தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 18-06-10 வெள்ளிக்கிழமை அன்று தமுமுக சார்பில் முஸ்லிம்களும் சிறைச்சாலை அநீதிகளும் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக் கூட்டத்திற்கு தமுமுக மாவட்டத் தலைவர் சீனி முகம்மது தலைமை வகித்தார். ம.ம.க தென் சென்னை மாவட்டச் செயலாளர் அப்துல் சலாம் முன்னிலை வகித்தார்.
பொதுக் கூட்டத்தில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, தமுமுக முன்னாள் தலைவர் குணங்குடி ஆர்.எம்.ஹனிபா, மாநில துணைச் செயலாளர் கோவை செய்யது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த பொதுக் கூட்டத்தில் பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக