புதுடெல்லி:மலேகான்,அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய போலீசாரால் தேடப்பட்டுவரும் ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தாவுக்கு கான்பூர் குண்டுவெடிப்பிலும் பங்குள்ளதாக உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு படைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த பயங்கரவாத சுவாமிதான் வெடிப்பொருட்களும்,இதர உபகரணங்களையும் தீவிரவாத இளைஞர்களுக்கு அளித்ததாக மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும், ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸும் தகவல்களை அளித்துள்ளன.
கடந்த 2008 ஆம் ஆண்டு கான்பூரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு பஜ்ரங்தள் தீவிரவாதிகள் ராஜீவ் மிஷ்ரா, பூபிந்தர் சிங் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர்.ராஜீவ் மிஷ்ராவின் தந்தையின் பெயரிலான வீட்டில்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
குடும்பத்துடன் லக்னோவில் வசிக்கும் ராஜீவ் மிஷ்ரா வாரத்திற்கு ஒருமுறை இங்கு வருவார். குண்டுவெடிப்பிற்கு பிறகு க்ரேனேடுகள், வெடிக்காத வெடிப்பொருட்கள், டைமருகள் ஆகியவற்றை போலீஸ் கைப்பற்றியிருந்தது. குண்டு தயாரிக்கும் பொழுது ஏற்பட்ட தவறுதலால் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்திருந்தனர்.
சுவாமி அஸிமானந்தா 1998 ஆம் ஆண்டு குஜராத்தில் டாங்க்ஸ் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறையை ஏற்பாடுச்செய்ததன் மூலம் செய்திகளில் இடம்பிடிக்கலானார். இவருடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரின் மொபைலிருந்து கிடைத்த விபரங்கள்தான் அஸிமானந்தாவுக்கு கான்பூர் குண்டுவெடிப்பிலும் பங்குண்டு என்ற முக்கிய விபரங்கள் வெளிவந்தன.
2008 மே,ஜூலை, செப்டம்பர் மாதங்களில் கான்பூரில் உள்ள ஒரு நபர் அஸிமானந்தாவுடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் நடத்திய விசாரணையில் இந்த ஃபோன் நம்பர் தற்பொழுது உபயோகத்தில் இல்லை என்பதும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து சிம் கார்டு வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.
அஸிமானந்தாவுடனும்,பஜ்ரங்தளுடனும் நெருங்கிய தொடர்பிலிலுள்ள கான்பூரில் ஒரு மூத்த ஹிந்துத்துவாவாதியிடம் ஏ.டி.எஸ் விசாரணை நடத்திவருகிறது.
மலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட மஹந்த் அமிர்தானந்த் என்ற தயானந்த பாண்டே கான்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக