பல லட்சக்கணக்கான வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் நீண்டகால கோரிக்கையான தம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பான வாக்குரிமையை பெறுவதற்கான காலம் மிக சமீபத்தில் உள்ளது.
வாக்குரிமையை வழங்குவதற்கான மசோதாவின் முன் வரைவு மத்திய அமைச்சரவை குழுக்கூட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த முன் வரைவு மசோதா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்விற்குட்படுத்தப் பட்டது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைகுழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மசோதா தற்பொழுது அமைச்சரவையினால் ஒப்புதலுக்குட்படுத்தப்பட்டு அடுத்தபடியாக நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் வயலார் ரவி செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதல் பெற்ற சில மாதங்களில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பிரவாசி பாரதீய தீவாஸ் என்ற கூட்டத்தில் உரையாற்றும் பொழுது வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் இந்த "நியாயமான கோரிக்கையை" இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது எனக்கூறியுள்ளார்.
ஜனநாயக வளர்ச்சியில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் வாக்குரிமை பங்களிப்பு, அவர்களுடைய பங்களிப்பு மற்றும் வளர்ச்சி என்ற இரண்டு வழியில் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுமென வயலார் ரவி கூறியுள்ளார்.
மக்களின் பங்களிப்பு மசோதா என்ற பெயரில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் வாக்குரிமை மசோதா 2006 ஆம் ஆண்டு ராஜ்ய சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதா நாடாளுமன்ற நிலைகுழுவிற்கு அனுப்பப்பட்டு பின்பு மத்திய அமைச்சர்கள் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
தற்பொழுதுள்ள சட்ட நெறிமுரையின்படி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 6 மாதம் அல்லது அதற்கு கூடுதலாக வெளிநாடுகளின் வசிக்கும் பட்சத்தில் அவர்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும்.
தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள மசோதாவின்படி வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற அனுமதி அளிக்கும்.
அவர்கள் பணி நிமித்தத்தின் காரணமாகவோ அல்லது மேற்படிப்பின் காரணமாகவோ வெளிநாட்டில் வசித்தாலும் சரியே. இந்த வாய்ப்பு தேர்தல் நடைபெறும் நாள் அன்று மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்த மசோதாவிற்கு அனுமதியளித்த அமைச்சர்கள் குழுவில் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் மற்றும் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக