14 முஸ்லிம்களை எரித்துக் கொன்ற கயவர்களில் 4 பேருக்கு மட்டும் ஆயுள்தண்டனையாம்; இதுதான் இந்தியாவின் நீதி...????
மும்பை, ஜூலை. 10-
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு
பிறகு கலவரம் ஏற்பட்டது. அப்போது வதோதரா நகரில் உள்ள பெஸ்ட் பேக்கரியை ஒரு
கும்பல் தீ வைத்து எரித்தது. இதில் பேக்கரிக்குள் இருந்த ஒரே குடும்பத்தை
சேர்ந்த 14 பேர் தீயில் கருகி இறந்து போனார்கள்.
இதுபற்றி ஷாகிரா
ஷேக் என்பவர் வதோதரா போலீசில் புகார் செய்தார். அவர் அளித்த புகாரில்
பேக்கரிக்கு தீவைத்ததாக 21 பேர் பெயரை குறிப்பிட்டுடிருந்தார். இவ்வழக்கை
வதோதரா விரைவு கோர்ட் விசாரித்தது. கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 27-ந்தேதி
இக்கோர்ட் குற்றவாளிகள் 21 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து குஜராத் அரசு ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது. ஆனால்
குஜராத் ஐகோர்ட் அந்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால்
அதிர்ச்சி அடைந்த ஷாகிராஷேக் மற்றும் சமூக சேவை அமைப்புகள் சார்பில் பெஸ்ட்
பேக்கரி வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
இதைய டுத்து சுப்பரீம் கோர்ட் பெஸ்ட் பேக்கரி வழக்கை மும்பை சிறப்பு கோர்ட்
விசாரிக்க உத்தரவிட்டது.
இதன்படி மும்பை சிறப்பு கோர்ட்டில்
மீண்டும் பெஸ்ட் பேக்கரி வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 2004-ம் ஆண்டு
இவ்வழக்கில் 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 4 பேர்
கைது செய்யப்படாததால் அவர்கள் தலைமறைவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
விசாரணை முடிந்ததும் கடந்த 2006-ம் ஆண்டு மும்பை கோர்ட்டு சஞ்சய் தக்கார்,
பகதூர்சிங் உள்பட 9 பேருக்கு ஆயுதள் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியது.
இதையடுத்து 9 பேரும் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். வழக்கை
விசாரித்த ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
அப்போது மும்பை
சிறப்பு கோர்ட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தக்கார், பகதூர்சிங்
சவுகான், சனாபாய் பரியா, தினேஷ் ராஜ்பர் ஆகிய 4 பேரின் தண்டனையை உறுதி
செய்தது.
ஆனால் சிறப்பு கோர்ட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட
ராஜுபாய் பரியா, பங்கஜ் கோசவி, ஜக்தீஷ் ராஜ்புட், சுரேஷ், ஷைலேஷ் தட்வி
ஆகியோரை விடுதலை செய்தது. இவர் கள் 5 பேர் மீதான குற்றம்
நிரூபிக்கப்படாததால் விடு விக்கப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.
செய்தி;மாலைமலர
http://mugavai-abbas.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக