திங்கள், 7 ஜூன், 2010

26 வருடங்கள் காத்திருந்தும் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லையே: போபால் சம்பவ பாதிப்பு மக்கள் வேதனை


போபால் கொடூர சம்பவ வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

போபால் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்வமுடன் வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றம் முன் குவிந்தனர்.

நீதிமன்றத்திற்குள் போலீசார் அனுமதிக்காததால் பாதிக்கப்பட்ட மக்கள் திடீர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
பரபரப்பு பதட்டத்திற்கு இடையில் வழக்கின் தீர்ப்பை தலைமை ஜுடீசியில் நீதிபதி மோகன் திவாரி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட 8 பேரும் குற்றவாளிகள் என்று போபால் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவர்களின்
தண்டனை விபரம் வேறோரு நாளில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை கேட்ட பாதிக்கப்பட்ட மக்கள் கொதித்தனர்.

‘’26 வருடங்கள் காத்திருந்தும் முறையான தீர்ப்பு கிடைக்கவில்லை.


தற்போதைய தீர்ப்பின் படி குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள்தான் தண்டனை கிடைக்கும். அவர்களுக்கு அகபட்ச தண்டனை
கிடைக்க வேண்டும்’’ என்று உரக்க கத்தினார்கள்.


மத்திய பிரதேச தலைநகர் போபாலில் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி தயாரிப்பு ஆலை இயங்கி வந்தது.


அந்த ஆலையில் இருந்து 1984ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அமைந்திருந்த
யூனியன் கார்பைட் நிறுவனத்தில் தொழிற்கூடத்தில் ஏற்பட்ட விசவாயுக் கழிவைத் தொடர்ந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியானார்கள்.


5 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். 15 ஆயிரம் பேர் பலியானார்கள். உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக
அதிகப்பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாக போபால் விசவாயு கருதப்படுகிறது.


இந்த விஷவாயு கசிவு தொடர்பாக போபாலில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கின்
விசாரணை கடந்த 1987ம் ஆண்டு தொடங்கியது.


இந்த வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய 8 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் மீது, அஜாக்கிரதையால் உயிரிழப்பை ஏற்படுத்துதல், மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கில்178 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 3008 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அரசுத் தரப்பில் இருந்து 8 சாட்சிகள் விலக்கிக் கொள்ளப்பட்டனர்.


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 பேர்களில் இந்நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி ஆர்.பி. ராய் சவுத்ரி
விசாரணை நடைபெற்ற காலத்தில் மரணம் அடைந்துவிட்டார்.


கடந்த 25 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை கடந்த 6-ந் தேதி அன்று முடிவடைந்தது. வழக்கின் தீர்ப்பை
தலைமை ஜுடீசியில் நீதிபதி மோகன் திவாரி இன்று தீர்ப்பு வழங்கினார்.


கருத்துகள் இல்லை: