சனி, 3 நவம்பர், 2012

முஸ்லிம்களின் திருமணப் பதிவுச் சட்டம் எளிமைப்படுத்தப்பட வேண்டும்: அஸ்லம் பாஷா MLA வேண்டுகோள்


2012-2013 ஆம் ஆண்டுக்கான துணை மதிப்பீடுகளுக்கான மானியக் கோரிக்கையின் போது கடந்த 1.11.2012 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:
ஒரு முக்கியமான கோரிக்கை, எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சனை. சென்ற திமுக ஆட்சியிலே மறைமுகமாக எங்கள் ஷரீயத் சட்டத்திலே கை வைத்துவிட்டார்கள் என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். அதற்கு தக்க பதிலடியும் கொடுத்துவிட்டார்கள் எங்கள் சமுதாய மக்கள். முஸ்லிம்களுக்கான திருமணப் பதிவுச் சட்டம் எளிமைப்படுத்தப்பட வேண்டுமென்று நாங்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றோம். சென்ற சட்டமன்றத் தேர்தலின்போதுகூட நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். அவர்களும் அதைப் பரிசீலிப்பதாகச் சொன்னார்கள் ஆகவே, வெகுவிரைவிலே தமிழகத்திலே முஸ்லிம்களின் திருமணப் பதிவுச் சட்டம் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று, இந்திய அரசியல் சாசனச் சட்டம், முஸ்லிம்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பின்பற்ற அனுமதி அளித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் கூட சென்ற மாதம் அதை உறுதி செய்திருக்கிறது. தமிழகத்திலே கடந்த 6 மாத காலமாக முஸ்லிம் பெண்கள் திருமணத்தின்போது அவர்கள் 18 வயதை முடிக்கவில்லையென்ற ஒரு காரணத்திற்காக அந்தத் திருமணத்தை சமூக நலத் துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் தடுத்து நிறுத்துகின்றார்கள். ஜமாத்தினர் மீது வழக்குப் போடுவது, பெற்றோர்களைக் கைது செய்வது போன்ற பணிகளில் அரசு ஊழியர்களும், காவல் துறையும் சமூக நலத் துறையைச் சேர்ந்தவர்களும் ஈடுபடக் கூடாது என்பதை நான் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.
சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி: சட்டத்திற்கு மாறாக திருமணம் நடப்பதாக தகவல் வந்தால், பாதுகாப்பிற்காக, போலீசாரை உடன் அழைத்துச் சென்று, துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். பெண்ணிற்கு, 18 வயது பூர்த்தியான சான்றிதழைக் காட்டினால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதற்கு மாறாக இருந்தால் மட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அஸ்லம் பாஷா: ஷரீயத் சட்டத்தின்படி எங்கள் மார்க்கத்திலே பெண்கள் வயதிற்கு வந்தவுடனே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் 13 வயது 14 வயது குழந்தைகளுக்குத் திருமணம் செய்யவில்லை. 16 அல்லது 17 வயது ஆகின்ற 18 வயது நிறைவடையாத பெண்களுக்கு திருமணம் செய்கிறோம் அவ்வளவுதான். ஆனால் 16லி17 வயதில் திருமணம் குழந்தைத் திருமணம் என்பது குழந்தைத் திருமணம் கிடையாது
 

கருத்துகள் இல்லை: