இந்தியாவின் பிரதான கல்வித் திட்டமான சர்வ சிக்ஷா அப்யானுக்கு பிரிட்டிஷ் அரசு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.2370 கோடி உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது.திட்டத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அதிகாரிகள் ஊதாரித்தனமாக செலவழித்ததன் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது பிரிட்டிஷ் அரசு.
9 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைவருக்கும் கல்வி என்ற திட்டம்தான் இந்த சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி). இதற்காக அரசு ரூ 91,431 கோடியை ஒதுக்குகிறது.
இதில் ஐரோப்பிய யூனியன், உலக வங்கி ஆகிய அமைப்புகளின் நிதி உதவியும் அடங்கும். அந்த வகையில் பிரிட்டிஷ் அரசு மட்டும் ரூ 2370 கோடி வரை நிதி உதவி செய்து வந்தது, ஆண்டுதோறும்.
இந்தப் பணத்தைக் கையாளுவதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக பிரிட்டன் பத்திரிகைகள் சமீபத்தில் ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டன.
கல்வித் திட்டத்துக்கே சம்பந்தமில்லாமல் ரூ 80 கோடி வரை அதிகாரிகள் வெட்டியாக செலவழித்திருப்பதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்தது பிரிட்டிஷ் அரசு.
இதுகுறித்து இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது பிரிட்டன்.
முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்றும்,இதுகுறித்து முழுமையாக விசாரிக்க சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பதில் அனுப்பியது மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.
இந்த நிலையில்,இந்தியாவுக்கு இனி எங்களது இந்த உதவி தேவையில்லை என டேவிட் கேமரூன் அரசு அறிவித்து, நிதியுதவியை முற்றாக நிறுத்தியுள்ளது.
சர்வ சிக்ஷா அப்யான் திட்டத்துக்கு போதிய நிதி ஆதாரம் இந்தியாவிடமே இருப்பதாகவும், பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ள அந்நாடு இனி தானாகவே இதனைச் சமாளித்துக் கொள்ளும் என்பதாலும் இந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் சர்வதேச மேம்பாட்டுத் துறைச் செயலர் (UK Department for International Development) ஆன்ட்ரூ மிச்சேல் கூறியுள்ளார்.
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
பிரிட்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரிட்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 13 ஜூலை, 2010
வியாழன், 27 மே, 2010
ஆஃப்கானிலிருந்து தன் படைகளை வாபஸ் பெற பிரிட்டனின் புதிய அரசு முடிவு

இது தொடர்பாக, ராணுவ செயலாளர் லியம் பாக்ஸ், சர்வேதேச பிரிட்டன் செயலாளர் அன்றேவ் மிட்செல் உட்பட பல மூத்த அதிகாரிகள் தங்களை இம்மாதமே லண்டன் வந்து சந்திக்குமாறு ஆஃப்கான் அதிபர் ஹமித் கர்சாயை கேட்டுக்கொண்டுள்ளனர்.
புதிய வெளியுறவுச் செயலாளர் ஹகிவ் கூறுகையில், ஆஃப்கானில் தற்போது 10,000 பிரிட்டிஷ் படைகள் உள்ளதாக தெரிவித்தார். புதிய அரசின் மிக விரைவுத் திட்டத்தில், ஆஃப்கானிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதும் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.
ஆஃப்கான் வரும் முன் ராணுவ செயலாளர் லியம் பாக்ஸ் தெரிவிக்கையில், ஆஃப்கானிஸ்தானின் தங்கள் பயணம் வெறும் படைகளை திரும்பப் பெற மட்டுமே நடத்தப்பட உள்ளது என்றார்.
'நாங்கள் எண்ணிக்கையில் மிக குறைவாக உள்ளோம் என்பதனை நான் இங்கு ஒத்துக்கொண்டே ஆக வேண்டும் எங்கள் கொள்கைகளை நாங்கள் ஒரு முறை திரும்ப மாற்றியமைக்க வேண்டும். பிரிட்டன் நாட்டின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்.நாங்கள் ஒன்னும் சர்வதேச போலீஸ் கிடையாது! நாங்கள் ஆப்கானை மேம்படுத்துவதற்கு வரவில்லை! மாறாக அவர்களால் பிரிட்டன் மக்களுக்கு அச்சுறுத்தல் இருக்கக்கூடாது என்பதற்காகவே வந்தோம்.
நான் எங்கள் படைகளை சந்தித்து பேச உள்ளேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து மாயமாக வேண்டும்!' என்று பாக்ஸ் சூச்சகமாக தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு அடுத்து பிரிட்டன் தான் அதிக அளவில் தன் படைகளை ஆஃப்கானில் வைத்துள்ளது. முழுவதுமாக மொத்தம் 130 வெளிநாட்டுப் படைகள் ஆஃப்கானில் முகாமிட்டுள்ளனர்.
வரும் மாதங்களில் தாக்குதல்களை தீவிரமாக்க அமெரிக்கா ஒருபுறம் பேசிகொண்டிருக்க, பிரிட்டன் புதிய அரசின் இம்முடிவு, ஆஃப்கான் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
source:siasat
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)