கடந்த 25/06/2010- வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ராசல்கைமா – அல் நக்கீல் ஹாஜா அவர்களின் இருப்பிடத்தில் ராசல் கைமா மண்டல முஸ்லிம் முன்னெற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது, அக்கூட்டத்திற்கு ராசல் கைமா கிளை பொருளாளர் கடியச்சேரி ஹாஜா அவர்கள் தலைமை தாங்கினார்அதனைத்தொடர்ந்து சார்ஜாவிலிருந்து வருகை தந்த மு.மு.க அமீரக து.தலைவர் சகோ. ஹுஸைன் பாஷா அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள் பின்னர் தீர்மானங்கள் இயற்றப் பட்டது
- வருகின்ற ஜூலை மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராசல் கைமா மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்படுகள் செய்யவும்
- அமீரகத்தில் நமது சகோதர்களிடத்தில் பெருகிவரும் தற்கொலைகள் குறித்தும் நடக்கவிருக்கும் கூட்டத்தில் சிறப்பு "கவுன்சிலிக்" மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
- ரமலானில் தாயகத்திலிருந்து வருகை தரும் தாயிக்களைக் கொண்டு சிறப்பான முறையில் பயான் நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யவும்
- கேம்ப்’கள் தோறும் சென்று சந்திப்பு நடத்துவது என்றும்
- நமது பத்திரிக்கையான "மக்கள் உரிமை" க்கு புதிய சந்தாக்களை உருவாக்குவது
- புதிய மர்கஸ் மற்றும் நூலகம் அமைக்கவும் தீர்மானங்கள் இயற்றப் பட்டது
பின்னர் தூஆ ஓதி கூட்டம் இனிதே நிறைவுற்றது, இக்கூட்டத்திற்கு மதுரை.பரக்கத் அவர்களும் அபு ஆதில் அவர்களும் சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக