நாடாளுமன்ற தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாடாளுமன்ற தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஏப்ரல், 2014

1952-லிருந்து ராஜஸ்தானில் ஒரே ஒரு முஸ்லிம் எம்.பி.

சுதந்திர இந்தியாவில் முதன்முறை யாக கடந்த 1952-ல் நடந்த மக்களவை பொதுத் தேர்தலிலிருந்தே ராஜஸ் தானில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக அல்லது இல்லவே இல்லாமல் இருந்து வந்திருக்கிறது.
கடந்த 15 மக்களவை பொதுத் தேர்தல்களில் 317 பேர் ராஜஸ்தானிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒரேயொரு முஸ்லிம் மட்டுமே 1984 மற்றும் 1991-ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் புகாரியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் சந்தித்து ஆதரவு கோரியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராஜஸ்தானில் முஸ்லிம் மக்கள் தொகை சுமார் 11.4%. ஆனால் நாடாளுமன்றத்தில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவமே கிடையாது. கேப்டன் அயூப் கான் என்பவர் ஜுன்ஜுனு தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் 1984, 1991-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஒரேயொரு முஸ்லிமை வேட்பாளராக நிறுத்தும். வேறு எந்தக் கட்சியும் முஸ்லிம்களை நிறுத்துவதில்லை. ராஜஸ்தானில் 18 மக்களவைத் தொகுதிகள் இருக் கின்றன.
1980-கள் வரை மேற்கு ராஜஸ் தானில் உள்ள மார்வார் பகுதியில் சூரு, ஜுன்ஜுனு, பரத்பூர், ஜலாவர், ஆஜ்மீர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு தந்தது. முஸ்லிம்கள் கணிசமாக வாழும் தொகுதிகளில்கூட அவர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் பிற கட்சி வேட்பாளர்களிடம் தோற்றனர்.
"காங்கிரஸ் கட்சி தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகளில்தான் அவர் களை நிறுத்தியது" என்று அஷ்ஃபக் காயாம்கானி என்ற அரசியல் ஆய்வாளர் குற்றம்சாட்டுகிறார்.
2014 மக்களவை பொதுத் தேர்தலில் டோங்-சவாய்மாதோபூர் தொகுதியில் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனைக் களம் இறக்கியிருக்கிறது காங்கிரஸ்.
ஹைதராபாதைச் சேர்ந்த அசாருதீன் கடந்த முறை உத்தரப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரை இப்போது டோங்-சவாய்மாதோபூர் தொகுதியில் நிறுத்துவதை ராஜஸ்தான் மாநில முஸ்லிம்களே கடுமையாக எதிர்த்தனர்.
வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைக் கொண்டுவந்து நிறுத்துவானேன், ராஜஸ்தானில் தகுதி வாய்ந்த முஸ் லிம்கள் இல்லையா என்று கேட்டனர். ஆனால் காங்கிரஸ் தலைமை அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இப்போது அசாருதீனின் வெற்றியும் கேள்விக்குறிதான் என்கின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.
ராஜஸ்தானில் 11 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக வாழ்கின்றனர். பார்மர் தொகுதியில் மட்டும் 17.2% முஸ்லிம் வாக்குகள் உள்ளன. ஆனால் எந்த அரசியல் கட்சியும் பார்மரில் முஸ்லிமை களம் இறக்குவதே இல்லை.
இந்த முறை ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜக வாய்ப்பு தராத தால் அவர் சுயேச்சையாகக் களமிறங்கி யிருக்கிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த கர்னல் சோனாராம் சௌத்ரி பாஜக வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கிறார்.
ராஜஸ்தானில் மொத்தமாக 8 முஸ்லிம்களை 12 முறை மக்களவைத் தேர்தலில் களம் இறக்கியிருக்கிறது காங்கிரஸ். பாஜக இதுவரை ஒரு முறைகூட முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியதில்லை. முஸ்லிம் வேட் பாளர்கள் தோல்வியடைவதே முக்கிய காரணம். முஸ்லிம்களிடையே நல்ல தலைமை உருவாகாததும் இதற்கு முக்கிய காரணம்.

thanks to :http://tamil.thehindu.com/india/1952%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article5921347.ece?homepage=true

வியாழன், 14 மே, 2009

தேர்தல் சிறப்பு செய்திகள் : நாடாளுமன்ற தேர்தல் தோப்புத்துறை ( நாகை மாவட்டம் ) ஓர் பார்வை

நாடாளுமன்ற தேர்தல் :
தோப்புத்துறை ( நாகை மாவட்டம் ) ஓர் பார்வை
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் ஏழு வெட்பாளர்கள் களத்தில் உள்ளனர், அதில் திமுக வுக்கும் கம்யூஸ்ட் கட்சிக்கு கடும் போட்டி நடைபெற்றது,தொப்புத்துறை யில் ஆரம்பத்தில் திமுக-விற்கு ஆதரவு அலை வீசியது,வாக்கு பதிவுக்கு முதல் நாளான நேற்று திடிரென தமுமுக அமைப்பை சார்ந்தவர்கள் கம்யூஸ்ட்டுக்கு ஆதரவக களத்தில் இறங்கினர்,இதனால் தோப்புத்துறை மக்களின் திமுக ஓட்டுக்கள் பெரிதும் பதிக்கப்பட்டது என்பது மறுக்க இயாலாது,
மேலும் திமுகவினருக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது, சென்னை யில் நடந்த த.மு.மு.க வினருக்கு எதிரான தாக்குதல் பற்றி கேள்விப் பட்டதும் மும்முரமாக திமுகவுக்கு எதிராக களமிரங்கினார்கள்,இதற்கிடைய திமுக கூட்டணி கட்சிக்கும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கும் ஹத்திப் தெரு வில் சிறு சலசலப்பு நடந்தது போலிசார் தலையிட்டு சமாதனப் படுத்தினர்,மதியத்திற்கு பிறகு தானாமூனா பள்ளி வாக்குசாவடி அருகே இருகட்சிகிடையே கை கலப்பு நடந்தது போலிஸ் தடியடி நடத்தியதால் கூட்டம் கலைந்து சென்றது, இந்த வாக்கு சாவடி மட்டும் சற்று பதட்டமாக காணப்பட்டது.
முழுக்க முழுக்க தோப்புத்துறை வாக்குகள் திமுகவிற்கே என்ற நிலை மாறி திடிரென த.மு.மு.க வினர் களம் இறங்கியதால் சற்று ஆட்டம் கண்டது உண்மையே.
தோப்புத்துறை-யிலிருந்து ஆதம்.ஆரிபின்