மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் ஜூலை 14 அன்று கும்பமேளா நிகழ்வை ஒட்டி நாசிக் முழுவதும் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை நகரைச் சேர்ந்த பிரபல ஆணுறை விநியோகிக்கும் ஜே.கே.அன்ஷீல் மற்றும் ஜோய் லைஃப் லோடக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்களும் கடந்த மாதம் நாடு முழுவதும் விநியோகிக்கும் ஆணுறையின் அளவை 60 விழுக்காடு குறைத்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மகராஷ்டிரா நகரமான நாசிக்கில் ஜூலை 14 மகாகும்பமேளா நடைபெற உள்ளது. இந்த கும்பமேளாவிற்காக எங்களது உற்பத்தில் 47 விழுக்காடு நாசிக் நகரத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆகவே முன்னேற்பாடான இதர மாநிலங்கள் அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ள வேண்டுகிறோம் என்று கூறுயிருந்தது.
அதே நேரத்தில் நாசிக் நகருக்கு அருகில் உள்ள பெருநகரங்களான மாலேகாவ் சிரிடி சங் கம்னேர் கோபர்காவ் உமர்காவ் போன்ற நகரங்களில் பலமடங்கு ஆணுறைகள் வாங்கி இருப்பு வைத்தனர். எல்லாவற்றையும்விட மகாராஷ்டிர அரசு பாலியல் தொற்றுநோய் தடுப்புத் துறை வழக்கத்திற்கு மாறாக 8 லட்சம் ஆணுறைகளை நாசிக் மாவட்டம் முழுவதும் இலவசமாக வழங்க அனுப்பியுள்ளது.
வடமாநிலங்களில் சில ஆண்டிற்கு ஒருமுறை நாசிக், அலகாபாத், அரித் துவார் போன்ற நகரங்களில் நடக்கும் கும்பமேளா விழாவில் லட்சக்கணக்கான நிர்வாண சாமியார்கள் ஒன்று கூடுவார்கள். இவர்கள் கங்கையிலும், திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலாகாபாத் நகரத்திலும் கோதாவரி நதி துவக்க இடமான நாசிக்கிலும் கூடுவார்கள். லட்சக்கணக்கான அம்மணச்சாமியார்கள் ஒன்று சேரும் போது பல விதங்களில் பிரச்சனை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மகராஷ்டிரா பாலியல்நோய் தடுப்புத்துறை கூறியுள்ளது.
கும்பமேளா நடக்கும் நிலையில், அதிகளவில் காண்டம்கள் வரவழைக்கப்படுவது விழா அமைப்பாளர்களை அதிர வைத்துள்ளது. சாமியார்கள் அதிக அளவு கூடும் நிலையில், இப்படி காண்டம்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது தவறான முன்மாதிரியை ஏற்படுத்தி விடும் என்று சாதுக்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனராம்.
2013 ஆம் ஆண்டு அலகாபாத் நகரில் நடந்த கும்பமேளாவிற்குப் பிறகு வட உத்தரப்பிரதேசத்தில் மாத்திரம் 4 லட்சத்திற்கு அதிகமாக பாலியல் நோய் தொடர்பான நோயாளிகள் அரசு மற்றும் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source :http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/nashik-kumbh-mela-comdoms-distribution-hindu-naked-priest-maharashtra-115071000028_1.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக