மூலம
் நாம் அறிந்து கொள்கிறோம். இந்நிலையில் நம் ஊரில் நமக்காக அதாவது கூத்தாநல்லூர்ல வாழகூடிய முஸ்லிம்கள் கல்வியில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக 1939 -ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு குடிசை பள்ளி தான் இப்போது மலை போலே வளர்ந்து நிக்குற மன்ப உல் உலா மேல் நிலை பள்ளி.

நான் இப்பள்ளியை பற்றிய உண்மைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சுதந்திரத்திற்கு முன்னும், சுதந்திரத்திற்கு பின்னும் கல்வி நிலையில் பின்தங்கிய சில சமுக மக்களின் நலனுக்காக, சில பகுதி மக்களின் நலனுக்காக, அந்த குறிப்பிட்ட பகுதியில் வாழும் நல்ல எண்ணம் படைத்த, நல்ல நிலையில் வாழ்ந்த படித்த இளைஞர்களால் நாடு முழுவதும் சிறுபான்மை மக்களாக வாழகூடிய முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள், புத்தர்கள், சீக்கியர்கள் அவர்கள் வாழகூடிய பகுதியில் அவர்களின் மக்களுக்காக பள்ளியினை திறக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழிவகுத்து, சில சிறப்பு அந்தஸ்தையும் இது போன்ற பள்ளிகளுக்கு தந்தது. இதன் அடிபடையில் நாடு முழுவதும் சிறுபான்மையினர் நலனுக்காக பள்ளிகள் தொடங்கபட்டது. இவாறாக தான் நம் பள்ளியும் தொடங்கப்பட்டது.

இப்பள்ளி எதோ ஒரு நபரின் சொத்துகளை கொண்டு உருவாக்கப்பட்ட பள்ளி அல்ல. நமது கூத்தாநல்லூர்-ஐ உருவாகிய சீரும் சிறப்பும் உடைய நமது முன்னோர்கள் பலரால் உருவாக்கப்பட்ட மன்ப-உல்-உலா மதராஸவின் ( சின்னப்பள்ளியின் ) சொத்து. அதாவது கூத்தாநல்லூர் வக்ப் சொத்து ஆகும். இப்பள்ளியினை யாரும் இது எங்கள் முன்னோர்கள் சொத்து என்று உரிமை கோர முடியாது. என்பதினை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் மதரசாவில் படித்த பிள்ளைகளுக்கு இப்பள்ளியில் உலக கல்வியினை பெற அனுமதிக்கப்பட்டனர். இப்பள்ளியில் ஆரம்பக்கால கட்டத்தில் இஸ்லாமிய உணர்வுகளோடு பள்ளி நிர்வாகம் இஸ்லாமிய இளைஞர்களை கொண்டு இஸ்லாமிய பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்தது.

அதனால் இன்றோ?... நம்மிடையே இஸ்லாமிய சகோதர உணர்வு குறைந்தது. மாற்று மதத்தவர்களோடு நெருங்கிய உறவு ஏற்பட்டது. அவர்களை நம் வீட்டில் அனுமதித்தோம், அதன் விளைவு நம் படுக்கை அறையை பகிர்ந்து கொண்டனர். அவர்களை நம் வணிகத்தில் அனுமதித்தோம், சொத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களை நிர்வாகத்தில் ( அதாவது நகராட்சி உள்ளூர் நிர்வாகம் ) அனுமதித்தோம். இப்போது அதனை அவர்களே பெற்று விட்டார்கள் (எடுத்துக் கொண்டனர்). இவாறாக இஸ்லாமிய உணர்வு, சகோதரத்துவம், இஸ்லாமிய அடையாளம் அனைத்தையும் இழந்தோம். இப்போது கூத்தாநல்லூர் மாற்று மதத்தவரின் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகி சீரழிகின்றது. வட்டிக்கு விட்ட பால் காரன் இன்று பணக்காரன், அவனுக்கு ஆதரவளித்த நம் சகோதர்கள், இன்று அவனுக்கே சில நேரங்களில் விளக்கு பிடிக்கும் அவல நிலை நடந்துள்ளது. தெரு எங்கிலும் வெளி ஊரில் இருந்து வரும் வட்டி காரர்கள், இதன் பாதிப்பு 3 பெண்கள் வட்டிகார்களோடு ஓடிய நிலை. இதெற்கெல்லாம் மூல காரணமே மார்க்க அறிவு இல்லாதது தான்.

இந்த பின் விளைவின் ஒரு விளைவு தான் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட மன்ப உல் உலா பள்ளி. இன்று இப்பள்ளியில் 3-ல் ஒரு பங்கு மட்டுமே இஸ்லாமிய குழந்தைகள் அரசு மானிய உதவியோடு படிக்கின்றனர். ( அதாவது மன்ப உல் உலா பள்ளி 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை ( தமிழ் வழி ) அரசு மானியம். அதாவது குறைந்த கல்விக் கட்டணம் செலுத்தினால் போதும், ஆனால் 6 -ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை ( ஆங்கிலவழி ) மற்றும் 9 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை ( தமிழ் மற்றும் ஆங்கில வழி ) பள்ளிக்கட்டணம் மிக அதிகம். என்ன? நம்ப மறுகின்றீர்களா? உங்களுக்கு இஸ்லாமிய உணர்வு இருந்தால் பள்ளிக்கு சென்று பாருங்கள். மேலும், முஸ்லிம் மாணவர்கள் வேண்டுமென்றே உயர்ப்பள்ளி மற்றும் மேல் நிலை பள்ளி ( 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு )-ல் சேர்க்கை தவிர்க்க படுகின்றன. உதாரணத்திற்கு மாற்று மதத்தவர்கள் 1st group -ல் சேர 300 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தால் போதும் ஆனால் முஸ்லிம் மாணவர்கள் 1st group -ல் சேர 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கவேண்டும். ஆச்சர்யமாக இருகின்றதா? முடிந்தால் சோதனை செய்து பாருங்கள்.

முஸ்லிம்கள் 1st group மற்றும் 2nd group -ல் படித்தால் தான் அவர்களால் பிற்காலத்தில் டாக்டர் மற்றும் இஞ்சினியர் ஆக முடியும். ஆனால் வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு 3rd group வழங்கி உள்ளது. முஸ்லிம் மாணவர்களை பள்ளியில் சேர விடாமல் காரணங்களை சொல்லி தவிர்க்கும் மன்ப உல் உலா தலைமை ஆசிரியர். இந்நிலை இருக்கும் வரை நமதூரை சேர்ந்த ஒரு முஸ்லிம்கள் கூட டாக்டராக வரமுடியாது. தலைமை ஆசிரியர் மட்டும் இதற்கு காரணம் கூற முடியாது, அவருடைய ஆசிரியர் குழுமம் தான். ஏன் என்றால் மன்ப உல் உலா மேல் பள்ளியில் தற்போது ஒரு ஆசிரியர் கூட முஸ்லிம்கள் கிடையாது. மன்ப உல் உலா பள்ளியில் 3 -ல் ஒரு பங்கு முஸ்லிம் மாணவர்கள் படிப்பதற்கு ஒரு ஆசிரியர் கூட முஸ்லிம்கள் இல்லாமல் ஆனதுக்கு திட்டமிட்டு செய்யப்பட்ட சதியே காரணம். நான் கூறிய செய்திகளை நீங்கள் கொஞ்சம் கவனமாக கவனியுங்கள் (அல்லது ) நான் மேற்கூறிய செய்திகளை நீங்கள் நம்ப மறுகின்றீர்களா? மன்ப உல் உலா பள்ளி என்றாலே கூத்தாநல்லூர் வட்டாரத்தில் சீரும் சிறப்பும் பெற்ற பள்ளி மற்றும் அந்த பள்ளியில் படித்தால் நிச்சயமாக 10 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று விடுவார்கள். என்றெல்லாம் செய்தியை கேள்விப்பட்டு இருகின்றோம், பார்த்தும் இருகின்றோம். இதனால் மேற்கூறிய செய்திகளை நம்ப மறுத்து நீ ஒரு விஷமி என்று நீங்கள் என்னை நினைத்தால் பின்வரும் திட்டமிட்டு செய்யப்பட்ட, முஸ்லிம்களுக்கு எதிராக செய்யபடுகின்ற மறைமுக செயல்களை அறிந்து உண்மையில் நீங்கள் முஸ்லிமாக இருந்தால் தடுத்து பாருங்களேன், பார்ப்போம்!!!

நமக்கு எதிரான மறைமுக செயல்பாடுகள்
முஸ்லிம் மாணவர்களுக்கு வேண்டுமென்றே டாக்டர் மற்றும் இஞ்சினியர் படிபதற்க்குரிய Group 1 மற்றும் 2 ஐ தர மறுக்கபடுகிறது. ( கேள்வி கேட்டால் அவனால் அதனை எல்லாம் படிக்க முடியாது என்று சாக்கு போக்கு சொல்லி படிக்க தெரியாத அப்பாவி முஸ்லிம் பெற்றோர்களை ஏமாற்றி விடுகின்றனர்.

வெளி ஊரில் இருந்து எல்லாம் மன்ப உல் உலா பள்ளிக்கு மாணவர்கள் வருகின்றார்கள் என்று பெருமையடித்து கொள்ளும் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் போன்றோர்கள், ஏன்? ஒரு முஸ்லிம் மாணவர் கூட வெளி ஊரில் இருந்து ( மன்னார்குடி. திருவாரூர் ) வர வில்லை. அதாவது இந்து மாணவர்களை மற்றும் சேர்கின்றனர். முஸ்லிம் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிபதில்லை. முஸ்லிம்களின் பள்ளியில் முஸ்லிம் மாணவர்களுக்கு இடம் இல்லை என்ற நிலையில் தான் நம் பள்ளி உள்ளது.

முஸ்லிம் சிறுபான்மைக்கு சிறந்த அடையாளம் வெள்ளிகிழமை விடுமுறை மற்றும் ஞாயிற்று கிழமை பள்ளி வைப்பது. இந்த நிலை வந்த காரணம் வெள்ளிகிழமை ஜும்மா தொழுகை இருக்கின்ற காரணத்தால், ஆனால் இவர்கள் கிருஸ்துவ மதத்தினை பின்பற்றுகின்றார்கள் போலும், ஏனெனில் கிருஸ்துவர்கள் ஞாயிற்று கிழமை Prayer க்காக எந்த ஒரு வேலையையும் செய்ய மாட்டார்கள், அதனால் ஞாயிற்று கிழமை விடுமுறை விட்டு விடுவார்கள். கிருஸ்துவர்கள் அவர்களின் கொள்கை கோட்பாடுகளில் பிடிப்பாக இருகின்றனர். ஆனால் முஸ்லிம்கலாகிய நாம் நம்முடைய பள்ளி ஜும்மவிற்கு விடுமுறை அளிக்காமல் இந்த ஆண்டு தொடகத்திலிருந்து வெள்ளி கிழமை பள்ளி வேலை நாட்களாக அறிவித்தது ஏன்? இதெற்கெல்லாம் காரணம் மாற்று மதத்தவர் பள்ளியை முழுமையாக கையாடல் செய்தது தான்.

இஸ்லாமிய நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட பள்ளியில் ஒரு இஸ்லாமிய ஆசிரியர் கூட இல்லையே ஏன்? முஸ்லிம் ஆசிரியரே கிடைக்கவில்லையா? நமதூரை சேர்ந்த இளைஞர்கள் யாரும் படிக்கவே இல்லையா? முஸ்லிம் ஆசிரியரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் ( நீங்கள் அடிக்கும் கொள்ளையில் பங்கேற்றல் ) தகுதி இல்லையா?

தொடக்கப்பள்ளியில் 9 ஆசிரியர்கள் இவர்களில் 2 ஆசிரியர்கள் முஸ்லிம் பெண்கள், நடுநிலை பள்ளியில் வேலை பார்க்கும் 13 ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை, என்ன? கொடுமை இது. இந்திய அரசாங்கம் வேண்டுமென்றே, முஸ்லிம்கள் மேம்பாடு அடைந்து விட கூடாது என்று அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு அரசு வேலை கிடைக்க கூடாது என்பதற்கான சதி வேலைகளை செய்கின்றது என்றால், முஸ்லிம் பள்ளிகளில் முஸ்லிம்களுக்கு வேலை இல்லையாம், என்னையா இது கேக்குறதுக்கு ஆள் இல்லேன்னா என்ன வேணாலும் செய்வாங்களோ?

நான் முன்பே அறிவித்தது போன்று 1 முதல் 8 -ம் வகுப்பு வரை அரசு மானியம். அதாவது 1 முதல் 8 -ம் வகுப்பு வரை வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் தெரியுமா உங்களுக்கு? ருபாய் 25000 முதல் 38000 வரை ஒரு மாதத்திற்கான சம்பளம் பெறுகின்றனர். இதுவே நல்ல திறமை இருந்து வேலை இல்லாத எத்தனையோ முஸ்லிம் ஆசிரியர்கள் இருகின்றனர். நமதூரில் மேற்படிப்பு படித்த பட்டதாரி இளைஞர்கள் இருகின்றார்கள். இவ்வளோ சம்பளம் கொடுக்கப்பட்டால் நாம் ஏன் வெளி நாடுகளில் போய் கஷ்டப்பட வேண்டும். அவர்களுக்கு இந்த வாய்ப்பினை கொடுக்க கூடாதா? சொல்லுங்கள்.

கிருஸ்துவ பள்ளியில் ( மன்னார்குடி செயின்ட் ஜோசப் கான்வண்ட் பள்ளியில் அல்லது இந்து சமய பள்ளியில் ஒரு முஸ்லிம்களுக்கு கூட ஆசிரியர் வாய்ப்பு தந்து அவர்களை சிறப்பித்தது இல்லை. ஏன் நீங்களே போய் பாருங்களேன். மன்னார்குடியில் உள்ள கான்வன்ட்டில் ஒரு முஸ்லிம்களுக்கு கூட வேலை இல்லை. ஆனால் நமது ஊர் கூத்தாநல்லூர்ல அப்படியே தலைகீழ், முஸ்லிம் என்றாலே வேலை இல்லை. நமது பள்ளியில் தான், என்ன? கொடுமை இது? முஸ்லிம்களின் பள்ளியில் ஒரு முஸ்லிமுக்கு வேலை கொடுக்க வில்லை என்றால் மற்ற மத பள்ளிகளில் எப்படி வேலை கொடுப்பார்கள்? சொல்லுங்கள்.

நாம் வெளி நாட்டிற்க்கு செல்கிறோம் என்றால் எதற்காக? உள் நாட்டில் வாழ வழி தெரியவில்லை, நம் குடும்பங்கள் நல்ல விதமாக கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவே தான். நானும் ஒரு ஆசிரியர் படிப்பு படித்து இருந்தால், நானும் ஒரு டாக்டராக ஆகி இருந்தால், நானும் ஒரு நல்ல வழிகாட்டுதலை பெற்று இருந்தால், நான் ஏன்? வெளி நாட்டிற்க்கு செல்ல போகின்றேன் என்று ஏங்குவோர் பலர். போதிய வழிகாட்டுதலை மாணவர்கள் பெறுவதே பள்ளியில் தான். பள்ளி தான் ஒரு இளைஞனின் முதல் வழிக்காட்டி, ஆனால் அந்த பள்ளியே அவனின் தலை எழுத்தினை மாற்றி எழுதி விடுகின்றது. ( திட்டமிட்ட சதி ) என்றால் இவனை காப்பாற்றுவது யார்? சொல்லுங்கள்


மன்ப உல் உலா பள்ளியில் 100 % தேர்ச்சி பெறுகின்றனர் உண்மை தான். எப்படி நடகின்றது தெரியுமா? மாடு போன்று அவனை அடித்து கொடுமை செய்து, அவனுக்கு புரியுதோ இல்லையோ, அவனுக்கு திணித்து அவனுக்கு படிப்பு மேலே வெறுப்பினை ஏற்படுத்தி 100 % தேர்ச்சி பெறுவது எதற்காக? ஒழுக்கமுள்ள மாணவனை உருவாக்குவதற்காகவா? அல்ல! இவர்கள் மீது யாரும் குறை கூற கூடாது என்பதற்காகவா? முஸ்லிம்களின் நலனுக்காக பாடுபடுகின்ற ஒரு நல்ல முஸ்லிம் ஆசிரியரால் தான் முஸ்லிம்களின் முன்னேற்றத்தினை பெற வைக்க முடியுமே ஒழிய, மாற்று மதத்தவர்களால் முடியாது.

முஸ்லிம் மாணவர்களை முட்டாளாக்கி அவர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்வது, முஸ்லிம் ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்களை தொடர்ந்து நாம் அனுமதித்தால், பிற்காலத்தில் மன்ப உல் உலா பள்ளி மிக விரைவில் நம்மை விட்டு போய்விடும்.

எவ்வொருவர் தம்மை சுற்றிலும் நடைபெறுவதை அறிந்து கொள்ளவில்லையோ அவர் சீக்கிரமே அழிக்கபடுவார் என்பது உலக நியதி எச்சரிக்கை.

என்னால் முடிந்த வரை உங்களுக்கு விழிப்புணர்வையும் எச்சரிக்கையும் செய்து விட்டேன், இனி அனைத்தும் அல்லாஹ் நாடினால் உங்கள் கையில்...

என்னால் முடிந்தவரை தகவலை சேகரித்து கொடுத்துள்ளேன், இது வெறும் சிறிதளவு தான், இன்னும் அதிகளவில் நடைபெறுவதையும், மனிதனை ரணமாக்கும் செய்திகளையும் அறிந்து கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு... நாம் ஒவ்வொருவரும் பொருப்பாளர்களே! மன்ப உல் உலா பள்ளி சொத்துக்களை காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. இதனை செய்ய தவறினால் நாளை மறுமையில் அல்லாஹ் கேட்க்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல காத்திருக்கின்றோம் என்பதினை உணர்ந்து இனிமேலாவது மன்ப உல் உலா பள்ளியை இஸ்லாமிய மயமாகுவதர்க்கு முயல்வோம்.

எச்சரிகையுடன்
பழைய மன்ப உல் உலா பள்ளி மாணவன்
 

நன்றி  : Koothanallur Flashnews

கருத்துகள் இல்லை: