ஈரானை தாக்குவதற்காக இஸ்ரேலிற்கு சவூதி இடம் அளிக்கவுள்ளதாக கடந்த வாரம் ‘டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, ஈரான் அதிபர் அஹ்மத்நிஜாத் டெஹ்ரானிற்கான சவூதி அரபிய தூதரை சந்தித்து பேசினார்.
இச்சந்திப் பிறகு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஹ்மத் நிஜாத், 'சவுதியுடனான ஈரானிய உறவுகளில் பிளவு ஏற்படுத்துவதற்காகவே இது போன்ற முயற்சிகளில் யு.எஸ். மற்றும் இஸ்ரேல் நாடுகள் இறங்கியுள்ளன என்றார்.
இந்த பொய்யான கூற்றின் மூலம் ரியாத்துடனான டெஹ்ரானிய தொடர்புகளை துண்டிப்பதற்கு அவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை.
மத்திய கிழக்கு நாடுகளில் தீங்கு விளைவிப்பதே யு.எஸ். மற்றும் இஸ்ரேலின் நோக்கம். சவூதியும் ஈரானும் நல்ல உறவுகளை மேற்கொண்டு இந்நல்லுறவின் மூலம் எதிகளின் முஸ்லீம்களுக்கெதிரான போக்கை முறியடிக்க வேண்டும் என்று ஈரான் அதிபர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக ‘டைம்ஸ்’ நாளிதழில் இச்செய்தி வெளியான உடனேயே சவூதி வெளியுறவுத்துறை இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தது.
ஈரானிய அணுஆயுதத் தளங்களை இஸ்ரேல் தாக்கியேத் தீரும் என்று இஸ்ரேல் கூறிவரும் நிலையில், ஈரானிற்கெதிராக தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு தக்க பதிலடிக் கொடுப்போம் என்று ஈரானும் பதிலத்துள்ளது.
Press TV
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக