சனி, 21 ஜூன், 2014

மோடி அரசின் முதல் பரிசு ரயில் பயணிகள் கட்டணம் 14.2%, சரக்கு கட்டணம் 6.5% உயர்வு

இன்று முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் பாஜக தலைமையிலான அரசு ரயில் கட்டணத்தை மிக கடுமையாக உயர்த்தியுள்ளது
மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே டீசல் விலை உயர்வு . ஆட்சிக்கு வந்து ஓரு மாதத்தில் கட்டண உயர்வு மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


காங்கிரஸ் ஆட்சியில் ரயில் கட்டண உயர்வுக்கு  கண்டணம் தெரிவித்த மோடி
தன்னுடைய ஆட்சியல் 14.2 சதவீதம்  உயர்த்தியுள்ளார்

இலங்கை அகதி முகாம் மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு.

இலங்கை அகதி முகாம் மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு.
========================
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து வந்த 164 குடும்பங்களைச் சேர்ந்த 523 தமிழர்கள் இங்கு தங்கியுள்ளனர். இவர்களில், பெயிண்டிங் தொழி லாளியான ராஜாவின் குடும்பமும் ஒன்று. தனது தாய் ரூபாவதி மற்றும் மூன்று தம்பிகளுடன், இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜாவுக்கும், அதே முகாமைச் சேர்ந்த அல்லிமலருக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந் தது. இவர்களுக்கு நந்தினி உள்பட 2 மகள்களும், மகனும் உள்ளனர்.

அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்த நந்தினி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

தொடர்ந்து மருத்துவம் படிக்க விரும்பினார் நந்தினி. அதற்கான கட் ஆப் மதிப்பெண் 197.50 இருந்த நிலையில், மருத்துவ கலந்தாய் வுக்காக விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மருத்துவக் கலந்தாய் வில் பங்கேற்க அவருக்கு அழைப் புக் கடிதம் வரவில்லை. 197.50 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இன்று (21-ம் தேதி) மருத்துவக் கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில், அழைப்புக் கடிதம் வராததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது நந்தினியின் குடும்பம்.

இது குறித்து நந்தினி கூறிய தாவது: மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிதேன். விண்ணப்ப எண் (245143), ஏ.ஆர்.எண் (1529), ரேண்டம் எண் (6965643762) ஆகிய மூன்று எண்களும் எனக்கு கிடைத்தன. ஆனால், எனது கட் ஆப் 197.50 பெற்றிருந்தவர்கள் பெயர் பட்டியலில் எனது பெயர் இல்லை. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதமும் வரவில்லை. கலந்தாய் வில் பங்கேற்க எனது தந்தையுடன் சென்னை செல்கிறேன். கலந்தாய் வில் அனுமதிக்கவில்லையெனில், முதல்வரை சந்தித்து முறையிட உள்ளேன் என்றார்.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் (டி.எம்.இ.,) கூறுகையில், பொதுவாக, விண்ணப்பித்த அனைவருக்கும், ரேண்டம் எண் வழங்கப்படும். அதில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பெயர் மட்டும், புரவிஷனல் பட்டியலில் வெளியிடுவோம். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்றனர்.

 
நன்றி .இந்து

வியாழன், 19 ஜூன், 2014

உறவினர்கள் அடக்கம் செய்ய மறுத்த மாற்று மத சகோதரியின் உடலை தமுமுக நல்லடக்கம் ! !




உறவினர்கள் அடக்கம் செய்ய மறுத்த மாற்று மத சகோதரியின் உடலை தமுமுக நல்லடக்கம் ! !
இன்று 18/6/2014 காலை காட்டுமன்னார்குடி அருகில் ரம்ஜான் தைக்காலில் மாற்றுமத பெண் உடல் நலகுறைவால் இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்கலோ அல்லது அந்த பெண்னின் மதத்தை சேர்ந்தவர்கலோ அடக்கம் செய்ய தயாராக இல்லை இந்த தகவல் தமுமுகவிற்கு வந்தது உடனே ரம்ஜான் தைக்காலை சேர்ந்த குன்டுபா என்ற யூனுஸ் மாவட்ட நிர்வாகியிடம் சொன்னார் இதற்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை உடனே கலத்தில் இறங்குங்கள் என்று சொல்லபட்டது லால்பேட்டையில் இருந்து ஆம்புலன்ஸ் எடுத்துகொன்டு போய் ரம்ஜான் தைக்கால் தமுமுக சகோதரர்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் உதவி செய்தார்கள் ஆம்புலன்சில் எடுத்துகொன்டு மாயானத்தில் அடக்கம் செய்தார்கள் சகோதரர்களின் சேவைக்கு மறுமையில் யாஅல்லா சொர்கத்தை கொடுப்பாயக ஆமின்
{குறிப்பு:- மாலை மற்றும் அனைத்து சம்பரதாயங்களும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் செய்ப்பட்டு இருந்தது}

சிறையா இல்லை பிஜேபி அலுவலகமா ?

அரசாங்க அதிகாரியை கட்டி வைத்து அடித்ததற்காக சிறைக்கு சென்ற யஸ்வந்த் சின்ஹா அத்வானி சந்திப்பின் போது சிறையினுள் நடந்த பிஜேபி கூட்டம்.

அதென்ன சிறையா இல்லை பிஜேபி அலுவலகமா ?

நன்றி: ஆம் ஆத்மி

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு - எம்.பி. கவிதா


 தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு  -  எம்.பி. கவிதா

முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு கொடுத்தே தீருவோம்:தெலுங்கானா எம்.பி. உறுதி!

நீதிமன்றம் குறுக்கே நிற்க விடமாட்டோம் எனவும் சூளுரை !!

ஒன்றுபட்ட ஆந்திராவில், முஸ்லிம்களுக்கு 5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டபோது, நீதிமன்றம் தடை விதித்தது போன்ற நிலையை தெலுங்கானாவில் அரங்கேற விடமாட்டோம் என்கிறார், TRS எம்.பி, கவிதா.

இதற்கு முன்னர், முஸ்லிம் இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்த நீதிமன்றம், பின்னர் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50% அளவுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதியை காரணம் காட்டி, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 4 சதவிகிதமாக குறைத்தது.

தெலுங்கானா மாநிலத்தில் இதுபோன்ற அபத்தங்களை அரங்கேற விடமாட்டோம் என உறுதிப்படக் கூறியுள்ளார், தெலுங்கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.பி.யுமான கவிதா.

நிசாமாபாத் பாராளுமன்ற உறுப்பினரான கல்வகுந்தலா கவிதா (K. கவிதா) எம்பி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது:

முஸ்லிம் செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு:

ஆந்திராவில் 5% இட ஒதுக்கீட்டை வழங்கியபோதே நாங்கள் படாத பாடு பட்டோமே, நீங்கள் 12% இட ஒதுக்கீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளீர்களே எனக் கேள்வி எழுப்பினார்.

காங்கிரசோடு எங்களை ஒப்பிடாதீர்கள், காங்கிரஸ் அரசில், பெயரளவில் அமைச்சராக்கப்படும் முஸ்லிம்களுக்கு, சிறுபான்மை நலத்துறை, வக்ப் வாரியம் உள்ளிட்ட முக்கியத்துவம் இல்லாத துறைகள் தான் வழங்கப்பட்டு வந்தது.

நாங்களோ, முஸ்லிமுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்துள்ளதோடு, வருவாய்த்துறை போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளையும் அவரிடம் கொடுத்துள்ளோம்.

11 அமைச்சர்களைக் கொண்ட தெலுங்கானா அமைச்சரவையில், மேலும் ஒரு முஸ்லிமுக்கு வாய்ப்பளிக்கும் திட்டமும் உள்ளது என்றார், கவிதா.

50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லும் உச்சநீதிமனறம், தமிழகத்தில் உள்ள 69%, கர்நாடகத்தில் அமலில் உள்ள அதிகப்படியான சதவிகித இட ஒதுக்கீட்டை குறித்து வாய் திறக்காதது ஏன் எனக்கேள்வி எழுப்பினார்.

முஸ்லிம் இட ஒதுக்கீடு விஷயத்தில் தெலுங்கானா முதலமைச்சர் "KCR" (K Chandrashekhar Rao), மிகவும் தெளிவான பார்வையோடும் தீர்க்கமான முடிவோடும் இருக்கிறார், என்றார், அவர்.

தற்போது அமலில் உள்ள (OBC 25%, SC 15%, ST 6% MUSLIM 4% = Total 50%) என்பதை மாற்றியமைத்து,

முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக, தெலுங்கானாவில், இட ஒதுக்கீட்டின் அளவை 64% அளவுக்கு உயர்த்தி சட்டம் இயற்றப்படும் என்றார் கவிதா எம்.பி.


நன்றி: https://www.facebook.com/maruppu.in 

தாமதமான நீதிக்கு என்ன பெயர்?

செய்யாத குற்றத்துக்காகச் சிறையில் வாடும் முஸ்லிம்கள்… அவர்கள் மீது சுமத்தப்படும் பழிகள்...
“இந்த வழக்கு, தேசத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பானது. வழக்கின் தன்மை துயரம்மிக்கது. இத்தகைய வழக்கை இவ்வளவு திறமையற்ற முறையில் புலனாய்வு அமைப்புகள் நடத்தியிருப்பது வேதனையளிக்கிறது. பல உயிர்களைக் கொன்றுகுவித்த உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக, காவல் துறை அப்பாவிகளைக் கைதுசெய்து கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தண்டனை வழங்கக் காரணமாக இருந்துள்ளது...
எனவே, மேல்முறையீட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக் கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம்.”
16-வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளி வந்த மே 16 அன்றுதான் இத்தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக் மற்றும் இ.கோபால் கெளடா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. 33 பேர் கொல் லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்பற்றிய தீர்ப்பு அது.
அக்‌ஷர்தாம் கோயில் தாக்குதல்
குஜராத் தலைநகர் காந்திநகரில் அக்‌ஷர்தாம் கோயில் மீது 24-9-2002 அன்று தாக்குதல் நடத்தத் தொடங்கிய பயங்கரவாதிகள், அடுத்த நாள் காலை வரை தாக்குதலைத் தொடர்ந்தனர். இதில் 33 பேர் கொல்லப்பட்டனர். 86 பேர் காயமடைந்தனர். இந்தக் கொலைக்கும் தாக்குதலுக்கும் காரணமான பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளுக்கு உதவியவர்கள், அவர்களோடு சேர்ந்து சதி செய்தவர்கள் என்று ஆறு பேர் மீது பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த நீதிமன்றம் 1.7.2006 அன்று தீர்ப்பு வழங்கியது. ஆதம்பாய் அஜ்மீரி, அப்துல் கயூம் முஃப்தீசாப் முகமது பாய், சந்த்கான் ஆகியோருக்கு மரண தண்டனையும், முகமது சமிம் ஹனீப் சேக்குக்கு ஆயுள் தண்டனையும், அப்துல்லாமியா யாசீன்மியாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அல்ட்டாஃப் மாலீக்குக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் ஜூலை 2010-ல் உறுதிசெய்தது. இதன் மீதான மேல்முறையீட்டின் மீதுதான் தண்டனைகளையும் குற்றச்சாட்டுகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. குற்றம் நிரூபணமாகவில்லை என்று நீதிமன்றம் சொல்லவில்லை. மாறாக, இவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுவித்தும், குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளது.
குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து தண்டனைகளை ரத்துசெய்ததற்கான பல காரணங்களை உச்ச நீதிமன்றம் தனது 281 பக்கத் தீர்ப்பில் கூறியுள்ளது. அதில், ஒரு அம்சத்தை மட்டும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
மரண தண்டனை விதித்ததற்குக் காரணமாக இருந்த வற்றில் முக்கியமானவை என்று பொடா நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டவை, பயங்கரவாதிகளுக்கு ‘சதிகாரர்களால்' உருது மொழியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட இரண்டு கடிதங்கள்.
இரண்டு பயங்கரவாதிகளும் குண்டுகளால் துளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். ஒருவர் உடலில் 46 குண்டுகளும், மற்றொருவர் உடலில் 60 குண்டுகளும் துளைத்திருந்தன. அவர்களின் ஆடைகள் முழுவதும் ரத்தமும் சேறுமாக இருந்தது. அப்படி இருந்தபோது அவர்கள் சட்டையில் இருந்த கடிதங்கள் மட்டும் புத்தம் புதிதாக மடிப்புக் கலையாமல் இருந்திருக்கின்றன. இதிலிருந்தே அவை, குற்றம்சாட்டப்பட்டவர்களை வழக்கில் சிக்க வைப்பதற்காகப் பின்னர் சேர்க்கப்பட்டவை என்பது எளிதில் விளங்கும்.
நீதி பிழைத்தது
உச்ச நீதிமன்றம் தீவிர கவனம் செலுத்தாமல் இருந்திருந்தால், நிச்சயமாக மூன்று பேரும் தூக்கிலிடப் பட்டிருப்பார்கள். அவர்களது குடும்பத்தினர்களும் உறவினர்களும் வழிவழியாக ஒதுக்கப்பட்டும், சபிக்கப்பட்டும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள். எத்தனை கொடூரமான நிகழ்வு இது. ஆனால், பெரும்பாலான பத்திரிகைகள் இதுகுறித்து ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. இந்த உண்மை யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.
இப்படி நடப்பது முதல்முறையும் அல்ல. இதுவே, கடைசி முறையாகவும் இருக்கப்போவதில்லை.
8-9-2006-ல் மகாராஷ்டிரத்தின் மலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டார்கள். 125 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிரத்தின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு மற்றும் சி.பி.ஐ-யால் முஸ்லிம் இளைஞர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
2013 வரை ஏழு ஆண்டுகள் அவர்கள் அனைவரும் சிறையில்தான் இருந்தனர். சி.பி.ஐ. விசாரித்து, இந்த ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்று வழக்கைக் கொண்டுசென்ற பின்னர், எதிர்பாராதவிதமாக இந்தக் குற்றத்தைச் செய்ததாக அசீமானந்தா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார். இதன் பின்னர்தான் அந்த ஒன்பது முஸ்லிம் இளைஞர்களும் வெளியே வந்தனர். இல்லையேல், அவர்களில் சிலருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்திருக்கக் கூடும். அவர்களது குடும்பத் தினருக்குப் பழிச்சொற்கள் பட்டமாகக் கிடைத்திருக்கும்.
மிகப் பெரிய அவமானம்
இன்னொரு முக்கியமான வழக்கு, ஐதராபாத்தில் மெக்கா மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர் பானது. இந்த வழக்கிலும் பின்னர் குற்றம்சாட்டப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் அசீமானந்தா. அதற்கு முன்னதாக 70 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2013-ல்தான் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த மூன்று வழக்குகளும் ஒன்றை வெளிப்படுத்து கின்றன. முதலாவது வழக்கு, குஜராத்தில் நடந்தது. அங்கு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மலேகான் வழக்கும் மெக்கா மசூதி வழக்கும் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் நடைபெற்றன. இந்த வழக்குகளை விசாரித்ததில் மாநிலத்தில் உள்ள புலனாய்வுக் குழுக்கள் மட்டுமின்றி மத்திய புலனாய்வுக் குழுவும் ஈடுபட்டுள்ளது. ஆயினும் அந்தக் குற்றங்களில் தொடர்பே இல்லாத 70 பேர், ஆறு ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆளும் அரசு என்பதையும் தாண்டி, சிறுபான்மை வெறுப்பு அரசு நிறுவனங்களுக்குள்ளும் புகுந்திருப்பது ஆபத்தான அறிகுறி.
இவர்களில் பெரும்பாலானவர்களின் வயது 25-க்கும் குறைவு. இளமைக் காலத்தின் பொன்னான காலத்தைக் குற்றமேதும் செய்யாமலேயே சிறையில் கழித்துள்ளனர். வெளியே வரும்போது குடும்பமும் சமூகமும் இவர் களைச் சந்தேகத்துடனேயே பார்க்கும். ஒருவேளை இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவர்களின் சந்ததியும் ‘பயங்கரவாதிகளின் சந்ததி' என்று சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருக்கும்.
இந்தியாவில் நீதி வழங்கும் முறைக்கும், ஜனநாயகத்துக்கும் இது மிகப் பெரிய அவமானம். ஆபத்தானதும்கூட. இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த ஆபத்து, நாளை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை அனைத்துத் தரப்பினரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
க. கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் - சி.பி.ஐ.(எம்)- தொடர்புக்கு: kanagaraj@tncpim.org

நன்றி :
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/article6124157.ece?homepage=true&theme=true