அஹ்மதாபாத்:கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ மேற்கொண்ட சுதாசமாவின் கைதுக்குப் பிறகு, இதுவரை சுமார் 197 புகார் மனுக்கள் அவருக்கெதிராக கிடைத்துள்ளன.
இவை அனைத்தும் ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கு விசாரணையில் சி.பி.ஐக்கு கிட்டியவை.
எனினும், இப்புகார்கள் ஷொராஹ்ப்தீன் வழக்கில் நேரடியாக தொடர்பு இல்லாததனால். சி.பி.ஐ இதை விசாரிக்காது என்று தெரிகிறது.
மிரட்டிப் பணம் பறித்தல், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துதல், சட்ட விரோத பொருளாதார குற்றங்கள் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இப்புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு சி.பி.ஐ அளித்துவரும் மாதாந்திர முன்னேற்ற அறிக்கையில் பதிவுச் செய்யப்படும்.
சுதாச்சமா முதலீடுகள், பொருளாதார கோல்மால்கள் என இரண்டாம் தர வழக்கையும் சுதாச்சமாவிற்க்கெதிராக சி.பி.ஐ தொடர இம்மனுக்களும், ஆதாரங்களும் வாய்ப்பளிக்கும்.
உதாரணமாக, சுதாச்சமாவை கைது செய்யும் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் வங்கி கணக்கிலிருந்து சுமார் 1 கோடி ரூபாய் அவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மேலும் சுதாசாமவிற்கெதிராக பல ஆதாரங்கள் உள்ளதாக சி.பி.ஐ. வாதிடுகிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கட்டுமானத் தொழிலில் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளது என பல ஆதாரங்கள் சி.பி.ஐயிடம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை அனைத்தும் சுதாசமாவிற்கெதிராக ஊழல் வழக்குகளை கட்டியமைக்க வழி வகுக்கும் என்றும் சி.பி.ஐ. நம்புகிறது.
அதே சமயம், ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் இதே சுதாச்சமாதான் முக்கிய சூத்திரதாரி என்றும் சி.பி.ஐ கூறுகிறது.
இப்பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக வழக்குகள் தொடர சி.பி.ஐ விரைவில் வருமான வரித்துறையினரையும் அணுகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
TOI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக