சனி, 11 மே, 2013

கட்சியாவது.... கத்தரிக்கையாவது.... உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் : நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் உறுதி!


(08/05/2013) நாடாளுமன்றக் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் "வந்தே மாதரம்" பாடல் ஒலித்தபோது, கூட்டத்திலிருந்து "வெளி நடப்பு" செய்த BSP கட்சியின் ஷபீகுர் ரஹ்மான் எம்பி., அதற்காக "மன்னிப்பு" கேட்க முடியாது என்றார்.

"வந்தே மாதரம்" பாடல் ஒளிபரப்பின் போது, நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தமைக்காக "மன்னிப்பு" கேட்க வேண்டும், என்ற சபாநாயகர் மீரா குமாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த ஷபீகுர் ரஹ்மானுக்கு, தற்போது கட்சித் தலைமையின் மூலம் நெருக்குதல் தரப்பட்டு வருகிறது.

இறைவனைத்தவிர எவரையும் - எப்பொருளையும் வணங்கக் கூடாது, என்ற கொள்கை உறுதி கொண்ட இஸ்லாமியர்கள் "மண்ணை வணங்க" வலியுறுத்தும் வந்தே மாதரம் பாடலை, ஒரு போதும் பாட முடியாது என்பதுடன், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எழுந்து நிற்கவும் முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான்.

தேசிய கீதம் என்பது வேறு, இறைவனுக்கு இணை கற்பிக்கும் வாசகம் கொண்ட "வந்தே மாதரம்" பாடல் வேறு என்றார், அவர்.
செய்தி சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ஷபீக், இதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்த அவர், சபாநாயகர் மட்டுமல்ல கட்சித்தலைமை சொன்னாலும், என் உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் என்றார்.

எனினும், நாடாளுமன்றத்தை அவமதிக்கும் நோக்குடன் தாம் வெளி நடப்பு செய்யவில்லை, எனக்கூறிய அவர், பல ஆண்டுகளாக எம்பி.யாக இருக்கும் தான், "வந்தே மாதரம்" பாடல் நிகழ்ச்சிக்கு, முன் கூட்டியே வெளியில் சென்று விடும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்த போதும், தவிர்க்க முடியாமல் இப்படி ஆகி விடுகிறது,என்றார்.
கடந்த 1997ம் ஆண்டிலும், நாடாளுமன்றத்தை விட்டு தாம் வெளி நடப்பு செய்ததை சுட்டிக் காட்டிய அவர், பதவிக்காக ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான் பர்க்.
- நன்றி மறுப்பு !

கருத்துகள் இல்லை: