இஸ்லாமாபாத்: கூகுள், ஹாட்மெயில், யாஹூ உள்ளிட்ட 9 இணையதளங்களுக்கு பாகிஸ்தான் கோர்ட் தடை விதித்துள்ளது.
லாகூர் உயர்நீதிமன்றத்தின் பகவல்பூர் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும், கூகுள், யாஹு, எம்.எஸ்.என், ஹாட்மெயில், யூடியூப், பிங், அமேசான் உள்ளிட்ட 9 இணையதளங்களும் மத விரோத, மத துவேஷமான செய்திகளை வெளியிட்டுள்ளதால் இவற்றை தடை செய்ய பாகிஸ்தான் தொலைத் தொடர்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
முகம்மது சித்திக் என்பவர் தொடர்ந்து வழக்கின் அடிப்படையில் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.
அதேசமயம், இந்த இணையதளங்கள் மீது வழக்கு ஏதேனும் தொடரப்படுமா என்பது குறித்து பாகிஸ்தான் அரசு தெரிவிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக