புதன், 23 ஜூன், 2010

மதானி மீதான புதிய வழக்கு! கொதிக்கும் கேரளா!

‘பெங்களூரில் கடந்த 2008&ம் ஆண்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஒரு பெண் இறந்தார். பலர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 26 பேர் மீது பெங்களூர் நகர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் தற்போது 6 பேர் புதிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ளனர். ஆறு பேரில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்ற வாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டது. பின்னர் 9 ஆண் டுகள் கழித்து அப்பாவி என விடுதலை செய்யப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியும் பெய ரும் சேர்க்கப்பட்டுள்ளது. பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


மதானி மீதான புதிய வழக்குக்கு ஆதாரமாக எதையும் போலீசார் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது- திடீரென இவ் வழக்கில் மதானி குற்றவாளி ஆக்கப்பட்டது எப்படி? இங்கே தான் இருக்கிறது உளவுத் துறை சங்பரிவாரின் கூட்டணி. இந்த கூட்டணிக்கு கேரளாவை ஆளு ம் கம்யூனிஸ்ட் அரசும் சலாம் போடுவது தான் சாபக்கேடு.

கோவை குண்டுவெடிப்பு வழக் கில் விசாரணைக்கு அழைத்து செல்கிறோம் என தமிழகத்திற்கு அப்போதைய அ.தி.மு.க அரசின் காவல்துறையால் அழைத்து வர ப்பட்ட மதானி குண்டு வெடி ப்பு வழக்கில் குற்றவாளியாகக் ப்பட்டு சிறையில் தள்ளப்பட் டார். கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளால் குண்டு வீசப் பட்டு ஒரு காலை இழந்த மதானி, செயற்கை காலை பொருத்தியி ருந்தார். தனது ஒரு காலுக்கு சிகிச்சை பெறுவதற்கு கூட தமிழ கத்தை ஆண்ட அ.தி.மு.க, தி.மு.க, ஆட்சிகளில் அனுமதி மறுக்கப்பட் டது மதானிக்கு.

காவல்துறை, சிறைத்துறை அநீதி யை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றார் மதானி. ஆனால் வாரன் ஆண்டர்சன் போன்றவர்களுக்கு மட்டுமே கருணை காட்டும் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் மதா னியின் ஜாமீன் மனுவை ஏறெ டுத்தும் பார்க்கவில்லை. கேரளா வின் பிரபலமான மார்க்க அறிஞர், ஒரு அரசியல் கட்சியின் தலைவர், தலைசிறந்த பேச்சாளர் இப்படியாக தமிழக சிறைகளில் அவதிப்பட்டார்.

த.மு.மு.க போன்ற சமுதாய அமைப்புகளின் போராட்டங்களா லும், மனித உரிமை ஆர்வலர்களின் தலையீட்டாலும் கோவை குண்டு வெடிப்பு வழக்கை விரைவாக நடத்த கூடிய சூழ்நிலை அரசுக்கு உண்டானது. 2007 ஆண்டு ஆக ஸ்டு 1&ம் தேதி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு வெளி யிடப்பட்டது. மதானி குற்றமற்றவர் என விடுதலைச் செய்யப்பட்டார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு மதானி குற்றமற்றவர் என்பது மீண்டும் நிரூபணமானது.

மதானி விடுதலை செய்யப்பட்ட போது கோவை சிறைக்கு வெளியே அவரை அவரது வேனிலேயே சந்தித்து அனுமதி அளிக்கப்பட்ட ஒரே பத்திரிக்கையாளன் என்ற முறையில் அந்த நிகழ்வு இன்னும் மனக்கண்ணில் நிழலாடு கிறது. மதானி விடுதலை தொடர்பான முழு விவரங்கள் அடங்கிய செய்தி கட்டுரை மக்கள் உரிமையிலும் வெளியானது.

விடுதலையான மதானிக்கு கேரள சங்குமுகம் கடற்கரையில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலை வர்கள் அக்கூட்டத்தில் பங்கு கொண்டனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக மதானி முஸ்லிம் பெ ரும் பான்மை பிரதேசங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதே நேரத்தில் ‘தீவிரவாதி’ மதா னியோடு கம்யூனிஸ்டுகள் கூட் டணி வைத்திருப்பதாக காங்கிரஸ்-முஸ்லீம் லீக் கூட்டணி குற்றம் சாட்டியது. காங்கிரஸ் தீவிரவாத பி.எப்.ஐ. உடன் கூட்டணி வைத் திருப்பதாக கம்யூனிஸ்டுகள் குற்றம் சாட்டினர்.

2008 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்&லீக் கூட்டணி வெற்றி பெற்றது. மதானிக்கு ஆதர வளி த்த கம்யூனிஸ்ட் மதானியை கைவிட தீர்மானித்தது. அதே நேரத் தில் கர்நாடகாவில் சங்பரி வார் களின் அரசியல் கட்சி யான ஙியிறி அமைத்தது. கடந்த 2005ம் ஆண்டு மதானி தமிழக சிறையில் இருந்தபோது அவரது ஆதரவாளர்களால் கொச்சி அருகே பஸ் ஒன்று எரிக்கப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட நசீர் என்பவர் மதானி மனைவி சோபியாவுக்கு பஸ் எரிப்பில் தொடர்பு இருப்பதாக கூறவே சோபியா அவ்வழக்கில் குற்றவாளியில் சேர்க்கப்பட்டார். இது கேரளாவில் பரபரப்பை ஏற் படுத்தியது. இந்த விவகரத்தை எதிர்கட்சியான காங்கிரஸ், ஙியிறி போன்றவை அரசியலாக்கினார். சோபியாவின் முன் ஜாமீன் கேரள நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. சோபியா மதானி கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடு விக்கப்பட்டார். இதில் ரொம்பவே அப்செட் ஆ னார் மதானி.

கர்நாடக மாநிலம் பெங்க ளூரில் கடந்த 2008&ம் ஆண்டு நடந்த குண்டு, வெடிப்பில் தொடர்பு இருப்பதாக பஸ் எரிப்பு நசீரை கைது செய்தது. இந்த நசீரை பல்வேறு குண்டு வெடிப்புகளின் பின்னணியில் இருப்பதாக மத்திய உளவுத்துறை கூறி வருகிறது. இந்த நசீர் தான் அளித்த வாக்குமூலத்தில் கடந்த 2008&ம் ஆண்டு ஜூலை 25&ம் தேதி தான் மதானியை சந்தித்து பேசியதாகவும் குண்டுவெடிப்பு தொ டர்பாக விவாதித்ததாகவும் கூறி இருப்பதாக கூறி மதானியும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நசீர் 2005 முதல் தேடப்பட்டு வரும் குற்றவாளி, மதானி விடு தலை செய்யப்பட்டதிலிருந்து தற் போது வரை மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு புலனாய்வு பிரிவுகளால் கண்காணிக்கப்பட்டு வருபவர். நேரடி அரசியலில் ஈடு பட்டு வருபவர். காவல்துறை, உள வுத்துறை ஆட்களை மீறி இருவரும் சதித்திட்டம் செய்திருப்பதை (?) அறிந்த பா.ஜ.க&வின் கர்நாடக அரசு மதானியை வழக்கில் 31வது குற்றவாளியாக சேர்த்திருக்கிறது.

பெங்களூர் உதவி தலைமைப் பெருநகர நீதிபதி வெங்கடேஷ் குரு ஜி மதானியை வரும் ஜூன் 23ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிணையில் வெளிவர முடியாத வாரண்கூட பிறப்பித்துள்ளார். மதானியை கைது செய்ய கர்நாடக போலீசார் கேரள மாநிலம் கொல் லத்தில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ், B.J.P, முஸ்லிக் லீக் கும்பல் மதானியை கைதுசெய்ய வேண்டும் என அழுத் தம் கொடுத்து வருகின்றனர். கம்யூ னிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தனும் கர்நாடக அரசுக்கு அனைத்து வகை யிலும் உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே விசாரணைக்கென்று அழைத்து சென்று 9 வருடம் தமிழகத்தில் மதானி தவிக்க விடப்பட்டதை மறக்காத மதானியின் கட்சியினர் மதானியை கைது செய்ய விட மாட்டோம். என அவரது இருப் பிடமான அன்வர் சேரிடவுனில் குவிந்து வருகின்றனர். இரண்டு இளைஞர்கள் தீக்குளிக்க முயற் சித்துள்ளனர்.

மதானி சார்பாக பெங்களூர் நீதிமன்றத்தில் புதன்கிழமைக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவைப் பொறுத்தே மதானியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று தெரிகிறது. தமிழக காவல்துறையிடம் தோல்வியடைந்த மதானி கர்நாடக காவல்துறையிடம் வெற்றியடைவார் என்றே நம்பலாம்.

அதையும் மீறி மதானி கைது செய்யப்பட்டால் சமுதாயத்தின் பிரச்சனைகளை ஆணித்தரமாக பேசுவோருக்கு நம் நாட்டில் இது தான் சதி என்பதையும் சமுதாயத் தை காட்டி கொடுப்போர் தான் அரசியலில் நீடிக்க முடியும் என் றாகி விடும், இதற்கு கேரள முஸ்லிம்கள் உடன்பட மாட்டார்கள் என்றே தெரிகிறது.

--இப்பி பக்கீர்

கருத்துகள் இல்லை: