சனி, 6 ஜூலை, 2013

பெங்களுரு குண்டு வெடிப்பு: கர்நாடக முதலமைச்சரிடம் தமிழக முஸ்லிம் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு. அப்பாவிகள் தண்டிக்கப்பட கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதி

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களுருவில் கடந்த ஏப்ரல் 17 அன்று மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு முன்பு குண்டு வெடித்தது. கர்நாடகத்தில் மே 5ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பில் 16 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 13 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டனர். கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மிக கடுமையாக சித்ரவதைச் செய்யப்பட்ட செய்திகளும் வந்தன. இந்த பின்னணியில் பெங்களுருவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்ற கைதுகள் குறித்து கர்நாடக முதலமைச்சர் சீத்தாராமைய்யாவை சந்தித்து முறையிட தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு முடிவுச் செய்தது. கர்நாடக முதலமைச்சரை சந்திப்பதற்கான முயற்சியை எடுக்கும் பொறுப்பு மனிதநேய மக்கள் கட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா எடுத்துக் கொண்ட முயற்சிகளின் வாயிலாக கர்நாடக சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினர் நஸீர் அஹ்மது வழியாக கர்நாடக முதலமைச்சரை சந்திப்பதற்கான அனுமதிப் பெறப்பட்டது.

கடந்த சூலை 4ம் தேதி மாலை 6 மணிக்கு கர்நாடக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வமான இல்லமான கிருஷ்ணாவில் முதலமைச்சரை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனிபா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பாக எ.எஸ். இஸ்மாயீல், சோசியல் டிமோகிரடிக் பார்டி ஆப் இந்தியா சார்பாக மவ்லவி தெஹ்லான பாகவி, இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எஸ்.எம். பாக்கர், ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் சார்பாக ஷப்பீர் அஹ்மது, வெல்பேர் பார்டி ஆப் இந்தியா சார்பாக எஸ்.என். சிச்கந்தர், தாருல் இஸ்லாம் அறக்கட்டளை சார்பாக எம். குலாம் முஹம்மது, ஜம்யிய்யத்துல் உலமா சார்பாக மவ்லவி மன்சூர் காஷிபி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் சார்பாக அ.ச. உமர் பாரூக், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் சார்பாக மவ்லவி தர்வேஷ் ரஷாதி ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு கர்நாடக முதலமைச்சரை சந்திக்க மாலை 5 மணியளவில் முதல்வர் இல்லத்திற்கு வந்தார்கள். தமிழக முஸ்லிம் பிரதிநிதிகளை நஸீர் அஹ்மது எம்.எல்.சி. தலைமையில் கர்நாடக காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவின் பல்வேறு பொறுப்பாளர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

கர்நாடக முதலமைச்சரின் கூட்ட அரங்கில் சிறுபான்மை மக்களின் விவகாரங்கள் தொடர்பான கலந்தாலோசனை கூட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடான சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் சீத்தராமைய்யா, கர்நாடக மாநில அமைச்சர்கள் கமருஸ் ஸமான் மற்றும் ஹாரீஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜாபர் ஷரீப் மற்றும் சி.எம். இப்ராஹீம், கர்நாடகத்தின் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள், சிறுபான்மை துறை செயலாளர் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்குக் கொண்டார்கள்.
சந்திப்பின் தொடக்கத்தில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாவை முதலமைச்சருக்கு அறிமுகப்படுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம். இப்ராஹீம் தமிழகத்தில் இருந்து இரண்டு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளார்கள். அவர்களுடன் தமிழக முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் வந்துள்ளார்கள். முதலில் அவர்களது கருத்தைக் கேட்கலாமே என்று முதலமைச்சரிடம் தெரித்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாவிடம் பேசும்படி கேட்டுக் கொண்டார்.

பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா முதலில் தன்னுடன் வந்த கூட்டமைப்பின் பல்வேறு தலைவர்களை கர்நாடக முதலமைச்சருக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் பேசுகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக மிக முக்கிய கோரிக்கையை உங்களிடம் முன்வைப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் வேளையில் ஏப்ரல் 17ல் பெங்களுரு மல்லேஸ்வரத்தில் பா.ஜ.க. அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 13 அப்பாவி முஸ்லிம்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளார்கள். எங்களுடைய விசாரணையில் கைதுச் செய்யப்பட்ட தமிழக முஸ்லிம் இளைஞர்களுக்கும் இந்த குண்டுவெடிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. கைதுச் செய்யப்பட்ட இளைஞர்களை இந்த வழக்கை விசாரிக்கும் பெங்களுரூ காவல்துறையின் குற்றப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மிக மோசமான சித்ரவதைக்கு இலக்காகியுள்ளார்கள். ஒரே நேரத்தில் மலமும் விந்தும் வெளிவரும் வகையில் பம்பாய் கட்டு பாணியில் முஸ்லிம் இளைஞர்களை சித்ரவதைச் செய்து அவர்களிடம் கட்டாய வாக்குமூலம் வாங்கியுள்ளார்கள் என்பதை நான் நேரடியாகவே அறிந்தேன். இந்த குண்டு வெடிப்பை உண்டாக்கிய செல்போனின் சிம்கார்டு கர்நாடக கேரளா எல்லை பகுதியைச் சேர்ந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவருக்குச் சொந்தமானது. ஆனால் அவர் தனது செல்பேசி தொலைந்துப் போனதாக கூட புகார் தெரிவிக்காத நிலையில் அவரை இந்த வழக்கில் பெங்களுரூ காவல்துறை விசாரிக்கவேயில்லை. மேலும் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவுகளையும் முறையாக விசாரிக்கவில்லை. இது தொடர்பாக விரிவாக எங்கள் கோரிக்கை மனுவில் அளித்துள்ளோம். எனவே இந்த வழக்கின் விசாரணையை தேசீய புலனாய்வு முகமை (என்ஐஏ)விடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் எங்கள் இளைஞர்களை காட்டுமிராண்டித்தனமாக விசாரித்த பெங்களுரூ நகர குற்றப் பிரிவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தான் இந்த அத்துமீறல்கள் முடிவுக்கு வந்ததாகவும் பேராசிரியர் குறிப்பி்ட்டார்.

அடுத்து பேசிய மு. குலாம் முஹம்மது தற்போது இந்த வழக்கு இரு மாநிலங்கள் தொடர்புடையதாக காட்டப்பட்டுள்ளதால் இதனை தேசீய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டும். அதற்கான அதிகாரமும் மாநில அரசுக்கு உண்டு என்று கூறினார். மேலும் கைதுச் செய்யப்பட்ட தமிழக இளைஞர்களின் வீடுகளுக்கு வந்த பெங்களுரூ காவல்துறையினர் அங்கு சந்தேகத்திற்கிடமான பொருளை வைத்துவிட்டு அங்கிருந்து எடுக்கப்பட்டது போல் நாடகம் ஆடினார்கள். இதனைத் தடுத்த ஒரு வயதான பெண்மணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் சீத்தராமைய்யா முஸ்லிம் தலைவர்களிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்டார். ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட பல தவறுகளை குறுகிய காலத்தில் உங்கள் ஆட்சி சரி செய்துள்ளது. இதே போல் இந்த பிரச்னையிலும் நீதி வேண்டும் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா குறிப்பிட்ட போது அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்பட கூடாது என்றும் இது தொடர்பாக உரிய விசாரனை செய்து நீதிக்கு வழி வகுப்பதாக முதலமைச்சர் சீத்தாராமய்யா குறிப்பிட்டார்.

கர்நாடக முதலமைச்சர் சீத்தராமைய்யா மிக சகஜமாக அனைத்து தலைவர்களிடமும் கைக்குலுக்கி அனுப்பி வைத்தார்.

____________________________________________
கர்நாடகத்தில் முஸ்லிம் மணமகளுக்கு ரூ50 ஆயிரம் அரசு நிதி உதவி
கர்நாடக முதலமைச்சருடான கூட்டம் தொடங்குவதற்கு முன்பு முதலமைச்சரின் கூட்ட அறைக்கு செல்லும் முன் வழியில் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை பார்த்த முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம். இப்ராஹீம் மிகவும் மகிழ்ச்சி அடைந்து பெயர் சொல்லி அழைத்து கட்டி தழுவி ஆலிங்கானம் செய்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பேராசிரியர் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ. மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பல நன்மைகளைச் செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தண்டனை முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் சீத்தராமைய்யா முதல் வேலையாக நீக்கினார். பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் கப்ருஸ்தான் பராமரிப்பிற்கும் ரூ300 கோடியை கர்நாடக அரசு ஒதுக்கியிருப்பதாகவும் முஸ்லிம் பெண்களுக்கான திருமண உதவி ரூ 50000 அளிப்பதாகவும் மொத்தத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவளிக்கும் அரசாக சீ்த்தாராமைய்யா தலைமையிலான அரசு செயல்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்


படங்கள்: அபூபக்கர்
http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=3412:2013-07-05-15-57-28&catid=58:2009-10-11-12-42-41

செவ்வாய், 25 ஜூன், 2013

மோடியின் காசுக்கு விலை போகும் பத்திரிக்கைகள்!​


மாலை மலர் இணையதளத்தில்"உத்தரகாண்டில் தவித்த 15,000 குஜராத் பக்தர்கள் மீட்பு" என்ற தலைப்பில் ஒரு செய்தி.

உத்தரகாண்ட் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் இராணுவமும் தன்னார்வலர்களும் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் நேரடிக் காட்சிகளாகவே வந்துகொண்டிருக்கும் நிலையில், ஒரேயடியாக குஜராத்தைச் சேர்ந்த 15,000 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சொந்த இடம் அழைத்து வரப்பட்டதான அச்செய்தி மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது.
ஆனால், செய்தியின் உள்ளே வாசித்தபோது இப்படியும் பத்திரிக்கைகள் மக்களின் காதில் பூச்சுற்றுமா என்ற ஆச்சரியமே மேலோங்கியது.
மீட்கப்பட்ட பக்தர்களைக் குஜராத் அழைத்து வந்தது தொடர்பாக செய்தியினுள் மாலை மலர் குறிப்பிட்டுள்ள வா
க்கியம் கீழே:
"சுமார் 80 டொயோட்டா இன்னோவா கார்கள் வரவழைக்கப்பட்டன. அதில் ஏற்றப்பட்ட பக்தர்கள் டேராடூன் வந்தனர். அங்கிருந்து அவர்கள் 4 சிறப்பு விமானம் மூலம் குஜராத் போய் சேர்ந்து விட்டனர். மேலும் 25 ஏ.சி. பஸ்கள் மூலம் குஜராத் பக்தர்களில் மற்றொரு குழுவினர் டெல்லி அழைத்து செல்லப்பட்டனர்."
ஒரு இன்னோவா காரில் 15 பக்தர்களை அடித்துத் திணித்து கொண்டு வந்ததாக கணக்கிட்டாலும் 80 x 15 = 1200 பேர்.
ஒரு ஏ சி பஸ்ஸில் 50 பேர் எனக் கணக்கிட்டாலும் 25 x 50 = 1250 பேர்
மொத்தம் 2450 பேர் தான் வருகிறது. சரி இன்னோவா காரில் 25 பேர் என்றும் ஏ சி பஸ்ஸில் 100 பேர் என்றும் கணக்கிடுவோம். அப்படிப்பார்த்தாலும் 4750 பேர் தான் வருகிறது. எப்படியோ, 5000 பேர் போனார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இன்னும் 10000 பேர் எப்படி போய் இருப்பார்கள் என்று புரியவில்லை. கணக்கு எங்கோ இடிக்குது.
என்னமா கலர் கலர் ரீல் விடுறீங்க. காசு வாங்கிட்டு எழுதுங்க. அதுக்காக இப்படியா. முடியல!
இதையே தினமலர், "இந்த வேகம் யாருக்கப்பா வரும்.... 15000 பேரை மீட்ட 'ரேம்போ மோடி'" என்ற தலைப்பில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளது.
"இதற்கென 80 டோயோட்டா இன்னோவோ கார்கள் வரவழைக்கப்பட்டன. இதில் பக்தர்கள் ஏற்றி டேரோடூனுக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் இவர்கள் 4 விமானம் மூலம் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை அழைத்து வர 25 சொகுசு பஸ்கள் தயார் நிலையில் இருந்தன . மொத்தம் 15 ஆயிரம் குஜராத்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மோடி தானே களத்தில் இறங்கி தமது மாநில மக்களை மீட்டு வந்த சம்பவம் இம்மாநில மக்களின் பெரும் பாராட்டை பெற்றுள்ளது."
மீட்பு இடத்திலிருந்து 80 இன்னோவா கார்களில் டேராடூன் வரை. டேராடூனிலிருந்து 4 விமானங்களில் டெல்லி வரை. டெல்லியிலிருந்து 25 சொகுசு பேருந்துகளில் குஜராத்திற்கு!

அப்படி எடுத்துக்கொண்டாலும், 4 விமானம் 15,000 பேரை டெல்லி கொண்டு வர எத்தனை முறை வந்து திரும்பியிருக்கும். 25 பேருந்துகள் டெல்லியிலிருந்து குஜராத்திற்கு 15000 பேரை ஏற்றி செல்ல எத்தனை முறை வந்து திரும்பியிருக்கும். 80 இன்னோவாக்கள் உத்தர்காண்டிலிருந்து டேராடூனுக்கு 15000 பேரைக் கொண்டு செல்ல எத்தனை முறை வந்து திரும்பியிருக்கும்?
மோடி ரேம்போவோ, சில்வஸ்டர்ஸ்டாலனோ, ஹிட்லரோ - யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். மோடியின் விளம்பர காசுக்கு, கொஞ்சம் கூட மானம் சூடு சுரணையின்றி சுய அறிவை மொத்தமாக இழந்து துதிபாடும் இப்பத்திரிக்கைகளின் மாமா வேலைக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என்பதுதான் தற்போதைய கேள்வி!
thanks : இந்நேரம்.
http://inneram.com/
- See more at: http://www.importmirror.com/2013/06/blog-post_25.html#sthash.eCbsPckF.dpuf

செவ்வாய், 28 மே, 2013

உலகிலேயே இந்துக்கள் மகிழ்ச்சியாக வாழும் தேசம் மலேசியா

பிரபல ‘மக்கள் ஓசை’ தமிழ் நாளேடு தலையங்கம்
சென்ற 17.05.2013 அன்று தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மலேசியாவில் இந்தியர்கள் பாதிக்கப்படுவதாக ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக அந்த அறிக்கை இருந்தது. இந்த அறிக்கை மலேசியாவில் உள்ள இந்தியர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் பல்வேறு வேலைகளுக்கு தொழிலாளர்களாக இந்தியத் தமிழர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
1957ல் மலேசியா, சுதந்திரம் பெற்றபோது அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், பெருந்தன்மையோடு அங்கு குடியேறிய இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கினார்.
இன்று மலேசியாவில் 7.5 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் தமிழர்கள் ஆவர். மதரீதியாகப் பார்த்தால் அவர்களில் 4 சதவீதம் பேர் இந்துக்களாகவும், 2.5 சதவீதம் பேர் முஸ்லிம்களாகவும், மீதி 1 சதவீதத்தினர் கிருத்தவர்கள் மற்றும் சீக்கியர்களாகவும் வாழ்கிறார்கள்.
அங்கு ஐந்து தமிழ் தினசரிகள் உட்பட ஏராளமான தமிழ் செய்தி ஏடுகள் வெளிவருகின்றன. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழில் வெளிவருகின்றன. அங்குள்ள அரசு வேலை வாய்ப்புகளில் முக்கியப் பொறுப்புகளில் இந்துக்கள் உள்ளனர். மலேசிய வழக்கறிஞர்களில் இவர்களின் சதவீதம் அதிகமாகும். அந்த நாட்டின் பூர்வீக மலாய் முஸ்லிம்களைவிட பல நல்ல தொழில்களையும் வசதிகளையும் பல துறைகளில் பெற்றிருக்கிறார்கள்.
தற்போதைய புதிய அரசில் 6 இந்துக்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இந்திய முஸ்லிம்களை விட இந்தியாவிலிருந்து குடியேறிய இந்துக்களுக்கு அங்கு அரசியல், சமூக மரியாதைகள் அதிகம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
மலேசியாவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூகங்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும்கூட, அங்கு குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். இந்தியப் பொதுமக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
இந்தியாவுக்கு வெளியே இந்துக்கள் மகிழ்ச்சியாக, வளமுடன் வாழும் நாடு மலேசியாதான்!
இதை உறுதிப்படுத்தும் விதமாக மலேசிய தமிழ் நாளிதழான ‘மக்கள் ஓசை’யில் அதன் ஆசிரியர் ராஜன் அவர்கள் எழுதிய தலையங்கத்திலிருந்து சில பகுதிகளை இங்கே வெளியிடுகிறோம்.
இந்தப் பத்திரிகையானது நடுநிலை நாளிதழாக கூறிக்கொண்டாலும், எதிர்க்கட்சி செய்திகளுக்கும், இந்துத்துவ செய்திகளுக்கும் முன்னுரிமைக் கொடுக்கிறது என்ற கருத்தும் அங்கே நிலவுகிறது.
அப்பத்திரிக்கையின் தலையங்கம் பாஜகவு க்கு மட்டுமல்ல; மலேசிய இந்துக்களின் வாழ்வுரிமை குறித்த பல அபாண்டக் குற்றச்சாட்டுகளுக்கும் மனசாட்சியோடு சாட்டையடி தருகிறது. இனி ‘மக்கள் ஓசை’யைப் படியுங்கள்...
“எந்த நாட்டிலும் உள்ள ஒரு சிறுபான்மை சமூகம் அடைய முடியாத வசதிகளைப் பெற்று, நாம் வாழும் தேசம் இது என்பதை மனசாட்சியுடன் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அரசியல் சட்டத்திலேயே நமக்குரிய அடிப்படை உரிமைகள் நிலை நாட்டப்பட்டு கருத்துச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரத்தை வழங்குகின்ற நாடு இது. கூடவே இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட அற்புதமான தாய்த்திருநாடு இது. நமது வாழ்வும் தாழ்வும் இங்கேதான். இங்கே உழைக்கத் தயாராக இருந்தால், உன்னதமான வாழ்க்கை நமக்குச் சொந்தம் என்பதை அனுபவப்பூர்வமாகத் தந்திருக்கிற நாடு இது. உங்கள் வளர்ச்சியைத் தடுக்க இங்கே யாருமில்லை.
தமிழ்நாட்டில் கூட, இப்படிப்பட்ட கோவில்கள் உண்டா? என்று வியக்கும் அளவிற்கு, பளிங்குக் கல்லாலான ஆலயங்களில் நமது தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் அழமைகக் காண்கிறோம். இவ்வளவு அழகான தரமிக்க கோவில்கள் உங்கள் நாட்டில் உண்டா என்று தமிழர்கள் வாழும் நாடுகளுக்கே நம்மால் சவால்விட முடியும். நிறைவான வருமானம், வசதியான வீடு, வாகனம் என்று ஒன்றல்ல இரண்டு மூன்று என்கின்ற அளவில், நாம் உழைத்து ஒரு தரமான வாழ்க்கையை அனுபவிக்கும் பேறு கிடைத்திருக்கிறது.
55 ஆண்டுகள் இந்த அரசாங்கம் நமக்கு எதுவுமே செய்யவில்லை என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டால், மனசாட்சி உள்ள மலேசிய இந்தியர்கள் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படியென்றால், தேசத்தந்தை துங்கு காலம் தொடங்கி, நஜிப் காலம் வரை, நாம் ஏதோ இருண்ட காட்டில் வாழ்வதாக அர்த்தமாகி விடும். இந்த நூற்றாண்டு காலம், இங்கு ஆலயங்களோ, தமிழ்ப் பள்ளிகளோ, இந்தியர்கள் குடியிருக்க வீடுகளோ, அடிப்படை வசதிகளோ இல்லாமல் நாம் வாழ்கிறோம் என்றாகி விடும்.”
& ஆசிரியர்,
மக்கள் ஓசை 5.5.2013, மலேசியா
மக்கள் ஓசை நாளிதழ் உண்மையை உலகிற்கு கூறிவிட்டது. பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத அமைப்புகளும், தமிழின உணர்வாளர்களும் இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து வரும் இந்து சமூக மக்களை இந்தியாவின் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ‘ஹின்ராப்’ போன்ற அமைப்புகள் தவறாக வழிநடத்தி கடந்த காலங்களில் அவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உருவாக்கிவிட்டன. இனியாவது அவர்களின் பாசிச வழிகாட்டுதல்களிலிருந்து விடுபட்டு பெரியாரிய, தமிழ் & பாரம்பரிய பண்பாட்டு சிந்தனைகளோடு அவர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைத்து கொள்ளவேண்டும். அதுவே அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாக இருக்கும்.
நன்றி  :http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=3342:2013-05-26-17-01-36&catid=58:2009-10-11-12-42-41

சனி, 11 மே, 2013

கட்சியாவது.... கத்தரிக்கையாவது.... உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் : நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் உறுதி!


(08/05/2013) நாடாளுமன்றக் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் "வந்தே மாதரம்" பாடல் ஒலித்தபோது, கூட்டத்திலிருந்து "வெளி நடப்பு" செய்த BSP கட்சியின் ஷபீகுர் ரஹ்மான் எம்பி., அதற்காக "மன்னிப்பு" கேட்க முடியாது என்றார்.

"வந்தே மாதரம்" பாடல் ஒளிபரப்பின் போது, நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தமைக்காக "மன்னிப்பு" கேட்க வேண்டும், என்ற சபாநாயகர் மீரா குமாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த ஷபீகுர் ரஹ்மானுக்கு, தற்போது கட்சித் தலைமையின் மூலம் நெருக்குதல் தரப்பட்டு வருகிறது.

இறைவனைத்தவிர எவரையும் - எப்பொருளையும் வணங்கக் கூடாது, என்ற கொள்கை உறுதி கொண்ட இஸ்லாமியர்கள் "மண்ணை வணங்க" வலியுறுத்தும் வந்தே மாதரம் பாடலை, ஒரு போதும் பாட முடியாது என்பதுடன், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எழுந்து நிற்கவும் முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான்.

தேசிய கீதம் என்பது வேறு, இறைவனுக்கு இணை கற்பிக்கும் வாசகம் கொண்ட "வந்தே மாதரம்" பாடல் வேறு என்றார், அவர்.
செய்தி சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ஷபீக், இதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்த அவர், சபாநாயகர் மட்டுமல்ல கட்சித்தலைமை சொன்னாலும், என் உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் என்றார்.

எனினும், நாடாளுமன்றத்தை அவமதிக்கும் நோக்குடன் தாம் வெளி நடப்பு செய்யவில்லை, எனக்கூறிய அவர், பல ஆண்டுகளாக எம்பி.யாக இருக்கும் தான், "வந்தே மாதரம்" பாடல் நிகழ்ச்சிக்கு, முன் கூட்டியே வெளியில் சென்று விடும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்த போதும், தவிர்க்க முடியாமல் இப்படி ஆகி விடுகிறது,என்றார்.
கடந்த 1997ம் ஆண்டிலும், நாடாளுமன்றத்தை விட்டு தாம் வெளி நடப்பு செய்ததை சுட்டிக் காட்டிய அவர், பதவிக்காக ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான் பர்க்.
- நன்றி மறுப்பு !

புதன், 24 ஏப்ரல், 2013

இஸ்லாமிய பெண்களே எச்சரிக்கை !!! எச்சரிக்கை !!!!

இஸ்லாமிய பெண்களே எச்சரிக்கை !!! எச்சரிக்கை !!!!
போலி ஹிந்து முன்னணி RSS சங்கபரிவார் கும்பல் இஸ்லாமிய பெண்களை ஹிந்து இளைஞர்கள் காதலிப்பது போல நடித்து கற்பமாக்கி கைவிட்டால் ஒரு லட்சம் பணமும் மற்றும் போலீஸ் வழக்கு உள்ளிட்ட செலவுகளைவும் ஏற்றுகொள்வதாக ரகசிய செயல் திட்டம் வைத்து செயல்படுத்தி வருகின்றனர்.இதுபோல் செயல்படும் கயவர்களை அடையாளம் கண்டு சட்டமும்,-நீதியும் -அரசும் தகுந்த தண்டனை வழங்கி தன்டிக்கணும்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தகுந்த நீதி கிடைக்னும்.
முஸ்லிம் சகோதிரிகளே சிந்தியுங்கள் rss ஹிந்துமுன்னணி சொன்னது நினைவானதா முஸ்லிம் பெண்ணின் வயிற்றில் குழந்தையே கொடுத்தால் ஒரு லட்சம் ருபாய் பரிசு என்று காவிகள் சொல்லியது நினைவானதா ஏன் பலதடவை நாங்கள் சொல்லியும் கேட்கவில்லை உங்களுக்கு நடு வீதியில் நிற்ப்பதுதான் உங்களுக்கு பிடிக்குதா இஸ்லாத்தை விடவும் ஈமானை விடவும் காதல் முக்கியம்மா இப்போது காலில் விழுவது யார் கெஞ்சுவது யார் உன்னை பெற்ற பெற்றோர்களை விட காதல் முக்கியம்மா இப்போதாவது திருந்துவியா அல்லது நீ நடுத்தெருவில் நிப்பேன் என்று முடிவெடுத்தல் அழிவது நீயே சஹோதிரி சிந்தியுங்கள் காவிகள் வலையில் சிக்காமல் இருங்கள் இது ஒன்றல்ல இன்னும் இதுப்போன்ற பல சஹோதிரிகளின் வாழ்க்கை சிரளிந்ததே பெற்றோர்களே உங்களின் பிள்ளைகளை கவனியுங்கள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

பர்மா முஸ்லிம்களைக் காக்கக் கோரி தமுமுக ஆர்பாட்டம் !

கடந்த சில நாட்களாக பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம்கள் குறித்து அங்கிருக்கும் நம் உறவினர் ஏதேனும் செய்யுங்கள் என நம்மிடம் மனம் வருந்திய போது இதை நாம் தமுமுகவின் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் ! அல்ஹம்து லில்லாஹ்.சகோதரர் அன்சாரி அவர்கள் இதை உடனடியாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுத்து ஆர்பாட்டத்தை அறிவித்ததுடன் நம்மையும் தொடர்பு கொண்டு அதை தெரிவித்தார்.
இதை அடுத்து சென்னையில் நேற்று பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம்களைக் காக்க மத்திய அரசையும் , ஐ.நா.வையும் கோரியும் , மஸ்ஜிதுகளையும் மதரசாக்களையும் குறி வைத்து கொளுத்தும் பவுத்த இன வெறி அரசிக் கண்டித்தும் தமுமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது!
இதில் மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களும் , ஹாஜாகனி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் நான் , அப்துல் ஹமிது ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினோம் !
நீண்ட நாட்களுக்குப் பின் பர்மா முஸ்லிம்களுக்காக் தமுமுகவின் போராட்டக் களத்தில் கலந்து கொண்டது ஆறுதலாய் இருந்தது!

ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ் தைமியா , ஹாருன் ரசித் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் , வாடா சென்னை தென் சென்னை மாவட்ட நிர்வாகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆவேசத்துடன் பர்மாவுக்கு எதிராக முழங்கினர்!.



புதன், 3 ஏப்ரல், 2013

விசாரணை கைதிகளாக சிறையில் வாடுபவர்களை மீட்க புதிய அமைப்பு : மார்கண்டேய கட்ஜு தொடங்கினார்


புதுடெல்லி, ஏப். 3-

சந்தேகத்தின் பேரில் நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டவர்களை சட்டரீதியாக மீட்க இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக புதுடெல்லியில் பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

சந்தேகத்தின் அடிப்படையிலும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் குற்றவாளியாக இருந்தால், அந்த சமுதாயத்தில் உள்ள அனைவருமே குற்றவாளிகள்தான் என்ற எண்ணத்தில் இன்று சிறுபாண்மையினர் பலர் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பு உள்ளிட்ட தீவிரவாத செயல்கள் எப்போது நிகழ்ந்தாலும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாரால் முடிவதில்லை. உடனடியாக சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து அவர்களை சிறைகளில் அடைக்கின்றனர்.

இப்படி ஆண்டு கணக்கில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கவும் 'கடைசி சேர்விடத்திற்கான நீதி மன்றம்' (தி கோர்ட் ஆப் லாஸ்ட் ரிசல்ட்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் பிரபல வழக்கறிஞர் மஜீத் மேமன், பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் உள்பட பலர் என்னுடன் சேர்ந்து பணியாற்றுவார்கள்.

1948-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கிரிமினல் வழக்கறிஞர் எர்ல் ஸ்டாண்லி கார்ட்னர் என்பவர் ஏற்படுத்திய அமைப்பு இந்த அமைப்பை உருவாக்கும் ஊக்கத்தை அளித்தது.

தவறே செய்யாமல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நபர்களின் தண்டனையை ரத்து செய்யும்படி ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள் ஆகியோரிடம் முறையீடு செய்து கைதிகளை விடுதலை செய்ய தேவையான அனைத்தையும் எங்கள் அமைப்பின் மூலம் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி :  http://www.maalaimalar.com/2013/04/03043026/Katju-launched-organisation-to.html
நன்றி  : http://www.facebook.com/mohaashik (MuhammadAshik Bin HabibMuhammad (உலகக்குடிமகன்)