திங்கள், 22 நவம்பர், 2010

யுஏஇ-க்கு வருகை வந்தார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்

அபுதாபி,நவ.22:அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு வந்தடைந்தார் ஜனாதிபதி பிரதிபாபாட்டீல். அவரது பயணத்தின் வர்த்தகம், முதலீடு மற்றும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. அவருடன் மத்திய இணையமைச்சர் சோலங்கி மற்றும் 3 எம்.பி.,க்களும் உடன் சென்றுள்ளனர். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிரியா உடனான நமது உறவில் எந்தவித பிரச்சனைகள் எதுவும் இல்லை. இந்த பயணத்தின் மூலம் மேலும் உறவு வலுப்பெறும் என்று கூறினார்.

ஜனாதிபதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு சிரியா செல்கிறார். காஷ்மீர் விவகாரம் மற்றும் ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெறுவதற்கு இருநாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சனி, 20 நவம்பர், 2010

மாலேகான் குண்டு வெடிப்புக் காவித் தீவிரவாதி சுவாமி ஆசிமானந்த் கைது!

மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படும் சுவாமி ஆசிமானந்தை சிபிஐ வெள்ளிக் கிழமையன்று கைது செய்தது.
சுவாமி ஆசிமானந்த் கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பித்து வந்தார்.
குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிமானந்த் ஆசிரமம் நடத்தி வருகிறார். நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் இந்த ஆசிரமத்தில் வைத்தே திட்டம் தீட்டப்பட்டது என காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தப் பகுதியில் பழங்குடியினருக்காக பள்ளி ஒன்றையும் ஆசிமானந்த் நடத்தி வருகிறார். கிறிஸ்தவ ஆதிவாசிகளை இந்து மதத்திற்கு மாற்றும் பணியையும் இவர் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

காவித் தீவிரவாத நெட்வொர்க்கின் மூளையாகக் கருதப்படும் சுனில் ஜோஷியுடன் ஆசிமானந்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ முன்னாள் அதிகாரி புரோஹித் மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா ஆகியோருடனும் ஆசிமானந்த்துக்கு தொடர்பு உள்ளதாகக் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்களவராக இருந்து முஸ்லிமாக மாறிய பெண் எழுத்தாளர் எட்டு மாதமாக சிறையில்

சிங்கள பௌத்தராக இருந்து இஸ்லாமியராக மாறி இருக்கும் சர்ச்சைக்கு உரிய எழுத்தாளர் சரா மாலினி பெரேரா துரதிஷ்டமாக இம்முறையும் பெருநாளை சிறையில் கழிக்க வேண்டியவர் ஆகி விட்டார்.


இவர் பஹ்ரெய்னில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பௌத்தராக இருந்து இஸ்லாமியராக மாறியமை எப்படி? என்பதை From Darkness to Light என்கிற நூலில் விபரமாக எழுதி இருந்தார்.

சுமார் எட்டு மாதங்களுக்கு முன் இலங்கை வந்திருந்தபோது நாட்டுக்கும், அரசுக்கும் எதிராக செயற்பட்டார், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறையில் கழித்த இரண்டாவது பெரு நாள் இதுவாகும். இவருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது. எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படுகின்றது.

நேற்றைய பெருநாளின்போது இவரின் பிரிவை கடுமையாக உணர்ந்த குடும்பத்தினர் இவரின் விடுதலைக்காக இறைவனிடம் மன்றாடுகின்றனர்.

வியாழன், 18 நவம்பர், 2010

ஓநாய்களின் பள்ளத்தாக்கு’- பலஸ்தீன் என்ற திரைப்படம் மேலும் இஸ்ரேலுக்கு பலத்த அடி

ஐந்து ஆண்டுகள் இஸ்ரேலிய முற்றுகைக்குல் வதைக்கப்படும் காஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற துருக்கி கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை சித்தரிக்கும் ‘ஓநாய்களின் பள்ளத்தாக்கு’- பலஸ்தீன் என்ற பெயரில் துருக்கியில் ஒரு இராணுவ தாக்குதல் திரைப்படம் தயாரிக்கப்படுள்ளது

இத்திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி வெளியாகிறது. இந்த பெயரில் ஏற்கனவே தொலைக்காட்சி தொடர் ஒன்று துருக்கியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதுடன் அந்த தொலைக்காட்சி தொடர் துருக்கி இஸ்ரேல் உறவில் மேலும் பல விரிசல்களை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன இந்த கப்பலில் இலங்கையை சேர்ந்த இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தமை குறிபிடத்தக்கது

One Man Army, Spy operation போன்ற இராணுவ முறைகளை கையாண்டு துருக்கி எதிரிகளை வேட்டையாடுவது இதில் சிதரிக்கபடுகின்றது சிறப்பு காட்சியாக ஒன்பது துருக்கி நாட்டு முஸ்லிம்களை படுகொலை செய்த flotilla கப்பல் தாக்குதலுக்கு உத்தரவிட்ட இஸ்ரேலிய கொமாண்டோ தலைவர் கொல்லப்படும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாலர்களை பலஸ்தீனின் ஓநாய்கள் என்று வர்ணித்து பெயர் சூட்டியுள்ளமையும் சிறப்பானதாக துருக்கிய மக்கள் தெரிவிக்கின்றனர் விரிவாக பார்க்க Video

ஓநாய்களின் பள்ளத்தாக்கு’-பலஸ்தீன் திரைப்படம் துருக்கி நாட்டுக்கும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகார சபைக்கும் ஏற்பட்டுள்ள முறுகலை தவிர்க்க அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பலத்த அடியாகும் என விமர்சிக்கப்படுகின்றது

அந்த திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் துருக்கியில் தொலைக்காச்சிகள், மற்றும் திரையரங்குகளில் காண்பிக்க படுகின்றது அந்த காட்சிகள் இங்கு பதிவு செய்யப்படுகின்றது

தேங்க்ஸ் டு : M.ரிஸ்னி முஹம்மட் ,OurUmmah.org


திங்கள், 15 நவம்பர், 2010

விலை உயருகிறது வெங்காயம் - கிலோ 60ரூபாய்

உரிப்பவரைக் கண்ணீர் விடவைக்கும் வெங்காயம் இனி அதன் விலையைக் கேட்பவருக்கும் கண்ணில் நீர் சுரக்கவைக்கும் விதமாக மளமளவென்று விலையேறி வருகிறது.

இந்தியாவில் கர்நாடக மாநிலத்திலும்இ மராட்டியத்தின் நாசிக் பகுதியிலும் தான் வெங்காயம் அதிகம் விளைகிறது.

பெங்களூர்இ பகல்கோட்இ பிஜப்பூர்இ தால்வாட்இ கடாக்இ சித்ரதுர்காஇ தேவாங்கர்இ கடாக் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் கர்நாடகாவில் மட்டும் இந்த ஆண்டு 17 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்தது. ஆனால்இ அண்மையில் கர்நாடகாவில் பெய்துவரும் மழை காரணமாக
வெங்காயம் விலை ஏறிக்கொண்டே போகிறது. கடந்த மாதம் வரை கிலோ ரூ.பதினைந்து என்று விற்ற வெங்காயம் தற்போது ரூ.30 ஆகிஇ பின் ரூ. 40 என்று விற்றுவருகிறது.இன்னும் விலை அதிகரித்து ரூ.60 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக கர்நாடகா காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர்.
அண்மை மழையால் வெங்காயப் பயிர்களில் தண்ணீர் தேங்கி பெருமளவு பயிர்கள் நாசமாகிவிட்டன. விளைந்து இருந்த வெங்காயமும் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. கிட்டத்தட்ட 60 சதவீத பயிர்கள் நாசமாகிவிட்ட காரணத்தால் வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.60 வரை உயரலாம் என பெங்களூர் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
பெங்களூர் மார்க்கெட்டுக்கு தினமும் 5 ஆயிரம் டன் வெங்காயம் விற்பனைக்கு வரும் தற்போது இது 2500 டன்னாக குறைந்துவிட்டது. பிஜப்பூரில் இருந்து தினமும் 3 ஆயிரம் டன் விற்பனைக்கு வரும். தற்போது 1000 டன்னாக குறைந்துவிட்டது.
மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியிலும் அதிக அளவில் வெங்காயம் விளைகிறது. ஆனால்இ அங்கு உற்பத்தியாகும் வெங்காயம் ஜனவரி மாதம்தான் சந்தைக்கு வரும். எனவே ஜனவரி 15-ந்தேதிக்கு பிறகு வெங்காயம் விலை குறையலாம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்

நிவாரணக்குழு காஸா செல்ல எகிப்து அனுமதிக்க வேண்டும் - ஐரோப்பிய அமைப்பு

காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை நீக்கும் பொருட்டு 'ஹோப்'- எதிர்பார்ப்பு என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள மனிதாபிமான நிவாரண உதவிக்குழு ஈத் உல் அழ்ஹா பெருநாள் தினத்துக்கு முன்பு காஸாவுக்குள் செல்ல எகிப்திய அதிகாரத் தரப்பு அனுமதியளிக்க வேண்டும் என ஐரோப்பிய மனிதாபிமான உதவிக்கான அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை (14.11.2010) புருஸல்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் மேற்படி அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையில்இ மனிதாபிமான நிவாரண உதவிகள் காஸா மக்களிடம் உரிய வேளையில் சென்றடைவதற்குரிய சகல வசதிகளையும் செய்து தருவதற்கு எகிப்துஇ லிபியாஇ கிரீஸ் முதலான நாடுகள் முன்வரவேண்டும் என்றும்இ குறிப்பாக தமது நிவாரணக் கப்பல் லிபிய-எகிப்தியக் கடற்பரப்பில் நிலைகொள்ளும் ஒருமாத காலத்திற்கு உரிய பாதுகாப்பினை உறுதிசெய்யவும் மேற்படி நாடுகள் முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஈதுல் அழ்ஹா பெருநாளை முன்னிட்டு எகிப்திய அதிகாரத் தரப்பு ரஃபா எல்லைக் கடவையை மூடிவிடாமல் மனிதாபிமான நிவாரண உதவிக் குழுவினரை காஸாவுக்குள் செல்ல அனுமதியளிக்க வேண்டும் என்றும்இ முற்றுகைக்குள்ளாகித் தவிக்கும் காஸா மக்கள் மிகுந்த தேவையுடையவர்களாக இருப்பதால்இ இத்தகைய நிவாரண உதவிகள் அவர்களைச் சென்றடைவது இன்றியமையாததாகும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மேலும்இ இத்தகைய நிவாரண உதவிக் குழுக்களின் நோக்கம் அநீதியான முறையில் ஐந்து வருடகாலமாகத் தொடரும் பலஸ்தீன் மக்கள் மீதான மனிதாபிமானமற்ற முற்றுகையை முறியடித்துஇ அம்மக்களுக்கு உதவுவதுதான். இத்தகைய உன்னதமான நோக்கம் நிச்சயம் அனைத்துத் தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில்இ ஈதுல் அழ்ஹா பெருநாளை முன்னிட்டு திங்கட்கிழமை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ரஃபா எல்லைக்கடவை மூடப்படும் என எகிப்திய அதிகாரத் தரப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நாட்களில் காஸாவுக்குள் செல்ல எந்தவொரு நிவாரண உதவிக் குழுவுக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என்பதில் எகிப்திய அதிகாரத் தரப்பு விடாப்பிடியாக உள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகத் தெரியவந்துள்ளது.

ஒலிவ மரங்களைக் கொளுத்திவரும் யூத ஆக்கிரமிப்பாளர்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.11.2010) நப்லஸ் பிரதேசத்தில் உள்ள ஸாலிம் கிராமத்தில் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான ஏராளமான ஒலிவ மரங்களை சட்டவிரோதக் குடியேற்றத்தில் வசிக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்கள் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.

உள்ளூர்வாசிகள் சாட்சியமளிக்கையில், கிராமத்தை அடுத்து நிறுவப்பட்டுள்ள சட்டவிரோத இஸ்ரேலியக் குடியிருப்பில் வசித்துவரும் ஆயுததாரிகளான யூத ஆக்கிரமிப்பாளர் குழுவொன்று திடீரென்று தமது ஊருக்குள் நுழைந்து சுமார் 15 தூனம் (1 தூனம் - 1000 சதுர அடிகள்) பரப்புள்ள ஒலிவ் தோட்டங்களைத் தீவைத்துக் கொளுத்தினர் என்றும், அப்பகுதியெங்கும் தீ பரவியதில் நூற்றுக்கணக்கான ஒலிவ மரங்கள் கருகிப் போயின என்றும் தெரிவித்துள்ளனர். யூத ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடித்தனத்தால் தமது விளைநிலத்தில் ஏற்பட்ட இப் பாரிய சேதத்தின் விளைவாகப் பலஸ்தீன் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரும் என உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள சட்டவிரோதக் குடியிருப்புக்களில் வசிக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்கள் பலஸ்தீன் விவசாய நிலங்களில் இது போன்ற அழிப்பு வேலைகளைச் செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.