இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
வியாழன், 5 மார்ச், 2009
துபாய்: இந்திய பாஸ்போர்ட் சேவை தனியார் வசம்
பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட சேவைகளை விரைவாகப் பெற அமீரகத்தில் இச்சேவைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச்சேவை குறித்து இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி செய்தியாளர்களிடம் விளக்கினார்.
இதற்கான முதல் அலுவலகம் துபாயில் புதன்கிழமை துவக்கப்பட்டுள்ளது. இந்த வலுவலகம் துபாய் தேரா அல் ஒவைஸ் பில்டிங், நிஸான் சர்வீஸ் சென்டர் அருகில், அறை எண் 101 ல் அமைந்துள்ளது.
அமீரக போஸ்டல் நிறுவனம் (எம்போஸ்ட்) இந்திய தூதரக அலுவலகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தந்தின் அடிப்படையில் இச்சேவை துவங்கப்பட்டுள்ளது. இவ்வலுவலகம் காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை இயங்கும்.
மேலும் விபரமறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 600 522229 அல்லது http://www.ipavsc.com/ இணையத் தளத்தை நாடலாம்.
அமீரகத்தில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க வேண்டிய எம்போஸ்ட் சேவை மையங்கள்:
101,Al Owais building, Behind Arabian Automobiles.
Deira, Dubai
அட்டாக் !!!

இருதயம் என்பது நமது உடலுக்கு ஒரு நிமிடத்தில் சராசரியாக 72 முறை ரத்தத்தை செலுத்தும் தசைநார்களால் உருவான உறுப்பு. இருதய தசைகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் போஷாக்குகளை அளிக்கும் பொறுப்பு கரோனரி ரத்தக் குழாய்களுக்கு உள்ளது.
ரத்த வினியோகம் தற்காலிகமாக சிறிதளவு குறைந்தாலும், இருதய தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பது குறைந்து விடும். இதன் காரணமாக, நெஞ்சில் அசவுகரியம் அல்லது ஆஞ்சினா ஏற்படும். ரத்த வினியோகம் முற்றிலுமாக நீண்ட நேரத்துக்கு தடைபடுமேயானால், இருதய தசைகள் சரிப்படுத்த முடியாத அளவுக்கு பாதிக்கப்படும். மாரடைப்பு உருவாகும்.
ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புகள் (பிளாக்) ரத்தக் குழாயை கிழிக்கும்போது அல்லது விரிசல் ஏற்படுத்தும்போது பெரும்பாலும் மாரடைப்புகள் ஏற்படுகின்றன.
பாதிக்கப்பட்ட தசை உயிரிழந்து வடுவாக மாறி விடுகிறது. இருதய தசைக்கு உள்ள சுருங்கி விரியும் (பம்ப்) தன்மையை, இந்த வடு இழந்து விடுகிறது.
இருதய தசையின் ஒரு பகுதி இறுக்கம் அடைந்து விடுவதால், இருதயத்தின் (இடது வெண்ட்ரிக்கிள், உடலுக்கு ரத்தம் செலுத்தும் முக்கிய அறை) ரத்த வினியோக திறமை குறைந்து விடுகிறது. நுரையீரல் கோளாறுக்கும், மாரடைப்புக்கும் வழிவகுக்கும்.
ஒரு சிலருக்கு இரண்டு தோள்பட்டை மற்றும் கைகளில் வலி ஏற்படலாம். தாடையில் வலி அல்லது முதுகில் தோள்பட்டைக்கு நடுவே வலி ஏற்படலாம். இவைகள் நெஞ்சுவலிக்கான எச்சரிக்கையாக இருக்கும் பட்சத்தில், ஓய்வு எடுத்த ஒரு சில நிமிடத்தில் இந்த அறிகுறிகள் மறைந்து விடும்.
கரோனரி ரத்தக் குழாயில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு வரும். இருதயத்தில் வலி கடுமையாக இருக்கும். தொடர்ந்து நீடிக்கும்.
நெஞ்சுவலியுடன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், படபடப்பு அதிகரிக்கும். பலகீனம், சோர்வு ஏற்படும், வேர்த்துக் கொட்டும், முகம் வெளிறிப் போகும். இருதயத்துடிப்பு சீராக இல்லாதது போல் தோன்றும்.ஒரு சில சமயங்களில் வழக்கமான அறிகுறிகள் தோன்றாமல், வெறுமனே மூச்சு விடுவதில் சிரமம், வேர்த்துக் கொட்டுதல் அல்லது திடீரென சோர்வு ஏற்படுதல் மட்டும் தோன்றலாம்.
உடல் உழைப்பின் போது ஒருவருக்கு நெஞ்சில் அசவுகரியம் ஏற்பட்டால், உடனடியாக அவரது உடல் உழைப்பை நிறுத்தி விட்டு அப்படியே படுத்து ஓய்வெடுக்க ஆலோசனை வழங்க வேண்டும்.
நைட்ரோ கிளிசரின் மாத்திரைகள் ஏற்கனவே அவருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தால், உடனடியாக ஒரு மாத்திரையை அவரது நாக்குக்கு அடியில் வைத்து மெல்ல கரைய செய்ய வேண்டும். வலி தொடர்ந்தால், ஐந்து நிமிட இடைவெளியில் தொடர்ந்து இரண்டாவது முறை மற்றும் மூன்றாவது முறை மாத்திரை கொடுக்கலாம்.
ரத்தக் கட்டி கரைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவு அடைப்பு இருக்கும். பாதிக்கப்பட்ட குழாயில் ரத்த ஓட்டமும் குறைவாகவே இருக்கும். ஆனால், ஸ்டென்ட் வைத்தோ அல்லது வைக்காமலோ பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்து கொண்டவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு ரத்த ஓட்டம் துடிப்பாக இருப்பதுடன், அடைப்பு கிட்டத்தட்ட முழுமையாக அகற்றப்பட்டிருக்கிறது.
ரத்தக் கட்டி கரைதல் சிகிச்சையுடன் ஒப்பிடும் போது, பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் இறப்பு விகிதம் 60 சதவீதம் குறைவு.
இந்த சிகிச்சையில் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் குறைவு.
ரத்தக் கட்டி கரைதல் சிகிச்சை முறையில் மட்டும் ஆறு மாத காலத்தில் ரத்தக் குழாயில் அடைப்பு போவதற்கான வாய்ப்புகள் 59 சதவீதம் மட்டுமே. ஆனால், பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் மூன்று முதல் ஆறு மாத காலத்தில் ரத்தக் குழாய் அடைப்பு நீங்குவதற்கான வாய்ப்புகள் 87 முதல் 91 சதவீதமாகும்.
ரத்தக் கட்டி கரைக்கும் சிகிச்சை செய்து கொண்டவர்களிடம் ஆறு மாதத்துக்குள் ஆய்வு நடத்தியதில், 30 சதவீதத்தினருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அல்லது பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டவர்களில் ஐந்து சதவீதத்தினருக்கு மட்டுமே சர்ஜரி தேவைப்படுவது தெரிய வந்துள்ளது.
ஸ்டென்ட்டிரி வைத்து செய்யப்படும் பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறையில் 95 சதவீத வெற்றி காணப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருக்கும் காலத்தில், மூன்று சதவீதத்துக்கும் குறைவாகவே இறப்பு நேரிட்டுள்ளது.
பிரைமரி ஆஞ்சியோ யாருக்கு தேவை?
இந்தியாவில் கிடைக்கக்கூடிய குறைவான ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, எல்லா நோயாளிகளுக்கும் இந்த பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை கிடைப்பது கடினம்.
பின்வரும் நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி மிக முக்கியம்.
* மோசமான மாரடைப்பு (ஆண்டிரியர் வால் இன்பார்க்ட், இன்பீரியர் வால் இன்பார்க்ட், ஆர்வி இன்பார்க்ட், ஈசிஜியில் எட்டு லீடுகளுக்கும் மேற்பட்ட மாற்றங்கள்).
* குறைவான ரத்த அழுத்தம் அல்லது நுரையீரல் பாதிப்பு (பல்மோனரி எடிமா போன்ற ஹ-மோடைனமிக் இன்ஸ்டபிளிட்டி மற்றும் கார்டியோ ஜெனிக் ஷாக்)* ரத்தக் கட்டி கரைக்கும் மருந்துகள் எதிர் விளைவுகள் ஏற்படுத்தும் போது
* ரத்தக் கட்டி கரைக்கும் சிகிச்சை பலன் அளிக்காத போது
Thanks: koodal.காம் அண்ட் nidur..info
புதன், 4 மார்ச், 2009
6 தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டி

கோவை: தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர்அலி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமத், பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் இது குறித்து கோவையில் நிருபர்களிடம் கூறுகையில்,
மனித நேய மக்கள் கட்சிக்கு இன்னும் ஓரிரு நாட்களில் 32 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்.
வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சை, திருநெல்வேலி அல்லது தென்காசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
ஏதேனும் அரசியல் கட்சிகள் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்.
இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி நிலவரம் மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
சென்னை உயர்நீதிமன்றம் மோதல் சம்பவம் துர்பாக்கியமான செயல். அப்பாவி மக்கள், காவல்துறையையும், நீதித்துறையையும் நம்பித்தான் இருக்கிறார்கள். அவர்களே பகிங்கரமாக மோதிக் கொள்வது வேதனையானது.
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ராணுவ நடவடிக்கையின் மூலம், இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்றனர்.
பேட்டியின்போது மாநிலச் செயலாளர் கோவை உம்மர், மாவட்டத் தலைவர் பஷீர், மாவட்டச் செயலாளர் அமீர், மாவட்ட பொருளாளர் கபீர் ஆகியோர் உடனிருந்தனர்.
செவ்வாய், 3 மார்ச், 2009
15வது பொதுத் தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு சோதனைக் களம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
71 கோடியே 40 லட்சம் மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த உள்ளனர். ஐந்து கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
545 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல் ஏப்ரல் 16ல் முதல் கட்டமாக 124 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும். ஏப்ரல் 23ல் இரண்டாவது கட்டமாக 141 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், ஏப்ரல் 30ஆம் தேதி மூன்றாவது கட்டமாக 107 தொகுதிகளுக்கும் மே 7ஆம் தேதி நான்காவது கட்டமாக 85 தொகுதிகளுக்கும், மே 13ஆம் தேதி ஐந்தாவது கட்டமாக 86 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்தத் தேர்தல் இதுவரை இல்லாத அளவு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளையும், 21 லட்சம் பாதுகாப்பு படை வீரர்களையும், 8 லட்சத்து 28 ஆயிரம் வாக்குச்சாவடிகளையும் அமைத்து தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிறது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் உள்ள மொத்த மக்கள் தொகையின் அளவைவிட நம் இந்தியத் திருநாட்டின் வாக்காளர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களாட்சியின் மாண்பு பேணப்பட்டு வருவதாக கூறப்படும் நம்நாட்டில் 13வது மற்றும் 14வது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் நாட்டு மக்களை வேதனையில் ஆழ்த்தின.
வன்முறைகளிலும் பொருளாதார முறைகேடு களிலும் நாளுக்கு நாள் முன்னிலை பெற்றுவரும் இந்திய அரசியல் அரங்கம் எதிர்வரும் காலத்திலாவது இழந்த மாண்பினை மீட்கும் முனைப்பில் இறங்க வேண்டும்.
தேர்தல் களத்தில் ஒழுக்க மாண்புகளைக் காக்க அரசியல் கட்சிகளும், அரசுகளும் சூளுரை ஏற்க வேண்டும்.
தேர்தல் களத்தில் காட்சிகளும் கோலங்களும் மாறி வருகின்றன. காங்கிரஸ் கட்சி தனது அரசியல் கூட்டணி வலுவுடையதாக அமைய என்ன விலை கொடுக்கவும் தயாராகி வருகிறது. தனது தீவிர வைரியாகவும், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸுக்கு தீராத தலைவயாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க அந்தக் கட்சி முனைப்பு காட்டி வெற்றியும் பெற்றிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் காஙகிரஸ் செய்த துரோகத்தின் விளைவாக அக்கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அது முலாயம் சிங்கை பற்றிப் பிடித்து கரையேறலாம் என கனவு காண்கிறது. காங்கிரஸ்கார அண்ணாச்சி பர்ஹான் கமிஷன் என்னாச்சி? என உத்தரப்பிரதேச மக்கள் கேட்கத்தான் போகிறார்கள். அந்த முழக்கம் இந்தியாவெங்கும் எதிரொக்கத்தான் போகிறது.
குஜராத்தின் மோடி திடீரென்று மகாராஷ்ட்ர அரசியல் அரங்கில் ஆர்வம் காட்டுகிறார். மகாராஷ்டிராவின் பவார், பிரதமர் பதவிக்கு தான் தயார் என குட்டையைக் குழப்புகிறார்.
ஒரிஸ்ஸாவின் நவீன் பட்நாயக்கும், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும் பாஜகவுடன் கைகுலுக்க தயாராக இல்லை.
கூட்டணிகளால் கழற்றி விடப்பட்ட பாஜகவும், இருக்கின்ற கூட்டணியை இறுகப் பற்றிக் கொண்டு காங்கிரசும் தேர்தலை சந்திக்க உள்ளன. இடது சாரிகள் அரசியல் சந்தியில் நிற்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
பாஜகவோ அரசியல் அநாதையாக மாறிவிட்டது. காங்கிரஸ் அரசியல் மறுவாழ்வுக்கு ஏங்கித் தவிக்கிறது. இந்நிலையில் இந்திய ஜனநாயக வரலாற்றில் இந்தத் தேர்தலுக்கு மிகுந்த முக்கியத் துவம் உண்டு.
ஜூலை 2ம் தேதி உதயமாகப் போகும் 15வது நாடாளுமன்றத்தையும் புதிய அரசையும் தேர்ந்தெடுக்க பாரம்பரிய பெருமைமிக்க இந்தியா தயாராகிறது. அது இந்திய ஜனநாயகத்திற்கு மீண்டுமொரு சோதனைக் களம்.
ஜெயலலிதா பிறந்த நாள் பள்ளிவாசலில் கொண்டாட்டம்! முஸ்லிம்கள் கொந்தளிப்பு!!
புகாரியின் புதல்வன்
காலை 11 மணியளவில் சிறப்பு துஆ மற்றும் பாத்தியா. பின்னர் நார்ஸாவாக அல்வா மற்றும் இனிப்பு பண்டங்கள் வேறு. இதெல்லாம் ஏதோ தர்ஹாவிலோ, அல்லது கத்தம் பாத்தியாவிலோ வழங்கப்பட்டது அல்ல. புரட்சித் தலைவி (!) அம்மா (!) அன்னாரின் பிறந்த நாளை முன்னிட்டுதான் இத்தகைய கொண்டாட்டங்களும். இவையெல்லாம் ஏதோ ஒரு அதிமுக முஸ்லிம் தொண்டரால் நடத்தி வைக்கப்பட்டவை என்று நினைத்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். பின் எங்கே நடந்தது இந்த அனாச்சாரம்?
கடந்த 24.02.09 அன்று திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாநகராட்சி 19வது வார்டு இராமமூர்த்தி நகரில் அமைந்துள்ள ஜன்னத்துல் பகீ பள்ளிவாசலின் (எஸ்.ஏ.பி பள்ளி) தகவல் பலகையில் "புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு துஆ மற்றும் பாத்தியா ஓதப்படும்'' என எழுதப் பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி யுற்ற தமுமுகவினர், பள்ளியின் நிர்வாகிகளை சந்தித்து கேட்டபோது "நாங்கள் எங்களின் விருப்பப்படிதான் நடப்போம்'' என்று ஆணவத்துடன் கூறியுள்ளனர். பிறகு அவர்கள் அறிவித்தது போலவே நாம் மேலே கூறியுள்ள அனாச் சாரங்கள் அனைத்தும் அரங்கேறின. இதே நிலை நீடித்தால் அந்தப் பள்ளிவாசல் அதிமுக வின் கட்சி அலுவலகமாகவே மாறி விடுமோ என்ற அச்சத்திற்குள்ளாகியுள்ள னர் முஹல்லாவாசிகள்.
நபி (ஸல்) அவர்களுக்கே நாம் பிறந்த நாள் கொண்டாடுவது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் சொந்த அம்மாவாக இருந்தாலும் பிறந்தநாள் கொண்டாடு வதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தின் வழிமுறையில் அமைந்த ஓர் செயலே அல்ல. மாறாக யூத, கிறிஸ்தவ கலாச்சாரத் தாக்கத்தால் முஸ்லிம்களுக்கு அறிமுகமானவையே பிறந்த தினக் கொண்டாட்டம்.
நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் பிறந்த தினம் கொண்டாடியது மில்லை. அவ்வாறு கொண்டாடுமாறு ஏவியதுமில்லை. இந்த நடைமுறை மார்க்கத்தில் புதிதாக புகுந்த பித்அத் ஆகும். இது நரகத்திற்கு இட்டுச் செல்லும்.
மார்க்கத்தில் புதிதாக புகுந்தவை அனைத்தும் பித்அத் (நூதன செயல்) ஆகும். பித்அத்கள் எல்லாம் வழிகேடுகளாகும். வழிகேடுகள் எல்லாம் நரகத்திற்கு இட்டுச் செல்லும்.
அறிவிப்பவர்:
ஜாபிர் பின் அப்துல்லாஹ்
ஆதார நூல்கள் : முஸ்லிம், நஸயீ
thanks to : tmmk.in
திங்கள், 2 மார்ச், 2009
விக்கிபீடியாவிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சித்திரத்தை நீக்கக்கோரி விண்ணப்பியுங்கள்!
This is a petition request: Wikipedia has placed a painting of the Prophet Muhammad (P.B.U.H) on http://en.wikipedia.org/wiki/Muhammad. They need about 100,000 signatures to remove it. So far a little over 3,200 have signed; if you agree that it is wrong to depict his picture, please sign the petition.
நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல் அவர்களை விக்கி பீடியா உருவமாக வரைந்து வெளியிட்டுள்ளது.அதனை நீக்குவதற்கு ஒரு லட்சம் கையெழுத்துக்கள் வேண்டும்.இதைக்கானும் சகோதர-சகோதரிகள் கீழ்காணும் லிங்க் மூலம் சென்று,அதை நீக்க கோரி விண்ணப்பிக்கும்படியும், ஏனைய சகோதரர்களுக்கு, ஈ மெயில்,தொலை பேசி,பேக்ஸ்,பிளாக்கர் இப்படி எல்லா வகையிலும் தொடர்புகொண்டு விக்கி பீடிக்கு கண்டனமும்,படத்தை நீக்கக் கோரியும் உடனடியாக வேண்டுகோளும் இடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
Here’s the link.http://www.petitiononline.com/mjk123/petition.html
ஞாயிறு, 1 மார்ச், 2009
சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.
தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.
வேலையில்லாத சிறுபான்மையின் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மையின் இளைஞர்கள் பயிற்சிபெற தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு கீழ்கண்ட இலவச திறன் வளர்ச்சி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
1. Hardware and Networking ,
2 C, C++
3,DTP,
4,Tally, with MS office
(10-வது வகுப்பில் தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள், மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)
இப்பயிற்சி கீழ்க்காணும் இடங்களில் அளிக்கப்பட உள்ளன,
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, திருவள்ளுர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, அரியலூர், தேனி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகர்கோவில், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, சிவகங்கை,
இராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, தாராபுரம், விருத்தாச்சலம், சிதம்பரம், திண்டிவனம், மார்த்தாண்டம், தக்கலை, திருச்செந்தூர், நாசரேத், கோவில்பட்டி, ஆரணி, செய்யார், போளுர், செங்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், ஆத்தூர், இராசிபுரம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, குடியாத்தம்,
பேரணாம்பட்டு, அரக்கோணம், பள்ளப்பட்டி, அரவங்குறிச்சி, குளித்தலை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், இளையாங்குடி, தேவக்கோட்டை, திருவெறும்பூர், திருச்செங்கோடு, நாமக்கல், ஆண்டிப்பட்டி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பூந்தமல்லி,கூத்தாநல்லூர், பர்க்கூர்,
தர்மபுரி, ஓசூர், பொள்ளாச்சி, திருப்பூர், மேலப்பாளையம், விருதுநகர், கடலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டிணம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஊட்டி, புளியங்குடி, கடயநல்லூர், தென்காசி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, குன்ணூர், மேட்டுப்பாளையம்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாநகரங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
5. Multimedia @ Animation
(10-வது வகுப்பில் தேர்ச்சி (ம) தோல்வி அடைந்தவர்கள், (ம) மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)
6. Dot.net (.net)
(பட்டதாரிகளும் (ம) பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)
இப்பயிற்சியில் சேர்வதற்குக் கீழ்கண்ட தகுதிகள் இருத்தல் வேண்டும்.
1) பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1,00,000/லிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2) மாணவ/மாணவியர் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
(இசுலாமியர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சீயர்கள்)
சமர்ப்பிக்கப்பட்ட வேண்டிய ஆவணங்கள் (நகல்கள் மட்டும்)
1) சாதிச் சான்றிதழ் நகல்
2) குறைந்த பட்சம் 10லிஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் அதற்குமேல் படித்திருப்பின் அதற்குரிய நகல்களை இணைக்கலாம்.
3) வருமான சான்றிதழ் நகல்
4) பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ் நகல்.
நிறுவனங்கள் மூலம் இப்பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி அளிக்கப்படும் விவரங்கள்
CSC ComputerEudcation(தொலைபேசி எண் Chennai 044 - 25393783, 65698566) மூலம் மேற் குறிப்பிட்ட எல்லா 92 இடங்களிலும்.
IECT(தொலைபேசி எண். 044-42066684/85) மூலம் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் , புதுக்கோட்டை ஆகிய இடங்களில்.
Hindustan Sortfware Ltd(தொலைபேசி எண், 044-28511411,2,3) மூலம் மதுரை, கோயம்பத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில்.
Jayaram InfoTech (தொலைபேசி எண், 98421 58228, 9894288350) மூலம் அரியலூர், பெரம்பலூர், நாகபட்டிணம், கோயம்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில்.
Students Software training (தெலைபேசி எண், 98847 58845) மூலம் தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், நாகபட்டிணம் (ம) மதுரை ஆகிய இடங்களில்.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவ/மாணவியர்கள் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் உடனே சேர்ந்து பயிற்சி பெறலாம்.
இப்பயிற்சியின் மூலம் 8818 சிறுபான்மையின் மாணவ/ மாணவியர்கள் பயனடைவார்கள்.
thanks to :அதிரைpost