மும்பை : ராஜ் தாக்கரேவியின் மகாராஷ்டிர நிர்மாண் சேனா மராத்தி மொழியை எப்படியாவது வளர்க்க மராத்தி மொழி தெரியாத வட இந்தியர்கள், தென்னிந்தியர்களுக்கு மராத்தி வகுப்புகள் நடத்துகிறது. மராட்டியம் மராட்டியர்களுக்கே எனும் கோஷத்துடன் மராத்திய மொழி வெறியை தூண்டி விடும் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் மகன் அமித் மாதுங்காவில் உள்ள ருயீயா கல்லூரியில் மாஸ் மீடியாவில் பட்டப் படிப்புக்காக ஆங்கில மீடியத்தில் சேர்ந்துள்ளார், அதே படிப்பு அக்கல்லூரியில் மராத்திய மீடியத்தில் இருந்த போதிலும்.
மராத்தி மொழிக்குரிய அந்தஸ்தை பெற்று தருவதே தனது நோக்கம் என கடந்த இரண்டு வருடங்களாக முழங்கி வரும் ராஜ் தாக்கரே நேற்று சுமார் 50 ஆதரவாளர்கள் புடை சூழ கல்லூரிக்கு சென்று முதல்வரின் அறைக்கு நேரடியாக சென்று தன் மகனை ஆங்கில வழி கல்வியில் சேர்த்து விட்டார். இதை பற்றிய கூறிய தாக்கரேயின் மனைவி தன் மகன் அங்கு தான் படிக்க போகிறான் என்றும் எந்த மொழியில் என்பது தன்க்கு தெரியாது என்றும் கூறினார்.
அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அமித் அக்கல்லூரியில் சேர்ந்தால் அரசியல் பாடம் நடத்தும் ஆசிரியர் இது போன்ற மொழி வெறியை தூண்டும் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து எடுப்பார். தாக்கரேயின் ம்கன் முன்னாலேயே அவர் தன் கருத்துக்களை வெளிப்படையாக கூற முடியுமா என்று கவலைப்படுவதாக கூறினார். ஏற்கனவே இது போல் ராஜ் தாக்கரேயின் மகன் ஒரு கல்லூரியில் இரண்டாவது மொழியாக மராத்திக்கு பதிலாக ஜெர்மனை தேர்ந்தெடுத்த போது அதில் எளிதாக மதிப்பெண் எடுக்கலாம் என்பதற்காகவே தலைவர் மகன் அதை தேர்ந்தெடுத்ததாக சப்பை கட்டு கட்டியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக