புதன், 16 ஜூன், 2010

முகத்திரை அணிந்து வாகனம் ஓட்டிய பெண்ணுக்கு ஃபிரான்சில் அபராதம்

இஸ்லாமிய முறைப்படி புர்கா அணிந்து, முகத்திரையுடன் வாகனம் ஓட்டிய ஒரு பெண்ணை ஃபிரெஞ்சு போலீசார் பிடித்து அபராதம் போட்டனர்.

'இவ்வாறு முகத்திரை அணிந்து வாகனம் ஒட்டுவது போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்' என்று அவர்கள் கூறினர்.

தெற்கு ஃபிரான்சில் வாவ்க்ளூஸ் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

"அவர் முகத்திரை அணிந்திருப்பதை தடை செய்யவில்லை. அவர் அதனை அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவதையே கண்டிக்கிறோம்". என்று சார்லஸ் பௌரில்லோன் என்ற அதிகாரி கூறினார்.

கருத்துகள் இல்லை: