ஞாயிறு, 27 ஜூன், 2010

ஈரானை தாக்கும் அளவிற்கு இஸ்ரேலிடம் பலமில்லை – அஹ்மதி நிஜாத்.

இராணுவ விவகாரங்களை பொறுத்தவரை ஈரானை தாக்குவதற்கு இஸ்ரேலிடம் போதிய பலமில்லை என்று ஈரானிய அதிபர் அஹ்மதி நிஜாத் சவால் விடுத்துள்ளார்."இஸ்ரேலிய ஜியோனிச நாடு மிகவும் பலவீனமானது! அவர்கள் ஈரானை தாக்குவதில் பேராசை உடையவர்கள் ஆனால் அத்தாக்குதலுக்கான ஈரானின் பதிலை அவர்கள் சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

ஈரானிடம் விளையாடுவது ஒரு சிங்கத்துடன் விளையாடுவதற்கு சமம் என்று அவர்களுக்கே நன்றாக தெரியும்" என்றார் அஹ்மதி நிஜாத். துருக்கி நிவாரணக் கப்பல் தாக்குதலை மிகவும் கொடூரமான சம்பவம் என்று கூறிய நிஜாத், உலக நாடுகள் தற்போது அதை கேட்டும் கேளாமல் இருப்பதாக குறிப்பிட்டார். காஸ்ஸா முற்றுகையை உடனடியாக முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் அஹ்மதி நிஜாத் கேட்டுக்கொண்டார். ஈரானிற்குள் எதிரிகளின் ஊடுருவல், தங்களை இதுவரை இல்லாத அளவிற்கு ஒன்றிணைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: