வியாழன், 8 நவம்பர், 2012

மேட்டுப்பாளையத்தில் காவி பதற்றம்


கோவை மாவட்டம் மேட்டுப்பாலயத்தை சார்ந்த ஆனந்தன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாலுகா செயலாளராக இருக்கிறார். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் அவரை சிலர் தாக்கி இருக்கின்றனர்.

இதை வழக்கம்போல சமூக மோதல்களாக சங்பரிவார்

அமைப்புகள் திரித்து பதற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தனி நபர மோதல்களை வன்முறையாக்க முயன்றுள்ளனர். சுற்று வட்டாரம் முழுக்க கடைகளை அடைத்து பொது மக்களை அச்சுறுத்தி உள்ளனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து அரசு பேருந்தை தீ வைத்து எரித்துள்ளனர். கோவை, ஊட்டி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுள்ளனர். சில இடங்களில் இந்து முன்னணியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இன்று நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 10 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை உடைத்துள்ளனர்.

தீபாவளி நேரத்தில் இந்து முன்னணி நடத்தும் பந்த உள்ளிட்ட வன்முறைகளால் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வர்த்தக சங்கங்களும் இந்து முன்னணியினரின் நடவடிக்கைகளை வெறுத்து உள்ளனர்.

காவி மத வெறியர்களின் வன்முறைகளால் சமூக நல்லிணக்கம் கேட்டு விடக்கூடாது என கவனத்தில் கொண்டு தமுமுக துணை பொதுச்செயலாளர் கோவை உம்மர் அவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறார். அங்குள்ள நிலைமைகள் குறித்து மாநில செயலாளர் கோவை செய்யது அவர்களிடம் மமக பொதுச்செயலாளர் அலைபேசி வழியாக நிலைமைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதிகள் காவி வெறியர்களால் பதட்ட நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டுமென தமுமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: