புதன், 4 நவம்பர், 2009

கிறித்தவ புத்தகக் கடை கழிவறையில் கேமரா

அமெரிக்கா – கலிபோர்னியாவில் உள்ள சிமி வேலி (Simi Valley) நகரிலுள்ள ஒரு கிறித்தவ புத்தகக் கடையில், வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படும் கழிவறையினுள்ளே ஒரு கேமரா மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் 28 வயது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

40 வயது பெண் ஒருவர் அந்தக் கடையிலுள்ள கழிவறைக்குள் சென்ற போது, அங்கு ஓரமாய் அடுக்கி வைப்பட்டிருந்த பெட்டிகளின் இடையே கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்றார். அவரும் அவரது கணவரும் சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு இருந்த கேமரா பற்றி போலீஸில் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்து கேமராவைக் கைப்பற்றிய போலீஸார், அதனை சோதனையிட்ட போது, அந்தக் கடையில் ஊழியர் அதனை அங்கு நிறுவுவது பதிவாகியிருந்தது தெரிந்தது. கேமரா பதிவு செய்வதை அறியாமல் அவர் அதனை நிறுவியதால் கையும் களவுமாய் மாட்டிக் கொண்டார்.

செய்தி : இந்நேரம்.காம்

பள்ளி இமாமை கொன்றது FBI. அதிர்ச்சியில் அமெரிக்க முஸ்லீம்கள்


அமெரிக்காவில் டெட்ராய்ட் அருகே டியர்பார்ன் எனும் இடத்தில் உள்ளூர் பள்ளி இமாம் அமெரிக்க உளவு படையால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அமெரிக்க முஸ்லீம்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலைக்கும் உள்ளூர் அல்லது சர்வதேச தீவிரவாதத்திற்கும் எவ்வித தொடர்புமுமில்லை என அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் கூட்டமைப்பின் (CAIR) தலைவர் தாவூத் வலீத் கூறினார்.

53 வயதான லுக்மான் அமீன் அப்துல்லா டியர்பார்னில் உள்ள சரக்கு கிடங்கில் புலனாய்வு துறையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க அட்டர்னி அலுவலகம் கூறுகிறது. கொலை செய்யப்பட்ட அப்துல்லாவை அமெரிக்காவில் ஒரு இஸ்லாமிய அரசை ஏற்படுத்த முயற்சி செய்த மிக முக்கியமான தீவிர போக்கு கொண்ட சுன்னி தலைவராக ஃஎப்.பி.ஐ கூறுகிறது.

ஆனால் அப்துல்லாவை அதிகாரிகள் பல தடவை திருடு போன பொருட்களை விற்றதாகவும் சட்ட விரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும் கைது செய்ய முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
CAIR தலைவர் வலீத் அப்பள்ளியில் எவ்வித சட்ட விரோத காரியமும் நடைபெறவில்லை என்றும் தாம் அறிந்த வரையில் அப்துல்லா ஒரு சிறந்த மனிதர் என்றும் கூறினார். அப்துல்லா பல தடவை தன்னிடமுள்ள உடைமைகளை பிறருக்கு அன்பளிப்பு செய்துள்ளதாகவும் அவர் மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உணவளிப்பதாகவும் அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவர்கள் என்றும் வலீத் கூறினார்.

மேலும் வலீத் அப்துல்லாவை பற்றி கூறுகையில் ”அப்துல்லா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுடன் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். நிறைய இளைஞர்களை சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றியுள்ளார்” என்றும் புகழாரம் சூட்டினார்
source:foxnews,inneram

வடக்கிலிருந்து வெளியெற்றப்பட்டு முஸ்லிம்களின் 19 வருட பூர்த்தி

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன்(2009.10.30) பத்தொன்பது வருடங்கள் ப+ர்த்தியாகின்றன.ஆயிரத்து தொல்லாயிரத்து தொன்னூராம் ஆண்டு இம்மக்கள் வடமாகாணத்தில்,மன்னார்,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளியேறி தற்போது புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வசித்துவருகின்றனர். இந்த நிலையில் தமது வெளியேற்றம் குறித்தும்.

இத்தினத்தை நினைவு கூறும் வகையில் முஸ்லிம்; சமாதான பேரவையின் புத்தளம்; கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது.

சமாதான செயலகத்தின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.என்.எல்.எம்.சுஹைர் தலைமையில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில்,பதினொரு தீர்மானங்கள் அடங்கிய கோறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

அவை வருமாறு :

1) இரண்டு மணித்தியால அவகாசத்தில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக விசாரித்து.ஆராய்ந்து,தேவையான பரிந்துரைகளுடன்,அறிக்கை சமர்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

2) பலவந்த வெளியேற்றத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு.இன்னமும் அகதிவாழ்வு நடத்திவரும்,வடக்கு முஸ்லிம்களுக்கு உரிய நஷ்டயீடுகள் துரித கதியில் வழங்கப்பட வேண்டும்.

3) மீள்குடியேற்ற நிகழ்வில் முஸ்லிம்களின் விவகாரம்,தெரிவிக்கப்பட்டு அது அவர்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

4) மீள்குடியேற்றத்தின் போது ஆயிரத்து தொல்லாயிரத்து தொன்னூராம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு,முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

5) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களின்,வடக்கிலுள்ள பூர்வீக சொத்துக்களுக்கு ,PRESCRIPTION ORDINANCE எக்காரணம்; கொண்டும் பிரயோகிக்கப்படக் கூடாது.

6) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வடக்கிலுள்ள காணிகள் அவர்களுக்கே மீண்டும்; கையளிக்கப்பட வேண்டும்.

7) 1990 ல் முஸ்லிம்கள் புலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த 19 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்தள்ளது.எனவே அதிகரித்துள்ள குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்தின் போது புதிதாக காணிகள்; வழங்கப்பட வேண்டும்.

8) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களுக்கு 1990 ஆம்; ஆண்டு முதல் கொடுக்கப்பட்டுவரும்,நிவாரணத் தொகை ஆரம்பம் முதல் அதே தொகையாகவே இருந்துவருகின்றது.சுமார் 19 வருடகாலப் பகுதியில்,ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு,வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கவனத்திற் கொண்டு தற்போதைய நிலாரயத்; தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.

9) அரச நியமனங்கள்,வளப்பகிர்வுகளின் போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய பங்குகள் சரியாக,நிரப்பமாக வழங்கப்பட வேண்டும்.

10) யுத்த காலத்தில் கடத்தப்பட்டு இதுவரைக்கும் தகவல் இல்லாத முஸ்லிம்களின்,குடும்பங்களுக்கு துரிதமாக நட:டுயீடு வழங்கப்படுவதுடன்,மரண அத்தாட்சி பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.

11) பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் இரு தசாப்தங்களாக புத்தளம்; பிரதேசத்தில் வாழ்ந்து வரகின்றனர்.இதன்; நிமித்தம் புத்தளம் பிரதேச ப+ர்வீக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காணிப் பங்கீடு,கல்வி,அரச நியமனங்கள்,தொழில்வாய்ப்பு சுகாதாரம்,பல்கலைக்கழ அனுமதி உட்பட எல்லா வகைகளிலுமான,இழப்புகளும அவசரமாக உரிய முறையில் ஈடுசெய்யப்பட வேண்டும். இக்கோரிக்கைகள் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு மதவாதத்தின் உச்சகட்டம்-ப.சிதம்பரம்


தியோபந்த்: தீவிரவாதத்துக்கு எதிராக ஜமாயத் உலாமா இ ஹிந்த் இஸ்லாமிய அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நன்றி தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்தில் நடைபெற்ற இந்த அமைப்பின் மாநாட்டில் பேசிய அவர், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அரசுக்கு ஜமாயத் உலாமா இ ஹிந்த் உதவ வேண்டும்.

தீவிரவாதத்துக்கு எதிராக பத்வா (தடை) விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இந்தத் தீர்மானம் முஸ்லீகளுக்கு மட்டுமான அழைப்பல்ல, நியாயமாக சிந்திக்கக் கூடிய எல்லா மக்களுக்குமான அழைப்பாகவே கருதுகிறேன்.

இதுபோல மேலும் பல நடவடிக்கைகளை எடுத்து தீவிரவாதத்தை அடியோடு களைய அரசுக்கு உதவ வேண்டும்.

ஜிகாதி தீவிரவாதத்தை எந்த அளவுக்கு எதிர்க்கிறோமோ அதே அளவுக்கு இந்துத் தீவிரவாதத்தையும் எதிர்ப்போம். தீவிரவாதம் என்பதே தவறு. அதில் மதத்துக்கு இடமில்லை.

பாபர் மசூதி இடிப்பட்டது மதவாதத்தின் உச்சகட்டம் என்று தான் சொல்வேன். மெஜாரிட்டி இந்துக்களின் ஆட்சியில் மைனாரிட்டிகளான முஸ்லீம்கள் பாதுகாப்பாக வாழ்ந்தால் தான் அது பொற்காலம். அதே போல காஷ்மீரில் மெஜாரிடடி முஸ்லீம்களின் ஆட்சியில் மைனாரி்ட்டியான இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் பாதுகாப்பாக வாழ்ந்தால், அது பொற்காலம். சிறுபான்மையாக வாழும் மக்களை அப் பகுதியின் பெரும்பான்மையான மக்கள் பாதுகாக்க வேண்டியது கடமை.

இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் ஒடு்க்கப்பட்டதால் தான் பிரச்சனை வந்தது.

இந்த பொற்கால ஆட்சி சில இடங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும் அல்லது அமல்படுத்தலாம் என சிலர் நினைக்கிறார்கள். அது தவறு.

மதவாதம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு முரணானது. நவீனமயத்துக்கு எதிரானது, அரசியல் சுதந்திரத்துக்கு எதிரானது. மொத்தத்தில் மக்களுக்கு எதிரானது.

இதனால் தீவிரவாதத்துக்கு எதிராக இன்னும் உரத்த, சக்தி வாய்ந்த இதுபோன்ற குரல்கள் எழ வேண்டும். சமாதானத்துக்காகவும் அன்புக்காகவும் உங்கள் குரல்கள் மேலும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்.

இஸ்லாம் ஒன்றும் அந்நியமான மதமல்ல. முஸ்லீம்கள் இந்த நாட்டின் கெளரவமான குடிமக்கள். அவர்களுக்கு உரிய மரியாதையும் உரிமைகளும் தரப்பட வேண்டும் என்றார் சிதம்பரம்.

இக் கூட்டத்தில் பேசிய ஜமாயத் உலாமா இ ஹிந்த் ஒருங்கிணப்பாளர் மெளலானா மெஹ்மூத் மத்னி, தீவிரவாதிகளும் மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களையும் வன்முறையையும் கைவிட வேண்டும். நீங்கள் அதைச் செய்தால் உங்களுக்காக குரல் தர நாங்கள் தயார். உங்களுக்காக போராடவும் தயார் என்றார்.

அரசியல்வாதிகளின் அலம்பலும்- மக்கள் படும் இன்னலும்!

இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு போக்குவரத்து நெரிசல்தான். இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் எளியதவனையில் கிடைப்பதுதான். ஆயிரம் ரூபாய் முன்பணம் கட்டினால் அடுத்த அரைமணிநேரத்தில் ஒரு டூவீலர் சாவி உங்கள் கையில் என்ற அளவுக்கு பைனான்சியர்களின் எண்ணிக்கை பெருத்துவிட்டது . இவ்வாறாக எளிய தவணையில் வாகனங்கள் கிடைப்பதால் சைக்கிள்களுக்கு குட்பை சொல்லிவிட்டு, மோட்டார் சைக்கிள் எனும் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டியதன் விளைவு சென்னை போன்ற பெருநகரங்களில் திரும்பிய பக்கம் எல்லாம் போக்குவரத்து நெரிசல் மயம். இந்த நெரிசலில் நீந்தி மக்கள் உரிய நேரத்தில் உரிய இடத்திற்கு செல்வதே குதிரை கொம்பாக இருக்கும் நிலையில், அரசியல்வாதிகள் மற்றும் சாதி சங்கங்கள் மற்றும் பல்வேறு ஊழியர்கள் நடத்தும் தீடீர் சாலைமறியல் ஒருபுறம். அதையும் சகித்துக்கொண்டு காத்துகிடந்து பிறகு வண்டியை கிளப்பினால், அமைச்சர் வருகிறார்-முதல்வர் வருகிறார் -பிரதமர் வருகிறார், அவர் வருகிறார் இவர் வருகிறார் என்று ஒரு மணிநேரம் முன்பாகவே சாலைகள் சீல்வைக்கபடுகின்றன. நம்ம அரசியல்வாதிகள் எப்ப சொன்ன நேரத்துல வந்தாங்க...? சாவகாசமாக வருவார்கள். அதுவரை பயணிகள் மட்டுமன்றி, அலுவலகம் செல்வோர், கல்வி சாலைகளுக்கு செல்வோர், அவசர வேலையாக செல்வோர், அவசர மருத்துவம் நாடி ஆஸ்பத்திரி செல்வோர் ஆகியோர் அந்த அரசியல்வாதி வந்து அந்த சாலையை கடக்கும்வரை காத்து கிடக்கவேண்டும். அல்லது வேறு சாலையில் பலகிலோ மீட்டர் சுற்றி தமது இடத்தை அடையவேண்டும். தாம் சொகுசாக செல்வதற்காக மக்களை காக்கவைப்பது எந்தவகையில் நியாயம் என்று எந்த அரசியல்வாதிகளும் சிந்திப்பதில்லை. அவ்வாறு மக்களை துச்சமென மதிப்பதால் இவர்கள் செய்யும் இந்த அலப்பறையில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கவேண்டியுள்ளது. நேற்று கூட பிரதமர் கலந்து கொண்ட நிகச்சிக்காக சாலை சீல் வைக்கப்பட, உரிய நேரத்தில் மருத்துவமனை கொண்டு செல்லமுடியாததால் ஒரு சிறுநீரக நோயாளி உயிரிழந்ததாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

எனவே, இந்த அரசியல்வாதிகள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அவர்களுக்காக சாலையை சீல் வைப்பதும், வேறு பாதைக்கு மாற்றி விடுவதும் நிறுத்தப்பட வேண்டும். அரசியல்வாதிகளும் மக்களோடு மக்களாக பயணிக்கவேண்டும். மக்களை போல் அவர்களும் போக்குவரத்து நெரிசலை உணரவேண்டும். அப்போதுதான் மக்கள் படும் கஷ்டம் அவர்களுக்கு விளங்கும். அரசியல்வாதிகள் உரிய நேரத்திற்கு நிகழ்ச்சியில் பங்கெடுக்கவேண்டும் என்றால், அலுவலகம்செல்லும் ஊழியன் எப்படி முன்கூட்டியே கிளம்புகிறானோ அதுபோன்று அரசியல்வாதிகளும் முன்கூட்டியே கிளம்ப வேண்டும். அதைவிடுத்து தான் ஒருவருக்காக பலரை கஷ்டத்துக்கு உள்ளாக்குவது அரசியல்வாதிகளாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் அநியாயமாகும். ஒரு அரசியல்வாதிக்காக செய்த கெடுபிடியால் ஒரு உயிர் போயுள்ளதே! அப்படியாயின் ஒரு சாமான்யனின் உயிரின் மதிப்பு அவ்வளவுதானா..? சிந்திக்க வேண்டுகிறோம். அமெரிக்கக் அதிபர் ஒபாமா சாதரணமாக சர்ச்சுக்கு போய் வருகிறார் . அவர்மனைவி சர்வ சாதரணமாக மார்க்கட்டில் போய் கூடையில் காய்கறி வாங்கிவருகிறார். அங்கெல்லாம் இதுபோன்ற அடாவடிகள் இருப்பதாக தெரியவில்லை. நாமறிந்தவரை அரபு நாட்டின் மன்னரோ-கவர்னரோ சாலையில் பயணித்தால் போக்குவரத்து நிறுத்தப்படுவதில்லை. மாறாக அவர் மக்களோடு மக்களாக வருகிறார் . அவர் வரும்போது மட்டும் சிக்னல் ஓப்பனாக விடப்படுகிறது அவ்வளவுதான். ஒரு நாட்டின் மன்னராகவே இருந்தாலும் 'பந்தா' இல்லாமல் இந்த அரபுலக மன்னர்கள் திகழ்வதற்கு அவர்கள் ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய வழிமுறையே காரணமாகும். ஆம்! உலகை நேர்வழி படுத்த, உலகை படைத்த இறைவனால் அனுப்பப்பட்ட உலக தூதர் முஹம்மத் [ஸல்] அவர்கள் காட்டிய வழிமுறை பாரீர் ;

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;
"நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்" என்று பதிலளித்தார்கள்
ஆதாரம்;புஹாரி எண் 2465

எனவே, இஸ்லாம் ஒன்றுதான் வணக்கத்தோடு-வாழ்க்கையையும் ஒரு சேர சொல்லித்தந்த மார்க்கமாகும். இந்த மார்க்கத்தை பின்பற்றினால் அனைவரும் பிறரின் நலம் நாடும் ஒருவராக மாறுவது திண்ணம்.

திங்கள், 2 நவம்பர், 2009

அமெரிக்க மருத்துவருக்கு ஹிஜாப் அணிய தடை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்று அங்கு பணியாற்றும் இஸ்லாமிய மருத்துவர்கள் தங்கள் தலைமுடியை ஸ்கார்ப் அணிந்து மறைப்பதற்கு தடை விதித்துள்ளது.

ஹீனா சாகி என்ற மருத்துவர், கேர் நவ் மருத்துவமனையின் இந்த கொள்கையினால், தான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன் என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று கூறினார்.

29 வயது நிரம்பிய மருத்துவரான இவர் அந்த மருத்துவமனை ஹிஜாப் விசயத்தில் அவ்வாறு நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டு அந்த கொள்கையினையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அமெரிக்க இஸ்லாமிய உறவுகளின் மன்றம், "அந்த மருத்துவமனையின் ஹிஜாபிற்கு எதிரான இந்த கொள்கையினால் அந்த மருத்துவமனை அமெரிக்க சட்டத்தினை தெள்ளத் தெளிவாக மீறியுள்ளது" என்று கூறினர்.

அந்த மன்றத்தின் மனித உரிமை மேலாளரான கதிஜா அத்மான், "இது பச்சையான சட்ட மீறுதல் என்று கூறினார். இது வழிபாட்டு முறை தொடர்பான வழக்கு என்றும் அவர் ஸ்கார்ப் அணிவதால் அவரை பணியமர்த்தியவர்க்கு எந்த பாதிப்புகளும் வரபோவதாக தெரியவில்லை" என்று அவர் கூறினார்.

கேர் நவ் மருத்துவமனையின் தலைவர் இது பற்றி கூறும்பொழுது, "தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் அந்த மருத்துவமனை தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கின்றது என்றும் அவரைப் பொறுத்தவரையில் இனம், மதம், ஆண் - பெண், தேசியம் ஆகிய பாகுபாடுகளை தான் விரும்பவில்லை" என்றும் அவர் கூறினார்.

நன்றி,
ABNA.

Filed under இந்தியா 0 comments மர்கோவா குண்டு வெடிப்பு தொடர்பாக இரண்டு இந்துத்துவ தீவிரவாதிகள் கைது

சமீபத்தில் நடந்த இந்துத்துவ தீவிரவாதத்தில் ஒன்றான மர்கோவா குண்டு வெடிப்பு தொடர்பாக மூன்று பேரை காவல் துறையினர் காவலில் வைத்துள்ளனர். இவர்கள் மகாராஷ்டிரத்தின் பரமதி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களை பரமதி பகுதி காவல் துறையினர் பிடித்து கோவா போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
என்றாலும் இவர்கள் மூவரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவலில் தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். கடந்த தீபாவளி பண்டிகையின் முந்தின நாள் மாலை இந்துத்துவ தீவிரவாதிகள் நடத்தவிருந்த நாசவேலைகளில் அவர்களே சிக்கி மரணமடைந்தனர். சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பிற்கும் இந்த குண்டு வெடிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக காவல் துறை கூறுகின்றது. கூவா காவல் துறை சனாதன் சன்ஸ்தாவின் இரு தொண்டர்களை நேற்று மாநிலத்தில் மேலும் நாச வேலைகள் மூலம் குழப்பம் விளைவிக்க திட்டமிட்டதற்காக கைது செய்தது.

இந்த கைதுகள் குறித்து காவல் துறை கண்காணிப்பாளரிடம் கேட்டதற்கு, "நேற்று நடந்த இரு கைதுகள் தவிர வேறு எந்த கைதுகளும் நடக்கவில்லை" என்று கூறினார். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து காவலில் எடுத்துவரப்பட்ட மூவர் பற்றி தகவல் தர மறுத்துவிட்டார்.

காவல் துறை வட்டத்திலிருந்து வந்த செய்தியின் படி, "இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய SIM கார்டுகள் நேற்று கைது செய்யப்பட்ட இருவரின் பெயரில் வாங்கப்பட்டவை" என்று கூறுப்படுகிறது.

நன்றி,
இந்தியன் எக்ஸ்பிரஸ்.