நடிகர்
கமல்ஹாசன், விஸ்வரூபம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தை கடந்த 21.01.2013 அன்று முஸ்லிம் கூட்டமைப்பைச் சேர்ந்த
தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியைப் பார்க்க கமல்ஹாசன் ஏற்பாடு
செய்திருந்தார்.
படத்தின்
தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி
எடுக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன், தீவிரவாதிகளின் கையேடு என்பதைப் போல்
காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன.
தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்தியத்
திரைப்பட வரலாற்றில் இவ்வளவு மோசமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருக்க
முடியாது. தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை போன்ற நகரங்களெல்லாம் சர்வதேச
தீவிரவாதிகளின் புகலிடங்கள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மாமா, மச்சான் உறவு முறைப் பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்கவல்லது ‘விஸ்வரூபம்’ திரைப்படம்.
‘வைதீக
பிராமணனை விட, முற்போக்கு பிராமணன் மிகவும் ஆபத்தானவன்’ என்று சொன்ன ஐயா
பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது.
இந்த
திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும், தடை செய்யாவிட்டால்
போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தமுமுக உள்ளிட்ட முஸ்லிம்களின்
கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக