சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே இருந்த 7273 , 7104 எண்கள் கொண்ட அரசு
மது பான கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர்
ஈரோடு பாரூக் தலைமை தாங்கினார். இந்த அறப்போராட்டத்தில் மமக வின் அழைப்பை
ஏற்று தொண்டர்களும், சமுதாய அக்கறை கொண்டவர்களும், மாற்று மத சகோதர்களும்,
பெண்களும் கலந்து கொண்டனர். பின்பு மறியலில் ஈடுபட்ட 500 கும்
மேற்பட்டவர்களை காவல் துறை கைது செய்து இரவு 8மணியளவில்
விடுவிக்கப்பட்டனர்.
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 16 ஜூலை, 2012
வியாழன், 14 மே, 2009
மத்திய சென்னை வன்முறை: நெல்லையில் த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி : நெல்லையில் த.மு.மு.க.,நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,,கொடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

மத்திய சென்னையில் த.மு.மு.க.,வின் அரசியல் கட்சியான ம.ம.க.,சார்பில் ஹைதர்அலி போட்டியிட்டார். தேர்தலின் போது அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் த.மு.மு.க.,வினரை ஓட்டுபோடவிடாமல் தி.மு.க.,வினர் தடுத்ததாக தகவல்கள் வெளியாயின. இதனை கண்டித்து இன்று நெல்லையில் த.மு.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க.,மாவட்ட தலைவர் ரபீக், மாவட்ட செயலாளர் உஸ்மான்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் தி.மு.க.,வையும் கருணாநிதியையும் விமர்சித்தனர். அப்போது தி.மு.க.,கொடிகளையும் தீயிட்டு கொளுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)