சார்மினாரை ஆக்கிரமித்து கோவில் கட்டும் பா.ஜ.க.வுக்கு, காவல்துறை மூலம் காங்கிரஸ் ஆதரவளித்ததையடுத்து, ஆக்கிரமிப்புக் கோவிலுக்கு மேற்கூரை போடப்பட்டது.
நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கு எதிராக ஆளுகின்ற அரசே செயல்பட்டு, கலவர திட்டத்துடன் களமிறங்கியுள்ள சங்க்பரிவாரங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்து "மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன்" (M.I.M.) கட்சி, காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது.
M.I.M. கட்சிக்கு ஆந்திராவில் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் உள்ளனர்.
294 உறுப்பினர்கள் கொண்ட ஆந்திர சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 152 உறுப்பினர்கள் உள்ளனர்.
இது, பெரும்பான்மைக்கு தேவையான 148 உறுப்பினர்களின் எண்ணிக்கை யை விட 4 உறுப்பினர்கள் அதிகம் என்றாலும், இவர்களில் பலர் "ஜெகன் மோகன் ரெட்டி"யின் YSR காங்கிரசுக்கு ஆதரவானவர்கள்.
மேலும், YSR காங்கிரஸ் இடைத்தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கு தேசம் (TDP) கட்சிக்கு 86, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (TRS) கட்சிக்கு 17 உறுப்பினர்களும், சி.பி.ஐ. 4, மார்க்சிஸ்ட் 1, பாஜகவுக்கு 3 இடங்களும் உள்ளன.
மஜ்லிஸ் கட்சியின் முடிவை வரவேற்றுள்ள YSR காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் கூறுகையில், காங்கிரசுக்கு எதிராக "நம்பிக்கையில்லா தீர்மானம்" கொண்டு வந்தால் ஆதரிப்பதாகவும் வாக்களித்துள்ளனர்.
மஜ்லிஸ் கட்சி, காங்கிரஸ் அரசுக்கு எதிராக செயல்பட்டால் தற்போதைய கணக்குப்படி (7+86+17+17+4+1= 132) 132 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்கும் என்பதோடு, காங்கிரசில் உள்ள "ஜெகன்" ஆதரவாளர்களும் சேர்ந்து யோசித்தால், காங்கிரஸ் அரசு கவிழுவது நிஜம்.
- மறுப்பு மீடியா செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக