வியாழன், 17 ஜூன், 2010

செம்மொழி மாநாடும், சிறைவாசிகள் விடுதலையும்



தமிழக அரசு சார்பில் கோவையில் செம்மொழி மாநாடு வரும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. செம்மொழி மாநாட்டுக்கான பாடல் மலையாள இயக்குனரால் இயக்கப்பட்டு ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. அரசு இயந்திரங்கள் அனைத்தும் முடுக்கப்பட்டு மாநாட்டுப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.


தமிழக அரசு சார்பில் கோவையில் செம்மொழி மாநாடு வரும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. செம்மொழி மாநாட்டுக்கான பாடல் மலையாள இயக்குனரால் இயக்கப்பட்டு ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. அரசு இயந்திரங்கள் அனைத்தும் முடுக்கப்பட்டு மாநாட்டுப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

தன் இறுதிக்காலத்தில் தமிழுக்கு பெருமை சேர்த்து விட வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் கலைஞர் உறுதியாக இருக்கிறார். செம்மொழி மாநாட்டுக்கு எதிரான பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் புறம் தள்ளிவிட்டு மாநாட்டுப் பணிகளில் உற்சாகமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு தமிழக சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனைக் காலத்தை கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் பலமாக எழுந்துள்ளது. த.மு.மு.க உள்ளிட்ட சமுதாய அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

கடந்த 2008&ம் வருடம் அண்ணா பிறந்த நாளையொட்டி 7 வருடம் சிறைத் தண்டனையை கழித்த 1000க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் 10 வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனையை கழித்து விட்ட அல்&உம்மா பாஷா, அன்சாரி, தாஜீதின் உட்பட முஸ்லிம் சிறைவாசிகளும், நளினி, பேரறிவாளன், போன்றோரும் விடுதலை செய்யப்படவில்லை.

இவர்கள் மீது வெடி பொருள் வழக்கு, மதக்கலவர வழக்குகள், சி.பி.ஐ. வழக்குகள் ஆகியவை இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய இயலாது எனக் கூறப்பட்டது. ஆனால் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 2006 வருடத்திலிருந்து சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படும் போதெல்லாம் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய மறுத்து வருகிறது தமிழக அரசு. கைதிகள் பொதுமன்னிப்பு விஷயத்தில் எந்த சட்டப் பிரிவுகள், எந்த வழக்குகள் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையெல்லாம் பார்க்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையிலும் தொடர்ந்து முஸ்லிம் கைதிகள் மீதான பாரபட்சத்தை வருகிறது தமிழக அரசு.

அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழா கடந்த 2009 செப்டம்பரில் நடைபெற்ற போது அப்போதாவது 10 வருடம் தண்டனையைக் கழித்த முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்த்தது முஸ்லிம் சமுதாயம். ஆனால் விடுதலையாக இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இருந்த 9 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்து ஏமாற்றத்தை அளித்தது தமிழக அரசு.

இந்நிலையில் கோவையில் செம்மொழியாம் தமிழுக்கு சிறப்பு சேர்க்க நடத்தப்படும் செம்மொழி மாநாட்டை முன்னிட்டாவது 10 வருடம் தண்டனை அனுபவித்த முஸ்லிம்கள் சுமார் 60பேர் உட்பட தமிழகம் முழுவதும் சிறைச்சாலையில் வாடி வரும் 600 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கண்டிப்பாக வந்திருக்கும்.

செம்மொழிக்கு சிறப்பு சேர்க்கும் அந்நாளில் சிறைவாசிகளை விடுதலை செய்வதன் மூலம் தனது அரசுக்கும் சிறப்பு சேர்ப்பாரா கலைஞர்?

கருத்துகள் இல்லை: